Blog Archive

Saturday, February 19, 2022

பிடி கருணை துகையல் கனகா பாட்டி


 பிடி கருணை என்று சொன்னாலே ஒரு நடுக்கம்
வரும் எனக்கு:)
ஆஜிப்பாட்டிக்கு அதை தினம் சாப்பிட்டாலும்
போதாது.  அனேகமாக வருடத்தில் சில மாதங்கள்
நிறைய கிடைக்கும்.

மாட வீதி கடைகளில் சாக்கு நிறைய வைத்திருப்பார்கள்.
சின்ன மாமியாருடன் அங்கே போய் இறங்கும்போது

வேணு என்ற கடைக்காரர்  சின்னம்மா வாங்க,
பாட்டிம்மாவுக்கு பிடித்த கிழங்கு வந்திருக்கு.''
என்பார்.

சிறு கிழங்கு என்று ஒரு வகை, சேனை ஒரு வகை.
கருணை என்று ஒரு வகை.பிடி கருணை 
என்று ஒருவகை.
எல்லாமே மண்ணுக்குள் விளைவதால்
அந்தந்த மண்ணுக்கு ஏற்ற மாதிரி
இருக்கும். 
நம் வீட்டிலேயே சேனை நட்டு 
அந்த இலைகள் நல்ல விதமாக உபயோகமாகும்.
உள்ளே இருக்கும் கிழங்குகளும் நல்ல
சிவப்பு வண்ணத்தில் அடுக்கடுக்காக மண் வாசத்துடன் வெளியே
எடுப்போம்.








நம் கீதா சாம்பசிவம் கூட முன்பு 
இந்த  சேம்பு இலை அடை பற்றி 
எழுதியதாக நினைவு.

இந்தப் பாட்டியும் ( !!!! )பிடி கருணை பற்றி சொல்லி இருக்கிறார். 
தொண்டை அரிக்காமல் இருந்தால் சாப்பிடலாம்:)
இவர் என்னைவிட 4 வயதுதான் பெரியவர்.
அதனால் நானே பாட்டி என்று சொல்லக் கூடாது!!!

பிடி கருணை சாப்பிட்டால் இதயத்துக்குப் பலம் கொடுக்கும் என்பார்கள்.
ஆஜிப் பாட்டி 88 வயது வரை இதய நோய் இல்லாமல்
வாழ்ந்தார்.

அனைவரும் வாழ்க வளமுடன்.

17 comments:

ஸ்ரீராம். said...

பொதுவாக கிழங்கு என்றாலே எல்லோரும் ஒரு அடி தள்ளி நிற்பார்கள்.  எனக்கு உருளைக்கிழங்கை விட சேப்பங்கிழங்கு பிடிக்கும்!  எங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு செய்வோம்.  மூலத்துக்கு நல்லது என்று எப்போதாவது கருணைக்கிழங்கு மசியல் செய்வோம்!  சிறுக்கிழங்கு, பிடிகருணை செய்ததில்லை.  நான் சொல்லும் கருணைக்கிழங்கும், பிடிகருணையும் ஒன்றுதானா?

Geetha Sambasivam said...

இப்போத் தான் கருணைக்கிழங்குத் துவையல் அவரோட அம்மா பண்ணுவார் எனச் சொல்லிண்டு இருந்தார். நான் கேள்விப்பட்டதில்லை/சாப்பிட்டதும் இல்லைனு சொல்லிக் கொண்டிருந்தேன். இங்கே வந்தால் நீங்க போட்டிருக்கீங்க! ஒரு நாள் பண்ணிப் பார்க்கலாம், கொஞ்சமாய்க் கருணைக்கிழங்கை வைத்து. மசியல் அடிக்கடி பண்ணுவேன். மற்றபடி கறி/குழம்புனு பண்ணினதில்லை. அதுவே சில/பல சமயங்களிலும் தொண்டையில் காறும். :(

திண்டுக்கல் தனபாலன் said...

உடம்பு ஏற்றுக் கொண்டால் சாப்பிடலாம்...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

சேப்பங்கிழங்கும் சேனைக்கிழங்கும் வதக்கி வறுத்து சாப்பிடலாம்.
கருணை சின்னதாக இருக்கும் .சிறுகிழங்கும் ,
பிடி கருணையும் கட்டாயம் தொண்டையில் அரிக்கும்.
கருணைக்கிழங்கு மசியல்,எலுமிச்சை பிழிந்து
சாப்பிட வேண்டும்.

இருந்தாலும் கவனம் வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நலமுடன் இருங்கள்.

நான் பேச நினைப்பதெல்லாம் பாட்டு மாதிரி இருக்கிறதே.:)
நிறைய தடவை இது போல நடக்கிறது.

நேசம் உள்ளோரை நெஞ்சில் நினை கதைதான்..

இந்த மாமி ஜாக்கிரதையாக ,ஸ்பூனால்
எடுத்துப் போடுகிறார். இல்லாவிட்டால்
கை கூட அரிக்கலாம்.
புது விதமாக இருந்ததால் பதிந்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

உண்மைதான். நம் சர்க்கரை சேர்ந்த உடல்கூறுக்குக்
கவனித்துத் தான் சாப்பிட வேண்டும்.

நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்வார்கள் மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா எல்லாக் கிழங்கும் செய்வதுண்டு. இங்கு இப்போது சிறு கிழங்கு தை மாசம் கிடைத்தது அதுவும் ஒரு மலையாளி கடையில் மட்டுமே தென்னகத்தில் தான் சிறு கிழங்கு கிடைக்கும் திருவனந்தபுரத்தில் இம்மாதம் தவிர்த்து அப்புறமும் கிடைக்கும் என்ன விலை கொஞ்சம் கூடுதலா இருக்கும்

தை மாசம் வாங்கிய பொது கிலோ 90

இன்று நம் வீட்டில் சேனை

பிடிகருணை மசியல் பொடி எல்லாம் சூப்பரா இருக்கும்

சேம்பு ரொம்பப் பிடிக்கும். கேரளத்தில் பெரிய சேம்பு என்று கிடைக்கும். அதுவும் செமையா இருக்கும் வதக்கல் செய்ய..

துளசி வீட்டில் பின் பக்கம் நிறைய பெரிய சேம்பு செடிகள் உண்டு. இலை பெரியதாக இருக்கும்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சிறு கிழங்கு அரிக்காது அம்மா. இதுவரை அரித்ததில்லை.

வாங்கி வந்து தண்ணீரில் ஊறப் போட்டு மண் போக அலசி அதன் பின் ஒரு கட்டிப் பையில் போட்டு இங்கு கரகர சிமென்ட் தரை உண்டு அதில் போட்டு அடித்துத்தேய்த்து (ஊரில் இருந்த வரை சாக்கில் போட்டு அடிப்போம்!!)

வதக்கல் செய்தேன் ரொம்பப் பிடிக்கும் இங்கு எல்லாருக்கும். சிறு கிழங்கு தேங்காய் போட்ட்யு இஞ்சி போட்டும் பொடித்துவல்னு கேரளத்தில் சொல்வது செய்யலாம். நன்றாக இருக்கும்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
இனிய காலை வணக்கம்.

நீங்கள் எல்லாக் கிழங்கையும் ருசித்திருக்கிறீர்களே.

தெனாலி ராமன் பூனை மாதிரி நான்:)
கிழங்குகளைப் பார்த்தாலே கொஞ்சம் பயம். உ.கிழங்கு, சே.கிழங்கு தவிர:)

திண்டுக்கல்லில் இருக்கும் போது கொடைக்கானல் இருந்து சிறு கிழங்கு வரும்.

அப்பா,அம்மா,பாட்டி விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தந்த கிழங்குகளுக்கு வேண்டும் என்ற சிஸ்ருஷை
செய்தால் எல்லாம் நலமே.

துளசி வீட்டில் சேம்பு இருப்பது மகிழ்ச்சி. கேரளா
வளமான பூமி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கி வந்து தண்ணீரில் ஊறப் போட்டு மண் போக அலசி அதன் பின் ஒரு கட்டிப் பையில் போட்டு இங்கு கரகர சிமென்ட் தரை உண்டு அதில் போட்டு அடித்துத்தேய்த்து (ஊரில் இருந்த வரை சாக்கில் போட்டு அடிப்போம்!!) ""
ஆஹா இது நன்றாக என் நினைவில் இருக்கிறது.

இது எங்கள் அப்பாவுக்கான வேலை.
இல்லாவிட்டால் தம்பியைக் காலால் மிதிக்க சொல்வார்கள்:)
நல்ல நினைவுகளுக்கு நன்றி மா.

மாதேவி said...

சட்டிக் கரணை பெரிதாக இருக்கும் அதுதான் சமைப்பேன் முதலில் கிழங்கைதோல் நீக்கிவெட்டி அவியப்போட்டு நீரை ஊற்றிவிட்டு எடுத்து சிறியதாக வெட்டி ஆயிலில் கடுகு காய்ந்த மிளகாய் வெங்காயம் தாளித்து கிழங்கையும் தாளித்து உப்பு மிளகாய்பொடி மசாலாப்பொடி கட்டித் தேங்காய்பால் விட்டு கொதிக்க பிரட்டி எடுப்போம் .அவித்த கிழங்கை துவையல் ஆக்கலாம். கிழங்கை சீவி அவிக்காமல் தாவாவில் ஆயிலில் வாட்டி உப்பு காரம் சேர்த்து எடுக்கலாம்.

Geetha Sambasivam said...

சிறு கிழங்கு அம்பத்தூரில் கொஞ்சம் கொஞ்சம் கிடைக்கும். சாப்பிட முடிந்தது. இங்கே வந்ததில் இருந்தே பார்க்கவே இல்லை. அவரும் கிடைக்கலைனு சொல்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நீங்கள் சொல்லும் முறை புதிதாக இருக்கிறது.
நீங்கள் சொல்லும் சேனைதான்
கொஞ்சம் சங்கதமும் இல்லாமல்
சாப்பிடலாம்.

முக்கால்வாசி வறுவல் செய்து விடுவேன்.
நீங்கள் நல்ல சுவையாக சமைப்பீர்கள்.
எங்கள் ப்ளாகுக்கு அனுப்பலாம்.
நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இந்த ஊருக்கு வந்தால் எல்லா ஆசையும் போய்விடும்.
கொத்தமல்லியாவது நிறைய கிடைக்கிறது
கருவேப்பிலை குதிரைக் கொம்பு.
எப்படியோ சமையலும் செய்து விடுகிறேன்:)

கோமதி அரசு said...

சமையல் குறிப்பு நல்ல எடுப்பான குரலில் சொல்கிறார்.
இந்த கருணை மசியல் என் அம்மா அடிக்கடி செய்வார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

என்றும் வாழ்க வளமுடன்.
நல்ல குறிப்புகள் தருகிறார் இந்த அம்மா.

உங்கள் அம்மாவும் செய்திருக்கிறார்கள் என்பதே
மகிழ்ச்சி. நன்றிமா.

வெங்கட் நாகராஜ் said...

பிடி கருணை எனக்கும் பிடிக்கும். காணொளி இனிமேல் தான் பார்க்க வேண்டும்.