Blog Archive

Thursday, February 10, 2022

காக்கும் கடவுள்.

Vallisimhan
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

இந்த செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் வடமொழி எழுத்துக்கள்

கொடுக்கும் சாரம். ''கடவுள் ஒருவனே  நமக்கு கதி.
அவன் ஒருவனால் மட்டுமே நம்மைக் காக்க முடியும்''
என்பதுதான்.
அன்பின் தங்கை சுபாவுக்கு நன்றி.




4:49 AM, 2/8/2022] Subha.: 👌👌👌🙂
[1:43 AM, 2/10/2022] Subha.: ’காயேன வாசா மனசே ... நாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று நாம் சொல்லும்போது,


நாராயணன் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்? தெரிந்து கொள்வோமே!!

ஐந்து வயது குழந்தை 'கிணறு...' என்று எழுத ஆசைபட்டது..

எப்படியாவது எழுதி , தன் அப்பாவிடம் காட்டி, மகிழ வேண்டும் என்று  ஆசைபட்டது.

கொஞ்சம் முயற்சி செய்து, 'கிணறு'க்கு பதில்,"கனாரு.." என்று கஷ்டப்பட்டு தப்பாக எழுதி, தன் அப்பாவிடம் ஆசையோடு கொடுத்தது.

"தன் குழந்தை கஷ்டப்பட்டு எழுதி, அதை தன்னிடம் ஆசையோடு காட்டுகிறதே!!" என்று ஆனந்தம் அடைந்த தகப்பன், "தானே அதை சரி செய்து 'அம்மா.. அப்பா..' என்று எழுதி விட்டு... அது போதாதென்று, தன் குழந்தைக்கு 100க்கு 100 மதிப்பெண் போட்டு, தன் குழந்தையை கொஞ்சி மகிழ்ச்சிப்படுத்தினான்.
அது போல நாம்,

எந்த உலக காரியம் செய்தாலும், தவறாகவே செய்து இருந்தாலும், நமக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருக்கும், ப்ரம்ம தேவனையும் படைத்த நாராயணனிடம் காட்ட வேண்டும் என்ற ஆசையுடன், அப்பாவிடம் தான் செய்ததை ஆசையோடு காட்டிய குழந்தை போல, நாம் செய்ததை சமர்ப்பணம் செய்தால்,

தன்னிடம் ஆசையோடு சமர்ப்பணம் செய்யும் நம்மை கண்டு மகிழ்ந்து, நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், தானே அதை சரி செய்து, நன்றாக செய்தது போல ஆக்கி, முழு பலனையும் தந்து விடுகிறார் பரமாத்மா நாராயணன்.

சந்தியாவந்தனம், சஹஸ்ரநாமம் என்று ஏதுவாக இருந்தாலும், முடிவாக, இந்த மந்திரம் சொல்வதற்கு காரணமும் இதுவே.

ஸ்லோகம், சந்தியாவந்தனம் செய்ததில் குறை இருந்தாலும், அப்பாவிடம் காண்பித்து, அவரே குறையை சரி செய்து, முழு பலனை கொடுக்கட்டும் என்ற 'புத்தியுடன்' இந்த மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும், செய்த காரியத்தை, நம் அனைவருக்கும் அப்பாவாக உள்ள நாராயணனிடம், ஒரு குழந்தை தன் தகப்பனிடம் காட்டுவது போல காட்ட வேண்டும்.

உணவு செய்தாலும், பெருமாளுக்கு காட்டி விட்டு, பிறகு சாப்பிட வேண்டும்.

அப்படி செய்தால், உணவில் உள்ள தோஷங்கள் (தெய்வ சிந்தனை இல்லாமல் சமையல் செய்தது) நீங்கி விடும்.

ஹிந்துக்கள் அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம்.

"காயேன வாசா மனசே இந்த்ரியர்வா புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத் யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்பயாமி"

அர்த்தம்:

நான் உடலாலும், மனதாலும், இந்த்ரியங்களாலும், புத்தியாலும் செய்த தவறுகள் அத்துனையையும் நாராயணனுக்கே அர்பணிக்கிறேன்.

மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வதை விட, நாராயணனிடம் அர்பணித்தற்கு  காரணத்தை உணர்ந்து சொல்லும் போது, நமக்கும், பெருமாளுக்கும் உள்ள உறவு புரியும்.

நாம் செய்த காரியத்தில் இருந்த குறையை அவர் அப்பாவாக இருந்து சரி செய்து கொடுக்கிறார் என்ற அனுபவம் ஏற்படும் போது, இந்த மந்திரத்தின் பெருமை நமக்கு புரியும்..

நாராயணன் என்ற சொல்லுக்கு "மனிதர்களுக்கு (நர) ஆதாரமாக (அயணம்) இருக்கும் பரமாத்மா" என்று அர்த்தம்.

நமக்கு ஆதாரமாக இருக்கும் தகப்பனிடம், நாம் செய்த காரியத்தை காட்டும் போது, தகப்பன் என்ற உறவு இருப்பதால், நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், சரி செய்து முழு பலனை கொடுத்து விடுகிறார்.

14 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இறைவன் துணை என்றும் நமக்கு நிம்மதியைத் தரும்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வல்லிம்மா நலம்தானே?... நீண்ட நாட்களுக்குப் பின் பார்ப்பதில் மகிழ்ச்சி.

அழகிய விளக்கம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முனைவர் ஐயா,
வணக்கம்.
உண்மைதான் நம் பக்கம் என்றும் இருப்பவர்.

வல்லிசிம்ஹன் said...

அதிராஆஆஆஆஆஆஆஆஆஆஅ!!!!!!:):):):)

எங்கப்பா அஞ்ஞாத வாசம் போயிட்டீங்க அஞ்சுவும் நீங்களும்???
நலம் தான் ராஜா. நீங்கள் அனைவரும் நலம் தானே.

குளிர்காலத்தில் வெளியே வந்துவிட்டீர்கள்.
தொடர்ந்து பயணிக்கவும்.நல் வாழ்த்துகள் அம்மா.

கோமதி அரசு said...

நாராயணன் விளக்கம் அருமை.
கடவுள் ஒருவனே நமக்கு கதி என்பது உண்மை.
எல்லாம் அவர் பார்த்து கொள்வார்.
அவரை சரண் அடைவோம்.

KILLERGEE Devakottai said...

நல்லதொரு தகவல் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்..

ஆமாம். அவ்வப்போது மறந்து விடுகிறேன்.
நல்ல உறவுகள் நட்புகளில் இறைவன் இருக்கின்றான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி,
அனைத்து நல்ங்களும் சூழ நல்வாழ்விற்குப் பிரார்த்தனைகள்.

Thulasidharan V Thillaiakathu said...

இறைவன் கருணையானவர். நாம் அவரைப் பற்றிக் கொண்டால் நடப்பது எப்படியானதாக இருந்தாலும் அதைக் கடந்து வர வழி காட்டுவார்.

துளசிதரன்

மாதேவி said...

நல்ல விளக்கம் .அவனருளே என்றும் வழிநடத்தும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விளக்கம். சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் ,
என்றும் நலமுடன் இருங்கள். இறைவன் அருள்
நம்மை என்றும் சூழட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

அவரே வழித்துணை. அவர் கரங்களே நம்மை நடத்திச் செல்லும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம்ப்பா. அவர் ஒருவரால் தான்
நம்மைக் காக்க முடியும்.