''எத்தனை தடவைம்மா சொல்றது.புத்திமதி சொல்லறதுல்லாம் உன் காலத்தோட போச்சு.
இன்ஃபாக்ட் உன் அப்பா காலத்தோட ஓவர் மா.
இப்ப எல்லாருக்கும் எல்லாம் தெரியும்.
நின்னு, பாட்டி சொல்கிறதை எல்லாம் கேட்டுக் கொண்டு பின்பற்ற
நேரம் இல்லை.''
இது நாங்கள் தினம் கேட்கிற வசனம், அதுவும் காலை வேளைல
அம்மியில் தேங்காய்ச் சில்லுகளைத் தட்டிக் கொண்டூ இந்திராவோட
அம்மா தாழ்ந்த குரலில் பேசுவதும்,
இந்திரா அதைக் கேட்டுப் பொரிந்து கொட்டுவதும்,
உள்ளே இருந்து அவளுடைய பாட்டியின் அழைப்பும்
எங்க வீட்டுத் தாழ்வாரத்தில் கேட்கும்.
நான் அப்போது வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கிணற்றிலிருந்து
இழுத்துக் கொட்டிக் கொண்டிருப்பேன்.
எங்க பாட்டி ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி
தைல எண்ணையைத் தடவிக்கொண்டு இருப்பார்.
எனக்கோ எட்டுமணிக்கு வரும் ஒரே ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்துப்
பள்ளிக்குப் போக வேண்டும்.
பாட்டிக்கோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.:)
''அந்தப் பொண்ணு ,சொன்னதைக் கேக்காதோ.என்ன பிரச்சினை ஆண்டாள்?''
என்று என்னை விளிப்பார். பாட்டிக்கு இந்த திருநெல்வேலிக் குசும்பு ரொம்ப ஜாஸ்தினு எனக்கு அப்பத் தெரியாது.:)
ஐயோ சத்தம் போட்டுப் பேசாதே பாட்டீஈஈஇ
நான் அவளோட தான் ஸ்கூலுக்குப் போணும். அப்புறமா உள்ள வந்து சொல்றேன். '' என்று ஓடி விடுவேன்.
திருப்பி சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும், பாட்டி ரெடியாக வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். என்ன ஆச்சு.அப்புறம் அந்த சண்டை தீர்ந்துதா? என்று ஆவலோடக் கேட்கும் அந்த 70 வயசுக் குழந்தையைப் பார்த்தால் கோபம் தான் வரும்:)
மாலைப்பசி,உப்புமா காத்துக் கொண்டிருக்குமோ என்கிற கோபம்,
அத்தனை அல்ஜீப்ராவையும் போட்டு முடிக்கணுமே என்கிற தாபம்,
பாட்டிக்குப் பின்னால் மெயில் மூட்டைகளைக் கட்டி சீல் வைத்துக் கொண்டிருக்கும் தங்கப்பத் தாத்தாவின் நமுட்டுச் சிரிப்பு.
''பாப்பா மாட்டிக்கிட்டியா'' என்கிற மாதிரி கேலி செய்யும்.
வர்ரேன் பாட்டி என்று கடித்த பற்களுக்கிடையே பேசிவிட்டு உள்ளே போய்விடுவேன்.
அங்கே போய் அம்மாவிடம் புலுபுலுவென்று ஒரு சண்டை போட்ட பிறகு
மீண்டும் வாசலுக்கு வந்தால் அங்கே மீண்டும் பாட்டி!!
சரி இன்னிக்குச் சொல்லாமல் தீராது,அப்புறம் அப்பா வரை விஷயம் போய்விடும் என்கிற பயத்தில் ,''இல்ல பாட்டி....என்று ஆரம்பித்தால்.,
இந்த ' இல்லை,வந்து ' ரெண்டு வார்த்தை இல்லாம உன்னால பேச முடியாதா
என்று கேலியாகக் கேட்பார்.
நமக்குத்தான் ரோஷம் நெத்திக்கு நடுவில உட்கார்ந்திருக்குமே:)
முறைப்பேன் பாட்டியை.
இப்படியெல்லாம் முறைச்சா நாளைக்கு எப்படி கலெக்டராப் போவ. ?நாலு பேர் நாப்பது பிராது கொடுப்பார்கள். எப்படித் தீர்த்து வைப்ப.' பொறுமை என்னும் நகை அணிந்து 'அப்படீனு அவ்வையார் பாடியிருக்கார் தெரியுமா என்பார்.
எனக்கு அதுவரை இருந்த நல்ல குணமெல்லாம் அப்படியே மறைந்துவிடும்!!
''போ உன்கிட்ட ஒண்ணுமே சொல்ல மாட்டேன். எனக்குத்தான் பொறுமை இல்லையே '' என்று வேறு பக்கம் திரும்பினால் எதிரே இருக்கிற லாரி ஆபீசைப் பார்க்கணும்,அதனால் மீண்டும் பாட்டியைப் பார்ப்பேன்.
''தாழ்ந்த இடத்திலதான் தண்ணீர் தங்குமே, தெரியுமா? என்பார்.
ஆமாம் தண்ணியும் தங்கும் கொசுவும் வளரும்' அப்டீனு தொச்சுக் கொட்டுவேன்;)
இந்த மாதிரி ரெண்டு மூணு ஸ்டாக் டயலாக் முடிஞ்சதும் பக்கத்து வீட்டுச் சமாசாரமும் சொன்னேன்.
எப்படி அந்த இந்திராவுக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுக்கப் பார்த்தான். அவ எப்படி வாங்கிக்காம கல்யாணப் பரிசு சரோஜாதேவி மாதிரி நடந்து கொண்டா, அது தெரிந்து (அவளுடைய) பாட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்னு சொல்கிறார் என்று முடித்தேன்.
எல்ல்லாத்தையும் கேட்டுவிட்டு, சு இவ்வளவுதானா. என்பது போல் எங்க பாட்டி மட்டும்தான் முகத்தை வச்சுக்க முடியும்:)
நீ என்ன சொல்றே பாட்டி. அவ ஸ்கூலுக்குப் போலாமா வேண்டாமா என்றதும்,
பாட்டி வினோதமாப் பார்த்தார்.
இது என்ன உலக அதிசயமா. பசங்களுக்கும் பொண்களுக்கும் இப்படித்தான் இருக்கும்.
எங்களை மாதிரி எட்டு வயசில கல்யாணம் ஆனா ஒண்ணும் தெரியாது.
நீங்கள்ளாம் குமுதம்,சாண்டில்யன் படிச்சே கத்துண்டாச்சு. அப்புறம் இப்படித்தான் நடக்கும்.
நீங்க எல்லோரும் ஒத்துமையா ஒரே குருப்பா போய் வந்தா யாரும் வாலாட்ட மாட்டான்.
ஒரு தடத்தை விட்டு இன்னோரு வழியாப் போங்கொ.
அப்படியும் பின்னால வந்தா என்னடானு அதட்டுங்கொ.
நாங்களும் இப்படி அப்படி யெல்லாம் பார்த்து இருக்கோம்.எங்களுக்கும் தெரியும் என்று மறுபடி அதே நக்கல் சிரிப்பு.
'போ பாட்டி உனக்கு ஒண்ணும் புரியலை'' என்று எழுந்து விட்டேன்.
இப்பவெல்லாம் நிலைமை மாறிவிட்டதாக் கேள்வி.:)
,
இன்னோரு டிஸ்க்ளெய்மர்..
அதே பையனை இந்திரா கல்யாணமும் பண்ணிக் கொண்டார்கள். ஏன்னா அது அவளுக்கு அத்தை பையன்.:)
17 comments:
அச்சச்சோ...... குமு(த்)தம், சாண்டில்யன் விவ(கா)ரம் பாட்டிக்கும் தெரிஞ்சுபோச்சா? :-))))
இப்ப அதுக்கும் மேலே......
கேர்ள் ஃப்ரண்ட் ன்னு ஒரு பத்திரிக்கை
(இது மகள் காலத்துலே)
அப்ப அதுக்கும் மேலே.....ஏதோ ஒண்ணு வந்துக்கிட்டு இருக்காம்.
இந்தத் தலைமுறைக்கு 'வழிகாட்டியா':-)))
ஆமா துளசி பாட்டி படு கில்லாடி.
சதா கண்காணிச்சு கிட்டே இருப்பாங்க.
ஜன்னல்ல நிக்காதே. நீ வேடிக்கை பார்த்தா உன்னை வேடிக்கை பார்க்க ஆயிரம் பேர் போவாங்க.
....இப்படி குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். எனக்குச் சர்க்கரை கொடுத்த பாட்டி. சாப்பிடும்போதே பட்டுனு உயிரை விட்டாங்க. நோ படுக்கை.நோ ஹாஸ்பிடல்.
//பாட்டிக்கு இந்த திருநெல்வேலிக் குசும்பு ரொம்ப ஜாஸ்தினு எனக்கு அப்பத் தெரியாது.//
இதானே வேணாங்கிறது. நம்மூர்காரங்களுக்கு ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி. பக்கத்து வீட்டுக்கு எல்லாம் பஞ்சாயத்து பண்றதுனா அல்வா சாப்டற மாதிரி. :))
நான் மதுரைல, காலேஜ் படிக்கற போது காலேஜ் முடிஞ்சு சரியா 40 நிமிஷத்துல வீட்ல இருக்கனும்னு எங்க பாட்டி (அதாவது என் அம்மாவோட பாட்டி) ரூல்ஸ் சொல்வாங்க. இவ்ளோவுக்கும் நான் படிச்சது பாய்ஸ் காலேஜ் தான் (அமெரிக்கன் கல்லூரி). :))
ஆனா பக்கத்துலயே லேடி டோக், மீனாட்சி கல்லூரி எல்லாம் இருக்கே!னு கரக்ட்டா பாயிண்டை பிடிப்பாங்க. :p
அம்பி, திருவேங்கடப் பாட்டியை மீட் செய்யும் போது உங்க சப்போர்ட்டைச் சொல்லிடறேன்:)
எங்க வீட்டில ஜன்னல்கள் பார்த்தீங்களா. அதுக்கு இன்னும் திரை கூட போடலை. அவ்வளவு மும்முரம் எனக்கு !! எல்லாம் தெரிஞ்சாகணும்.
அந்தப் பொண்ணு எங்க வீட்டுக்கு வந்த போது அட்வைஸ் செய்து அது நொந்து போயிட்டது:)
//இன்னும் திரை கூட போடலை. அவ்வளவு மும்முரம் எனக்கு !! எல்லாம் தெரிஞ்சாகணும்.//
எல்லாம் தெரிஞ்சுக்கிறதையும், அம்பி சொன்னாப்ல பக்கத்து வீட்டுக்கு பஞ்சாயத்து பண்றதையும் நம்ம ஊரோட மறந்திட வேண்டியதுதான். பட்டணத்தில ஜன்னல் திரை என்ன..வீட்டுக் கதவையே விரியத் திறந்து வைத்தாலும்..ஏன்னு கேட்க..யாரும் இருப்பதில்லை. காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு, அவரவர் வழி அவருக்கு என..ஓடுது(சுழலுது) உலகம்.
அடப் பாவமேஅம்பி, இப்படி உங்க
பாட்டி கறாரா இருந்திருக்க வேண்டாம்.
எல்லாம் தாமிரவர்ணி செய்யற வேலை.:)
அதென்னவோ உண்மைதான். ராமலக்ஷ்மி. சில சமயம் ஏக்கமா கூட இருக்கும். யார் வரா யார் போறாங்கனு கூடத் தெரியாது. ஒண்ணாவேதான் 31 வருஷமா இதே இடத்தில இருக்கோம். எல்லோரும் நல்லவங்கதான்.
நேரம் தான் இல்லை.:)
என்ன சொல்றது...படிக்கும் போது பக்கத்துல இருந்தது போல இருக்கு...;))
அது ஏன் தெரியுமா கோபி..
எல்லா வீட்டிலும் ஒரு பாட்டி உண்டு.
எல்லாவீட்டிலும் காலைல சட்டினி அரைக்கணும்.
கேள்விகள் பதில்கள் கோபங்கள் சமாதானங்கள் இத்தியாதி இத்தியாதி... அதான் காரணம். நன்றிம்மா.
இதப் பாருடா, இந்தக் கொத்ஸை:)
இப்பத்தான் ஒரு டிஸ்கி போடணும்னு கணினியைத் திறந்தேன். அதுக்கு முன்னாடியே வந்து சிரிச்சுட்டுப் போயாச்சு.:)
நன்றிம்மா கொத்ஸ்.
இது ஒரு டிஸ்கி. என்னன்னா இதில சொல்லப்பட்டிருக்கிற பத்திரிகைக்கும், ஆசிரியருக்கும்
எனக்கும் ஒரு தொந்தரவும் இல்லை.:)அவங்களும் நான் அனுப்பிச்ச கதைகளைத் திருப்பி அனுப்பறதில்லை. நானும் குமுதம் படிக்கிறதை நிறுத்த வில்லை:)
ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துறுவாங்களேனு நான் அனுப்பறதையே நிறுத்திட்டேன்.:))
வல்லி பாட்டி..
இப்பல்லாம் பேத்திகள்தான் பாட்டிகளுக்கு அட்வைஸ் பண்ணணும்.. காலம் அப்படி கெட்டு போய்க் கிடக்கு.
உங்களை நினைச்சா வருத்தமாத்தான் இருக்கு.. ஆனாலும் உங்களுடைய தியாகத்தால்தான் இன்றைய பேத்திமார்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்ன்னு அவங்களுத்து தெரிஞ்சா போதும்..
வல்லி பாட்டி..
இப்பல்லாம் பேத்திகள்தான் பாட்டிகளுக்கு அட்வைஸ் பண்ணணும்.. காலம் அப்படி கெட்டு போய்க் கிடக்கு.
உங்களை நினைச்சா வருத்தமாத்தான் இருக்கு.. ஆனாலும் உங்களுடைய தியாகத்தால்தான் இன்றைய பேத்திமார்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்ன்னு அவங்களுத்து தெரிஞ்சா போதும்..
உ. தமிழன் வரணும். எங்க பாட்டிக்குச் சொல்றீங்களா?
அவங்களை நினைச்சு வருத்தப்பட வேண்டாம். நல்ல மகன் இடம் இருந்து, துளி மரியாதையும் கெடாமல் அன்பு அனுபவித்துத் தான் சென்றார்கள்.
சதா கண்காணிச்சு கிட்டே இருப்பாங்க.
ஜன்னல்ல நிக்காதே. நீ வேடிக்கை பார்த்தா உன்னை வேடிக்கை பார்க்க ஆயிரம் பேர் போவாங்க.
....இப்படி குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.
இப்படி சொல்லி சொல்லியே அழகியெல்லாம் வீட்டுக்குள் போட்டு பூட்டிடிங்களே!! அநியாயம்.
:-))
ஆமாம் பர்தா போடாத குறைதான்.
குமார் அப்படிச் சொன்னது ஒரு விதத்தில உபயோகமா இருந்தது.
அசட்டுப் பிசட்டுப்பேச்சு வராது.
ஒரு விதத்தில இப்பவும் புது மனிதர்கள் என்றால் ஒரு தயக்கமாக இருக்கும். கேட்டால் சிரிப்பார்கள் இப்போது.:)
Post a Comment