Blog Archive

Saturday, June 07, 2008

எலுமிச்சைப்புல்லும் க்ளீன் களியும் லெட் களியும்














வியாழக்கிழமை வந்தால் இங்கே இருப்பவர்களின் முகத்தைப் பார்க்கவேண்டுமே.:)

ஒரே மகிழ்ச்சி.

ரேடியோவில் மகிழ்ச்சி. தெருக்களில் கூட்டம்.வெய்யிலோ,காற்றோ

வெக்கையோ, வெறும் ஃபலாபல்தான் சாப்பிடுவார்களோ இல்லை ஏழு நட்சத்திர விடுதிகளுக்குத் தான் போவார்களோ


கோவிலில் தான் கூடுவார்களோ ,ஆகக்கூடி வீட்டில் இருக்க மாட்டார்கள். இருந்தால் கட்டாயம் வீடியோக் காட்சிகள் உண்டு.


வார இறுதியாயிற்றே.!

இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் வீதிகளில் நடக்கக் கூட முடியாமல் அனல் வீசும். இப்போதைக்கு நடக்கட்டும் என்று கங்கணம் கட்டியது போல ஒரே கலகலாதான்.


அப்படி ஒரு வெள்ளிக்கிழமை ஒரு உணவு விடுதிக்கு நாங்களும் போனோம்.

அது ஒரு தாய் உணவகம்.


எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான்.

பாங்காக் போனவர்கள் பேச்சைக் கேட்டதிலிருந்து அவர்கள் உணவு மீது கொஞ்சம் பயம்.

(அய்ய, இன்னோரு பயமா)


மகனுக்கும் மருமகளுக்கும் தாய் உணவு மிக விருப்பம்.' சைவம்தான்மா,

கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ரொம்ப ஆரோக்கியமாக ,எளிதில் ஜீரணம் ஆகிடும்.ம்ம்ம்ம்.


நாமதான் சந்தேகப் பாற்கடல் ஆச்சே:(


அப்பா ஏற்கனவே உங்க தம்பி ஊரில் ஏமாற இருந்தேன். கடல் வாழைக்காயைக் கொடுத்து விடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இந்த ''எலுமிச்சைபுல்'' கடைக்குள் நுழைந்தோம்.
நாசியைத் துளைக்கு ஏதோ ஒரு அவ்வளவாகச் சுகமில்லாத வாசம்.
அபௌட் டர்ன் செய்திருப்பேன்.
இரும்மா. ட்ரை சம்திங் நியூனு உள்ள தள்ளாத குறையா சிங்கமும் சேர்ந்து கொள்ளவே போனோம்/




அழகாகச் சிரித்தபடி வரவேற்று உட்கார வைத்து. 'வில் யூஹேவ் க்லீன் களி ?
என்றது அந்தப் பெண்.
என்னது களியா என்று நான் திரும்ப. சிரிப்பை அடக்க முடியாமல் என் மருமகள் அது க்ரீன் கறிமா என்றாள்
இவர்களுக்கு ஆர் அவ்வளவாக வராது . எல் சுலபமாச் சொல்லுவார்கள் என்றதும் நான் ஜாக்கிரதையாகி விட்டேன். எனக்கு அது ஸ்ப்ளீன் என்று கேட்டது.
அதற்குள் சிங்கம் பூமிங் வாய்ஸில் \I want fried rice with minced chiken'' என்றாரா. அவள் நோட் பேப்பரைக் கையில வச்சுகொண்டு எழுதத்தெரியாத குழந்தை மாதிரி விழித்தாள்.
மீண்டும் மெனுவைச் சொல்ல ஆரம்பித்தாள்
வெஜிடேரியன்
க்ளீன் களி, லெட் களி,
ஃப்ளைட் லைஸ்,
ஷ்ளிம்ப் என்று அடுக்கவும் என் வயிறு கீழே இருந்து மேலே போய் வந்தது. ஏகத்துக்குப் பசி.
அப்பா மவனே வேணா ராசா நாம் சரவணா சங்கிதானு ஓடிடலாமேன்னால்
கேட்கவில்லை.
அவனும் மருமகளுமாக வெகு அழகான தெளிவான இந்தியில் சொல்லவும் அவள் புரிந்து கொண்டாள்.
மம்மா வெஜிடேரியான் அப்படீனு தலையை மேலும் கீழும் கொண்டு போனாள்.
பப்பா நான் வெஜ் ஒரு டிக்
பேபி? நோ நோ.
மிஸ்டர் ச்லீநாத் மிஸஸ் வெஜ்.
ஓகே:)
எல்லாம் சரிதான். மூங்கில் திரை, படங்கள், ட்விஸ்டட் பாம்பூ,அரக்குத் திரைச்சீலைகள் ....சரி.
க்வான்யின்(ரெய்கி) சிலை கூட சரிதான். அவங்கதான் வயிற்றுவலி வராம காப்பாத்தணும்.:(
காரம் குறைக்கலாம்.
கொஞ்சம் சாம்பிராணி போட்டு இருக்கலாம்.
சந்தேகத்தோடயே சாப்பிட்டதில் வயிறு நிறையலை.
ஸ்ப்ரிங் ரோல்ஸ் நல்லா இருந்தது.
டிஸ்கி.
என்னைத்தவிர எல்லாருக்கும் பிடிச்சிருந்தது:))

19 comments:

துளசி கோபால் said...

பெஞ்ஜோரங்கில் நான் பெற்ற இன்பம் உங்களுக்கும் இங்கே கிடைச்சதா?

ஆஹா.....ஆஹா.....

'கலி முத்திப்போறது' இப்படித்தானாம்:-)))))

துளசி கோபால் said...

இந்த 'வியாழக்கிழமை வீகெண்ட்' இன்னும் சட்ன்னு மனசில் பதியமாட்டேங்குதுப்பா!

Anonymous said...

வெஜிடேரியன்னா சில சமயம் தவளையேல்லாம் சமைச்சுக்கொண்டு வந்துருவாங்க வல்லிம்மா, பாத்து ஜாக்கிரதை, நண்பர் ஒருத்தரோட அனுபவம் தான் தாய் ஏர்லைன்ஸ்ல :):)

வல்லிசிம்ஹன் said...

பெஞ்சோரங்கா?????? துளசி


அது என்னப்பா. டோஃபு பத்திதானெ சொன்னீங்க.
இன்னுமொரு கதை பாக்கி இருக்கா.

கலி 50 வருஷத்துக்கு முன்னாலேயெ முத்திப்போச்சும்மா. எந்தக் கலியைச் சொல்றீங்க:))

வல்லிசிம்ஹன் said...

துளசி, அதனாலயே எனக்குக் குழப்பம். இந்தியாக்கு வெள்ளிக்கிழமை போன் செய்து தம்பி கிட்ட ஆஃபீஸ் உண்டாடானு கேட்டா அவன் முழிக்காம் என்ன பண்ணுவான்:)

வல்லிசிம்ஹன் said...

அம்மிணி அதுதான்பா பயம்.
வெஜிடேலியன். ஓகே ஒகேன்னுட்டு. க்லீன் சாலட் வித் ஷ்ரிம்ப்?
அப்படீன்னு கேக்கறது அந்தப் பொண்ணு.
அதுசரி நாம் போகிறைடத்தில கிடக்கிற டோஃபுவை முழுங்கிட்டு வர வேண்டியதுதான். அப்புறம் வீட்டுக்கு வந்து மோர்சாதம் சாப்பிட்டா ஆச்சு:)

வடுவூர் குமார் said...

தலைப்பை பார்த்து இன்னொரு ரெசிபியா ? என்று ஓடலாம் என்று பார்த்தேன்.
ஆமாம் வலது பக்கம் ஏன் பாலைவன மணல் மாதிரி வச்சிருக்கீங்க.

வல்லிசிம்ஹன் said...

குமார்:)
பயப்படவே வேண்டாம்.
எங்க பாலைவன மணல்?
எந்தப் பதிவிலம்மா?
இந்தப் படமெல்லாம் அந்த லெமன் க்ராஸ் ரெஸ்டாரண்ட்ல எடுத்தது.

ராமலக்ஷ்மி said...

//என்னைத்தவிர எல்லாருக்கும் பிடிச்சிருந்தது:))//

அப்ப சரின்னு சகிச்சுக்க வேண்டியதுதான். சில நேரங்களில் இந்த மாதிரியான சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்களிலும் கூடக் கிடைக்குதே ஒரு சின்ன சந்தோஷம்.

வடுவூர் குமார் said...

இது எனக்கு மட்டும் தெரிகிற பிரச்சனையா? அல்லது உங்கள் வலைப்பூ கோடிங்கில் கையை வைத்துவிட்டு போனவரின் கைங்கரியமா? என்று தெரியவில்லை.

About me - பதிவின் வலப்பக்கத்தில் முதலில் தெரியாமல்,பதிவின் கீழ் தெரிகிறது அதனால் இப்போது வலது பக்கம்வெறுமையாக இருக்கு.அதைத்தான் சொன்னேன்.

நான் படிப்பது ஃபயர் பாக்ஸில்.

இலவசக்கொத்தனார் said...

வல்லிம்மா எல்லாம் புதுசா ட்ரை பண்ணனும். தாய் சாப்பாடு நம்ம ஊர் சாப்பிடாத இடத்தில் நம்ம ஆளுங்களுக்கு வலப்பிலசாதம், ச்சீ, வரப்பிரசாதம். தேங்காய் எல்லாம் போட்டு அவங்க செய்யும் குழம்பை சாதத்தில் விட்டு பிசைஞ்சு அடிக்க வேண்டியதுதான்.

ரீச்சர், நீங்க சென்னையில் அடையார் பார்க் ஷெரட்டனைத் தொட்டடுத்து இருக்கும் பெஞ்சராங்கையா சொல்லறீங்க? அது இந்தியாவிலேயே சிறந்த 10 தாய் உணவகங்கள் என்ற இடாப்பில் இடம் பெற்ற உணவகம். விலை அதிகம் என்றாலும் நான் சென்னை சென்றால் போக விழையும் இடம்.

இலவசக்கொத்தனார் said...

ஒண்ணே ஒண்ணு அவங்க என்னமோ நீரில் வாழும் உயிர்கள் எல்லாம் வெஜிடேரியன் அப்படின்னு நினைச்சுக்கறாங்க. அதனால நோ மீட், நோ சீ புட் அப்படின்னு சொன்ன புரிஞ்சுப்பாங்க.

கோபிநாத் said...

\\வடுவூர் குமார் said...
தலைப்பை பார்த்து இன்னொரு ரெசிபியா ? என்று ஓடலாம் என்று பார்த்தேன்.\\

;)))
நானும் இப்படி தான் நினைச்சேன்..;))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி, இந்தப் பசங்களுக்காகத் தான் போனேன். சிங்கத்துக்கும் எல்லா (!!) சாப்பாடும் பிடிக்கும்.
சந்தோஷம் மட்டும்னா பரவாயில்லை. கூடவே வயிற்றுச் சங்கடமும் வந்து சேர்கிறது:)

இன்னோரு தாய் விடுதி ''தாய் chi''இருக்கிறது. அங்க இன்னும் நல்ல க்ளீனா:) சாப்பாடு இருக்குமாம்.

வல்லிசிம்ஹன் said...

ஓ குமார், அதைச் சொல்றீங்களா. இந்த ஊரில மணல் தெரியலைனாதா யோசிக்கணும்.
ஜோக்ஸ் அபார்ட், என்ன விஷயம்னு ஆராய்ச்சி செய்ய தயக்கமா இருக்கு. நான் ஏதாவது டெம்ப்ளேட் சரி செய்யப் போய்,வேணாம்பா.வம்பு.நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே கொத்ஸ். அதுதான் மோர்க்குழம்பு மாதிரி பச்சை,சிகப்பு கலர்ல வச்சாங்களே.

அதுல நிறைய டோஃபுதான் மிதந்தது. கொஞ்சம் காரம் நிறைய. மைல்ட் ஸ்பைசினு சொல்லி இருக்கணும்.
பாவம் பையன்.அவ்வளவு பணத்தைக் கொடுத்து அவன் சரியாச் சாப்பிட்டானானு கேக்கலை. கண்டிப்ப்பா இன்னோரு தடவை தாய் சாப்பாடு நல்லா ருசிச்சுச் சாப்பிடறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

கரீட், நோ ஸீ ஃபுட்னு மருமகள் சொன்னாங்க கொத்ஸ்:)

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத் டர் நஹீ!!

அவ்வளாவ் சமையல் தந்திரமெல்லாம் நமக்குத் தெரியாதும்மா.நல்லா சாதம் சமைக்கத் தெரியும் .:))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம் வருகைப் பதிவு!!!