Blog Archive

Saturday, July 22, 2006

ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார்




கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி.

கண்ணனைப் பார்த்ததில்லை அவள். காணாமலே , கேட்டே, காதல் கொண்டாள்.
அவனில்லாமல் தன் வாழ்வு இல்லை என்ற தீர்மானத்துக்கு
உடனே வநதாள்.
இது , இந்த முறை நடப்பது வழக்கம்தான்.
பத்து வயதோ ,அதற்கு முன்னால் திருமணம் செய்யும் நாட்கள் அவை.
பத்து வயதில் காதல் வருமா.
வரும். வந்து காதலித்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன் பேதைப்பருவம் என்று சொல்லப்படும்
என்று அழைக்கப்படும் அந்தக் காலங்களில்,
அதை மகனும் மாமன் மகளும் அறிமுகம் செய்து கொள்வதே கணவனும் மனைவியாகத்தான்.
இப்போது எங்களுக்கு அடுத்த தலைமுரையில் அனைவரும் சகோதர சகோதரியாகவே அறியப்படும் அழகும் இருக்கிறது.
இப்போது, இந்தப்பதிவில்
ருக்மிணியின் காதல் நிறைவேறப்போகும் நேரம்!

அது ஒரு கனவுகளில் சஞ்சரிக்கும் காலங்களாக இருக்கத் தேவை இல்லை.
உணர்வுகள் மட்டுமே அறிந்து தேர்ந்து தன் துணையை அடையாளம் கண்டு கொள்ளும்.அந்த துவாபரயுகத்தில்
அரசுகளும் அரசுகளும் திருமணம் செய்து கொண்டன.
ருக்மிணியின் தந்தைக்குக் கண்ணன் மேல்தான் நினைவு
தன் சிறு மகளுக்கு ஏற்ற காளை அவன் என்று தீர்மானம்.
செய்து ஆண்டுகளாகிவிட்டன.

நடுவில் வந்தவன் சிசுபாலன்.

கண்ணனிட்ம் வேண்டுமென்றே பகை வளர்த்தவன்
இல்லாததும் பொல்லாததுமாக தூற்றுக்களை பரப்பி
தனக்கென ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டான்.

அவன் வலையில் சிக்கினவர்களில் ஒருவன் ருக்மி...ருக்மிணியின் அண்ணன்.

அவன் நினைப்பு வேறாகப் போயிற்று.
ஜரசந்தன்,சிசுபாலன் இவர்கள் கூட்டத்தில் தன் பெருமை உயரும்,
தன் தங்கையைக் கடி மணம் செய்து கொடுத்து விடலாம் என்று நினைத்து ,
தன் தந்தையிடமும் சொல்லி விட்டான்.
அவருக்கோ தனக்குப் பிறகு நாட்டை ஆளப்போகும் மகனை மறுத்து சொல்ல பயம்.
ஜராசந்தனின் கொடூரமான குணநலங்களையும் அறிந்தவர் அவர்.
சிசுபாலனின் அக்கிரமங்களும் தெரியும்.
ஆனாலும் ஒரு சிற்றரசன் தானே அவர், இந்த அரக்கர்கள் முன்னால்?
வாய்மூடி மவுனியானார்.
ருக்மிணியின் மனதறிந்தவன் கண்ணன்.
அவனுக்குப் பொறுப்பும் நிறைய. பொறுமையும் அப்படியே.
அவன் உலக அதிபதி. அவனுக்கு ந்த அரசியல் முறைகள் தெரிந்ததால் அமைதியாக இருந்தான்.
காலம் கனிவது என்று ஒரு சொல் அப்போதும் உண்டு.
ருக்மிணிக்கு ஒரு நாள் நகருவதே நரகமாக இருக்கிறது.
சுயம்வரம் ஏற்பாடுகள் என்ற பெயரில் சிசுபாலனுக்கு அவளை மணமுடிக்க ஆலோசனைகள் ஆரம்பித்து முன்னேறிக்கொண்டு இருந்தன.
மனதுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு ஏழைப் புரோஹிதரை அழைத்து ஆலொசனைக்
கேட்கிறாள்.
அழகாக ஒரு எளிமையான கடிதம் கிருஷ்ணனுக்கு
வரைகிறாள்.
"கிருஷ்ணா,
என் உயிர்,என் தலைவன்,என் கடவுள் நஈதான்.
உன் ஒருவனுக்குத்தான் நான் உரிமை,
இங்கே சேடி நாட்டு அரசனுக்கு என்னை
மணமுடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

என் அன்பிற்கு பாத்திரமான இந்தப் புரோஹிதரோடு
நீ வரவேண்டும்.உடனே.
நானும் தோழியரும் மங்கள கௌரி விரதத்தைப்
பூர்த்தி செய்ய
கோவிலூக்கு வரும் நேரம் நீ என்னைக் காத்து உன்னுடன்
அழைத்துச் செல்ல வேண்டும்.
உன்னுடைய வீரமும் இதில் விளங்கி பரிமளிக்க வேண்டும்.
அப்போதுதான் எனக்கும் உனக்கும் பெருமை,
என்று(அல்மொஸ்ட் ஆர்டெர்)
எழுதி அனுப்பி விட்டுத் தவிப்புடன் காத்திருக்கிறாள்.

வேதியரும் கண்ணனைக் கடுகி அணுகுகிறார்.
ஒரே ஒரு பார்வைதான் கடிதத்தைப் பார்க்கிறான்.
அடுத்த நிமிட்ம அவன் தேர் அந்தணரோடு
ருக்குமணியைத் தேடிப் பறக்கிறது.

அப்போதிலிருந்தே பழகி இருக்க வேண்டும் இந்த சாரதி.
மாயன் விதர்ப்ப நாட்டில் டி பதித்தான்.
ருக்மினி தந்தை பீஷ்மகனிடம் ஆசி பெற்று விரைகிறாள்
தன் மங்கள கௌரியைத் த்ிசிக்க.

கோவிலில் பூஜித்து வெளியே வரும்போது
வ்ுகிரது கண்ணன் ரதம்.
நீட்டுகிறான் கண்ணன் தன் பொற்கரத்தை.
பிடிக்கிறாள் ருக்மிணி தன் வாழ்வை.
அணைத்து அவளை அமர வைக்கிறான் ரதத்தில்.
துரத்தி
வரும் அத்தனை பேரையும்
வென்று த்வாரகை வந்து கோலாஹலமாக
மணம் முடிக்கிறான். மஹாராணி, கண்ணனின்
பட்டமஹிஷி ருக்மிணி தன் நாயகனுடன்
அரியணை ஏறினாள்.
மங்களம் சுப மங்களம்..



8 comments:

துளசி கோபால் said...

ருக்மிணி கல்யாணம் அருமை. அதைவிட அட்டகாசம் 'கல்யாண சமையல் சாதம் கடோத்கஜன்':-))))

Geetha Sambasivam said...

அப்பாடி,
ஒரு வழியா ருக்மணி கல்யாணம் முடிஞ்சதுமாவது வந்தேனே! உங்க பதிவை நான் வர வழியா வர உங்க பேரைக் கொடுத்தால் திறக்கவே மாட்டேங்குது. அது தவிர இன்னொரு nachiyar.blogspot.com விஜயலக்ஷ்மிங்கறவங்க வச்சிருக்காங்களா, அங்கே போயிட்டேன், வழி விசாரிச்சு வரதுக்குள்ளே இங்கே கல்யாணமே முடிஞ்சுடுத்து. போகட்டும், உங்க பக்கம் எப்படி? ப்ளாக் எல்லாம் திறக்க முடியுதா? இங்கே இன்னும் முடியலை. கடோத்கஜனைப் பார்த்ததும் ஆடிப் போயிட்டேன். கல்யாண சமையல் சாதம் பிடிச்சதாமா அவருக்கு? பெரிய பின்னூட்டம். உங்க பேர்லே பதிவாவே போட்டிருக்கணும். பேத்தி எப்படி இருக்கா?

வல்லிசிம்ஹன் said...

துளசியின் வரவு நல் வரவு. எனக்கு வேண்டியவர் அனுப்பிய வாழ்த்துக்கள் அட்டையில் ருக்மிணியும் கண்ணனும் இருந்தார்கள்.உடனே எழுதத் தோன்றியது.
நிறைய பிழை வருகிறது. கீ போர்ட் எழுத்துக்கள் அழுந்த நேரமாகிறது.
கடோத்கஜன் இல்லாத கல்யாணமா?:-))

வல்லிசிம்ஹன் said...

கீதா வந்தீர்களா? எனக்கு இணையம் சரியாகி விட்டது என்றே நினைக்கிறேன்.

நேரம் தான் இல்லை.இதோ அல்லிக்கேணி போய்க் கொண்டே இருக்கிறேன்.
பேத்தி, பார்த்தசாரதி துணையில் நல்லா இருக்கா.
ரொம்ப நன்றிப்பா.

தி. ரா. ச.(T.R.C.) said...

அமர்க்களமாக ருக்குமிணி கல்யாணத்தை நடத்தி முடித்து விட்டீர்கள்.அப்படியே ச்ருத்வா குணானு புவனசுந்தர பாட்டையும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்.

FAIRY said...

உங்களுடைய blogs எல்லாம் நன்றாக உள்ளது. நான் தமிழ் எழுதுவது கொஞ்சம் கஷ்டம். Its very good.

Anonymous said...

J'aime ces images, merci. Amicalement.
From France

வல்லிசிம்ஹன் said...

thank you. merci.