பிருந்தாவனத்தில் அருமையான, நான் எப்போதும் ரசிக்கும் பாடல். அதேபோல வடவரையை மத்தாக்கி பாடலும். வெங்கடேச சுப்ரபாதம் ஒரு பக்கமும், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒரு பக்கமும் இருந்த கேசட்டில் பாக்கி இருந்த இடத்துக்கு இந்தப் பாடலை இணைத்துக் கொடுத்திருந்தார் எங்கள் கடைக்காரர். ஒருதரம் சரவணபவ இதுவரை கேட்டதில்லை.
எம்.எஸ் அம்மாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. நானும் மாமியாரும் நிறைய பாடல்களை ஒன்றாக அமர்ந்து கேட்போம். இருவருக்கும் ஒரே வயது. என் மாமியார் செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தவர். அதே 1916 ஆம் வருடம்.
பழைய கதைகள் எல்லாம் சொல்வார்.
நீங்களும் கேட்டு ரசித்ததே மகிழ்ச்சி. கடைசிப் பாடல் மிக அருமையான முருகன் பாடல். நீங்கள் யூடியூபில் சென்று கேட்டதற்கு நன்றி மா.
அனைத்துமே அருமையான பாடல்கள். அடிக்கடி கேட்டிருக்கேன். கடைசி வீடியோ திறக்கலை. பின்னர் போய்ப் பார்க்கிறேன். சாகாவரம் பெற்ற குரல். அந்தக் குரலின் இனிமைக்கு ஈடு, இணை ஏது?
அதே தான்.சாகாவரம் பெற்ற குரல். மற்றவர்களுக்கு சாந்தி கொடுக்கவே வந்த குரல். பக்தியின் சாரம் அந்தக் குரல். ''வண்டுழாய்....மாலையாய்" என்று சொல்லும்போதே இறைவன மனதில் காட்சி தருவான். நன்றி மா. முருகன் பாடல் யூடியூபில் தான் பார்க்க வேண்டும் மா. நன்றி.
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.
Comments
கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்கள். மீரா படக்காட்சி மிக அருமையான காட்சி.
காடசி பாடல் இங்கு வரவில்லை
https://www.youtube.com/watch?v=sc-8RQ0mCCw
இங்கு போய் கேட்டு விட்டேன், மாமனை, மருமகனை பாடியதை கேட்டு விட்டேன்.
அம்மாவுக்கு வணக்கங்கள்.
வாழ்க வளமுடன்.
எம்.எஸ் அம்மாவுக்கு எத்தனை நன்றி
சொன்னாலும் போதாது.
நானும் மாமியாரும் நிறைய
பாடல்களை ஒன்றாக அமர்ந்து கேட்போம்.
இருவருக்கும் ஒரே வயது. என் மாமியார்
செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தவர். அதே 1916 ஆம் வருடம்.
பழைய கதைகள் எல்லாம் சொல்வார்.
நீங்களும் கேட்டு ரசித்ததே மகிழ்ச்சி.
கடைசிப் பாடல் மிக அருமையான
முருகன் பாடல். நீங்கள் யூடியூபில்
சென்று கேட்டதற்கு நன்றி மா.
நான்காவது காணொளி இயங்கவில்லை அம்மா.
அதே தான்.சாகாவரம் பெற்ற குரல்.
மற்றவர்களுக்கு சாந்தி கொடுக்கவே வந்த குரல்.
பக்தியின் சாரம் அந்தக் குரல். ''வண்டுழாய்....மாலையாய்"
என்று சொல்லும்போதே
இறைவன மனதில் காட்சி தருவான்.
நன்றி மா. முருகன் பாடல் யூடியூபில் தான்
பார்க்க வேண்டும் மா. நன்றி.
உண்மைதான் மா. அப்போது காசெட்டில்
பதியக் கொடுத்து உடனே வீட்டில் வந்து மீண்டும் மீண்டும் கேட்ட நாட்கள்.
நாங்கள் இசைத்தட்டு வடிவில் இந்தப் பாடல்களை
வைத்திருந்தோம்.பெரீயய்ய்ய்ய்ய இசைத்தட்டு:)
இசையரசி. வெறும் இசைக்காக மட்டும் இல்லை பக்திக்காக
அறியப் படுகிறவர்.
நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.
@ Sriramமீரா படப் பாடல்கள் அனைத்துமே
உருக வைக்கும். பிருந்தாவனத்தில்
முக்கியமாக எங்கள் குடும்பத்தில்
அனைவரின் இஷ்டப்பாடல்.
கேட்டதற்கு மிக நன்றி மா.
நான்காவது காணொளி இயங்கவில்லை அம்மா./////////////////////////////அன்பின் தேவகோட்டைஜி,
நான்காவது பாடலை இணைப்பது
சிரமமாக இருந்தது. இணையத்தில் கேட்க முடிகிறது.
நன்றி மா.
கீதா