வல்லிசிம்ஹன் நேற்று வந்த வானவில்.
வெளியே சென்றபோது நடுவழியில்
கருமேகங்கள் இடி மின்னலுடன் பாதையில்
இறங்கின.
இதை எதிர்பார்க்காத மகள்
'அம்மா, உன்னை வீட்டில விட்டு விடட்டுமா?' என்று கேட்டாள்.
வீட்டுக்குச் சென்றால் அவள் வேலை தடைபடும். நான் மௌனமாக
மறுத்து விட்டேன்.
அந்த சத்தத்தில் உடல் நடுக்க முன் சீட்டில் ஒடுங்கிக்
கொண்டேன்.
மனதில் சாயி சரணம் சொல்ல ஆரம்பிததேன். கண்கள்
காது மூடியபடி
ஒரு கிழவி வருவதை எதிர் வண்டிக்காரர்கள்
ஒரு பார்வையோடு ஒதுக்கி விட்டார்கள்:)
10 நிமிட ஆரவாரத்துக்குப் பிறகு
வீடு வந்து சேர்ந்தோம்.
''அம்மா நீ ரொம்ப அமைதியா இருந்தேம்மா"
என்று பாராட்டினாள்.
மாப்பிள்ளை, ஏம்மா மழை வருவது தெரியாமல்
வெளியே போய் விட்டீர்களா' என்று கேலி காட்டினார்!!
ஐய்யா ஸாமி உங்க ஊர் இப்படி செய்யும்னு தெரியாதே!!
வெய்யில் இருக்கக் கொண்டு தான்
வெளியில் போனேன். வெதர் ரிபோர்ட்
பார்க்கவில்லை" என்று சொல்லி கராஜுக்குள் விரைந்தேன்.
தைரியம் கொடுத்த ஸாயிக்கு நன்றி சொல்லி கொலுவை ஆரம்பித்தேன்.
21 comments:
அது சரி... பனிக்கட்டி ஆயாச்சுன்னா அதுக்கு இன்னமும் தண்ணீர் என்ற பெயர் இருக்குமா?
இடி மின்னல்னா எனக்கும் பயம்தான்.
ஆனால் வழிப் பாதையில் மின்னல் இறங்குமா என்ன?
:) @ Nellai thamizhan
தண்ணீர் தானே உள்ளிருப்பது.
முதுமை வந்தால் தன்மை மாறுமா.
கடினமாகலாம். அன்பு முரளிமா.
மனதின் கடினம் மீண்டும் இளகித் தண்ணீர் ஆவதையும்
பார்க்கிறோமே.
பனிக்கட்டிக்கு நல்ல உதாரணம் சொல்லி இருக்கீங்க நெல்லைக்கு. மேகங்கள் வந்து இறங்கும்போது பார்க்க மனதில் உற்சாகம் தோன்றினாலும் உள்ளூர ஒரு அச்சமும் வரும் இல்லையா? இயற்கையின் பற்பலவிதமான விளையாட்டுக்களை சிகாகோவில் பார்த்து வருகிறீர்கள்.
அன்பு முரளிமா,
இந்த நாடு மிகப் பெரியது. எல்லாமே மெக சைஸ் தான்.
வெதர் உட்பட.
எல்லாம் பெரிசு. நாங்கள் சால்யில் விரைந்து கொண்டிருந்த போது மேற்கு திசையில் கருமேகம் சூழ்ந்து மின்னல் இறங்க ஆரம்பித்தது.
மகள் உடனே வலது பக்கம் வண்டியை ஓட்டி
பழைய கணினி, துணிமணிகள் , நல்ல செருப்புகள் என்று பலவற்றையும்
Good will store' இல் கொடுக்கும் போது
இடியுடன் மின்னல் இறங்கியது.
அங்கிருந்து பத்து நிமிடங்கள் கண்மண் தெரியாத மழை.
அப்பாவைப் போலத் தைரிசாலியான பெண்.
தொந்தரவு கொடுத்துவிட்டேனே என்ற கவலை எனக்கு. '
அம்மா வீடு வந்து விட்டோம் என்றதும் தான்
கண் திறந்தேன்.
அன்பின் கீதாமா,
நாம் உணர்வதைத் தான் சொல்கிறேன் மா.
காலங்கள் தான் நம்மை மாற்றுகின்றன.
நாம் திடமாக இருந்தாலும் மற்றவர்கள் நலம் இல்லாமலிருன்தால்
நமக்கு பாதிப்பையும் கொடுக்கிறது.
மாறு வதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது.
நல்ல வார்த்தைகளுக்கு நன்றி மா.
மகனுடன் காரில் பயணம் செய்யும் போது நீங்கள் சொன்னமாதிரி மின்னல் வானத்துக்கும் பூமிக்கும் இறங்கியதைப்பார்க்க பயமாக இருந்தது , பேரன் கண்களை மூடி சீட்டில் படுத்துக் கொண்டான்.
இடை, மின்னல் அவனுக்கு பயம்.
சாயி தைரியம் தந்தது மகிழ்ச்சி.
வானவில் படம் அழகு.
பகிர்ந்த செய்திகளும் அருமை.
அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
பேரனுக்கு இடி மின்னல் பயமா
அடப் பாவமே.
வளர்ந்தால் சரியாகிவிடும் மா.
எனக்கு ஒரே ஒரு சந்தோஷம். இந்த பயம் குழந்தைகளுக்குக் கடத்தப் படாததே!!
இத்தோடு மூன்று முறை இந்த ஊர் கடும் மழையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.
மகள் சொல்வாள்..ஸ்டார்ம் போது கார் தான் ரொம்பப்
பாதுகாப்பு . பயப்படாதே அம்மா என்பாள்.
என்ன சொன்னால் தான் என்ன. அதைப் பார்ப்பது யார்,
கேட்பது யார்:((((
அம்மா இந்த மின்னல் இடி இறங்குவது கொஞ்சம் பயம் தான் அம்மா. அது எங்கு இறங்கும் எப்படித் தாக்கும் என்பது தெரியாது. இயற்கையின் வீரியம் இது! மனிதன் என்னதான் டெக்னாலஜி என்று உயரே போனாலும் இயற்கை அதற்கும் மேலே. கார் என்றால் பாதுகாப்புதான் அம்மா.
ஹப்பா நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தீர்களே...
குட் வில் ஸ்டோர் நல்ல விஷயம் அங்கு நிறைய இருக்கிறதே. அது போல இப்போது சென்னையிலும் இங்கும் இருக்கிறது. சென்னையில் கடையாகவே இருக்கிறது. இங்கு ஃப்ரீயாக பேருந்து நிறுத்தம் பக்கங்களில் ஷெல்ஃப் ஷெல்ஃபாக வைத்திருக்கிறார்கள் சில இடங்களில். அதில் வைக்கப்படுவதை யாருக்குத் தேவையோ அவங்க எடுத்துக்கலாம் என்பது போல. ஃப்ரீயாக
கீதா
ஆமாம் அம்மா கால் மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவது மிக நல்ல விஷயம்.
நம் வீட்டில் இப்பவும் நான் கீழே உட்கார்ந்துதான் சாப்பிடுவது. அப்படியே பழகிவிட்டது!
கெட்ட குணங்களும் நோய்களும்// அதே அதே அம்மா. மனம் தான் பலதிற்கும் காரணம். ஆனால் அதை அடக்குவது யாரு!!! ஜல்லிக்கட்டு!
கீதா
நீங்கள் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்ததற்கு இறைவனுக்கு நன்றி.
இப்படிக் கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் நேரில் கண்டிருக்கிறீர்கள்.
பெட்டித் தகவல்கள் அருமை.
துளசிதரன்
மின்னல் இறங்கும் நெல்லை. சென்னையில் அம்பத்தூரில் இருக்கையில் ஒரு முறை தெருவில் இறங்கி வீட்டுக்குள் புகுந்து, நாங்க எல்லோரும் பயந்து நடுங்கி! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இடி மின்னல் இப்போதைய அம்மா? (மீள்பதிவா என்று கேட்டேன்) அவ்வளவு பயமா, இடி மின்னல் என்றால்?! சம்மணம் போடு தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதுதான் எவ்வளவு ஆரோக்கியமானது.. நம் முன்னோர்கள் செய்து வைத்திருக்கும் எந்த செயலும் ஆரோக்யமானதே.. நீங்கள் அனுப்பிய காணொளி நினைவுக்கு வருகிறது. பொறுமையின் பெருமையை சொல்கிறது கடைசிப் படம்!
அருமை...
குட் வில் ஸ்டோர் நல்ல விஷயம் அங்கு நிறைய இருக்கிறதே. அது போல இப்போது சென்னையிலும் இங்கும் இருக்கிறது. சென்னையில் கடையாகவே இருக்கிறது. இங்கு ஃப்ரீயாக பேருந்து நிறுத்தம் பக்கங்களில் ஷெல்ஃப் ஷெல்ஃபாக//////////////////////////////////////////////அன்பின் @கீதா ரங்கன்,
எத்தனை அருமையான விஷயம் அம்மா.!!!
கொடுப்பது என்று வந்து விட்டால்
தடையே இல்லை.
லண்டனில் சில அத்வான பஸ் ஸ்டாப்பில் இது 'போல
புக் ஷெஃப் பார்த்திருக்கிறேன்.
சின்ன மகன் ஊரிலும் இருக்கும். ஜெர்மன் மொழியில்:)
இந்த ஊரில் BINS வைத்திருப்பார்கள் அதிலும் போடலாம். குட் வில் ஸ்டோர்ஸில் கொடுத்தால்
அதை இல்லாதவர்களுக்கு ஒரு டாலர் விலை வைத்து வைப்பார்கள்.
வாங்கிக் கொள்பவர்களின் கௌரவம்
குறையாமல் இருக்க தான் இந்த ஏற்பாடு.
நம் வீட்டுக்கு லாக்டௌனுக்கு முன்னால்
சுத்தம் செய்ய வரும் பாட் ரீஷியா டிசைனர் உடை
உடுத்தி வருவாள்!!!! எல்லாம் சிக் என்று இருக்கும்.
''மனிதன் என்னதான் டெக்னாலஜி என்று உயரே போனாலும் இயற்கை அதற்கும் மேலே. கார் என்றால் பாதுகாப்புதான் அம்மா.
ஹப்பா நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தீர்களே.""
நன்றி மா கீதா.
:)))) இனிமேல் வெகு ஜாக்கிரதையாக இருப்பேன். மகள் தனியாக
ஓட்டிச் செல்கிறாளே என்று கூடச் செல்வேன்.
:)))))
# Geetha Rengan,
நம் வீட்டில் இப்பவும் நான் கீழே உட்கார்ந்துதான் சாப்பிடுவது. அப்படியே பழகிவிட்டது!////////////////////////////////////
Smart way to sit.
@ துளசிதரன் தில்லை அகத்து,
"இப்படிக் கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் நேரில் கண்டிருக்கிறீர்கள்.
பெட்டித் தகவல்கள் அருமை."
மிக நன்றி மா. நமக்கும் வாழ்க்கை சுவாரஸ்யமாக
இருக்க வேண்டும் என்று இறைவன் போடும் நாடகங்கள்
இல்லையாம்மா. நன்றி.துளசிதரன்.
@ கீதா ஸம்பசிவம்
.''அம்பத்தூரில் இருக்கையில் ஒரு முறை தெருவில் இறங்கி வீட்டுக்குள் புகுந்து, நாங்க எல்லோரும் பயந்து நடுங்கி! !!!!!!!!!!""
நிஜமாவா கீதா.!!! சென்னையில் கோடையிடி பயங்கரமாக
இருக்கும். புரட்டாசி மாதமும் அப்படித்தான். ஒரு கோடியில் ஆரம்பித்து இன்னோரு கோடி வரை
ஆர்ப்பாட்டம் தான். ஒரே கோபத்தாண்டவம்:(
@ ஸ்ரீராம்,
''இப்போதைய அம்மா? "
ஹாஹ்ஹா. ஸ்ரீராம்
இந்த விஷயத்தில் நான் மாறவே இல்லை.
இனிமேல் எல்லோரும் கேட்கப் போகிறார்கள்;
ஆஹ்ஹ்ஹாஅஹ்ஹா:)
ஏம்மா இப்ப எழுதினதா, ஃபார்வர்டா, மீள் பதிவான்னு.
இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கேன்.
ஆமாம் மா இந்த வியாழக்கிழமை
எழுதியதுதான் இது.
நன்றி மா.
அன்பின் தனபாலன் மிக நன்றி மா.
Post a Comment