சென்னையில் இருந்து கிளம்பி இங்க வந்ததிலிருந்து காலையில் சரியாக நான்கு மணிக்குக் கண்விழித்துவிடுகிறது. அருகாமையில் இருக்கும்
பல மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் குரல் இனிமையாகக் காதில் விழும்.
அப்படியே ரெயின்பொ பாலையும் காய்ச்சி, ஜயா டிவியையும் போட்டு விட்டு,
பெர்கொலேட்டரில் வடித்த டிகாஷனையும் பாலையும் அளவாக் கலந்து, சர்க்கரையிலாத சர்க்கரையைப் போட்டு அப்படியெ அந்தக் காபியைக் கப்பில் கொண்டுவந்து , வராந்தாவில் உட்கார்ந்தால், ம்ம்ம்
போதும் .
வரும் போகும் புறாக்களுக்கும்,குருவிகளுக்கும் வாசனை போய், வந்து எட்டிப் பார்க்கும்.
தூரத்தில் அந்து நிமிடங்களுக்கு ஒரு விமானம் தரையிறங்கிக் கொண்டு இருக்கும்.
அப்படியே ரசித்துக் குடித்து முடித்தால் சரியாக ஐந்து மணி 15 நிமிடங்களில் எல்லாம் சூரியன் சார் பந்தாக மேலே வந்து விடுகிறார்.
அந்த அருமையைத் தான் படம் பிடித்து இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.
சென்னையில் வராத சூரியனா என்று கேட்கக் கூடாது. அங்கே ஏது நேரம்?
அதுவும் இல்லாமல் சுற்றிவர உயரமான கட்டிடங்கள் வந்து விட்டன. இனிமேல் மொட்டைமாடிக்குப் போய் பார்க்கணுமென்றால் 9 மணி வரை காத்து இருக்கணும்.
இங்க கண்ணாடிக் கதவைத் திறந்தால் வானம் தான்.
அதில் சிங்கம் வேறு சின்னத் தோட்டம் வைத்திருக்கிறார்.
பார்த்துட்டுப் படம் எப்படி இருக்குனு சொல்லுங்கப்பா.
29 comments:
படமெல்லாம் அழகா இருக்கு! அதை விட பால்கனி சுத்தமா இருக்கு! துபாயில் நிறைய வீடுகளில் பால்கனியின் அருமையை ருசிக்காமல் பழைய இரும்பு தகரக்கடை போல் ஸ்டோர் ரூமாகத் தான் இருக்கும் :)
உள்ளேன் அம்மா!! :))
காலைப் பொழுதினிலே-துபாயின்
காலைப்பொழுதினிலே
கோலக்குருவிகளுடன்
புறாக்களும் கொஞ்சிடும் வேளையிலே
சுடச்சுட காபி ஆத்திஆத்தி
குடிக்கும் நாச்சியாரே!
காபிமணம் அடையாறு வரை
கமழ்கிறதே!
அழகழகாய்..அற்புதமாய்
விதவிதமாய்..வித்தியாசமாய்
படங்கள் மிளிர்கிறதே!
சிம்மம் போட்ட தோட்டமூம்
வரிசை கட்டி நிற்கிறதே!!!
:))
இனிமையாகக் காதில் விழும்.கந்தசஷ்டி கவசம் அப்படியே ஃபார்ம் பாலையும் காய்ச்சி, தமிழ்மணத்தை போட்டு விட்டு,
பில்டரில் சூடச்சுட வடித்த டிகாஷனையும் பாலையும் அளவாக் கலந்து, நிறைய சர்க்கரையைப் போட்டு அப்படியெ அந்தக் காபியைக் கப்பில் கொண்டுவந்து , கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தால், ம்ம்ம்
போதும் போதும் வாழ்க்கை வாழ்வதற்கு ( இது என்னோடது :)
படங்கள் அருமை வல்லிம்மா.
பரபரப்பில்லாத இனிய காலைப் பொழுதுகள்.
பரவசமூட்டும் சூரிய தரிசனங்கள். சிங்கம் வைத்தத் தோட்டத்துச் செடிகள். கொஞ்சிப் பேசும் குருவிகள். எட்டிப் பார்க்கும் புறாக்கள். தொடரட்டும் இத்தகைய மறக்க முடியாத தருணங்கள்!
வீடு ரொம்ப அழகா இருக்கு. இத்தனை பூச்செடிகள் இருந்தாலும் தரையெல்லாம் மண்ணில்லாம தண்ணியில்லாம கறையில்லாம துப்புரவா இருக்கு. பாக்கவே அழகு.
தோட்டம் நல்லா இருக்கு. தொங்கும் தோட்டம் போல புகழ் பெற வாய்ப்பு இருக்கிறது.
சூரியனை விடுங்கப்பா...... நமக்கும் 'சூ'வுக்கும் தூரம் ரொம்ப(-:
பால்கனி தோட்டம்தான் சூப்பர். என் ஃபேவரிட் செடிகள் எல்லாம் ஜாலியா உக்கார்ந்துருக்கு.
சிங்கத்தின் கைவண்ணமா?
பேஷ் பேஷ்.
பாராட்டுகளைச் சொல்லுங்க.
வாங்க தமிழ் பிரியன். வீட்டுக்குள்ள வைக்க முடியாதபோது அது பால்கனிக்கு இடம் மாறுவது அவசியமாகி விடுகிறது. நான் பொருட்களைச் சேர்ப்பவள். எங்க வீட்டுக்காரரோ சுத்தமாக செந்டிமெண்ட் பார்க்காதவர்:)) பால்கனி சுத்தம் செய்ததும் அவர்தான். ஒரே புறா எச்சமாக இருந்தது. ரொம்ப நன்றிப்பா. பின்னூட்டமா இது !!இன்னோரு பதிவாப் போச்சே.
ஒரு பணம் கொடுத்துப் பாடச் சொன்னாங்களாம் ,பத்துப் பணம் கொடுத்து ஓயச் சொன்னாளாம்.:)
வாங்க கொத்ஸ் சார். ஆஜர் போட்டுட்டேன்:)
நானானி:)
சூப்பர் சாங்!! என்ன அழகு என்ன அழகு!
கசானா கசானா என்று ராகம் தோன்றுகிறது.
அடையாறு வரை வந்த காப்பியைப் பருகிவிட்டு பேஷ் பேஷ் சொல்லுங்கோ.
நன்றிப்பா.
சென்ஷி சார் வரணும் வரணும். இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தமோ.
//வாங்க வாங்க,
எப்போ வந்தீங்க,
சமையல் கிமையல் கிடையாதா காலைல?
அட்லீஸ்ட் பின்னூட்டமாவது போடமாட்டீங்களா!!!//
:)))இப்படீனு அது என்னைக் கேக்குது!!
கந்த சஷ்டி கவசம், காப்பி வித் சர்க்கரை. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
கேக்கவே இனிக்குதே.
ஆயில்யன்.
எனக்கும் தமிழ்மணமே சென்னையில் கதி.
இங்கதான் பாப்பா எழுவதற்கு முன் ஃப்ரீடைம் காலைல தான் கிடைக்கும்.
7 மணிக்கு மேல் வெயில் உறைக்கும் .காற்று நின்றுவிடும். அதான் கிடைக்கும் இனிய பொழுதை அனுபவிக்கிறேன்மா.
நன்றி சதங்கா.
காட்சி அழகாகக் கிடைத்தால் கண்களுக்கு விருந்துதான்:)
அருமையாக இருக்கு படங்கள்!
எப்பொழுது வந்தீங்க இங்க!
வரணும் ராமலக்ஷ்மி.
காலைகள் எப்பவுமே பிடிக்கும் எனக்கு. மிகவும் பரபரப்பாக ஓடிய காலைகள் ஓய்ந்த காலம் இது.
நிதானமாக சுவாசம் எடுத்து கண்களை விரித்துக் காட்சிகளை உள்வாங்கி,
நினைவுகளைப் பதிந்து கொள்ள மிகவும் விருப்பம்பா.
உழைப்பும் சிங்கமும் பிரிக்க முடியாதவை. நல்ல கரங்கள் அவருக்குச் சொந்தம்:)
நன்றிம்மா கவிதையான பின்னூட்டத்துக்கு.
வரணும் ராகவன்.
அம்மா அப்பா நலமா.
சுத்தத்திற்கு இன்னோரு பெயர் எங்க வீட்டுக்காரரோடதா இருக்கும்.
அதாவது...தோட்டம்,செடிகள் பொறுத்தவரை:)
இங்க வீட்டுத் தரை என்னைச் சுத்தமாக வைத்துக்கொள்ளேன் என்று சொல்லாத குறைதான்.
வீட்டில ஒரு அம்மாவும் உதவிக்கு இருக்காங்க,.
வேலைக்கு வரும் இரண்டு மணி நேரத்தில் பளபளவென்று ஆகிவிடும் வீடு.
வாங்க அம்மிணி. இந்த ஊருக்கு ஏத்த மாதிரி செடி வாங்கி கிட்டத்தட்ட எட்டு வருஷமா பராமரிச்சுகிட்டு வரார்.
வீட்டுகுள்ள ஆர்க்கிட் செடியே நல்லா வந்தது.இப்ப இல்லை. மகனும் செடியை நேசிப்பவர்.அதனால்தான் செடிகளுக்கு உற்சாகம்:)
சொல்றேன் சொல்றேன் துளசி. எனக்கு இப்பத்தான் தோணுது. சிங்கத்துக்குத் தமிழ் கத்துக் கொடுத்து இருக்கலாமே என்று.
ஆனால் ஒரு இடம் பொருந்தி உட்காருகிற டைப் இல்ல. அது கிரிக்கெட் மேட்ச்,இல்லாட்ட செடி.
இவை இரண்டும் ஆளைக் கொஞ்சம் நிறுத்தி வைக்கும். போட்டொ எடுக்கும்போது உங்களையும் உங்க கள்ளி செடியை(மரத்தை)யும் நினைத்துக் கொண்டேன்:)
//டிகாஷனையும் பாலையும் அளவாக் கலந்து, சர்க்கரையிலாத சர்க்கரையைப் போட்டு//
அடடா, நான் என் அப்பாவை நினைத்து கொண்டேன்.
இப்ப தான் ஏதோ ஷுகர் ப்ரீ வந்துருக்காமே!
படம் நல்லா இருக்கு.
வரணும் சரவணன். ரெண்டு வாரம் ஆகிறதும்மா.
பாப்பாவோட பொழுது போயிடுது. யாருக்கும் போன் செய்யலை:)
சுரேஷ் பேசினார்,கொத்ஸ் கிட்ட நம்பர் வாங்கி:)
அம்பி சுகர் ஃப்ரீ இருக்குமா. அதுகூட நிறைய உபயோகம் செய்தா தப்பாமே!!
கொஞ்சம் கசப்பாதான் சாப்பிட்டுப் பழகணும்.
அப்பா டயட் எல்லாம் சரியாக இருப்பார்னு நம்பறேன்.
அதுவும் நடையும் இருந்துட்டா, சுகராவது கிகராவது ஒண்ணும் செய்யாது...
படங்களெல்லாம் அருமை, அம்மா. அதிலும் கடைசிப் படம் - காதலர் போல் கைகோர்த்துக் கொண்டு கதிரவனைக் கண்டு களிக்கும் மலர்கள் :)
வரணும் கவிநயா. இப்படியேதான் நினைத்தேன் நானும்.
பிரமாதமான ஜோடி ரெண்டும்.:)
டெல்ஃபின், எவ்வளவு நாளாச்சு பார்த்து!! கட்டாயம் அன்பவிக்கத்தான் வேணும்.:)
சரியான வெய்யில் காலமாக இருக்குமே!! இப்போது?
Hor Al Anz பக்கமா?
குமார், வெய்யில் ஆரம்பமாகி விட்டது. ஆனால் இன்னும் உறைக்கவில்லை. நீங்கள் சொல்லும் இடம் புரியவில்லை. நாங்கள் பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதியில் அல் சபீல் என்ற இடத்தில் இருக்கிறொம்.
Post a Comment