Blog Archive

Saturday, February 26, 2022

Mahalaya Paksham day - 1 | Arachi vitta Kuzhambu | Puratasi Maavilakku

12 comments:

ஸ்ரீராம். said...

இந்த மாதிரி ஒரு சுவைப்பாட்டி எங்கள் வீட்டில் இருக்கக் கூடாதோ...

ஸ்ரீராம். said...

வாழைக்காயையும் இப்படி செய்ததில்லை; பூசணியையும் இப்படிச் செய்ததில்லை.  ஒருமுனை முயற்சிக்க வேண்டும்.

Geetha Sambasivam said...

அமாவாசைக் கறினு சொல்லுவோம். மற்றபடி குழம்பு எல்லாம் நாம் ப்ண்ணறாப்போல் தான் மாமியும் பண்ணுகிறார். ஆனால் மி.வத்தல் இத்தனை தாங்காது. :)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
இவர் செய்வது என் அம்மா வழிப்பாட்டி மாதிரியே
இருக்கிறது.
உப்பும் காரமும் தான் அள்ளிப் போடுகிறார்:)
வாழைக்காய் இந்த முறையில் மிக நன்றாக
இருக்கும்!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நலமுடன் இருங்கள்.
ஆமாம்.வாழைக்காய்க்கு அப்படியொரு பெயர்:)

மாமி கை நிறைய மிளகாய் அள்ளிப் போடுவார் போல
இருக்கு. பார்த்தாலே நடுங்கும்:)

கோமதி அரசு said...

வாழைக்காய் கறி, குழம்பும் அருமை.
அவர் சொன்ன விதம் மிக அருமை.
காரமும், உப்பும் அதிகமோ! என்று இருக்கிறது அவர் 10பேருக்கு என்கிறார், அதனால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.



மாதேவி said...

மிளகாய் வத்தல் நிறைய போடுகிறார் அவரவர் காரம் வித்தியாசப்படும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
ஆமாம் பத்துபேருக்கு என்று சொல்லிதான் ஆரம்பித்தார்.

மறந்து விட்டேன். பாவம் அந்தப் புளி உப்பு காரம் எல்லாம்
சரியாகத் தான் இருக்கும்.

எல்லாமே கை அனுபவம் தான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் சின்னு ரேஸ்ரியிலும்
காரம் அருமையாகப் போடுவீர்கள். அதற்கு ஏற்றார்ப்போல் தேங்காய் அளவும் இருக்கும். ஒவ்வொரு சமையலிலும் எத்தனை அழகு.

மிக மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நம் வீட்டில் செய்வது இப்படித்தான். வாழைக்காய் பொடிய்யும் சரி அரைச்சுவிட்ட குழம்பும். வாழைக்காய் செம டேஸ்ட். இந்தப் பொடியும் இன்னொன்னு தனியா இதோடு சேர்த்து வறுத்துப் பொடி செய்தும் என் மாமியார் செய்வதுண்டு. நன்றாக இருக்கும். அரைச்சுவிட்ட சாம்பாரும் பிறந்த வீட்டில் செய்வது போல...

நல்ல டேஸ்ட் ஆ இருக்கும். அவர் பத்து பேருக்கு செய்யறார் இல்லையா ஸோ மிளகாய் அத்தனை வைக்கிறார்.

பெரிய குடும்பம் போல. கடைசியில் நிறையப் பேர் இருக்காங்க.

என் மாமியார் வீட்டிலும் இப்படித்தான் ஒரு காலம். கோல்டன் டேய்ஸ். மாமனார் எல்லொருக்கும் தினமும் திருஆராதனம் செய்து தீர்த்தம் கொடுத்து அதன் பின் தான் சாப்பாடு. அப்போது நிறைய்யப்பேர் ...இப்போது பெரியவர்களும் இல்லை. ஒவ்வொருவராகக் குறைந்து அன்றைய கலகலப்பு இல்லை...

அடுத்த தலைமுறை எல்லாம் சிறிய குடும்பம் பிள்ளைகளும் ஒவ்வொரு ஊரில்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
ர்த்தனை அழகாகச் சொல்கிறீர்கள்.!!!
நம் வீட்டிலும் அப்படித்தான். பெருமாளுக்கு ஆராதனம் செய்யாமல்
, தீர்த்தம் சாப்பிடாமல் சாப்பாடு கிடையாது. எத்தனை உன்னதமான நாட்கள் அவை!!!

பெரியவர்கள் இருந்ததால் மனக்கவலை கிடையாது.
பொறுப்பு இல்லை. சமைத்தால்
போதும்.

உங்கள் வீட்டிலும் இந்த முறை உண்டு என்று கேட்கவே
மனசு நிறைய சந்தோஷம்.
இந்த கனகாப் பாட்டி ஒடு புது டுரெண்ட் கொண்டு வந்திருக்கிறார்.
அவர் கணவர் அந்த நாற்காலியில் இருப்பதைப்
பார்த்ததும்,
நாமும் இப்படித்தானே இருந்திருப்போம் என்று தோன்றியது.

பரவாயில்லை.... இப்படியும் சில காலம்.
அருமையாகச் சமையல் முறை சொல்கிறார்.
உடன் இருக்கும் மருமகள் சரியாக உதவி செய்கிறார்.
படம் பிடிப்பவரும் சரியாக எடிட் செய்திருக்கிறார்.

இந்தத் தனித் திறமையை நாம் போற்ற வேண்டும்.
நீங்களும் ரசித்தது தான் மனசுக்கு இதம்.
நன்றி maa.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
உங்கள் ஆசைப்படி உங்க வீட்டுக்கு
ஒரு நல்ல பாட்டி வரட்டும்:)