Follow by Email

Thursday, August 02, 2007

ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே

நடுவில் கடிதங்கள் ,கேள்விகள் மாப்பிள்ளைக்கு சூட்,


பெண்ணுக்கு எத்தனை பட்டுப்புடவை,நாத்தனார்களுக்குச் சீர்,
கல்யாண சாப்பாடு மெனு எல்லாம் விவாதிக்கப் பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாப்பிள்ளை வீட்டாருக்கு வேண்டிய அப்பளம் வடகம்,வடாம் எல்லாம் பெண்வீட்டார் கீழநத்தம் வந்து இறங்கிய அடுத்த நாளிலிருந்து தயாரிக்கப்பட்டன.
அவர்கள் ஒரு மாதம் முன்னதாகவே எம்.சி.எம் ஸ்கூல் விடுமுறை நாட்கள் ஆரம்பித்ததுமே திருநெல்வேலி எக்ஸ்பிரசில் வந்து இறங்கிவிட்டார்கள்.
ஸ்ரீவீரராகவனின் சகோதரசகோதரிகள், திருமதி ருக்குமணியின் அக்கா,தங்கைகள்,பெற்றோர்,பெண்ணின் நான்கு குட்டி சகோதரர்கள் (12,10,6,4)எல்லோரும் வெய்யில் வீணாகாமல் கிராமத்துக்கு வந்தார்கள்.


திருமதி ருக்குமணி...எங்க அம்மா வழிப்பாட்டி..சீனிம்மாவின் மூத்த சகோதரியும் இளளய சகோதரியும் சமையல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்களவாசலை அடைத்து அழகான பந்தல் போடப்பட்டது. பிள்ளைவீட்டார் வீட்டு முன்பாகவும் பந்தலும் கோலங்களும் போடப்பட்டன.


பிள்ளைவீட்டார் வரும் நாளும் வந்தது.அவர்கள் வீட்டு மனிதர்களாக ஐம்பது நபர்கள் தான் வரமுடிந்தது. மற்றவர்கள் பெண்ணை திருநெல்வேலியில் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள்.
வந்திறங்கியதும் உபசாரக்காப்பி,கேசரி,போண்டாஎல்லாம் முடிந்தது.

மாப்பிள்ளைக்குத் தோழனாக அவர் சகோதரரே இருந்ததால் அநேகமாக அவர் திருமணமும் அப்போதே நிச்சயமானதாக அம்மா சொல்லுவார்.

அடுத்த நாள் ஜானுவாசம் . காலையிலிருந்தே பரபரப்பு. திருநெல்வேலியிலிருந்து ஏற்பாடாகி இருந்த சாரட் வண்டிக்காரன் திடீரென உடல்நலமில்லை என்று ஆளனுப்பிவிட்டான். அவன் குதிரைகள் நலமாக இருந்தன நல்லவேளை:)))

அதனால் வேறு ஆள் ஏற்பாடு செய்ய பெண்ணின் மாமா விரைந்தார்.
கையோடு இன்னோரு குதிரைக்காரனோடு அந்த சாரட்டிலேயே கீழநத்தம் வந்துவிட்டார். அதுவே பெரிய அதிசயமாகிவிட்டது அந்தத் தெரு மக்களுக்கு. எட்டாம் வீட்டுக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. எட்டாம்வீடு என்று அழைக்கப் படுவது பெருமாள் கோவிலுக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் வீடு.

இப்பவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.


ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சன்னிதியிலிருந்து ஊர்வலம் புறப்படுவதாக திட்டமகோவிலில் சர்க்கரைப்பொங்கல் ஏற்பாடு ஆகீஇருந்தது.
பெண்வீட்டாரும்,மாப்பிள்ளைவீட்டாரும் ஒரு எட்டில் கோவிலுக்கு வந்து விட்டனர். அலங்கரம் செய்யப்பட்ட சாரட்டும் ஒரு ஒல்லிக் குதிரைக்காரரும்
அவரைவிடச் சுமாரான வெள்ளளக்குதிரைகளும் நின்றுகொண்டிருந்தன.
அதில் ஒரு குதிரைக்கு வயிறு சரியில்லை. எந்தப் புல்லைச் சாப்பிட்டதோ.


ஸ்ரீவேணுகோபல சுவாமிக்கு அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வினியோகம் செய்து, மாப்பிள்ளைக்கு வேஷ்டி,ஷர்ட்,சூட் எல்லாம் வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்து சம்பிரதாயமாகக் கொடுக்கப்பட்டது.

சி.நாராயணனுக்கு குதிரை வண்டி பழக்கம் என்றாலும் இது போல ஓப்பன் ஊர்வலம் வந்ததில்லை.
தயங்கியவாறு தன் அக்காபிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார். நான்கு பசங்களும் உற்சாகக் கோஷமிட ஊர்வலம் கிளம்பியது.
நான்கு தப்படி போயிருக்காது.,அதற்குள் பாண்டு வாத்தியக்காரர், ஒரு யானை பிளிறன மாதீரி ஒரு நோட் வாசிக்கவும் குதிரை மிரண்டது.

ஒரே தாவல், அடுத்த குதிரையும் மிரள நான்கு கால்களும் மேலே தூக்க சாரட் கவிழ்ந்தது.

அனைவரும் ஆ என்று அலறுவதற்கு முன்னாலேயே மாப்பிள்ளையும் குழந்தைகளும் வெளில வந்தாச்சு. ஒரு சிராய்ப்பு கூட இல்லை.

அப்பாவின் சித்தி கொஞ்சம் கடுபிடு பண்ணினாராம்.

சகுனமே சரியில்லையே.அது எப்படி இந்த மமதிரி உலகத்த்திலே இல்லாத குதிரை கொண்டுவந்தார் உங்க சம்பந்தி என்றெல்லாம் பேச்சு வர,
மமப்பிள்ளை அசராமல் இருந்ததால் மேற்கொண்டு சிரிப்புகளுடன்

ஒரு வழியாக நடந்தே ஜானுவாசம் நடந்து முடிந்தது.

சாயந்திர நிச்சயதார்த்தம் எல்லாம் நிறைவேறி, பந்திக்கு அமர்ந்தபோது மீண்டும் ஒரு சின்ன பிரச்சினை.

மாப்பிள்ளையின் மாமாவைச் சரியாக உபசாரம் செய்து சாப்பிடக் கூப்பிடவில்லை என்று. உடனே ஒரு வயதானவர்கள் படை பிள்ளை தங்கியிருக்கும் வீட்டீற்குக் காசி அல்வாவோடு போய் அழைத்துவிட்டு வந்தார்கள்.

அல்வா செய்த வேலையோ என்னவோ அவர் பிறகு வாய் திறக்கவில்லை.

இலைகள் போடப்பட்டு உட்கார்ந்தவர்களுக்கு நல்ல விருந்துபசாரம் நடந்தது.

திரட்டிப்பால், மைசூர்பாகு அன்றைய இனிப்பு. வழக்கம்போல கதம்ப சாதம்,சித்திரான்னம்,தயிர்ப்பச்சடி,உருளைக்கிழங்கு பொடிமாஸ்,வாழைக்காய் வறுவல் ,திருக்கண்ணமுது என்று எளிமையான சமையல் தான்.

அடுத்த நாள் விடிந்து காலையிலேயே முகூர்த்தம்.

மாப்பிள்ளையை நல்ல படியாகக் கவனித்துக்கொள்ள இங்கிருந்து இரண்டு பேர் பக்கத்திலேயே இருந்து வென்னீர் வைத்துக் கொடுத்து உண்மையயன அன்பில் திக்கு முக்காட வைத்ததாக அப்பா பின்னாட்களில் சொல்வார்.


இப்படியாகத்தானே சௌபாக்கியவதி ஜெயலட்சுமிக்கும் சிரஞ்சீவி நாராயணனுக்கும் இனிதே கல்யாண வைபவம் நடந்து முடிந்தது. மேற்கொண்டு எந்த வித சங்கடமும் இல்லாமல் கட்டுசசதத்துடன், ஏகப்பட்ட பொரித்த பொரிக்காத அப்பளக் கூடைகள்,முறுக்கு சம்புடங்கள்,திரட்டிப்பாலோடு வெள்ளிக்குடம், என்று பலவித சீர் செனத்தியோடு புக்ககம் புகுந்தாள் சேச்சிப் பாப்பா என்கிற புஷ்பாவாக இருந்து மாறிய ஜெயலட்சுமி நாராயணன். சுபம்.
மேற்கொண்டு 1943ல் திருமணம் நடந்தாளும் அவர்கள் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டது 1945ல் தான். சென்னையில் மிச்சப் படிப்பை முடித்து 15 வயதில்தான் அப்பாவும் அம்மாவும் அப்பாவுக்குப் போஸ்டிங் ஆன கயத்தாறுக்குத் தனிக்குடித்தனம் வைக்கப் பட்டார்கள். அது தனிக்கதை.:)))


29 comments:

வல்லிசிம்ஹன் said...

திருமணத்துக்கு வந்து ஆசீர்வாதங்கள் பெற்றுக்கொண்ட எல்லோருக்கும் என் பெற்றோர் சார்பில் நன்றி.

இருவருமே இட்த்தனை நண்பர்கள் தங்கள் பெண் எழுதியதைப் படித்தார்கள் என்று தெரிந்தாலே நெகிழ்ந்து இருப்பார்கள்.
உலகம் முழுக்கக் குழந்தைகளை நேசிக்கும் அவர்கள் நலனை விரும்பும் அனைத்துப் பெற்றோருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

இலவசக்கொத்தனார் said...

இவ்வளவு அழகாக எழுதிய இந்த கட்டுரையைப் படித்ததன் மூலம் அவர்கள் ஆசி எங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி வல்லிம்மா.

துளசி கோபால் said...

//உபசாரக்காப்பி,கேசரி,போண்டாஎல்லாம் //

அட! போண்டா இருந்துருக்கு. பேசாம வலைமாநாடு
நடத்தி இருக்கலாம்:-)))))

தூள் வல்லி.

அட்டகாசமா சேச்சிப்பாப்பா கல்யாணம் நடந்துருக்கு.
காலம் மாறும் இந்த சமயத்துக் கல்யாணம் ஒண்ணையும் எழுதுங்கோ.
எப்படி காண்ட்ராஸ்ட்டா இருக்குன்னு பார்க்கலாம்:-))))

Anonymous said...

கல்யாணப்பதிவு முழுக்க இன்னிக்குதான் படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு. இப்படி பழய கத சொல்ல எனக்குப்பாட்டி இப்ப இல்லியேன்னு ஒரு வருத்தம்

ambi said...

//அல்வா செய்த வேலையோ என்னவோ அவர் பிறகு வாய் திறக்கவில்லை.
//

:))))

திருமதி விசாகா ஹரி அவர்களின் கதாகாலட்சேபம் கேட்ட திருப்தி. அருமையான நடை. பந்தியில நாங்களே உக்காந்து ஒரு கட்டு கட்டின மாதிரி இருந்தது. :)

//உபசாரக்காப்பி,கேசரி,போண்டாஎல்லாம் //
அடடா! கேட்கும் போதே சும்மா அதிருதே!
என்ன கேசரி? ரவா, சேமியாவா இல்ல அன்னாசி பழ கேசரியா? :p
முந்திரி, நெய்யெல்லாம் ஒழுங்க விட்டு இருந்ததா? :)

அய்யோ! எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. :)

சொக்கா! எனகில்லை எனக்கில்லை! :p

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ். கட்டாயம் உண்டு. அப்பா என்ற அருமையான மனிதர்
ஒரே ஒரு ஹலோ சார் சொன்னாலே ஜன்மத்துக்கும் மறக்காமல் அன்பு செலுத்துவார்.அவர்களுடைய சதாபிஷேகம் நடத்துவதற்குப் பதிலாக இந்தப் பதிவை எழுதினேன்.
மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சின்ன அம்மிணி, கவலைப் படதீங்கொ. யாராவது உறவு முறைப் பெரியவர்களிடம் கேட்கவும்.சுரங்கம் போல செய்தி கிடைக்கும். உங்க கொங்கு பாஷையிலேயே அள்ளி விடலாம்.எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கோ துளசி,

சேச்சிப் பாப்பா கதையே அழகா எழுத ஆசை. அவங்க குடித்தனம் கயத்தாறு என்ற இடத்தில் ஆரம்பித்தது.

இப்போது நடந்த கதையும் எழுதலாமே.சம்பந்தப்பட்டவர்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது அதனால் தைரியமா எழுதலாம்.:))))

வல்லிசிம்ஹன் said...

அம்பி, அப்பாடி எப்படிப்பட்ட லெவலுக்கு உசத்திட்டிங்களே.
விசாகா ஹரி எங்கே, ச்சும்மா கதையடிக்கிற நான் எங்கே.

கேசரி ரவைதான்.முந்திரிப்பருப்பு நெய் உண்டு.
எதிலுமே சிரத்தையாகச் செய்வார்கள் இல்லையா நம்ம பாட்டிகள் எல்லாம்.

அம்பிக்கு இல்லாத கேசரியா. நிறைய செய்து தருகிறேன்.
நன்றிம்மா.:))

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான நினைவலலைகள்....இதுபோல என் தாய் சொல்ல கேட்டிருக்கிறேன்.....
நன்றி வல்லியம்மா....

பத்மா அர்விந்த் said...

என்ன அவசரம் வல்லி, ஊஞ்சல், நலங்கு எல்லாம் இன்னும் விவரித்திருக்கலாம். முஹுர்த்தம் முடிஞ்சவுடனே கட்டுசாதத்துக்கு போக என்ன அவசரம். இன்னும் இரண்டு பதிவா எழுதி இருக்கலாம்.நல்ல இனிமையா எழுதி இருந்தீங்க.

வல்லிசிம்ஹன் said...

மௌலி வரணும். உங்க அம்மா சொல்றதை எல்லாம் எழுதிவைத்துக் கொண்டு ,மெதுவாகப் படித்துப் பாருங்கள். எங்க பாட்டி அழகாகக் கதைசொல்லுவார். ஒரு சம்பவம் விடாது கோர்வையாகச் சொன்னதில் பாதி மறந்து விட்டது. இதெல்லாம் வரலாறு இல்லையா. நிச்சயம் நமக்குத் தேவை.

Geetha Sambasivam said...

நகைச்சுவையும் கலந்து எழுதி இருந்த கல்யாணம் நிஜமாவே அசத்திவிட்டது. சுருக்கமாயும் அதே சமயம் தேவையான விஷயங்களை விடாமலும் எழுதி இருக்கீங்க. உங்க பெற்றோர் உங்களை மட்டுமில்லாமல் எங்களையும் கட்டாயமாய் ஆசீர்வதித்து இருப்பார்கள், என்றாலும் அவர்கள் இருவரும் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ற நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் பத்மா.
ஆமாம் நலங்கு முக்கியமாக எழுதி இருக்கலாம்.
ஆனால் அதைப் பற்றி விவரம் இல்லை. சும்மாக்கோசரம் எழுதத் தோணவில்லை.

அதனால்தான் விட்டு விட்டேன். மிகுந்த ஆதர்ஸ தம்பதிகள்.
ரொம்ப நன்றி.கல்யாணங்கள் நல்ல ரசனைதான் இல்லையா :))))

Geetha Sambasivam said...

அம்பி, இருக்கட்டும், இருக்கட்டும், விளக்கெண்ணெய் விட்டுக் கேசரி கொடுக்கப் போகும் நன்னாளை எதிர்பார்த்துட்டு இருக்கேன். அன்னாசிப் பழம் போட்டு வேணுமா? பாகற்காய்ப் பழம் போட்டு வைக்கிறேன், கூடவே கத்திரிக்காயும்! :P

தி. ரா. ச.(T.R.C.) said...

அழ்கான வர்ணனை. நானே நேரில் அந்தக்கால கல்யாணத்தில் கலந்து கொண்ட திருப்தி கிடைத்தது.பெரியவர்கள் ஆசீர்வதம்
எனக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. ரொம்ப சந்தோஷம் நீங்களும் எங்க பெற்றோரைப் புரிந்து கொண்டதற்கு. அப்பாவுக்கு இப்போது 86,அம்மாவுக்கு 78.
ம்ம்ம். அவர்கள் ஆரோக்கியமாக இருந்திருந்தால்
நன்றாகத்தான் இருந்திருக்கும். கொடுப்பினை வேணும் இல்லையா. கடமையைச் செய்துவிட்டுப் பலனை அனுபவிக்காமல் போய்விட்டார்கள.பரவாயில்லை குறை ஒன்றும் இல்லாமல் பெருமாளிடத்தில் நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.
நன்றி. இப்போதும் எங்கேயாவது சதாபிஷேகம் நடந்தால் அழைக்கவிட்டால் கூடப் போய்விடுவேன்.
முதுமையில் அழகாயிருக்கும் தம்பதிகளைப் பார்க்க அப்படி ஒரு ஆசை. உங்களுக்கும் நம் எல்லோருக்கும் கட்டாயம் ஆசீர்வாதங்கள் உண்டு.

Shobha said...

முதுமையில் அழகாயிருக்கும் தம்பதிகளைப் பார்க்க அப்படி ஒரு ஆசை

Very well narrated Valli. Coimbatore pakkam vanda vango.My fater in law is 91 & mother in law is 81. Mudumayil irukkum thampathigalai parkalam. :)
Shobha

வல்லிசிம்ஹன் said...

Thank u Shobha and welcome.

am so happy to know abt ur father and mother-in-law.
Hope they are keeping very good health.

wishiing you all goodhealth and happiness for taking care of old people,vallimma.

enRenRum-anbudan.BALA said...

மிக அழகாக எழுதியுள்ளீர்கள், மனதை நெகிழ வைத்த ஒரு பதிவு, நன்றி !

என்றென்றும் அன்புடன்
பாலா

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா நான் சமீபத்தில் ஹைதிராபாத் போய்வந்தேன். அங்கே என் நண்பரின் தாத்தாவையும் பாட்டியையும் பார்த்து வணங்கி விட்டு வந்தேன் தாத்தாவுக்கு 100 வயது பட்டிக்கு 90 வயது. பார்வதி பரமேஸ்வரரைப் பார்த்ததுபோல் இருந்தது.எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் வேறு யாருக்காவது உண்டா என்று தெரியவில்லை. இதில் விசேஷம் என்ன வென்றால்
அந்தப் பெரியவர் எங்களை கார் வரைக்கும் வந்து வழி அனுப்பி வைத்தார்.என் வாழ்விலேயே நான் செய்த மிகப்பெரிய பாக்கியமாக் கருதுகிறேன். கல்யாணம் ஆகி 80 நாட்களில் தம்பதிகள் பிரியுமிந்தநாட்களில் 80வருடங்கலாக வாழும் இந்த தம்பதிகள் இறைவனுக்குச் சமம்

வல்லிசிம்ஹன் said...

dear T.R.C, thank you so much for writing abt your grandfather and paatti.
thamiz fonts dhidirnu use seyya mudiyalai. sorry. as you say it was such a gift to you viiting these venerable old people and by sharing it, you have given me a gift.

வல்லிசிம்ஹன் said...

dear Balaa.
thank you so much for visiting here. sorry for replying in english.
one thing that never leaves our memory is our parents' love and affection. I am glad I colud share this event with my friends.

VSK said...

எவ்வளவு அழகாகக் கோர்வையாக இதை எழுதியிருக்கிறீர்கள்?

அருமையான வரலாற்றுப் பதிவு!

கல்கி, தேவன் எழுதிய ஒன்றைப் படித்தது போல ஒரு திருப்தி!

மிக்க நன்றி!

வல்லிசிம்ஹன் said...

varaNum vsk sir.
ippo irukkira idaththila thamiz fonts illai. so englishla pathil ezhuthaREn.
sorry.

Ninga vanthu padiccathu romba santhosham. anubavan nallathaa irukkavee ezuthuvathum nallathaa amainthu vittathu.

you have given me great happiness when you mentioned great names here inthis Blog.

thank you so much.

நானானி said...

வல்லி!
பழய கல்யாண சிடியைப் போட்டுப்
பார்த்தது போலிருந்தது. சஷ்டியப்தபூர்த்திக்கும் சதாபிஷேகத்துக்கும் அழைக்காமலே போகலாமென்று சொல்வார்கள்.பெற்றொரின் கல்யாணத்தை கூடயிருந்து பார்த்ததுபோல் அருமையாக சொல்லிவிடீர்கள். சூப்பரான ஸ்க்ரீன் ப்ளே. அல்வா செய்த வேலை நல்ல காமடி. உங்கள் பெற்றோரின் ஆசிகள்
எங்களுக்கும் உரித்தாகுக!

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி. உங்க வீட்டுக் கல்யாணம் எல்லாம் எப்படி நடக்கும்னு ஒரு பதிவு போடக்கூடாதா:))

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச, வி.எஸ்.கே சார், எ.அ.பாலா எல்லோருக்கும் மிக நன்றி.