Monday, April 20, 2015

சுவிஸ் மங்கைகள் என் பார்வையில்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


முதல் முறை  இந்த சுவிஸ்  நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின்  உடல்வாகையும், சுறுசுறுப்பையும் தான்.

வயசு  என்ன என்றே  சொல்ல முடியாது.  முதுகு வளைந்த  வயதான அம்மாவும் ...90 ஆவது இருக்கும் தனியே வண்டியைத் தள்ளிக் கொண்டு எதிர்  வரிசையில் இருக்கும் கோ ஆபரேடிவ்க்கு   வருவார் .நிதானமாக விலை பார்த்துப் பழங்கள், காய்கறி, வைன்,  ப்ரெட்,  SPINACH ,முட்டைகள் என்று ஒருவருக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு அளவான பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வெளியே வருவார். அங்கே ஏற்கனவே காத்திருக்கும்   இன்னொரு பாட்டியோடு  வரிசையாகக் கிடக்கும் BENCH  ஒன்றில் உட்கார்ந்து  ஒரு பானத்தை அருந்தியபடி நேரம் செலவழிப்பார். தனக்கான TRAM  வந்ததும் CIYAO  சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்.

இரண்டாவது   விஷயமாக   ஆச்சரியப்பட்டது,  இந்த  ஒல்லியான ஸ்லிம்  தேகக் கட்டு. இதோ இப்பொழுது நான்  மகனுடன்   நடை ப் பயிற்சிக்குப் போய் வரும்போது   இன்னொரு 60  வயது அம்மா தன மகனுடன் சைக்கிளில்   வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். இன்று  ஞாயிற்றுக் கிழமை என்பதால் போக்குவரத்து அவ்வளவாக  இருக்காது. தேகப் பயிற்ச்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் வெய்யில் வந்த அடுத்தகணம்  வீ தியில் இருப்பார்கள்.

மூன்றாவது அதிசயம். இந்த இளம்பெண்களின் தேகவலிமை.. அழகு.
முகத்துக்குப் போட்டுக் கொள்ளும் அளவான அழகான  அலங்காரம்.
டிப் டு TOE   கச்சிதமாக இருக்கிறார்கள்.
 முதல்வாரம் பக்கத்திலிருக்கும்  பூங்கா ஒன்றுக்கு  போயிருக்கும்போது பிறந்து மூன்று நான்கு நாட்கள் இருக்கும் குட்டிப் பாப்பாவை அப்பாக்காரர்  தன உடம்போடு கட்டிய துணியில் புதைந்தபடிக் கொஞ்சிக் கொண்டே  வர,பக்கத்தில் அந்தக் குழநியைப் பெற்ற   அம்மா தன ஒன்னரை வயசுக் குழந்தையைத் தளிர் நடையோடு அழைத்துவருகிறாள்.!!!!

பெண்களில் 75%  வேலைக்குப் போகிறார்கள். ஐந்து  நாட்கள் நல்ல உழைப்பு. மற்ற  இரண்டு நாட்கள் வெளியில் சாப்பாடு. நடை. தோழர்களோடு  சந்திப்பு, பியர் பார்ட்டி என்று போகிறது.
ஒன்றே ஒன்று பிடிக்கவில்லை. சகட்டுமேனிக்கு எல்லோரும் புகை   பிடிக்கிறார்கள் .  ஒரு சில பெண்களைத் தவிர,.  TRAM  ஏறுவதற்கு முன் பார்த்தால் அந்தத் தண்டவாளமே தெரியாத அளவு சிகரெட் துண்டுகள் இருக்கும்.:(

நல்ல உயர்தரக் கவனிப்பு  எல்லோருக்கும் அரசாங்கம் தருகிறது  பள்ளிப் படிப்பு இலவசம்.

படிக்கும் குழந்தைகள் படிக்கின்றன. படிக்காதவை வேலைக்குப் போகின்றன.  16 வயதுக்கு மேல் சுதந்திரம் தான்.
அம்மா அப்பாவை அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்

கிறார்கள். 
பெண்கள் அறுபது 70 வயதிலும் திருமணம் செய்து  கொள்

கிறார்கள். விவாகரத்தும் செய்கிறார்கள் 

மூத்த தாரத்தின் பையனும் வீட்டோடு இருந்து தன சித்தியின் குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறான். அந்தச் சித்தியும் அவனைக் கவனித்துக் கொள்கிறாள் .
மொத்தத்தில்  சுவிஸ்   மங்கையர். அழகு,வலிமை ,திடம்  கொண்டவர்கள்   மற்ற ஊர்க்காரர்களோடு ஜாக்கிரதையாகப் பழகுவார்கள். 
பிடித்துவிட்டால் திருமணமும் செய்வார்கள்.  நல்ல ஊர்தான்14 comments:

ஸ்ரீராம். said...

நல்ல அவதானிப்பு. நம் ஊரில் நாற்பது வயதானாலே அலுப்புடன் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்! நம்மூரிலும் பெண்கள் புகை பிடிக்கிறார்களேம்மா..

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம். வாழ்க்கையின் மீது இவர்களுக்கு இருக்கும் பற்று அதிசயிக்க வைக்கிறது. நம்மூரில் நான் பார்க்கவில்லை. இங்க பயமில்லாமல் 15 வயதுப் பெண்கள் பிள்ளைகள் 50% புகைக்கிறார்கள் .பாவமாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவங்கள்...

புகைபிடிப்பது அல்லது புகையிலை பயன்பாடு நமது நாட்டிலும் அதிகம் அம்மா.... சிறு வயது பெண்கள் கூட பான் மசாலா/குட்கா சாப்பிட்டு பழகி விட்டார்கள்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் நான் சரியாகச் செய்திகள் வாசிப்பதில்லை என்பது புரிகிறது. நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது குழந்தைகள் சரியாக வளரப் பெற்றோர் கவனம் எவ்வளவு தேவை என்பதும் புரிகிறது. நல்ல குழந்தைகள் பெருகட்டும்னு பகவானை வேண்டிக்கறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வருடா வருடம் புகையினால் இறப்பு எண்ணிக்கை அதிகமானாலும், திருந்தவில்லை என்றால் என்ன செய்வது...?

கரந்தை ஜெயக்குமார் said...

வியக்க வைக்கும் பழக்க வழக்கங்கள் சகோதரியாரே

அப்பாதுரை said...

வெங்கட் சொல்வது சரிதான். வடக்கே நிறைய பார்த்திருக்கிறேன். தெற்கே கிராமங்களில் வயதான பெண்கள் சுருட்டு அல்லது பீடி பிடிப்பதைப் பார்த்து வியந்திர்க்கிறேன். சமீப பெங்களூர் பயணத்தில் ஒரு திருமண விழாவில் மந்திரம் சொன்ன அத்தனை புரோகிதர்களும் ஓய்ந்து ஒதுங்கி தம் அடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். சட்டென்று செல்போன் கையில் இல்லை. புகை ஏற்றிவிட்டு புகை ஏற்றும் வகை என்று ஏதாவது captionஓடு போட்டிருக்கலாம். அதைவிட ஆச்சரியம். வைட்பீல்டு ஹோடல் ஒன்றில் மாறி மாறி shots அருந்திவிட்டு ஆளுக்கொரு சிகரெட்டை இழுத்தபடி அரட்டையடித்த நாலைந்து twenty something பெண்கள். ஜெய் ஹோ?

வல்லிசிம்ஹன் said...

அப்படியெல்லாம் யாரும் திருந்துவது கிடையாது. தனக்காத் தோன்றவேண்டும். அந்த இருமல் எந்த நோயில் கொண்டுபோய்விடுமோ அதில் இறக்கவேண்டியதுதான். மிக மிக வருத்தம் கொடுக்கக் கூடிய வழக்கம்

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயக்குமார் ..

வல்லிசிம்ஹன் said...

துரை,
மும்பை டெல்லி போன்ற நகர்களில் நாகரீகம் முற்றி விட்டதே. சென்னையிலும் இருக்கிறது. கேட்டால் நாங்கள் சளைத்தவர்களா என்று பதில் வரும். ஆந்திர மாநில சுருட்டுப் பழக்கம் ,ஒட்டி வரும் தொண்டை,மற்றும் வாயில் வரும் புற்று நோய் இவைகளை அடையார் ஆஸ்பத்திரியில் நிறையப் பார்த்திருக்கிறேன். இதில் அதிசயம் என்ன என்றால் சிகரெட் புகைத்தபடி 90 வயது இருந்த தாத்தா ஒருவரையும் தெரியும். ஒரு கெட்டபழக்கம் இல்லாத என் மாமனார் புற்று நோய் வந்து 64 வயதில் இறந்ததும் ஒரு திகைக்க வைக்கும் நிதர்சனம்

msuzhi said...

Sad.
புற்றுநோய் ஒரு பழக்கம், பரம்பரை காரணமாக் வரும் என்பதையெல்லாம் கடந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். Environment, genetically modified food, use of wave emitting gadgets and appliances, lifestyle எல்லாமே சேர்ந்து.. even stress can causeநு சொல்றாங்க, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை இப்போது. ஒரு cruel lottery.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அம்மா அப்பாவை அவ்வப்போது வந்து பார்த்துக் கொல்கிறார்கள்.

பெண்கள் அறுபது 70 வயதிலும் திருமணம் செய்து கொல்கிறார்கள். //
இது தவறாக நடந்தது. எனக் கொள்கிறேன்.
மற்றும்படி ஐரோப்பியப் பெண்கள் பாராட்டுக்குரியோரே!

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜோகன் பாரீஸ். பிழைகளைத் திருத்திவிட்டேன்.சுட்டிக் காட்டியதற்கு மிக நன்றி. நலமே என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

Yes Durai.my husband was a chain smoker. But for the past 5 years he had reduced Due to his phlegm condition and stressful cofffee. Ultimately The past would have caught up with him on that night arresting his heart. Yes it is cruel to the persons left behind and the persons going thru cancer along with them. Thank you ma.