வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
Comments
அன்றும், இன்றும் இனியவை பழைய பாடல்கள்.
மீட்டாத வீணையிது பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது. இன்று கேட்டேன்.
இரண்டாவது பாடல் கேட்டதில்லை இதுவரை.
மீட்டாத வீணை இது இதுவரை கேட்டதில்லை! தெவிட்டாத இனிமை சுசீலாம்மா குரல்!
அக்பர் பாடல் இனிமை. ஹிந்தியிலும் தமிழிலும், பிற மொழிகளிலும் செம ஹிட் அடித்த படம், பாடல்கள். இந்தப் படம் அப்புறம் வனத்தில் கூட வெளியிட்டார்கள் என்று நினைவு.
முதல் பாட்டும் நடனமும் யூடியூபில் முதல் சாய்ஸாக வந்தது.
உடனே பகிர்ந்து விட்டேன்.
அக்பர், மொகலே ஆஸம் ஆகக் கறுப்பு வெள்ளையில்
வந்து நல்ல வண்ணத்திலும் ரசிக்க வைத்தது.
மதுபாலா திலீப்குமாரின் ரொமான்ஸ் உச்சகட்டத்தில் இருந்த காலம்.
சுசீலா அம்மாவின் குரல்களில் எத்தனையோ கானம்
படக்காட்சி இல்லாமலே வானொலியில் கேட்ட காலங்கள்
மிக இனிமை.
நன்றி மா.
இரண்டாவது பாடலும் கேட்டதில்லை.
மூன்றாவதும் கேட்டதில்லை. சுசீலா அவர்களின் இனிமையான குரல்!!
நான்காவது பாடல் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்!
எல்லாமே இனிமையான பாடல்கள் முதல் பாடல் டாப்!
கீதா
கண்ணன் குறித்த எல்லாப் பாடல்களுமே
ரசிக்கும்படி இருக்கும்.
தாலாட்டுகள், யசோதையின் கொஞ்சும் மொழி,
கண்ணனின் குறும்புகள் என்று பல
வகை.
எல்லா மொழிகளிலும் வித விதமாகக்
கண்ணனை அனுபவித்துப் பாடல்கள்.!!
உங்களுக்கும் இந்த ராகம் பிடித்ததில் அதிசயமே இல்லை
நன்றி மா.
கடைசிப்பாடல் திண்டுக்கல் நாட்களைச் சேர்ந்தது .இலங்கை வானொலியின்
உபயம்.
இனிமை நிறைந்த வருடங்கள்.
நன்றி மா.