வல்லிசிம்ஹன்
நடிகை நூதனின் படங்களும் பாடல்களும்
என்றும் மறக்க முடியாதவை.
அவர் முகத்தில் ஓடும் உணர்ச்சிகளும்
நாகரீகத்தின் எல்லையை கடக்காதவை.
அவர் நடிப்பில் வந்த படங்களை அவ்வளவாகப்
பார்த்ததில்லை.
சுஜாதா என்ற படம் என் அம்மாவுக்கு மிகப்
பிடிக்கும்.
அம்மாவின் பிறந்த நாள் 9 ஃபெப்ருவரி. 92 வயது நிரம்பி
இருக்கும்.
அவள் ஒரு நல்ல மகள், நல்ல சகோதரி, நல்ல மனைவி
நல்ல தாய் , நல்ல பாட்டி, நல்ல கொள்ளுப்பாட்டி.
யாரையும் நோகாமல், யாரையும் எதிர் பாராமல்
இறைவனடி சேர்ந்தாள்.
அம்மா உன்னை அணைத்துக் கொள்கிறேன்.
உன் செல்வங்களுக்கு ஆசிகள் கொடு.
மறைந்த லதாஜிக்கும் உன் வயதுதான். அவர்களைக் கொண்டாடியது போல
உன்னையும் நினைத்திருப்பேனா?
ஆனால் அவர்கள் வாழ்வில் பொழுது போக்கு. நீ
எனக்கு வாழ்வு கொடுத்துக் காத்தவள்.
உன் பொறுமையில் அணுவளவாவது இருந்தால்
வெற்றி பெறலாம்.
உன் சிந்தனை வளம் இருந்தால் நூறு
புத்தகம் எழுதி இருக்கலாம்.
உன் புரிதல் இருந்திருந்தால் ,பச்சாத்தாபம்
இருந்தால் கோடி அன்புகளை நிலைக்க வைத்திருக்கலாம்.
நான் நீயாக முடியாது. எட்டிப் பிடிக்கப்
பார்க்கிறேன்.
ஹாப்பி பர்த்டே அம்மா.
,
26 comments:
இன்று - 9/2/ - அம்மாவின் பிறந்த நாளா? அம்மாவின் ஆசிகள் என்றும் உங்களுடன் இருக்கும். அதிலென்ன சந்தேகம்?! நூதன் படம் எதுவும் நான் பார்த்ததில்லை. மிலன் பாட்டு கேட்டிருக்கிறேன். இன்னும் ஏதோ ஒரு பாடல் பார்த்த நினைவு.
ஆமாம் ஸ்ரீராம். ஃபெப்ருவரி 9த் அம்மா பிறந்த தேதி.
92 ஆகி இருக்கும் .
ஆமாம். அவள் கருணை என்னுடன்.
நன்றி மா.
அவள் தான் என் வலைத்தள ஆசைக்கு வித்திட்டவள்.
நன்றி மா.
தேதி 9/2. வயது 92!
வணக்கம் சகோதரி
உங்கள் அம்மாவின் நினைவுகளை நீங்கள் அவரின் பிறந்த நாளான இன்று பகிர்ந்திருப்பது அருமையாக உள்ளது. அம்மாவின் அன்பு போல், அவருக்கு நம் மீது இருக்கும் தனிப்பட்ட அக்கறை போல் வேறு யாரால் செலுத்த முடியும்? அம்மா அம்மாதான்...! அவரின் ஆசிகள் என்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் துணையாக நின்று அரவணைத்து காக்கும். அன்பான அவருக்கு என் நமஸ்காரங்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
தாங்கள் பகிர்ந்திருக்கும் பாடல்களை பிறகு கேட்கிறேன் சகோதரி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் மா.
நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன் மா.
நன்றி ராஜா.
அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
அம்மாவை நினைத்து அவள் ஆசியைப் பெறுவோம்.
''அம்மாவின் அன்பு போல், அவருக்கு நம் மீது இருக்கும் தனிப்பட்ட அக்கறை போல் வேறு யாரால் செலுத்த முடியும்? அம்மா அம்மாதான்...! அவரின் ஆசிகள் என்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் துணையாக நின்று அரவணைத்து காக்கும். அன்பான அவருக்கு என் நமஸ்காரங்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.''
ஆமாம் மா. அவள் ஒருத்திதான் எதையும் எதிர்பாராமல் அன்பு செலுத்துவாள்.
நம் அப்பாவும் தான்.
இந்த ஜன்மத்தில் அவர்களைப் பெற்றோராகக்
கிடைக்கப் பெற்றது நம் பாக்கியம்.
வந்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.
நினைவுகள் என்றுமே சுகம் தருபவை. இவ்வாறான அன்பு என்றும் நினைவில் நிற்கும்.
அம்மாவின் நினைவுகள் என்றும் இனிமை. நினைவுகளை பகிர்ந்து கொண்டது நல்ல விஷயம். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
அம்மாவின் நினைவு நெகிழ்வு. உங்களைப் பற்றியுமே ரொம்ப அன்பு வடிவானவர் என்றுதான் எல்லோரும் சொல்கின்றனர் நினைக்கின்றனர்.
அவரது ஆசிகள் தங்களது சந்ததிகளுக்கு என்றும் கிடைக்கும் அம்மா.
யாரையும் நோகாமல், யாரையும் எதிர் பாராமல்
இறைவனடி சேர்ந்தாள்.
அம்மா உன்னை அணைத்துக் கொள்கிறேன்.
உன் செல்வங்களுக்கு ஆசிகள் கொடு.//
நிச்சயமாக் ஆசிர்வதிப்பார் அம்மா. எத்தனை நல்ல உள்ளம். பதிவு பார்க்காமலேயே உங்களோடு இன்று பாட்டியைப் பத்தி பேசியிருக்கிறேன் பாருங்கள்!!!!
கீதா
நீ
எனக்கு வாழ்வு கொடுத்துக் காத்தவள்.
உன் பொறுமையில் அணுவளவாவது இருந்தால்
வெற்றி பெறலாம்.
உன் சிந்தனை வளம் இருந்தால் நூறு
புத்தகம் எழுதி இருக்கலாம்.//
இப்போதும் ஒன்றும் குறையவில்லை. அம்மா உங்களுக்குச் சொன்னதைக் கூடத் தொகுத்து அவ்வப்போது எழுதுங்கள். அல்லது ப்ளாகில் எழுதியிருப்பீர்களே அதைத் தொகுத்து 1, 2 என்று பாயின்ட்ஸ் போட்டு எழுதலாம் புத்தகம் எல்லாருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை அம்மா.
தொடங்குங்கள் அம்மா. இப்போதும் குறைந்துவிடவில்லை. உங்கள் எழுத்து அருமையான எழுத்து. அதில் அம்மா சொன்ன அறிவுரைகள் பரிந்துரைகள் என்று எழுதலாமே..
கீதா
அம்மாவின் நினைவுகள் அவர்களது அறிவுரைகள், அன்பு அரவணைப்பு எல்லாமே நம்மை வழிநடத்துபவை. நினைக்கும் போது இனிமை.
உங்கள் அம்மாவின் ஆசிகள் எல்லாத் தலைமுறைக்கும் இருக்கும்.
பதிவு நெகிழ்ச்சி.
துளசிதரன்
உங்கள் அம்மவிற்கு எனது பணிவான வணக்கங்கள். இறைவனிடத்திலிருந்து நீங்கள் எழுதுவதையும் பார்த்துக் கொண்டிருப்பார்!
துளசிதரன்
//யாரையும் நோகாமல், யாரையும் எதிர் பாராமல்
இறைவனடி சேர்ந்தாள்.
அம்மா உன்னை அணைத்துக் கொள்கிறேன்.
உன் செல்வங்களுக்கு ஆசிகள் கொடு.//
அம்மாவின் அன்பும் ஆசியும் எப்போதும் உங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் உண்டு.
நானும் அம்மாவை வணங்கி ஆசிகள் பெற்றுக் கொள்கிறேன்.
அம்மாவின் நினைவுகள் அருமை.
நாங்கள் அம்மாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் .
பொறுமை, மற்றவர்களிடம் காட்டும் அக்கறை எல்லாம் உங்களுக்கும் இருக்கிறது அக்கா.
அன்பின் முனைவர் ஐயா,
வணக்கம்.
தாய் தந்தையர் விட்டுச் செல்லும் நினைவுகள்
அமிர்தமானவை. நன்றி.
அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
உங்களை மாதிரி,எங்கள் குழந்தைகள்
மாதிரி எல்லோரும் இருக்கும் போது
பெற்றோருக்கு குறை ஒன்றும் இல்லை.
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் குழந்தைகளும் உங்களை என்றும் நேசிக்க ஆசிகள்.
அன்பின் முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
அனைவருமே என் மேல் நல்ல பாசம் வைத்திருக்கிறீர்கள்.
நமக்கு என்று குடும்பம் வரும்போது,
அதை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோர்
இரண்டாம் இடத்துக்குப் போய் விடுகிறார்கள்.
நாம் பெற்ற குழந்தைகளிடம் காட்டும் அந்த நேசம்
பெற்றோரிடம் சமமாகக் காட்டுகிறோமா
என்று இப்போது யோசிக்கிறேன்.
நீங்கள் அனைவரும் வயதில் சிறியவர்களாக
இருந்தாலும் வார்த்தைகளில் பெரியவர்களாகிவிடுகிறீர்கள்.
அன்பு இயல்பாக இருக்கிறது.
பெற்றோரை இன்னும் கவனித்திருக்கலாம்
என்ற குறை எப்பொழுதும் என்னிடம் தங்கிவிடுகிறது.
மாமியார்,அவருடைய மாமியார் எல்லோரையும்
கவனிப்பதில் பெற்றோரை 25 வருடங்கள்
அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை.
Dear Geetha Rangan,
நிச்சயமாக ஆசிர்வதிப்பார் அம்மா. எத்தனை நல்ல உள்ளம். பதிவு பார்க்காமலேயே உங்களோடு இன்று பாட்டியைப் பத்தி பேசியிருக்கிறேன் பாருங்கள்!!!!""""""""""""""""""""""""""""""""""'''''''
அன்பின் கீதாமா,
மிக மிக உண்மை.
அது எப்படித்தான் நடந்ததோ. எங்க அம்மா
உங்களை எனக்கு ஆறுதல் சொல்ல
அனுப்பி விட்டார் போல.
மிக நன்றி மா.
''இப்போதும் ஒன்றும் குறையவில்லை. அம்மா உங்களுக்குச் சொன்னதைக் கூடத் தொகுத்து அவ்வப்போது எழுதுங்கள். அல்லது ப்ளாகில் எழுதியிருப்பீர்களே அதைத் தொகுத்து 1, 2 என்று பாயின்ட்ஸ் போட்டு எழுதலாம் புத்தகம் எல்லாருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை அம்மா.
தொடங்குங்கள் அம்மா. இப்போதும் குறைந்துவிடவில்லை. உங்கள் எழுத்து அருமையான எழுத்து. அதில் அம்மா சொன்ன அறிவுரைகள் பரிந்துரைகள் என்று எழுதலாமே..''
அன்பின் கீதாமா,
எத்தனை நல்ல வார்த்தைகள்.
நான் எழுதியதை எல்லாம் லேபல் செய்யாமல் விட்டிருக்கிறேன்.
நீங்கள் சொல்லி இருப்பதை செயல் படுத்த வேண்டும். அம்மாவை நினைத்து
சொல்லாமல் வேறெதையும் எழுதிப் பயன் இல்லை.
நன்றிமா.
அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
மனம் நெகிழும் நல் வார்த்தைகள் சொல்கிறீர்கள்.
நன்றி.
''அம்மாவின் நினைவுகள் அவர்களது அறிவுரைகள், அன்பு அரவணைப்பு எல்லாமே நம்மை வழிநடத்துபவை. நினைக்கும் போது இனிமை.''
குடும்பம் நல் வழியில் செல்ல பெற்றோர் ,முக்கியமாக அம்மா
நல் ஆசிரியனாக இருக்க வேண்டும்.அதைச் செய்பவளின் குழந்தைகள் வழி தவற
மாட்டார்கள்.
அன்பின் துளசிதரன் மீண்டும் நன்றி மா.
''உங்கள் அம்மவிற்கு எனது பணிவான வணக்கங்கள். இறைவனிடத்திலிருந்து நீங்கள் எழுதுவதையும் பார்த்துக் கொண்டிருப்பார்!''
உங்கள் அன்னைக்கும்
என் நல் வாழ்த்துகள்.
நல்ல பிள்ளைகளை உலகுக் கொடுத்த அம்மா
நூறு கோடி யாகங்களை நடத்துகிறாள்.
உங்கள் வாழ்வும் என்றும் செழிக்க வேண்டும்.
அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
உங்கள் அம்மாவையும் அறிந்து கொள்ள
எனக்கு மிக ஆசை. எத்தனை பெரிய புண்ணியவதி அவர்.
தான் பெற்ற செல்வங்களை அசராமல்
வளர்த்து ஆளாக்கி நிறை வாழ்வுக்கு வழிகாட்டி இருக்கிறார்,
நாம் நம் அன்னையரை நினைப்போம்.
''நானும் அம்மாவை வணங்கி ஆசிகள் பெற்றுக் கொள்கிறேன்.
அம்மாவின் நினைவுகள் அருமை.
நாங்கள் அம்மாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் .
பொறுமை, மற்றவர்களிடம் காட்டும் அக்கறை எல்லாம் உங்களுக்கும் இருக்கிறது அக்கா.''
நன்றி என் அன்புத் தங்கச்சி.
நம் உலகமே இப்படிப் பட்ட கனிவால் ஆனதுதான்.
வேறென்ன இருக்கிறது? நேரில் வந்து செய்கையால்
காண்பிக்க முடியவில்லை.
அதற்கும் நேரம் வரும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் அம்மா.
அன்னை தெய்வத்தை நமஸ்கரிக்கிறேன். என்றும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு அவரின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
அன்பின் மாதேவிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
அனைவருக்கும் அன்னை எப்பொழுதும் நலம்
செய்வார்..
நாமும் சுகமாக இருப்போம்.
Post a Comment