முன் பதிவில் அய்யா திரு.ராஜநாரயணனைச் சந்திக்க நேர்ந்த
விவரம்,காரணம் அனைத்தும் எழுதி இரூந்தேன்.
இப்போது ஒரு ஆறு மாதங்களாக அய்யாவிடம் பேசவில்லை.
அமெரிக்காவிலிருந்து ,பேரன் பிறந்ததைப் பற்றி,அவருக்கு செய்தி சொல்லப் போன் பேசியபோது குழந்தைகள் விவரம் கேட்பது போல அவ்வளவு
விஷயங்களையும் கேட்டுக் கொண்டார்.
இதோ தொடரும் ......மீள்பதிவு
அய்யாவும் போனுக்கு வந்து யார் என்று விசாரித்து விட்டு பேச ஆரம்பித்தார். அவ்வளவு எளிமையான பேச்சை நான் இதுவரை கேட்டது இல்லை. எங்க அம்மா அப்பா ஊரு பேரு எல்லாவற்றையும் விசாரித்தவர் விவரத்தைக் கேட்டு வருத்தப்பட்டார். அதற்கப்புறம் அடிக்கடி கதை கேட்பதற்கே நான் போன் செய்வதும் அம்மாவும் அவரும் நடந்த நிகழ்ச்சிகளைக் கோர்வையாக சொல்வதும் மிகப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது.
அதன் பயன் ,அதுக்கப்புறம் நடந்த புத்தகக் கண்காட்சியில் அகரம் பதிப்பகத்தில் அய்யவுடைய நான்கு புத்தகங்களை வாங்கியதுதான். எல்லாவற்றையும் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அம்மாவும் அய்யாவும் ஒரு நாள் மதியம் போன் செய்து அடுத்த நாள் அவர்கள் சென்னைக்கு முத்தமிழ் விழா ஒன்றில் கலந்து கொள்ள வருவதாகவும், எங்க வீட்டுக்கு அப்படியே வரலாமா என்று கேட்டதும், எனக்குப் பேச்சே வரவில்லை. இவ்வளவு பெரிய ம்னிதர்களோடு நிறையப் பேசிப் பழகி இருந்தால்தானே வார்த்தைகள் அருமையாக வெளியே வரும்?
வாங்க, கட்டாயம் வரணும் எனறு சொல்லி விட்டு மறுநாள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தோம் நானும் எங்க வீட்டுக்காரரும்.. காலையில் தொலைபேசியில் உறுதி வேறு செய்து கொண்டேன். மனசு மாறிவிடப் போகிறதே என்றூ. வந்தார்களம்மா இருவரும் . ஒரு வழக்கமான, அம்மா அப்பா வருகை போலத்தான் இருந்தது. கணவதி அம்மாவின் பாசம்,அய்யாவின் வீட்டை சுற்றிப் பார்க்கும் அழகு எல்லாம் எனக்கு அதிசயமாக இருந்தது.
அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என்னவோ என்று விசாரித்தேன். அய்யாவுக்கு நல்ல காப்பி போதும் சக்கரை கம்மியா என்று அம்மாவும், அவளுக்கு நல்ல பால் போரும் சக்கரையே வேண்டாம் என்று அய்யாவும் சொல்லி விட்டார்கள். அதற்குப் பிறகு எங்க வீட்டு மீனாட்சிதான் பேச்சைத்தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்படிக்கூட தனிமையாக ஒரு பிறவி உண்டா என்று சிரிப்பு. எல்லாவற்றிற்கும் சிரிப்புதான்.
வாங்கின புத்தகங்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்,. தான் பழகின சக எழுத்தாளர்கள் பற்றின சுவையான சம்பவங்களைச் சொன்னார். அம்மாவும் அப்போதைக்கப்போது கலந்து கொண்டார்கள். என் பிரமிப்பு நீங்கவே மேலும் ஒரு மணி நேரம் ஆனது அவர்கள் பாண்டிக்குப் பயணம் புறப்பட வேண்டும். வீட்டுக்குப் போய் தோசை சுட வேண்டும் என்று பழகின ரொடீன் அன்றாட வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள்.
நானும் புத்தகங்களிருந்து கேட்க நினைத்து இருந்த ஒரு சந்தேகத்தைக் கூடக் கேட்கவில்லை. அவர்களைப் பார்த்ததே பெரிய புண்ணியம் தான். அந்த இரண்டு மணி நேரமும் இரு வயது முதிர்ந்த இளமை நிறைந்த வாழ்க்கையின் ரகசியம் தெரிந்த இரு நல்ல மனிதர்களைப் பார்த்துப் பழகியதுதான் எங்கள் வீட்டில் நிரவி இருந்தது.
எத்தனை முரண்பாடுகளை இருவரும் சந்தித்து இருக்கிறார்கள்!! வாழ்வின் கரடு முரடான பாதை எங்கும் பயணம் செய்து அலுப்புக் காட்டாமல் வாழ்க்கயை ரசித்து ருசிப்பதே தலையாய கடமையாக, ஒரு தவமாக இயங்கும், யாரிடமும் தப்பையே கண்டுபிடிக்காமல் நிறைவையே காணும் இரு அற்புத மனிதர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது
மீண்டும் அவர்களைப் பார்த்துப் பேசும் நாளுக்காகக் காத்து இருக்கிறோம். அய்யா அவர்களிடம் அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் உடனே மீனாட்சியைப் பற்றிய தன் எண்ணங்களை எழுதிக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று சிரித்துக் கொண்டெ ஐடியா கொடுத்தார். ஒரு நல்ல மனிதரையும் அவரது குடும்பத்தையும் அடையாளம் காண்பித்துக் கொடுத்த எங்க அம்மாவுக்கு நன்றி..
15 comments:
எனக்கும் அவுங்களைச் சந்திக்க ஆசையா இருக்குப்பா.
ஆகா! கிரா இந்த ஜிராவுக்கும் பிடித்த எழுத்தர். மனிதர். அவரைச் சந்திக்க நானும் ஆவலாக உள்ளேன். அடுத்த முறை சென்னை வருகையில் உங்களிடமிருந்து தொலைபேசி எண் வாங்கி...நேராகப் பாண்டிச்சேரி சென்று அவரைப் பார்த்து விடவேண்டும். அவருடைய எழுத்தின் பாதிப்பு என்னுடைய எழுத்திலும் இருக்கும். அந்த வகையில் அவர் எனக்கு ஆசானுமாவார்.
ரொம்பக் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.
அட வல்லியம்மா, உங்களுக்கு கிரா பரிச்சயமானவரா? தெரிந்து கொள்வதற்கே சந்தொஷமாக இருக்கிறது.
எனக்கும் ஒரு வாய்ப்பு கிட்டுமா, அவரின் அத்துனை புத்தகங்களையும் வாங்கி அவரிடமே கையெழுத்தும் வாங்கி கொள்வதற்கு. அவரின் எதார்த்தமான (ரொம்பவே) நடை என்னுள் ஆழமாக பதிந்து போன ஒன்று.
தொடருங்கள் படிப்போம்.
மீள் பதிவு தான் என்றாலும் அலுக்காத பதிவுகளில் இதுவும் ஒன்று. நேத்திக்கு "சரவண பவன்" விருந்துக்குப் போயிட்டு வந்தாச்சா? :D
சாமி புண்ண்ண்ண்யத்தீல்,பார்க்கணூம் பார்க்க்கா வேண்டியவர்கள்.
துளசி.
பார்க்க்கலாம்.
சாமி புண்ண்ண்ண்யத்தீல்,பார்க்கணூம் பார்க்க்கா வேண்டியவர்கள்.
துளசி.
பார்க்க்கலாம்.
வரண்ண்ம் ஜீரா.
கட்டாஆய்யம்ம் ட்தொலைபெசீஎண் கொடூக்க்கிறேன்.
ஆஅய்ய்யா பிறந்தநாள் கூட வரூம்.
எல்லோருமா போகலாம்மா:)
வரண்ணூம் தெகா.
உங்களுக்க்கூம் பிடிக்குமா.
உங்காளுக்கும்மேயீல் அனுப்ப்பலாம்.. நம்பராஈ அனுப்புக்கீறேன்.
ப்பின்னூட்டத்தில்ல பிழை வரூதூ.
வரணும் கீத்ஹா. நோ சரவாணா பாவன்.
அப்புறமா பார்ட்த்தூக்கலாம்ம்:)நன்ற்றிப்பா.
//வாழ்க்கையின் ரகசியம் தெரிந்த இரு நல்ல மனிதர்களைப் பார்த்துப் பழகியதுதான்//
அதான் அவரது எழுத்துக்கள் நம்மை எல்லாம் கட்டிப் போட்டு விடும் மாயம் போலிருக்கிறது. அதை உணர்ந்து பதிவில் பகிர்ந்து கொண்டு உங்களுக்கு நன்றிகள்.
அன்புடன்,
மா சிவகுமார்
thanks Sivakumar.
thamizh ezuththuru ingge kidaikkaathathaal
ungaLukku Angilaththil pathil ezuthukiREn.
mikuntha NanRi.
eppothu
avaridam pesinaalum anubavangaL vazhiyil ethaavathu kathai solvaar.
கிரா. என பார்த்ததும் உடனே ஓடோடி வந்தேன். என் ஆதர்ஷ எழுத்தாளர்களில் ஒருவரின் நட்பு உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களையும் மகிழ்ச்சி அடைய செய்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையேனும் சந்திக்கவேண்டும் அவரை என்னும் ஆசை இன்னும் நிராசையாகவே இருக்கிறது. ம்ம்... பார்ப்போம்.
வரணும். மஞ்சூர் ராஜா.
இப்பட்டி ஒரு எளிமையான கம்பீரமான எழுத்ஹ்தாளரை நான் பார்த்து இல்லை.
அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு க்கொண்டாடப் பட வேண்டிய ஒன்று.
நல்ல அறிவாளி.
Anbu nanbare..
Ippadi oru ariya eluthaalarai yaarum kandu kollave illai..nam aatkalukku ellaam ananda vikatan-m..kumudam-m thaan layakku..
karisal kaattu naayagan thiru Ki.Raa avargalukku uriya mariyaadhai innum tharap padavillai..
Avarai orumurai sandhithu kaaalil vizhundhu aasi peruvadhu en latchiyam..
Nanban oruvanin mana vizhavitkaaga Thirunelveli poi irundha podhu avar pirandha ooraana idaicheval poi vandhen..
Naan enge irundhaalum en oorai ninaivu paduthuvabai avaradhu athanai noolgalum..
Ayya Ki.Raa pugal oonguga..
Angilathil thattachu seidhadhatku mannikkavum..Naan valai ulagitkup pudhiyavan..
Post a Comment