பயோபிக் சாதாரண விஷயம் இல்லை.
சொல்லுவது செல்லுபடியாக வேண்டும் என்றால்
எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.
தமிழ் நாட்டில் உணர்ச்சிவசப்படுபவர்களே அதிகம்.
ஆராய்ச்சிகள் பல செய்து,
தெரிந்த விஷயங்களையே நாசூக்காகவும் அழகாகவும்
கதைச் சம்பவங்களாகக் கோர்த்திருக்கிறார்
இயக்குனர்.
அர்விந்த் சுவாமி, மிகப் பாடுபட்டு தலைவராக
மாறி இருக்கிறார்.
தமிழே தெரியாத கங்கணா ரணாவத்
ஜெயாவாகவே மாற இயக்கப் பட்டு இருக்கிறார்.
அங்கங்கே சில ஒத்துக் கொள்ள முடியாத இணைப்புகள்
இருந்தாலும் ,பொதுவாக இவர் ஆளப் பிறந்தவர்
என்ற முனைப்பிலேயே காட்டப் பட்டிருக்கிறார்.
ஏற்றுக்கொள்வதும் இல்லாததும் மக்கள் கையில்.
அவருடன் சேர்ந்து பயணிக்கும் நாஸர், சமுத்திரக்கனி
இன்னும் பலருடைய ஆழ்ந்த அர்ப்பணிப்பு
செம்மையாகத் தெரிகிறது.
இந்தப் படத்தின் நடுவில் இந்திப் பாடலின் இசை
பின்னணியில் வருவது அத்தனை சுகமாக இல்லை.
அதே போல மிகப் பழங்கால பாகவதர்
காலத்து பாக்க்ரௌண்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ஜெஜே நடிக்க வந்த காலத்தில்
ஆங்கில இசை தழுவி வந்த பாடல்களே
அனேகம்.
நான் படத்தைப் பார்க்கவில்லை. யூடியுபில்
கிடைத்த சில காட்சிகளை வைத்து சொல்கிறேன்.
தவறாகவும் இருக்கலாம்.
மொத்தத்தில் அரிய உழைப்பில் உருவாகி இருக்கும்
சரித்திரப் படம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
6 comments:
பார்க்கும் ஆவல் இல்லை. மனோ சாமிநாதன் அக்கா கூட விமர்சித்திருந்தார்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்,.
இங்கே வந்தாலும் தியேட்டர் போக முடியாது.
மனோ எழுதி இருந்தார்கள். படித்தேன்.
அம்மா மனோ அக்கா எழுதியதிலிருந்துதான் இப்படம் பற்றித் தெரிந்து கொண்டேன். உங்கள் பதிவும் வாசித்தேன் இப்ப. படம் எடுத்த விதம் நன்றாக இருப்பதாக மனோ அக்கா சொல்லியிருந்தார்.
தியேட்டர் போகும் பழக்கமும் இல்லை ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. இங்கு வீடியோவிலும் பாசிட்டிவாகத்தான் சொல்லியிருக்கிறார்.
கீதா
விமர்சனம் நன்றாக செய்கிறார்.
அன்பின் கீதாமா,
நல்ல படம். நல்ல உழைப்பு.
மனோ அவர்கள் நன்றாக எழுதி இருந்தார்கள்.
நான் திரு ஸ்ரீனிவாசனின் விமரிசனத்துக்கு
என் கருத்தை எழுதினேன்.
ஒருவர் மனமும் சுணங்காமல் படம் எடுக்க
மிகத் திறமை வேண்டும்.
அதைச் செய்திருக்கிறார் என்று நம்புகிறேன். நன்றி மா.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நானும் எல்லா விமரிசனங்களும் பார்த்தேன். ஒரு எம் ஜி ஆர்,
ஜெய லலிதா விசிறியின்
நோக்கத்தில் பார்த்து விமர்சித்திருக்கிறார்.
நன்றி மா.
Post a Comment