Blog Archive

Saturday, February 05, 2022

அவரைக்காய் + பச்சை மிளகாய்ப் பொரியல்

13 comments:

நெல்லைத்தமிழன் said...

இந்தக் காம்பினேஷனை நினைத்தாலே வயிறு கலங்குது.

இங்கு மிக அருமையான அவரைக்காய் கிலோ முப்பதுக்குக் கிடைக்குது. வித வித மிளகாய்கள் அறுபது ரூபாய்தான். ஆனால் அனேகமா எல்லாமே காரம் தூக்கலா இருக்கு. சரியா கணித்து வாங்க முடிவதில்லை.

இருந்தாலும் காணொளி காண்கிறேன்

Geetha Sambasivam said...

கன்னடத்து மக்கள் அதிகம் அவரைக்காய் பயன்படுத்துவாங்க போல. யூ ட்யூபை மத்தியானமாப் பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

அவரைக்காயை சாம்பார், வெந்தயக்குழம்பு மட்டுமே வைப்பார் பாஸ்.  இது வித்தியாசமாய் இருக்கிறது.  எளிமையாகவும் இருக்கிறது. செய்துவிடலாம் ஒருமுறை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. அவரைக்காய்+கொத்தமல்லி+ பச்சைமிளகாய் கறி ரெசிபி நல்ல காரசாரத்துடன் அழகாய் இருந்தது. அவர் சொன்ன விவரணை அருமை. அவரைக்காய் இங்கு பிடித்தமான உணவு. எங்கள் வீட்டில் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். நான் இவ்வளவு காரம் ஒத்துக்கொள்ளாமையால் கொஞ்சம் தேங்காய் பூ சேர்த்து வதக்குவேன். இல்லை. பா பருப்பு போட்டு கூட்டு மாதிரி பண்ணுவேன். இந்தச் செய்முறையும் அழகாக இருந்தது. கொத்தமல்லியின் நிறைந்த வாசனையோடு மனதுக்குள் சாப்பிட்டு ரசித்தேன். இன்று கூட எங்கள் வீட்டில் அவரைக்காய்தான் வாங்கி வைத்துள்ளேன். இந்த மாதிரி பெரிய அவரை சென்னையில் கிடைத்தது. இங்கு ஒரு விரல் அகலமுள்ள சின்னதாகதான் கிடைக்கிறது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

சூப்பர்!!

கீதா

Geetha Sambasivam said...

பார்த்தேன். கண்ணில் நீரும், வாயில் எரிச்சலும் வந்துடுத்து. இத்தனை மிளகாயா? கொஞ்சமாப் போட்டுத் தேங்காயும் சேர்த்துப் பண்ணிப் பார்க்கிறேன். நான் அவரைக்காயைக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கி (நிறம் மாறாது. சீக்கிரம் வேகும்) வேக வைத்துத் தேங்காய்த் துருவல் போட்டுக் கடுகு, உபருப்பு தாளித்து அரை மி.வத்தல் போட்டு எடுப்பேன். பொரிச்ச குழம்பு/கூட்டு, புளிவிட்ட கூட்டு/கூட்டுக் குழம்புனும் பண்ணுவேன். இப்போல்லாம் அவரைக்காயிலும் பருப்பு உசிலி பண்ணறாங்க. அதுவும் பண்ணலாம். சாம்பாருக்குப் போடுவேன். வெறும் குழம்பில் போட்டால் எங்க யாருக்கும் பிடிக்கிறதில்லை

நெல்லைத் தமிழன் said...

பெங்களூர்லதான், பச்சைப்பட்டாணி, சிறிய மொச்சை, டபுள்பீன்ஸ், பச்சைத் துவரை, பச்சைக் கொண்டைக்கடலை, பச்சை நிலக்கடலை என்று நிறைய விற்பனைக்கு வருகின்றன. எல்லாம் சுமாரா கிலோ 50 ரூபாய் (கொண்டைக்கடலை மாத்திரம் 100 ரூபாய்)

இங்க, அவரை தோசை என்பது ரொம்பவே ஃபேமஸ் (எனக்குத்தான் அதைப் பார்த்தாலே பிடிக்காது. எனக்குத்தான் புதுசா எதையும் சாப்பிடப் பிடிக்காதே)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

அவரைக் காய் எப்பொழுதும் ருசிதான்.
இது புதிதாக இருக்கவே பதிந்தேன்.

ஆந்த்ரா, கர்னாடகா ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்கள்.
நமக்குத் தேவையான அளவு ஸேர்த்துக் கொண்டால்
போகிறது.:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இந்தப் பதிவுகளில் கனகா பாட்டி என்பவர் பழைய முறைகளைச் சொல்கிறார்.

நெல்லை சொல்லி இருப்பதைப் பார்த்தால் விரல் அளவு
அவரை. அதை அப்படியே வேக வைத்துச் சாப்பிட்டால் கூட நன்றாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
அவரைக்காய் மார்கழி தை மாதங்களில் செழிப்பாக இருக்கும்.
இவர்கள் சொல்கின்ற விதம் நன்றாக
இருக்கிறது.
முடிந்த போது செய்து பாருங்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

நாங்கள் சேலத்தில் இருக்கும் போது,
கூடை கூடையாக அவரை விற்பார்கள்.
கூட்டு, வற்றல், பொரியல்,குழம்பு எல்லாமே வாசனை
தூக்கி அடிக்கும்.

நீங்கள் சொல்வது உண்மைதான்.
பச்சை மிளகாய்க் காரம் வயிற்றுக்கு ஆகாது. குழந்தைகளுக்கோ
பெரியவர்களுக்கோ ஒத்துக் கொள்ளாது.

தலைப்பு புதிதாக இருந்ததால் பதிந்தேன்.
நம் விருப்பப் பிரகாரம் செய்யலாம்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள். நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

காரம் குறைவாக போட்டு செய்து பார்க்கத் தோன்றுகிறது. இங்கே நாட்டு அவரைக்காய் கிடைக்கும் என்பதால் நாட்டு அவரைக்காயில் செய்து விடலாம். குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.