Blog Archive

Thursday, August 22, 2019

கனடா பயணத்தின் ஆறாம் நாள். Butcharts Gardens Victoria.

😃😃😃😃😃😃😃😃😃😃😃
ஒரு பூவின் பெயரும்  எனக்குத் தெரியாது 
நத்தையாரின்  தோட்டம்.
புட்சார்ட்  அவர்களின் தோட்டம் 
காப்பிக் கடையின் வெளிப்புறம்.
லாவண்டர் பூக்களும்  இளஞ்சிவப்பு  மலர்களும் 
வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

கனடா பயணத்தின் ஆறாம் நாள். Butchart Gardens,Victoria.
Add caption
வாசனை ரோஜாக்கள் 
இத்தாலிய தோட்டம் 
Add caption
Gardens Victoria.
இது  என்ன பூ 



Robert Pim Butchart (1856–1943) போர்ட்லண்ட் சிமெண்ட் உற்பத்தி செய்தவர்.
முதன் முதலாக  விக்டோரியா மாகாணத்துக்கு
வந்த போது அங்கு கிடைக்கப் பெற்ற சுண்ணாம்பு
படிமங்கள் அவரை ஈர்த்தது. சிமெண்ட் கலவையை உற்பத்தி 
செய்ய மிக முக்கியத் தேவை சுண்ணாம்பு என்பதை 
உணர்ந்து அங்கேயே தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். 
அவரும் அவரது மனைவியும் அவரது தோழராக இருந்த ஜப்பான் தேசத்தவரை
ஒரு சிறிய தோட்டம் வைத்துக் கொடுக்கச் சொன்னதும்
அவர் தங்கள் தேசத்து முறையிலான ஒரு
sunken garden அமைத்துக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து
ரோஜாக்களும், இத்தாலிய பூக்களின் தோட்டமும் 
உருவாகின.
50 வருடப் பூர்த்திக்கு ஒரு அழகான நீரூற்றும் வடிவமைக்கப் பட்டது.
அவரது பேரன்  தன் அன்பளிப்பாக Ross நீர் வீழ்ச்சி அமைத்தார்.
இப்போதும் இந்தத் தோட்டம்
இவர்களது சொத்தாக எல்லோருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும்

மகாப் பெரிய இடமாக அமைந்திருக்கிறது.


புற்களினால் ஆனா  மலைசிங்கம் தெரிகிறதா.


21 comments:

ஸ்ரீராம். said...

முதல் படம் புன்னகைக்க வைக்கிறது. எல்லா படங்களும் அருமை. தெரியாத பூக்கள்.

ஸ்ரீராம். said...

நாங்கள் எல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு வரும் ரகம் என்றால் Butchart போன்றவர்கள் பார்க்கும் பொருளிலிருந்து எப்படி பிஸினஸ் அமைத்து வெற்றிபெறலாம் என்று யோசிப்பவர்கள். வெற்றியாளர்கள்.

Geetha Sambasivam said...

எல்லாப் படங்களுமே அருமை என்றாலும் முதல் படமும் நத்தையும் மனதைக் கவர்கிறது. வந்து தங்கிய ஊரில் வியாபாரம் செய்ததோடு அல்லாமல் பூக்களால் ஆன சொர்க்கத்தை சிருஷ்டி செய்து வைத்திருப்பதற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

KILLERGEE Devakottai said...

படங்கள் அனைத்துமை ரசிக்க வைத்தன...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசனையான புகைப்படங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அனைத்துமே அழகு.

புற்களால் சிங்கம் - பார்க்கவே அழகு.

ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்கிறது.

உங்களுடன் நாங்களும் சேர்ந்து பயணிக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. தொடர்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. நீங்கள் பயணம் பற்றி நிறைய எழுதுவீர்கள் என்று ஒவ்வொரு இடுகையிலும் எதிர்பார்க்கிறேன். சுருக்கா முடித்துவிடுகிறீர்கள். தொடர்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் அசத்தல்...

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு, நந்தையார் தோட்டம், பச்சைகலரில் தாமரை போன்ற பூவும் அழகு.
ஆறுமுகன் தோன்றிய தாமரை மலர்கள் போல் இருக்கிறது.
ரோஜாவும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
அப்படியே ஒரு முழு ஈஸ்ட்மன் படமாக எடுத்து விடலாம்
போல ஆசையாக இருந்தது.
வான்கூவருக்குத் திரும்ப வேண்டி இருந்தது. விக்டோரியாவில் தங்க இடம் இல்லை.

பாதி இடம் தான் பார்த்திருந்தோம்.
எத்தனை விதமான தோட்டங்கள்.
என்ன விதம் விதமான நீரூற்றுகள்.

ஆமாம் புட்சார்ட் வியாபாரம் செய்யத்தான் வந்தார்.
எடுத்துக் கொண்ட மண்ணுக்குப் பதில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில்
நல்ல தோட்டங்களை வளர்த்து விட்டுத்தான் போனார்..

அங்கு இருந்தால் நல்லெண்ணங்கள் வளரும் என்றுதான் தோன்றியது.
இயற்கையின் தரிசனம் தெய்வ தரிசனம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

முதல் படம் சொல்வது உண்மை. அவ்வளவு செல்லங்கள் அங்கே வந்திருந்தன.
அவர்கள் ஓய்வெடுப்பதற்கென்று தனி இடம்.
கழிப்பறை உள்பட. பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும்
ஷிஃப்ட் முறைப்படி செடிகளைக் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வாடிய பூக்களை அகற்றுவது.உரமிடுவது என்று பல வேலைகள்.
அசுத்தம் என்பதையே பார்க்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் கீதாமா.

என்னை மிகவும் கவர்ந்த வாசகம். நீங்களே பார்த்திருப்பீர்கள்.
செல்லங்களை நடத்திச் செல்பவர்கள் கைகளில்
உறைகள் போட்டுக் கொண்டு, ஒரு ப்ளாஸ்டிக்
பையையும் எடுத்துச் செல்வார்கள்..
இன்னும் எத்தனையோ படங்களை எடுத்திருக்கலாம்.

நத்தை, மண்புழு,ஆமைகள் என்று பலவித வடிவங்களில்
நீர் நிலைகள்.
ரசித்துப் படித்ததற்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி,
படித்து ரசித்ததற்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
இது போல இயற்கையை வளம் செய்தவர்களுக்கு நம் நன்றிகள் செல்கின்றன.
எனக்கும் இது போல வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இன்னும் கரடி பாய்வது போல் ஒன்று
அவைகளின் இயற்கையான பின்புலத்திலேயே
செதுக்கி வைத்திருந்தார்கள்.
என்னால் மற்றவர்களுக்கு இணையாக
நடக்க முடியவில்லை. நிழல் கண்ட இடத்தில் உட்கார்ந்து விட்டேன்.

அழைத்துச் சென்ற மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் என் மனமார்ந்த நன்றியைச் சொன்னேன்.

நீங்கள் எல்லாம் பார்த்து ரசிப்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,

படங்களே பேசுகின்றன. பின்னூட்டங்களைப் பார்க்கும்போது விவரமாக எழுதத் தோன்றுகிறது மா.
பயணங்களைப் பற்றி எழுதத் தனித் திறமை வேண்டும். நான்
இன்னும் அதில் வலிமை பெறவில்லை.
உங்கள் எண்ணம் புரிகிறது. இந்தத் தோட்டத்தை அசோகவனத்துக்கு
நிகராகச் சொல்லலாம். . வனங்களும், அந்தந்தக் கண்டங்களுக்கான தாவரங்களும்
மலர்களும், கொடிகளும் அப்படி நிரம்பி இருந்தன.
பாலைவனத் தாவரங்கள் வேறு தனியாகக் காட்சிப் படுத்தி இருந்தார்கள்.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து
என்று எழுதலாம்.
அடுத்த பதிவில் இன்னும் எழுதுகிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். பாராட்டுக்கு மிக நன்றி மா. அந்த இடம் அப்படிப்பட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா ,
மிக மிக அழகான இடம்மா அது.
அந்தத் தாமரை போன்ற பூ பாலைவனத் தாவரம். நம் சிங்கமும்
நம் வீட்டில் வைத்திருந்தார்.
பழைய பதிவுகளில் இருக்கும்.

இன்று காலை வைத்தியரைப் பார்க்கப் போகும்போது
கந்தனைத்தான் நினைத்துக் கொண்டேன்.
நீங்களும் சொல்லி விட்டீர்கள். நன்றி மா. பார்க்க வேண்டிய
இடம் தான் மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா முதல் படம் ஹா ஹா ஹா ஹாஹ் ஆ...அதானே பாருங்க அங்கெல்லாம் பைரவச் செல்லங்களுக்கு என்னா மதிப்பு!! மிகவும் ரசித்தேன் அந்த போர்டை.

நத்தை ஆஹா..அப்புறம் பச்சை நிறத்தில் ரோஸ் அடுக்கு போலவும், காலிஃப்ளவர் முளை போலவும் இருக்கும் அந்தப் பூவோ செடியோ ரொம்ப அழகு அப்புறம் நீங்கள் இது என்ன பூ என்று கேட்டிருக்கும் பூ வாவ். எல்லாமெ அழகு.

வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள் அதுவும் தொழில் ரீதியில் சிந்திப்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.

தொடர்கிறோம் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ஆர்.

அத்தனை அழகு மா இந்த இடம். தாவர்வியல் தெரிந்தவர்கள்
விளக்கிக் கொண்டிருந்தார்கள்.
எனக்குத்தான் நிற்க நேரமில்லை.

எத்தனை பாடுபட்டு அமைத்திருக்கிறார்கள்.
கொள்ளுத் தாத்தாவின் கொள்ளுப் பேத்தி இப்போது
பார்த்துக் கொள்கிறாள்.

அத்தனை வண்ணங்களிலும் மலர்களைப் பார்த்தாச்சு மா.
நன்றி.

மாதேவி said...

பூங்கா கவர்கிறது.