Blog Archive

Saturday, August 18, 2007

ADI UTHSAVAM






நம்மைக் காப்பாற்றும் அன்னை மகா சக்தி, மஹா காளி, மஹாலக்ஷ்மி என்று பெண் உருவில்,
கண்டு நாம் போற்றும்
பூஜிக்கும் அம்மாவுக்கு
ஆடி மாதம் முடிந்து இன்று ஆவணி பிறந்த அன்று ஒரு சமர்ப்பணப் பதிவு போடுகிறேன்.
நல்லது நடக்கும் போது அவளை வெறும் கும்பிடு போட்டு,
வழக்கமாகச் சொல்லும் போற்றிகளைச் சொல்லி அருச்சனை செய்வது,
மலர்கள் சூட்டுவதும் துபாயில் கொஞ்சம் சிரமமாகிவிடுகிறது.
நாம் தமிழ்ச்சந்தை கடைக்குப் போகும்போது பாதி நேரம் பூக்கள் விற்றுப் போகின்றன.
வாடிய மலர்களைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. அவைகளைச் சமர்ப்பிக்கவும் தயக்கமாக இருக்கிறது.
மனதில் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தார் ஒருவர்.
நான் வெளியூர் போகிறேன், நீயும் உன் பைனாகப் பாயைச் சுருட்டிப் புறப்படு என்றார் இன்னொருவர்.
இவர்களைப் பற்றியெல்லாம் படித்துக் கேட்டும் புத்தி வருவதில்லை.
இருக்குமிடம் வைகுந்தம்னு சொல்லும் விசால மனப்பான்மையும் இல்லை.
இதோ கண்ணன் பிறந்த நாள்,ஆவணி அவிட்டம் என்று வரிசையாகத் திருநாட்கள் வந்து விடும்.
எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைந்து உலகம் முழுவதையும்
அன்னை பாதுகாக்கவேண்டும்.




9 comments:

Geetha Sambasivam said...

பூ இல்லைனால் என்ன? நம் பாமாலையே போதும், அதுவும் இல்லைனால் குங்குமம் இருக்கவே இருக்கு. நல்ல அருமையான தரிசனம். ரொம்பவே நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அதுவ்வும் சரிதான் கீதா..

இன்னிக்கூ பூ கிடைத்தது.:)))

தி. ரா. ச.(T.R.C.) said...

உலகம் முழுவதையும்
அன்னை பாதுகாக்கவேண்டும்


நல்ல எண்ணம் மனம்போல் நடக்க இறைவன் அருள

தி. ரா. ச.(T.R.C.) said...

உலகம் முழுவதையும்
அன்னை பாதுகாக்கவேண்டும்


நல்ல எண்ணம் மனம்போல் நடக்க இறைவன் அருள

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
நீங்கள் அக்காவாத் தான் இருப்பீர்கள்.
படங்கள் பிரமாதம்.
என் பாட்டா பாட்டி, தந்தை,மாமாக்கள்
இவ்வாலய தர்சனம் கிட்டியவர்கள்.
என்னையும் அழைப்பார் என நம்புகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான படங்கள்.......
வல்லியம்மா, பூ, சஹஸ்ரநாம அர்ச்சனை எல்லாம் சென்னை வந்து செய்துகொள்ளலாம்....மனதால் நினைத்து உண்டான ஜப, தபங்களை செய்துவாருங்கள் அதுவே பூ வைத்துப் பூஜித்த பலனைத் தரும்....

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.
நல்ல வார்த்தைகள், நல்ல மனம் வேற என்ன வேணும்நமக்கு.
அவள் எல்லாம் கொடுப்பாள்.
நன்றீமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க யோஹன்.
உங்களுக்கு அக்கான்னா எனக்குத்தான் பெருமை.
நல்லாக் கூப்பிடுங்கோ.

இந்த ஊர்கள் அம்பாள்களை நேரில்ல் பார்த்துநிறைய நாட்கள் ஆகிவிட்டது.

நம் வாழ்வின் கோடுகளைப் போடுபாவர்கள் அல்லவா.
கட்டாயம் பார்க்கவேண்டும்.
நீங்களும் வந்து பார்ப்பீர்கள்.
நன்றி தம்பி.உண்மையாவே சந்தோஷமா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மௌலி,எங்க வீட்டுப் பூக்காரம்மா ரொம்ப விசாரித்து கேட்டாங்களாம்.
அம்மா இன்னும் வரலியேனு.
ரொம்ப ஆறுதாலா இருக்கு நீங்க எழுதியது.
நன்றிப்பா.