அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும் திரு ஆஸீஃப் மீரான்
மனைவி இறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இத்தனை சின்ன வயசில் எவ்வளவு பெரிய இழப்பு.
அபி அப்பா விவரம் சொல்லும்போது மனது மிகுந்த பாரமாகிவிட்டது.
மீரான் அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகுந்த தைரியத்தாஇயும் பொறுமையையும் கடவுள் அளிக்க வேண்டும்.
பஸ் நிறுத்தத்தில் நிற்கும் கணக்கில்லாத தினக் கூலி ஆட்களைப் பார்க்கும்போதும்,
இந்த வெயிலுக்குப் பயந்து அவர்கள் நான் இப்போது
உட்கார்ந்து இருக்கும்
இந்த நெட் கார்னர் இருக்கும் maalஉக்குள் உலவிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும்பொது,
நம் சென்னையைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.
அடடா, எத்தனை தர்பூஸ் வண்டிகள். எத்தனை இளநீர்க் கடைகள்.
ஒன்றுமில்லாவிட்டால் ஒரு வீட்டு வெளிக் காம்பவுண்ட் நிழலாவது கிடைக்கும்.
இந்த ஊரில் கட்டிடங்கள் கட்டிடங்கள். மேலும் கட்டிடங்கள்.
அதற்கு இவர்கள் கொடுக்கும் விலை, மின்சாரம், தண்ணீர்க் கட்டணங்கள் உயர்வு.
ஊர்ருக்குப் பேச வேண்டுமானால் சொத்தையே எழுதி வைக்கவேண்டும்.
நம்ம வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண் இங்கே வந்து 15 வருடங்கள் ஆ கிறதாம்.
அசராமல் நான்கு வீட்டில் வேலை செய்கிறார்.
கணவன் இறந்து இங்கே வேலைக்கு வந்து இருக்கிறார்.
ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகி விட்டது.
அவரது மகனும் வண்டி ஓட்டிப் பிழைக்கிறார் சொந்த ஊரில்.
இன்னும் ஒரு பெண் திருமணத்துக்குக் காத்து இருக்கிறாள்.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்குப் போவாராம்.
இனி நான் ஒரு நொடி கூட சென்னை வெயிலைப் பற்றிக் குறை சொல்ல மாட்டேன்.
இங்கே இருக்கும் உழைப்பாளிகள் அனைவரையும்
நலமாக வைக்கும்படி இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.
18 comments:
வாங்க வல்லிம்மா! எப்படி நம்ம ஊர்! சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்கு!
//இங்கே இருக்கும் உழைப்பாளிகள் அனைவரையும் நலமாக வைக்கும்படி இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.//
அப்படியே ஆகட்டும்....
வாங்க
வல்லிம்மா
வாங்க ;-))
\\பஸ் நிறுத்தத்தில் நிற்கும் கணக்கில்லாத தினக் கூலி ஆட்களைப் பார்க்கும்போதும்,\\\
பார்க்க ரொம்ப பாவமா இருக்கும்...ச்சே என்ன பொழப்புடா இதுன்னு தோணும்..
\\\இங்கே இருக்கும் உழைப்பாளிகள் அனைவரையும்
நலமாக வைக்கும்படி இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.\
மிக்க நன்றி ;)
நல்ல மனசு கொண்டு வாழ்த்தறீங்க..எல்லாரும் நல்லா இருப்பாங்க...
Hearty condolence to Asif meeran and his family. :(
@valli madam, take care of your health, come soon. chennai waiting for U.
ambi, thank you.
yes I shd. this heat is really something.
kaNden kandenu madras vara vendiyathuthaan.
ஆசீஃப் மீரானின் தந்தையும் முத்தமிழில் எழுதி இருந்தார்.ம்ம்ம்ம்ம் என்ன செய்வது? ரொம்பச் சின்ன வயசுதான் அவங்களுக்கு. பில்ராத் ஆஸ்பத்திரியிலே ஆபரேஷன் நடந்ததாய்த் தெரிவித்திருந்தார். பெயருக்கேற்றாற்போல் மல்லிகை மணம் வீசிக் கொண்டிருந்த பெண்! :((((((((((((((((((((((((
அபி அப்பா, நிறைய கட்டிடங்கள் போன வருஷத்துக்கு இந்த வருஷம் பார்க்கிறேன்.
எங்க வீட்டுப் பக்கட்த்தில இருந்த மரங்களையெல்லாம் வெட்டீ விட்டாங்க. நீழல்ங்கறது பேருக்குக் கூட இல்லை. இதில இந்த அம்னெஸ்டி வொர்க்கர்ஸ் அலையற கஷ்டம் வேற.
இனிமே பார்க்க வேண்டிய இடம் கொஞ்சம் தான். பார்த்தாலும் சரி இல்லாவிட்டாலும் பரவாயில்லை.:))
வரணும் கோபிநாத்.. எப்படி இருக்கீங்க.
வந்தாச்சு. வெய்யிலைப் பார்த்து அரண்டு போய் விட்டது.
எப்படியோ ! மக்கள் அவஸ்தைப்படாம இருக்கணுமேனுதான் தோன்றுகிறது.
வரணும் முத்துலட்சுமி.
கஷ்டப்பட்டு, குழந்தை குட்டிகளை விட்டு அந்து வேலை செய்யறாங்க. யார் பெத்த குழந்தைகளோ.
நல்லா இருக்கணும்னு தானே தோணுது.
நன்றிப்பா.
அப்படியா கீதா. அவரும் எழுதுவாரா.
எப்படி இப்படி ஒரு சோகம் நடந்ததுனு குழப்பமா இருக்கே.
ஒரே ஒரு தப்பு சர்ஜரி எவ்வளவு பெரிய துன்பமாப் போச்சு.
பகவான் தான் துணையிருக்கணும்.
வரணும் மௌலி.
நம்ம ஊரில பால்காரர், காய்க்காரர் முதற்கொண்டு இங்க வரணும்னு துடிக்கிறதைப் பார்த்தால் யோசனையா இருக்கிறது.
இங்க இருக்கிற கண்டிஷன் அவ்வளவா ரசிக்கிற மாதிரி இல்லை. ரொம்ம்பத் தீர்மானமா இருந்துதான் முன்னேறணும்.
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே என்ற தாயுமாணவரின் வாசகம் நினைவுக்கு வந்தது உங்கள் வரிகளைப் படித்ததும்.
ஆசீப் மீரான் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
வல்லியம்மா, நானும் எனக்குத்தெரிந்த சில விஷயங்களை பதிய ஆரம்பித்துள்ளேன். எந்த திரட்டியிலும் இணைக்கவில்லை. எனவே நீங்க அப்பபோ வந்து பார்த்து தங்களது கருத்துக்களை தர வேண்டுகிறேன்.
சிங்கையில் இப்படித்தான் கட்டிடவேலைக்கு வந்த தொழிலாளிகள் ஞாயித்துக்கிழமை
சாயந்திரங்களில் வீரமாகாளியம்மன் கோயில் வெளியில் கூட்டங்கூட்டமா உக்கார்ந்துக்கிட்டு
இருக்கறது அப்படியே வயித்தைப் பிசையும். கொஞ்ச நேரம் அவுங்களோட பேசிக்கிட்டு இருப்போம்.
ஒவ்வொருத்தர் கதையும் கண்ணுலே ரத்தம் வரவழைக்கும். இது 22 வருசம் முன்னாடி. இப்ப என்னன்னா,
ஞாயிறுகள் மாலையில் அந்தப் பக்கம் காலே எடுத்து வைக்கமுடியாத அளவு தொழிலாளிகள் கூட்டம்.
தேன்கூட்டைக் கலைச்சதுபோல ஒரு இரைச்சல் வரும் பாருங்க. பாவம்தானே இந்த மக்கள். இருக்கற
கொஞ்சநஞ்சத்தையும் வித்து வெளிநாட்டில் சம்பாரிக்கலாமுன்னு வந்து லோல் படறது இருக்கே...........
வரணும் தி.ரா.ச.
நம்ம வீட்டுக் குழந்தைகளும் வெளியூரில் வேலை பார்க்கிறார்கள்.
இங்கே போராடி வேலை பார்ப்பவர்களைப் பார்த்தால் எனக்கு இன்ந்த மாதிரியான எண்ணங்கள் வருவது அதிசயமே இல்லை.:)
வரணூம் மௌலி. உங்களோட
ஒரு பதிவு பார்த்தேன்.
கணபதி அழகாக வந்துவிட்டார்.
இன்னும் நிறைய விஷயங்கள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டி இருக்கு.. காத்திருக்கிறோம்.
ஆமாம், துளசி.
சில பேருக்கு நல்ல சம்பளம் இருக்க்க்க இருக்க இடம் ஏல்லாம் கிடைக்கிறது. சிலா பேர்ருக்கு இன்னும் இமிக்ரேஷன் பிராஸஸ்லியே தவறு நடக்கிறது.சம்பாதிக்க்கும் போதே ஒளிந்து வேலை செய்ய்கிறார்கள்.
பாவம்தான்.:((
Post a Comment