Blog Archive

Saturday, September 25, 2021

தெய்வ கானம் கொடுத்த அம்மா





வல்லிசிம்ஹன்செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி பதிந்திருக்க வேண்டிய கானங்கள்.
சில பல காரணங்களால்
இன்று பதிகிறேன்.
தேவ கானத்துக்கு ஏது  காலம்.?
நிறைவுடன் நினைப்போம். நமஸ்காரங்கள் 
அம்மா. கோடிப் பிரமாணங்கள்.

12 comments:

கோமதி அரசு said...

பகிர்ந்த பாடல்கள் அனைத்து மிக அருமை.
கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்கள். மீரா படக்காட்சி மிக அருமையான காட்சி.

காடசி பாடல் இங்கு வரவில்லை

https://www.youtube.com/watch?v=sc-8RQ0mCCw

இங்கு போய் கேட்டு விட்டேன், மாமனை, மருமகனை பாடியதை கேட்டு விட்டேன்.

அம்மாவுக்கு வணக்கங்கள்.

ஸ்ரீராம். said...

பிருந்தாவனத்தில்  அருமையான, நான் எப்போதும் ரசிக்கும் பாடல்.  அதேபோல வடவரையை மத்தாக்கி பாடலும்.  வெங்கடேச சுப்ரபாதம் ஒரு பக்கமும், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒரு பக்கமும் இருந்த கேசட்டில் பாக்கி இருந்த இடத்துக்கு இந்தப் பாடலை இணைத்துக் கொடுத்திருந்தார் எங்கள் கடைக்காரர்.  ஒருதரம் சரவணபவ இதுவரை கேட்டதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

எம்.எஸ் அம்மாவுக்கு எத்தனை நன்றி
சொன்னாலும் போதாது.
நானும் மாமியாரும் நிறைய
பாடல்களை ஒன்றாக அமர்ந்து கேட்போம்.
இருவருக்கும் ஒரே வயது. என் மாமியார்
செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தவர். அதே 1916 ஆம் வருடம்.

பழைய கதைகள் எல்லாம் சொல்வார்.

நீங்களும் கேட்டு ரசித்ததே மகிழ்ச்சி.
கடைசிப் பாடல் மிக அருமையான
முருகன் பாடல். நீங்கள் யூடியூபில்
சென்று கேட்டதற்கு நன்றி மா.



Geetha Sambasivam said...

அனைத்துமே அருமையான பாடல்கள். அடிக்கடி கேட்டிருக்கேன். கடைசி வீடியோ திறக்கலை. பின்னர் போய்ப் பார்க்கிறேன். சாகாவரம் பெற்ற குரல். அந்தக் குரலின் இனிமைக்கு ஈடு, இணை ஏது?

திண்டுக்கல் தனபாலன் said...

அமுத கானங்கள்...

KILLERGEE Devakottai said...

பாடல்கள் கேட்டேன் அருமை.
நான்காவது காணொளி இயங்கவில்லை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

அதே தான்.சாகாவரம் பெற்ற குரல்.
மற்றவர்களுக்கு சாந்தி கொடுக்கவே வந்த குரல்.
பக்தியின் சாரம் அந்தக் குரல். ''வண்டுழாய்....மாலையாய்"
என்று சொல்லும்போதே
இறைவன மனதில் காட்சி தருவான்.
நன்றி மா. முருகன் பாடல் யூடியூபில் தான்
பார்க்க வேண்டும் மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

உண்மைதான் மா. அப்போது காசெட்டில்
பதியக் கொடுத்து உடனே வீட்டில் வந்து மீண்டும் மீண்டும் கேட்ட நாட்கள்.

நாங்கள் இசைத்தட்டு வடிவில் இந்தப் பாடல்களை
வைத்திருந்தோம்.பெரீயய்ய்ய்ய்ய இசைத்தட்டு:)

இசையரசி. வெறும் இசைக்காக மட்டும் இல்லை பக்திக்காக
அறியப் படுகிறவர்.
நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.

வல்லிசிம்ஹன் said...

பிருந்தாவனத்தில் அருமையான, நான் எப்போதும் ரசிக்கும் பாடல். //
@ Sriramமீரா படப் பாடல்கள் அனைத்துமே

உருக வைக்கும். பிருந்தாவனத்தில்
முக்கியமாக எங்கள் குடும்பத்தில்
அனைவரின் இஷ்டப்பாடல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
கேட்டதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

பாடல்கள் கேட்டேன் அருமை.
நான்காவது காணொளி இயங்கவில்லை அம்மா./////////////////////////////அன்பின் தேவகோட்டைஜி,

நான்காவது பாடலை இணைப்பது
சிரமமாக இருந்தது. இணையத்தில் கேட்க முடிகிறது.
நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா எல்லாப் பாடல்களுமே ரொம்ப கேட்டு ரசிப்பவை. குரலில் பக்தி ரசம் என்றால் எம் எஸ் தான்!! முதலில் நினைவுக்கு வருபவர்.

கீதா