எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.
இப்படியும் நடக்குமா என்று இன்றுவரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்தவர் என் அம்மா..அம்மாவுக்கு தமிழ் மேல் ஆர்வம். அவரும் அப்பாவும் எப்போதும் புத்தகங்களுக்குச் செலவு செய்வதை மறுக்க மாட்டார்கள்.4 அணா ஆனந்தவிகடன் எப்போதும் உண்டு.
கலைமகள் 8அணா,.மஞ்சரியும் அதே விலை.அக்கம்பக்கம் கிடைக்கும் கல்கியும் குமுதமும்..ஒரு பக்கம் வீணாகாமல் படிப்போம். படித்தபிறகு, புத்தகங்கள் பேப்பர் வியாபாரியிடம் போகாது. அப்பவின் ஞாயிறு விடுமுறைகள் வாரைதழ்களைப் பிரிப்பது. கட்டுவது.தொடர்கதைகளை அடுக்குவது.
ஒரு வாரம் கூட விட்டுப் போயிருக்காது.சிறுகதைகள் தனியாகப் பிரிக்கப் படும். எல்லாம் இப்போது போல் பைண்டிங் கடைக்குப் போகாது. கோணி ஊசி என்று ஒன்று எப்போதுமே இருக்கும் வீட்டில்.பொறுமையாக உட்கார்ந்து ஒரு ஒரு தொடர்கதையையும் டtவைன் நூலால் சேர்த்துத் தைப்பார். அப்படி சேர்த்த, தில்லானா மோகனாம்பாள், சேவற்கொடியோனின் உன் கண்ணில் நீர் வழிந்தால்,,சுப்பு சார் (RAO BAHADHUR SINGARAM)நாவலில் வரும்சிங்காரம், செங்கமலம் எல்லோரும் எங்களுக்கு உயிரோடு உலாவிய பாத்திரங்கள்..செங்கமலத்தின் சீரும், அவளின் சீறிய காளையும் அவர்கள் வெட்ட வெளியில் அமைக்கும் குடிசையும் கோபுலு சார் கைவண்ணththil வாரவாரம் நடமாடிப் புத்தகத்தில் புகுந்தார்கள்.
காலப்போக்கில் அந்தப் புத்தகங்கள் காணாமல் பொனதுதான் எங்கள் வருத்தம். அதன் பிறகு புதிய நாவல்களை ( Appa )அம்மாவுக்கு லெண்டிங் லைபிரரியில் இருந்து எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார்.அப்பாவும் திருநாட்டுக்கு(ELIYAPOTHU) சென்றபோது அம்மாவுக்கு நானும் தம்பிகளும் புத்தகங்கள் பரிசளிக்க ஆரம்பித்தோம். அம்மாவுக்கு ரொம்ப பொறுமை.
எங்கள் விருப்பத்திற்காக வாங்கிய புத்தகங்களை அவள் படிப்பதை நிறுத்த 4 வருடம் ஆனது.
பிறகுதான் வாய் திறந்து எனக்கு ராஜநாரயணன் கதைகள் பிடிக்கும் வாங்கித்தர முடியுமா என்றாள்!!! ஏம்மா இதை முன்னாடியே சொல்லலை என்று கேட்டால் நீங்களும் நல்ல புத்தகங்கள் தான் கொடுத்தீர்கள்.எனக்கு இப்போது அவைகள் வேண்டி இருக்கவில்லை.எளிமையாகப் படிக்க ஆசையாக இருக்கிறது என்றார்..
அப்போது அரம்பித்தது இப்போது நான் எழுதும் பதிவு.அம்மாவுக்கும் படித்து முடித்து இனிமேல் கையில் புத்தகம் பிடித்து படிக்க முடியாத பலவீனம் வந்தது,.என்னைக் கூப்பிட்டார். நான் வாங்கிப் பரிசளித்த திரு. அய்யா அவர்களின் " கதைகள்" புஸ்தகத்தைஎன்னிடமே கொடுத்துவிட்டார்.
சில நாட்களில் அம்மாவும் அப்பாவை சேர வேண்டிய நாள் வந்தது.அப்போதுதான் அவர் கொடுத்த புத்தகத்தை பார்த்தேன்.அதில் சில குறிப்புகள்,சில தகவல்கள் எழுதி வைத்திருந்தார்.கடைசி பக்கத்தில் தன் மணீயான கையெழுத்தில் திரு ராஜநாரயணனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எழுதி இருந்தது. இதை எப்படி நிறைவேற்றுவது என்று பார்த்தபோது புத்தக முதலிலேயே அவர்கள் குடியிருக்கும் இடமும், தொலைபேசி எண்ணும்கொடுத்து இருந்தார்கள்.
அய்யாவைப் பற்றீப் பத்திரிகைகளிலும் படித்து இருக்கிறேன். அவருடைய சில கதைகளை விகடன், குமுதம் இவைகளில் வெகு ரசனையுடன் வெலிவந்தன. அதனால் அவரது உயர்வும் பெருமையும் கொஞ்சமாவது தெரியும்.அதனால் அவரிடம் பேச பயம்தான். நாட்களைத் தள்ளிப் போட்டேன்.பிறகு ஒருவாறு முனைப்புடன் அவர்கள் வீட்டுக்கு டெலிபோன் செய்தும் விட்டேன்.
அய்யாவின் வீட்டுஅம்மாதான் எடுத்தாரகள். யார் தெரியுமா, அய்யா அவர்களின் சில கதைகளில் வரும் அவருடைய இல்லத்து அரசி. அம்மா கணவதி. அருமையான இல்லாள்.அய்யாவைத்தவிர வேறு எதுவும் அம்மாவுக்குத் தெரியாது. நல்ல படிப்பாளி.நிறைய சொல்ல வேண்டும் அவர்களைப் பற்றி,, நான் இன்னார் , அய்யாவுடன் பேச வேண்டும் என்றதும், "அதுக்கென்ன இதோ பேசுங்க." என்னாங்க யாரோ சென்னையிலிருந்து ஒரு பொண்ணு பேசுது' என்று அய்யா அவர்களிடம் கொடுத்து விட்டார்......தொடரும்...
11 comments:
oru meel pathivu.
test comment.
படிக்க ஆரம்பிச்சதும் தெரிஞ்சது இது பண்டோரா பாக்ஸ்-இல் இருந்து வந்துருக்குன்னு.
அதனால் என்ன? இன்னொருக்காப் படிச்சா வேணாங்குதா?
இப்போதும் அனுபவித்தேன்.
மிகுந்த ஸ்வாரஸ்மாக இருக்கிறது...தொடருங்கள்...
நல்ல பதிவு! சரியான இடத்தில் இடைவேளை...ஓடிப்போய் ஒரு பாப்கார்னும் கோன் ஐஸ்கிரீமும் வாங்கி வந்துவிடுகிறேன்.
avar arumai ungal oruvarukkaavdhu therindhu irukkiradhe...mikka magizhchi
hi Thulasi,
ofcourse:))
kodumai ethunnaa ethaavathu edit seythu serkkalaamnaal
englishleye seyya vendi irukku.
thanks pa.
welcome Mouli.
next pathivu naaLaikkup podaREn.
one hourukku mela netcafela utkaara mudiyalai.
thank you.
Hi Naanaani,
namma uuru manithar illaiyaa.
nellaik kusumbu niRaiya avaridam.
avanggaLaip paarththu oru varusham aakivittathu.
avar paRRi vikatanla recentaa vanthathunu somebody told me.
thank you.
hello Ranga,
unga uuru eppadi irukku. nothing beat this heat.
thank you for visiting. but I cannot access yr blog.
ungaLukkum Rajanarayanan pidikkumaa.
மகள் அம்மாவுக்கு ஆற்றும் உதவி ஒரு மீள்பதிவாக வெளி வரும்!னு வள்ளுவரே சொல்லி இருக்காரே! :p
waiting for the next part...
இப்ப பாருங்க, கீதா பாட்டி வந்து, "ராஜ நாரயணன் எங்க வீட்டுக்கு அடுத்த வீடு,அவங்க வீட்டு அம்மா இட்டிலிக்கு மாவாட்டினா எவ்ளோ உப்பு போடனும்?னு எங்கிட்ட தான் சந்தேகம் எல்லாம் கேட்பார்!"னு சொல்லுவாங்க பாருங்க. :))))
உங்கம்மாவிற்குப் புத்தம் பிடுத்தமா...என்னுடைய அம்மாவிற்கும்தான். நிறைய படிப்பார்கள். அவர்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
கிரா, எப்படி அவரை மறக்க முடியும். எங்க ஊர்க்காரர்தான். தூத்துக்குடி மாவட்டம். இடசெவல் ஊர்க்காரர். அந்தப் பக்கத்துப் பேச்சுலதான் எழுதுவாரு. ரொம்ப நல்லாயிருக்கும். அப்பப்பா! அவர் எழுத்தப் படிக்கும் போதே அப்படியே ஊருக்குள்ள நாலு சுத்து சுத்தி மந்தை வழியா தோட்டத்துக்குப் போய் கம்மங்கருது சுட்டுத் தின்ன சுகம் கிடைக்கும். ரொம்ப எளிமையானவராம். அடுத்து என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்.
Post a Comment