வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
Comments
அருமை.
முதல் படத்தில் வந்த அம்மா நடித்த படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன்.
அடுத்த இரண்டும் இப்போதுதான் பார்த்தேன்.
நன்றாக இருக்கிறது அக்கா.
வாழ்க வளமுடன்.
நான்கு குறும்படங்கள் பதிவிட்டதாக நினைத்தேன்.
மூன்று பதிவாகி இருக்கின்றன.
நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றே நினைத்தேன்:))
நன்றி மா.
எனக்கும் அவரைப் பிடிக்கும்.
மற்றவை இனிதான் பார்க்க வேண்டும் அம்மா
கீதா
மூன்றாவது படத்தைப் பொருத்தவரை இப்போதெல்லாம் பல அம்மாக்களே தங்கள் பெண்களின் உடைவிஷயத்தில் நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது குறிப்பாக நகரங்களில்.
கீதா
நேரம் இல்லாமல் இப்படி ஓடுவார்களா.
மாதத்தில் 4 நாட்களாவது உங்களுக்குத்
தொடர் விடுமுறை கிடைக்க வேண்டும்.
நன்றி மா.
மெதுவாகப் பாருங்கள். எனது வேலைகளைக்
கணிசமாகக் குறைத்து விட்டாள் மகள்.
ரிலாக்ஸ் என்று கட்டளை:)
அதனால் மி எஞ்சாயிங்க்.!!!!
நீங்கள் எல்லாம் நற்கருத்துகளைப்
பரிமாறும் போது,
நான் மீண்டும் பள்ளிக்கூடம்
செல்லும் உணர்வு வந்துவிட்டது. படிப்புக்கு
நடுவே பெரிய இ.....டைவேளை.
மிக நன்றி மா.
மகள் வளரும்போதே நான் ஒன்றும் சொன்னதில்லை.
வீட்டில் பாட்டிகள் இருந்தார்களே.சல்வார் மட்டும் போடுவாள்.
இந்த ஊர் உடைகள் ம்ஹூம்
ஒண்ணும் சொல்ல முடியாது;00000))))
குறும்படங்கள் பதிவு அருமை. முதலிரண்டு குறும்படங்கள் வீட்டில் மகள் பார்க்கும் போது, நானும் பார்த்துள்ளேன். அந்த அம்மாவாக வருபவரின் நடிப்பு நன்றாக இருக்கும் இயல்பாக கதையோடு ஒன்றி நடித்திருப்பார். மூன்றாவதாக பகிர்ந்திருப்பதையும் பார்க்கிறேன். சனி ஞாயிறு பொழுது போக்கிற்காக நகைச்சுவையுடன் கூடிய இந்த குறும்படங்களை பார்ப்பது வழக்கம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மைதான். இந்தக் குறும்படங்களை உண்மையிலேயே
அருமையாகத் தயாரிக்கிறார்கள்.
நடிப்பவர்கள நேரே பார்ப்பது போலத் தோன்றுகிறது!!!
நடிப்பென்றே நம்ப முடியவில்லை.
தமிழ்ச் சிறுகதைகளைப் படிக்கும் நிறைவு
கிடைக்கிறது.
நீங்களும் மகளும் ரசிப்பதே மகிழ்ச்சி.
வாழ்வில் சந்தோஷம் கொடுக்கு நல்ல
செய்திகளில் குறும்படங்களையும்
இணைக்கலாம்.
நன்றிமா.