Tuesday, August 07, 2007

இளைத்தேன் நன்றாய் நூறுவயது

இப்போது ஒல்லியாக,ஸ்லிம்மாக, தின்னாக, எதையுமே தின்னக்கூடாத உடம்பு வாகுதான் கொண்டாடப்படுகிறது.

ஒரு மணியன், ஒரு சேவற்கொடியோன்,கொத்தமங்கலம் சுப்பு சார், சாவி சார் கதைகளில் வளர்ந்த எனக்கு அப்போது இருந்த வருத்தம் நாம் எப்போது அந்த மாதிரி இருப்போம் என்று ஒரே கவலை. எந்த மாதிரி? ஜயராஜ் சார் படம் போடுவாரே,, அதாவது வடிவோடு, அழகாக,பார்க்கிற மாதிரி!! அதுவும் கோபுலு சார் போடும் படங்கள் பார்த்துவிட்டு நானும் சூடு போட்டுக்கும் பூனை போல், வரைந்து பார்த்ததில்( கை வளைந்தால் உடம்பும் வளையும் என்று யாரவது சொல்லி இருப்பார்கள்) எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்து விட்டது.ஓஹோ நம்ம பொண்ணுக்கு சின்னக் கண்ணாக இருப்பதால் இந்த வில் போன்ற புருவம் வரைந்து மனதைத் தேற்றிக் கொள்ளுகிறாளோ, ஒட்டடை குச்சி என்று அழைக்கப்படுவதால் இந்த மிஸ் நிம்புபானி ஓவியங்கள் நோட்டுபுக் தாள்களில் நிரம்புகிறதோ என்று சீக்ரெட்டாகக் கவலை. அப்பா அம்மாவிடம் கலந்து பேசி, ஒரு இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் எங்கள் மூன்று பேரையும் அழைத்துப் பொதுவாக உடல் ஆரோக்கியக் குறிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார். சின்னதம்பிக்கு தூக்கம் வந்தாலும் ஏதோ கதை போல என்று தலையை ஆட்டினான். பெரிய தம்பி அப்பாவிடம் நிறைய மரியாதை, அதனால் உன்னிப்பாக கேட்டுக்கொண்டான். எனக்கு as usual புரியாததால் ஜெனெரலாக ஆமாம்பா சொல்லிக் கொண்டு இருந்தேன்.
"ஆகையினாலே மனசு ஹெல்தியாக இருக்கணும்னால் நிறையப் படிக்கணும்,பேசணும், இதோ நீ கூட படம் வரயறே. உனக்கு நல்ல ஓவியராக வர ஆசைனு தெரியரது. ஆனால் ஏன் கண் மாத்திரம் போடறே?" என்ற கேள்விக்குறியொடு நிறுத்தினார். ( அவரிடம் எனக்கு சொல்ல சாமர்த்தியம் போதவில்லை,, அப்பா எனக்கு கண் வரைக்கும் தான் ஒழுங்காக வரது அதுக்கு அப்புறம் கோணல் மாணலாப் போகிறதுனு) அம்மாவும் அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாட்டுப்போல்,புக்கைக் கண்டா கண், ஹிண்டு பேப்பரில கண், ஆனந்தவிகடன்லெ கண்ணு, மளிகை சுத்தி வர பேப்பரில் கண்ணு கண்ணு என்று பாடாத குறையாகச் சொன்னார்.திடீரென முழித்துக் கொண்ட என் தம்பி, அப்பா அதே கண்கள் சினிமாப்பா என்றான். பெரியவனும் ஆமாம் மா,எல்லா கண்களும் நம்மையே பாக்கிற மாதிரி இருக்கு, ஜேம்ஸ்பாண்ட் மூவி மாதிரி. எனக்கு வந்த கோபத்தில் ஏதாவது ரூமில் போய் விழுந்து அழலாம்னா தனி பெட் ரூம் கூட இல்லியே என்றுதான் தோன்றியது. அப்புறம் ஒரு மாதிரி எனக்கு ஒருவிதமான கோளாறும் இல்லை என்று சாதித்து கொஞ்ச காலம் பென்சில், ரெட் பென்சில் ஒன்றும் தொடவில்லை.(அப்போதெல்லாம் கலர் கலராகப் பென்சில் வாங்கித்தர மாட்டார்கள்.)அதனால் நான் வரையும் பெண்கள் எல்லாம் சிவப்புப் புடவையும் கருப்பு டிசைனும் போட்ட ப்ளௌசுமாகத் தான் இருப்பார்கள். இவ்வளவு ஸ்தூலமான பாடிலைனைத் தேடி நான் அலைந்து மேலும். இளைத்தேன்.

இவ்வளவு கதை இப்போது எதற்கு/ தெரியுமா? இரண்டு நாட்கள் முன்னால் நடந்த எங்க வீட்டு விழாவில் என்னைப் பார்த்த என் மாமி ஏன் நீ இளைக்கவே இல்லை? வாக்கிங் போறியோ? சாப்பாடிலே கட்டுப்பாடு வேணும்மா. வயசாயிடுத்து பார்த்தியா.... என்றெல்லாம் அடுக்கவும், (அவங்களுக்கும் என் வயசுதான்.அது வேற கடுப்பு. அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன். அதுக்கு வித்தியாசமான காரணங்கள் உண்டு.)

(அதற்காக நான் காலை எழுந்தவுடன் காப்பி, பின்பு கனிவுடன் ஆறு தோசை, மதியம் முழுதும் தூக்கம் ,இரவில் கலந்த சாதங்கள் என்று பூந்து வெள்ளாடலியே.அடடா எப்படி இருக்கும் அந்த லைஃப்?) எனக்கு வந்த வெறியில் என் சுகர் கட்டுப்பாட்டையும் மீறி, அங்கே இருந்த மைசூர் பாகு, தட்டை, முறுக்கு ஜாங்கிரி எல்லாவற்றையும் கல்யாண சமையல் சாதம் பண்ண ஆசை வந்தது.


பிறகு தான் என் உரிமையான இந்த ப்ளாக் பதிவில் போட்டு மனதை சமாதானப் படுத்திக்கொண்டேன். 48 கேஜி இருந்தவங்க 74கேஜி ஆவதற்கு 40 வருடம் ஆச்சு. அதனாலே இங்க சொல்ல வரது எல்லாம் இப்படி இருந்தவங்க அப்படி ஆவதும் உண்டு. அப்படி இருந்தவங்க இப்படி ஆவதும் உண்டு. எல்லாம் காலம் செய்யும் கோலம்.


எனக்கு இப்பொ கூட ஆசை தான் கச்சேரி பண்ண,அதிர்ஷ்டம் என்னவோ டிரெட்மில் மேய்க்கறபடிதான் இருக்கு. பரவாயில்லை நான் வெகு சந்தோஷமாகக் குண்டாகவே இருக்கிறென். யாருக்கு என்ன நஷ்டம்?

29 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அடப்பாவமே.....(ஸ்வீட் சாப்பிடாம கண்ட்ரோலா இருப்பதற்க்குத்தான்

:-)

Geetha Sambasivam said...

உணவுக் கட்டுப் பாடு வேணும்தான். அதுக்காக கட்டுப்பாடே உணவாய் வச்சுக்க வேண்டாம். முடிந்தவரை வெந்நீர் குடியுங்கள், அவ்வப்போது ஒரு சின்னக் கப்பில் வைத்துக் கொண்டு. சாப்பிடும்போது தண்ணீரே குடிக்கக் கூடாது. சாப்பாட்டுக்கு ஒரு மணி முன்னால் வெதுவெதுப்பாகவும், சாப்பிட்ட பின்னர் ஒரு மணி பின்னால் குடிக்கிற சூட்டிலேயும் வெந்நீர் குடிக்க வேண்டும். தினம் காலை பப்பாளிப்பழத் துண்டுகள் சாப்பிடவும். காலை உணவாக ஓட்மீல் எடுத்துக் கொள்ளவும். கொஞ்சம் எடை குறையும். இதை எல்லாம் தவிர, தினமும் கட்டாயமாய் நடைப் பயிற்சி செய்யவும். ம்ம்ம்ம்ம்., நான் ரொம்ப ஒல்லியான்னு கேட்கவேண்டாம், எடை குறைந்ததோ இல்லையோ உடல் லேசாக உணரலாம். கட்டாயமாய் எடை குறையும், அதிசயிக்கத் தக்க விதத்தில் நடக்காவிட்டாலும், மாறுதல் ஏற்படும், நிச்சயமாய். வாழ்த்துக்கள்.
Happy Dieting

Geetha Sambasivam said...

நேத்திலே இருந்து போற இடத்திலே எல்லாம் இந்த "குண்டு" பிரச்னையே குண்டா வந்து முழிச்சுட்டு இருக்கு! :P

delphine said...

அப்பாடா...வல்லி... நான் உங்க கட்சிதான்..ரொம்ப சந்தோஷமா இருக்கிறவங்க.. பூரிப்போடு இருப்பவங்க எல்லாம்.. ...
genetic has a great part in obesity.....
Geetha Thank you.. good tips...

இலவசக்கொத்தனார் said...

இப்போ என்ன சொல்ல வறீங்க? எல்லாத்தையும் இப்படி ஒரே பத்தியா போட்டு குழப்பித் தள்ளிட்டீங்க....

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, Delphine, You are a Dr. "கொல்லன் பட்டறையிலே (வீதியிலே?) ஊசி வித்தது நானாத் தான் இருக்க முடியும்.

துளசி கோபால் said...

பதிவுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கா?

அதெல்லாம் ஒரு காலத்தில் ஒல்லியா இருந்தாச்சு. இப்ப என்னத்துக்கு இப்படி
அனாவசியமான்னு மகளும் கேக்கற நிலை.

ஒரே ஒரு கேள்வி.

சந்தோஷமா இருக்கறது முக்கியமா இல்லே
ஒல்லியா இருக்கறது முக்கியமா?

delphine said...

Thulasi...obviously ...HAPPINESS!

ambi said...

//நான் காலை எழுந்தவுடன் காப்பி, பின்பு கனிவுடன் ஆறு தோசை, மதியம் முழுதும் தூக்கம் ,இரவில் கலந்த சாதங்கள் என்று பூந்து வெள்ளாடலியே//

ha haaaa :))))
பாரதி கேட்டா சந்தோஷபடுவார். :p
எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லையாக்கும். சந்தோஷம் தான் முக்யம். எப்ப கேசரி சாப்டனும் போல இருக்கோ அப்ப வெளுத்து கட்டிடனும். :)
ஹிஹி, ஸ்வீட் என்றாலே அது எனக்கு கேசரி தான். :)

SurveySan said...

பத்தி பிரிச்சு அடிச்சா, படிக்க ஈசியா இருக்குமே...

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி, இப்போதான் ஸ்வீட் பக்கமே போறதில்லையே.
இது எழுதினதுக்கு அப்புறம் 4 கிலொ குறைஞ்சாசு.
ஸொ நொ வொர்ரி.:)))

வல்லிசிம்ஹன் said...

நன்றி நன்றி நன்றி கீதா. வென்னீரே வாழ்வு. கண்டுகொண்டேன் கொஞ்சம் லேட்டா.

இப்போ தனியாவும் சேர்த்து ,சீரகமுடன் வென்னீர் இப்போ.

எல்லோரும் படித்துப் பயன் பட்டு இருப்பார்கள். ரொம்ப நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

நிஜமாவா. நான் இணையத்துக்குத் தமிழில் படிக்க முடியாமல் தவித்துவிட்டேன்.
வேறுயார் எழுதினார்கள் தெரியவில்லையே.

வல்லிசிம்ஹன் said...

அதுதான் டெல்ஃபின் இடிக்கிறது.:))
அம்மா அப்பா எல்லாரும் ஒல்லியோ ஒல்லீ.

இப்ப பரவாயில்லை. இன்னும் 3 கிலோ குறைதால் நல்லா இருக்கும்.
எல்லாருக்கும் கேலிப் பொருளாகப் போகத்தான் பிடிக்கவில்லை.
எனக்கு இணையத்தோழிகள் என் சரிசமமாக இருப்பதுதான் ரொம்பப் பிடித்திருக்கிறது.:)))

வல்லிசிம்ஹன் said...

ஹையோ. இ.கொ சார். எத்தனை எடிட் பண்ணினாலும் சரி வரவில்லை. சாரிப்பா.
வல்லிம்மாதான் இப்படி எழுவாங்கனு தெரியுமே. மேபி ஒரு படம் போட்டால் சரியாகிவிடுமோ.:))
பொருளே புரியலைன்னால் அது நம்ம ச்பெஷல் டச்சுனு வைத்துக் கொள்ள வேண்டியதுதான்:)))

வல்லிசிம்ஹன் said...

துளசி நமக்குச் சந்தோஷம் தான் வேணும்.
பாருங்க, இந்தச் சேர் ரொம்பச் சின்னதாக இருக்கு. அதுக்காக இணையத்துக்கு வராமல் இர்ர்க்க முடியுமா.

இல்லை இந்த நெட் கஃபேக் காரரைத்தான் வேற நாற்காலி கொடுப்பானு கேக்க முடியுமா:)))

வல்லிசிம்ஹன் said...

தெரியுமே அம்பி, டேட்ஸ் வாங்கியாச்சு.
அதில கேசரி செய்யலாமா))))

எழுத்திலேயே சாப்பாடை முடித்துக் கொண்டால்தான் இனிமே எனக்குச் சரிப்படும்.
உங்களை மாதிரிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தப்பில்ல:)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் சர்வேசன். இப்ப இன்னோரு தடவை முயற்சிக்கிறேன்.

வந்தால் சரி.
நன்றிப்பா.

Geetha Sambasivam said...

@ துளசி,& Delphine, ஒல்லியா இருந்தாலும் சந்தோஷமா இருக்கலாமே, அது கூட முக்கியமில்லை, ஒல்லியா இருந்தாலும், என்ன சொல்லுவாங்க, ஏதோ வியாதி போலிருக்கும்பாங்க, இல்லைனால் மனசிலே வஞ்சனை, சாப்பாடு ஒட்டறதில்லைனு சொல்லுவாங்க, என்னைக் கேட்டால் இது ஒண்ணையும் காதிலே போட்டுக்காமல் வாயிலே போட்டுக்கறதைக் கொஞ்சம் அதிகக் கவனத்தோடு போட்டால் போதும். தினம் நடக்க மறக்கக் கூடாது! வெந்நீரையும் விடக் கூடாது. :))))))))

Geetha Sambasivam said...

அது சரி, வல்லி, துபாயில் விலாசம் என்ன? விவேகானந்தர் குறுக்குத் தெருவா? துபாய் பஸ்ஸெல்லாம் வந்து நிற்குமே அங்கே இருக்கா உங்க நெட் கார்னர்? :D :P

வல்லிசிம்ஹன் said...

Geethaa,
en netcorner enga viittuk keezheeyee irukku:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி குண்டோ ஒல்லியோ ஆரோக்கியமா இருந்தா போதும் இல்லயா..
நானும் கொஞ்சமே கொஞ்சம் பூசினாப்போலவவது ஆனும்ன்னு
பாலில் தேன் , நெய் தயிருன்னு சாப்பிட்டும் ஒன்னும் பிரயோசனமில்லை
ஒல்லிக்குச்சிதான் என்ற வருத்தம் இருக்கு... :)கன்னமாச்சும் டொக்குன்னு இல்லாம இருக்கட்டும்ன்னு தண்ணிய காலையில் கொப்புளிச்சிக்கிட்டே இருக்கன்னும்ன்னு படிச்சு அதக்கூட வாய்வலிக்க செய்து பார்த்தாச்சு..

வல்லிசிம்ஹன் said...

haha.
Muththulakshmi,
this is priceless.

apple and banana help a lot. being in Delhi you shd be able to get them easily.
and a handful of baathaam,pista will definitely take care of looking chubby.
goodluck.:))))))

காட்டாறு said...

வல்லியம்மா... 35 வயசு வரை நான் என்ன சாப்பிட்டாலும் குண்டானதில்லை. என்னைப் போல ice cream, chocolate சாப்பிட்டவங்களை நான் பார்த்ததில்லை. ஆனா...அதுக்கப்புறம் உடம்பு வைக்கத்தான் செய்கிறது. குண்டு சொல்ற அளவுக்கு வரல இன்னும். வரும் நாள் விரைவில்ன்னு நினைக்கிறேன். ரொம்ப கடுப்படிக்கலையே. ;-)

genetic plays a role-ன்னு நெனைக்கிறேன். :-)

ஆரோக்கியமா இருந்தா போதும் என்று அம்மா எப்பவும் சொல்லுவாங்க.

துளசி கோபால் said...

முத்துலெட்சுமி,

இந்த பாதாம் பிஸ்தா பக்கமெல்லாம் ரொம்பப் போயிறாதீங்க.

கொஞ்சம் பூசுன(?) மாதிரி இருக்கும் பெண்கள் நம்மூர்லே கொஞ்சம்
உயரம் குறைவான பிளவுஸ் போட்டா, இடுப்புக்குப் பக்கம் ஒரு
'டயர்' தெரியும் பாருங்க, அதைப் பார்த்து 'அய்யோ. அதுலே கால் வாசி'
எனக்கு வராதான்னு இருந்த ஆளு நான். மெட்ராஸ்லே அப்ப புதுசா ஆரம்பிச்ச
லேடீஸ் ஃபிட்னெஸ் செண்டர் போய், கொஞ்சம் குண்டு ஆகணும்னு கேட்டு,
அந்த ஆள் எங்களை உள்ளே கொண்டுபோய் அங்கே வேர்க்க விறுவிறுக்கப்
பயிற்சி செஞ்சுக்கிட்டு இருந்த பெண்களைக் காமிச்சு, " ஒல்லியாகணுமுன்னு
இவுங்க எவ்வளோ கஷ்டப்படுறாங்க பாருங்க. நீங்க அதிர்ஷ்டசாலி. குண்டு ஆகணுமுன்னா.
ப்ரெட் சாப்புடுங்க" ன்னு சொன்னார்.

அப்ப என் எடை 35 கிலோதான். தினமும் ப்ரெட் சாப்புட்டுவச்சு, 37.5 வந்தேன்,
என் கல்யாண சமயத்துலே. இப்ப கதி என்னன்னு நேரில் பார்த்தீங்கதானே?

கவலையை விடுப்பா. வயசாச்சுன்னா தன்னாலே 'குண்டடிப்போம்':-))))))

அதுவரை ஒல்லியை எஞ்சாய்:-)

பத்மா அர்விந்த் said...

வல்லி
கீதா அருமையா சொல்லி இருக்காங்க. வயசனப்புறம் பெண்கல் குண்டாக ஒரு காரணம்: கொலஸ்டிரால் இருந்து ஈஸ்ட்ரஜன் தயாரிக்க என்சைம் (NADPH Hydrogenase), மாதவிலக்கு நின்னதுக்கு அப்புறமா தேவையில்லாம போயிடுது. அதனால எல்லாம் கொலஸ்டிராலாவே இருக்கிறது, செரிமானம் குறையறது எல்லாம் காரணாம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் காட்டாறு.
முப்பதிலிருந்து கவனம் வேணும்.
ஸ்வீட் பார்த்தாலே ஒட்டிக்கும்.

நிறைய நடக்கலாம்பா. அதுவும் மாடி ஏறி இறங்கினா நல்லாவே இளைக்கிறது.
மூச்சு இரைக்காத வரையில் ம்முடிஞ்ச பயிற்சி செய்கிறேன்..
மத்ததெல்லாம் மனச்சு சந்தோஷத்தைப் பொறுத்தது.அம்மா சொல்றது நூத்துக்கு நூறு உண்மை.
ஆரோக்கிய வாழ்வே அவசியம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் பத்மா. அப்படியே தான் எனக்கும் ஆச்சு.
37 வயது வரை ஒரு கதை.
ஹிஸ்டரக்ட்டமி செய்த பீறகு ஹார்மோன் மருந்து ஒத்துக்கொள்ளவில்லை.
எத்தனை பிரச்சினைப்பா, இந்த உடம்பால:)))
கீதாவின் வார்த்தைகள் அத்தனையும்நிறையப் பிரயோசனப்படும்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,முத்துலட்சுமி,,
நானும் வேடிக்கையாதான்
சொன்னேன்.
வியாதி வெக்கை இல்லாமல் எந்த சைஸ்ல வேணா இருக்கலாம்.

அதே அதே.