பின்பு கண்டிப்பாக மருந்து,
ஆன பிறகு ரெண்டு இட்டிலி
பிறகு இருக்கவே இருக்கு வலைப்பதிவுகள்.
அங்கே என்ன போனா நாலு நாளா ஒரே தாளிக்கும் ஓசையும்,
பொரியல் வாசனையும்,
கொதிக்கும் ரசமும் என்று
சமையல்மணமா ஆகி இருக்கு.
ஒருத்தர் பாக்கி இல்லை.:)
இதைப் பப்ளிஷ் செய்யறத்துக் குள்ள
ஒருத்தர் வினோத வகைக்குழம்பு குறி ப்பு கொடுத்து இருக்கலாம்.!!
ஒருத்தர் வினோத வகைக்குழம்பு குறி ப்பு கொடுத்து இருக்கலாம்.!!
அதனால நான் இன்னிக்குச் செய்த சேனை கறியைப் படம் எடுத்துப் போட்டுட்டேன்.
ரொம்ப சாதாரணமா எல்லோரும் செய்கிற பொரியல்.
ஆனால் எனக்கு உலகத்திலேயே ரொம்பப் பிடிக்காத காரியம் என்றால் அது கத்தியைக் கையில் எடுப்பதுதான்.
நாமளோ அரிவாள்மணைக்குப் பழகியவர்கள்.
எங்க வீட்டு அருவாமணை எல்லா மருமகள் கைகளையும் பதம் பார்த்தது.
அத்தனை கூர்.
வாசலில் ''சாணாப் பிடிக்கிறதுனு'' போகிற கிழவன் கூட எங்க வீட்டு வாசலில் கூப்பிட மாட்டான்.
ஐய்யாவை கண்டாதான் ஆனந்தம் அவனுக்கு. அவர்தான் இந்த ஹெட்ஜ் கட்டர்,ஒரு நாலு கத்திரிக்கோல் வித விதமா கொடுப்பார். சலாம் போட்டு அருமை பேசி கூர்மையாகச் சீர் செய்து விட்டுப்போவார்.
அந்த அருமை அரிமணைய்யை விட்டு எந்தக் கத்தியும் நமக்குப் பிடிக்காமல் போய் விட்டது.
பின்ன எப்படி இப்ப இந்தச் சேன்னைக்கிழங்கு செய்தீங்கனு கேட்டால்...
இதுதான் வழி.
முழு சேனையை இந்தப் பெரிய கத்தியால நாலு போடு போட்டால் துண்டுகள் கிடைக்குமா,
அதை நல்லாத் தீர சுத்தம் செய்து, கொதிக்க வென்னீரில போட்டுடணும். மூடி வச்சா கொஞ்ச நேரத்துல சாஃப்டாயிடும்.
அடுப்பை அணைச்சுட்டு ,பொறுமையாகச் சின்னக் கத்தியால துக்கடா துண்டுகளாகச் செய்துகொண்டு, கொஞ்சமே க்கொஞ்சம் எண்ணைல வதக்கி எடுத்துட்டுப் போட்டோ எடுத்துப் பதிவும் போட்டுடலாம்:)
கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத்
தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடி விட்டதாம்.
14 comments:
ஐய்யே... என்னென்ன போடணும் அப்படின்னு விலாவாரியா குறிப்பு தராம இது என்ன சேனையைக் கத்திரியில் வெட்டின மாதிரி சமையல் குறிப்பு!! :)))
இந்த வான் கோழி...தன் இல்லாச்சிறகை விரித்தாடிய..தாம்!
பொரியல் செய்ய எடுத்ததாம்..யாம்!!
பொரியலைப் பார்த்ததும்..வான் கோழியில்லை கான மயிலே என்றோம்..யாம்!!!!
நல்லாருக்குப்பா!!கை அரிப்புக்கு என்ன செய்தீர்கள்? வல்லி!
உங்கள் பொரியலுக்குப் பக்கத்தில்...கான மயிலும் இல்லை வான் கோழியும் இல்லை...கழுகல்லவா இருக்குது?
யாரைக் கொத்த? பொரியலையா?உங்களையா?
சுரனைச் சுரண்டி எடுத்துக் கறிபண்ணிய வல்லி வாழ்க.
எனக்கு இந்த வேலையும் இல்லை. எல்லாம் இங்கே ஃப்ரோஸன் காயாவே வருது.
ஃப்ரெஷ் என்றால் கை அரிக்குமே.
(ச்சீச்சீ....இந்தப் பழம் புளிக்குது)
படத்தைப் பார்த்தால் வான்கோழி சமைத்தது மாதிரி தெரியலையே! கான மயில் சமைத்த மாதிரி பார்க்க மொறுமொறுன்னு நல்லாதானே இருக்கு.
நீங்கள் அரிவாள் மணைக்கு அடிமை என்றால் நான் கத்தியுடன் இணைந்த கட்டிங் போர்டுக்கே கடமைப் பட்டிருக்கேன். வெறும் கத்தியைக் கையில் பிடித்தால் காய் கட் ஆகுதோ, கை கட் நிச்சயம்:-)!
கடவுளே, ஏன் இந்தக் கொத்ஸ் தூங்காவரம் வாங்கிட்டு வந்துருக்காரோ தெரியலையே.
அம்பிக்குப் பாப்பா பொறந்ததுன்னா அங்க பின்னூட்டம். நான் பதிவு போட்டது இந்த ஊரு மணி 12 இருக்குமா!!அப்போ கொத்ஸ் ஊரில நாலுமணி !! காலங்கார்த்தாலேனு பாடிட்டு எழுந்துட்டாரோ.
கொத்ஸ் நீங்க சொல்றது ஒருவிதத்தில சரி. நான் கத்திரியால
கொத்தமல்லி கட் மாடி செய்வேன்.:)
மத்தபடி நமக்கும் கத்திரிக்கும் பழக்கம் இல்லை:) ஜோடி வேஷ்டிகளைப் பிரிக்கும் நேரம் தவிர!!
வரணும் நானானி. நடுவில பாப்பாவைத் தூங்க வைக்கப் போயிட்டேன்.
நல்லெண்ணைதான்பா. வாழைக்கய்ய்க்கும் அதே சேனைக்கும் அதே. கத்தியிலும் எண்ணை கையிலும் எண்ணை. எப்படியோ சமைச்சாச்சு. நாளைக்கு பொழைச்சுக் கிடந்து கண்ணில கண்டு புலாவ் செய்துடலாம். கட் வெஜெடபிள்ஸ் ஃப்ரோசன் கிடைக்கிறதே. கூடப் பட்டாணியும் போட்டத் தீர்ந்தது.
பாட்டு நல்லா வரதே. கவுஜைப் பக்கம் ஆரம்பிச்சிடுங்க.
ஆமாம் துளசி. ஒரே மண்ணு. ஒரு கிலோ காய்க்கு அரைக்கிலோ துண்டுகள் தான் தேறியது.
கை அவ்வளவா அரிக்கலைப்பா. அது அந்த சிறுகரணைதான் காரல் நிறைய இருக்கும். அதுவும் இதயத்துக்கு நல்லதுன்னு ஆஜி ரெண்டு நாளைக்கு ஒரு தடவை வாங்கிடும். கையே தோலுரிஞ்சு போற மாதிரி அரிக்கும்:)
நானானி கழுக்குக்கு மூக்கில வேர்க்கும் சொல்லுவாங்க இல்ல வந்திடுத்து.
சும்மா சொன்னேன். அது சிங்கத்துக்கு மாடல் செய்ய வந்து இருக்கு:)
ராமலக்ஷ்மி, நம்ம வீட்டில பின்னாடி காய்கறி நறுக்கவே ஒரு திண்ணை இருக்கும் அதுல உட்கார்ந்து இவ்வளவு பேருக்கும் சுளுவாத் திருத்தி வச்சுடலாம்.
இங்க அரைக்கிலோவுக்கு இந்தப் பாடு. எனக்கு அடுத்த தலைமுறைக்கு அரிவாளும் தெரியாது மணையும் தெரியாது:)
// எனக்கு அடுத்த தலைமுறைக்கு அரிவாளும் தெரியாது மணையும் தெரியாது:)//
இப்பவே அரிவாள் மணை தெரியாத தலைமுறை வந்துடுச்சுங்க.அம்மா சின்ன வெங்காயம் முதற்கொண்டு அதுலதான் அரிஞ்சாங்க.தங்கை வீட்டுக்குப் போனப்போ கத்திச் சண்டைதான்.
நான் சேனைக்கிழங்கு நீங்க சொன்ன மாதிரி நாலு போடு போடறமாதிரிதான் பார்த்திருக்கேன்.துளசி டீச்சர் என்னமோ அதுவும் ஃபுரோஸன்ங்கிறாங்க!மெய்யாலுமா?கொஞ்சம் கேட்டு சொல்லுங்க:)
இந்த தலைமுறைக்கு அரிவாள்...
நல்லாத்தெரியுமே!!முதுகிலே
சொருகி வெச்சிருப்பாங்களே!!!!!
அதென்ன கவுஜை பக்கம்?
பதிவுலகத்தில் படிக்க வேண்டியது
ரொம்பவே இருக்கு போல.
நிங்க எழுதற கவுதையைத்தான் சொல்றேன்பா.
கவிதை எழுதறவங்க அதைக் கவுஜைன்னு சொல்றாங்க செல்லமா.
உதாரணத்துக்குச் சொல்லணும்னா என்.சுரேஷ்,அய்யனார்,காட்டாறு,
ஏன் நம்ம ராமலக்ஷ்மி,லக்ஷ்மி இன்ன்ம் சட்டுனு ஞாபகத்துக்கு வரலை. நல்லாத் தமிழைப் படிச்சதோடு அதை மீண்டும் நமக்குச் சொல்றாங்க பாத்தீங்களா. அது அற்புதம்.
வரணும் ராஜ நடராஜன்.
நம்ம ஊரைத் தாண்டி எங்க போனாலும்,ஏன் நம்ம ஊரில கூட இப்ப ஃப்ரோசன் ஐட்டம் வந்துடுத்தே.
எனக்கு ரொம்பப் பிடிச்சது நம்ம ஊரில அழகாத் திருத்தி பாக்கட் போட்டு இந்தப் பழமுதிர் நிலையத்தில விக்கிறாங்க பாருங்க
அதுதான். ஆனா சுத்தம் செய்யாம சாப்பிட முடியாது.
Post a Comment