Blog Archive

Thursday, September 16, 2021

மௌனம்...

மௌனம் என்னும் மொழி வலியது.
பேசிக்கொண்டே இருக்கும் போது
மனம் நிறைவானால் மௌனம் மட்டுமே போதும்.

நிறைந்த மனங்களிடையே  கசப்பு எழும்போதும் 
மொழி வெளியே வருவதில்லை.

யாராவது ஏதாவது பேச மாட்டார்களா என்னும் ஏக்கம் வரும்போது 
கேட்கும் கிளியோசையும், காகத்தின் குரலும் 
இனிமை.

தொலைக்காட்சியின் செய்திகள் மனதில் 
கலவரம் எழுப்பும்போது 
நெஞ்சம் தேடுவது நிசப்தம்.

வஞ்சம் இழைக்கப்பட்ட 120 சின்னப் 
பெண்களின் குரல் எழும்பியிருக்காவிடில்
இன்னும் அநீதி  தொடர்ந்திருக்கும்.

இதுபோல் இன்னும் எத்தனை விபரீதங்களோ
 என்று கூக்குரலிடும் குரல்கள் 
தொண்டையிலேயே அடங்கி இருந்தால்
இனி விளையாட்டே கிடையாது என்று இன்னுமொரு
லாக் டௌன் வந்திருக்கும்.

ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்கும் முன்னமேயே
தங்கள் பால்யத்தை இழந்துவிட்ட குழந்தைகள்
இன்னும் எத்தனை ஆயிரமோ?
தொலையக் காரணமாக இருந்த
வழிகாட்டிகள் எத்தனை நூற்றுக்குள்
அடங்குவார்களோ.
இயற்கைதான் பதில் சொல்ல வேண்டும்..
 
வாரக்கணக்கில் ஓடிக் கொண்டிருக்கும்
சாட்சி விசாரணைகள் செய்தி  சானல்களில்..



.நீதி கிடைக்குமா?







11 comments:

கோமதி அரசு said...

பதிவும் , பாடல்களும் அருமை.

முதல் பாடல் பாலமுரளி கிருஷ்ணா பாடலும் பிடிக்கும்.
மெளனம் மெளனம் பாடல் கேட்கும் போது மனதை ஏதோ செய்யும். பி.சுசீலாவின் குரல் அருமையாக இருக்கும்.

மூன்று பாடல்களின் படமும் பார்க்கவில்லை. கதை தெரியவில்லை.

தொலைக்காட்சி செய்தி என்ன என்று தெரியவில்லை. இங்கு இன்னும் தொலைக்காட்சியே பார்க்கவில்லை. இன்று பார்க்கிறேன்.

எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும்.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
முதல் படம் கே பாலச்சந்தரின் நூல்வேலி.

இரண்டாவது படம் வளர்பிறை சிவாஜி ,சரோஜாதேவி.
சிவாஜி ஊமையாக நடித்திருப்பார்.
மிக நல்ல கதை.
படம் ஓடியதா என்று தெரியவில்லை. நானும் பார்த்ததில்லை.
அஜித் படம் மூன்றாவது. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்..


செய்தி பாருங்கள். பார்க்காவிட்டாலும் ஒன்றும் இல்லை.
பாவம் அந்தப் பெண்குழந்தைகள். பெரிய விலை கொடுத்துவிட்டார்கள்
விளையாடுவதற்கு,.

ஸ்ரீராம். said...

அருமையான பாடல்கள்.  வளர்பிறை நான் பார்த்ததில்லை.  மற்ற இரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன்.  நான் செய்திகள் பார்க்கிறேன் என்றாலும் அந்தச் செய்தி என்னவென்று எனக்கும் தெரியவில்லை.  ஹிஹிஹி...

Thulasidharan thilaiakathu said...

வல்லிம்மா பாடல்களை விட உங்கள் வரிகள் செம அம்மா என்ன அழகான கருத்துகள். வலி மிகுந்த வரிகள். செய்தி தெரியவில்லை ஆனால் உங்கள் வரிகள் மிகுந்த வலியைச் சொல்கிறது. பார்க்கிறேன் என்ன செய்தி என்று

பார்த்துவிட்டு வருகிறேன்

முதல் பாடல் மூன்றாவது பாடல் கேட்டிருக்கிறேன் நல்ல பாடல்கள் ரசித்த பாடல்கள் இரண்டாவது இப்போதுதான் கேட்கிறேன் அம்மா

கீதா

Thulasidharan thilaiakathu said...

அம்மா அந்த ஊர் செய்தியா இல்லை உலகச் செய்தியா அல்லது நம்மூர் செய்தியா? நானும் உங்கள் வரிகளை வைத்துத் தேடினேன் எதுவுமே கிடைக்க வில்லையே

கீதா

Jayakumar Chandrasekaran said...

மொழி என்பதற்கு பதில் சொல் எனலாம்.

நீங்கள் கடைசியில் குறிப்பிடுவது சிமோன் பைல்ஸ் பற்றியதா?

 Jayakumar

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம்,
இந்த ஊரில் நடந்தத. தால் இங்கே மட்டும் ஒளிபரப்பாகிறதோ?
பிபிசியிலும் பேசினார்களே.

சீக்கிரமே இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,,


விதிகள் மீறாமல் இருக்க இடம் சொல்லவில்லை. உலகம் எங்கும் இந்தப் பாதிப்பு இருந்தாலும் இப்போது
இங்கே நிறைய வெளியே வருகிறது.
விளையாட்டு உலகம் விபரீத உலகமாகக் காட்சி தெரிகிறது.

செய்தி மனதைக் கலவரம் செய்ததால் சொற்களும் அது போலவே வெளியே வருகிறது.
நீங்கள் யூ எஸ்ஏ ஜிம்னாஸ்ட்ஸ் என்ற தலைப்பில் தேடிப் பார்க்கலாம்..

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஜெயக்குமார் சந்திரசேகர் ஜி.

சொல் தான் சரி. சைமன் பௌல்சு் ம, இந்த விவகாரத்தில் பாதிக்கப் பட்டதாகத் தான். சொல்லி இருக்கிறார்.

ஸ்ரீராம். said...

//இந்த ஊரில் நடந்தத. தால் இங்கே மட்டும் ஒளிபரப்பாகிறதோ?//

தெரியவில்லை அம்மா..  நான் தொலைகாட்சி பக்கம் அதிகம் செல்வதில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா விளையாட்டுப் பக்கம் இப்போது மீடியா இருப்பதால் நிறைய தெரிகிறது பெண்களும் குரல் கொடுப்பதால் என்று தெரிகிறது. நான் கல்லூரி படித்த காலத்திலேயே உண்டு அம்மா.

இப்போதையதை நீங்கள் கொடுத்திருப்பதை வைத்து தேடிப் பார்க்கிறேன் மிக்க நன்றி அம்மா

கீதா