Blog Archive

Sunday, September 12, 2021

அக்கம் பக்கம் என்ன செய்தி..3

வல்லிசிம்ஹன்

நம் பிள்ளையார் நன்றே வந்தார்.
எல்லாக் குறைகளையும் கவலைகளையும்
தீர்த்து நோயில்லாப் பாதையில்
பயம் இல்லா வாழ்க்கையை 
அவரே தரவேண்டும்.

வெகு நாட்களாக வராதிருந்த முதுகுவலி
இப்போது மீண்டும் உன்னை விட்டேனா 
என்று பயம் காட்டிப் பார்க்கிறது.!
அது வரும் நேரம் எதனால், எந்த உணவுக் கோளாறினால்
என்று துல்லியமாகத் தெரிந்துவிடும்.

வாயுயும்,அசிடிடியும்  மார்பு, வயிறு, முதுகு
என்று பயணம் செய்து உண்டு இல்லை என்று
ஆக்கிவிடும்.
ராமா ராமா ஜபமும் பொறுமையும் 
தான் மீட்கவேண்டும்.

உடல் பாதிப்பு இருந்தால் பதிவு எழுத முடியாது.
 யூடியூபில் வரும் சில நல்ல 
விஷயங்களை இணைத்து விட்டு
பின்னூட்டங்களுக்கும் 
பதில் எழுதாமல் இருந்தால் மிக மரியாதைக் குறைவு,
சற்றே பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

லஸ் பிள்ளையார், வடபழனி முருகன், மாங்காடு காமாக்ஷி,
மயிலை கற்பகம்,மந்தைவெளி ஸ்ரீனிவாசர் தாயார், பாங்க் ஹனுமார் 
எல்லோரயும் மனதில் நினைத்துக் கொண்டு 
காலைப் பிடித்துக் கொள்கிறேன்.
'துதிப்போர்க்கு வல்வினை போம்
துன்பம் போம் .''அவனை நெஞ்சில் பதிப்போம்.

21 comments:

மாதேவி said...

அடடா வலி வந்துவிட்டதா. சற்று ஓய்வு எடுங்கள். இறைவன் அருளால் விரைவில் நலமாகும்.

KILLERGEE Devakottai said...

தங்களது உடல் நலத்துக்கு எமது பிரார்த்தனைகள் அம்மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. பிள்ளையார் உங்கள் இல்லத்தில் நன்றாக வந்தமைக்கு மகிழ்ச்சி. உங்களின் பல பதிவுகளுக்கு என்னால் வர இயலாமல் போனதற்கு மன்னிக்கவும்.

/எல்லாக் குறைகளையும் கவலைகளையும்
தீர்த்து நோயில்லாப் பாதையில்
பயம் இல்லா வாழ்க்கையை
அவரே தரவேண்டும்./

உண்மை.. நம் மனதாற வேண்டுதல் என்றுமே அது ஒன்றுதான்...கண்டிப்பாக அவனும் அதைத்தான் நம் விருப்பப்படி தந்தருளுவான். பாடல் காணொளி பகிர்வு நன்றாக உள்ளது. அண்ணனும், தம்பியும் நம் இன்னல்களை போக்கி, நம்மை நலம் பெறச் செய்வார்கள்.

உங்களுக்கும் முதுகு வலி என்றதும் மனதிற்கு கஸ்டமாக உள்ளது. தங்கள் உடல்நலனை பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளையார் நன்றாக வந்த வேளை உங்கள் உடல் உபாதைகளை நீக்கி விரைவில் நலம் பெறச் செய்வான். நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

மெதுவா உடம்பைப் பார்த்துக் கொண்டு நிதானமாக வந்து பதில் சொல்லுங்கள். முதுகுவலி இத்தனை கடுமை என்பது எனக்கும் ஓரளவு புரியும். எங்க பெண்ணிற்கும் இந்த முதுகெலும்புக்குக் கீழே உள்ள டிஸ்கில் ஜவ்வு கிழிந்து போய் அவஸ்தைப் படுகிறாள். ஒண்ணு மாத்தி ஒண்ணு படுத்தி எடுக்கிறது. விநாயகன் அனைவரது விக்னங்களையும் தீர்த்து வைக்கட்டும். பாங்க் அனுமனைப் பார்த்தே எத்தனை வருஷங்கள்?

வெங்கட் நாகராஜ் said...

கவனமாக இருங்கள் மா. நலமே விளையட்டும்.

நெல்லைத் தமிழன் said...

காலநிலைதான் முதுகுவலிக்குக் காரணம்னு நினைக்கிறேன்.

மெதுவா பதிவுகள் எழுதுங்க, பதில் போடுங்க வல்லிம்மா.

You will remain in our prayers.

ஸ்ரீராம். said...

முதலில் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா.  அப்புறம் பதிவுகள் எல்லாம் பார்க்கலாம்.  சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அதுவும் இந்த  போன்ற வாய்வு சமாச்சாரங்கள் நன்றாய் ஓய்வெடுத்தால்தான் முழுமையாக விலகும்.

Thulasidharan V Thillaiakathu said...

பின்னூட்டங்களுக்கும்
பதில் எழுதாமல் இருந்தால் மிக மரியாதைக் குறைவு,
சற்றே பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.//

அம்மா பரவாயில்லைம்மா. மெதுவாகப் பதில் கொடுங்க. ஒன்றும் அவசரமில்லை. உங்கள் உடல் நலன் தான் மிக மிக முக்கியம்.

அதை முதலில் கவனித்துக்கொள்ளுங்கள். விரைவில் சரியாகிவிடும் அம்மா.

கீதா

Bhanumathy said...

அசிடிடியினால் வரும் முதுகு வலியா? அல்லது வேறு ஏதாவது காரணமா? அங்கெல்லாம் நாமாக ஃபார்மசிக்குச் சென்று மருந்து வாங்கி போட்டுக் கொள்ள முடியாது என்பார்கள். விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

கோமதி அரசு said...

குளிர் ஆரம்பித்து விட்டதா?
குளிர் வந்தாலும் முதுகு வலி வரும் இல்லையா?

உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.

//எல்லாக் குறைகளையும் கவலைகளையும்
தீர்த்து நோயில்லாப் பாதையில்
பயம் இல்லா வாழ்க்கையை
அவரே தரவேண்டும்.//

அவரிடமே தான் வேண்டிக் கொள்ள வேண்டும். தருவார் அக்கா நம்புவோம்.

கோமதி அரசு said...

டி.எம். எஸ் பாடிய இந்த பழைய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

நலம் பெற வாழ்க.
வலி வந்து போகும். நட்புகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும்.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
இன்று வலி குறைந்தது. மன,உடல் வலி
ஒருவருக்கும் இறைவன் கொடுக்க வேண்டாம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
மிக மிக நன்றி மா.
உடலுக்கு ஒவ்வாததைச் செய்தால்
அது மறுக்கிறது. பத்தியம் ஒன்றே மருந்து.

உங்களுக்கு முதுகு வலி வந்த போதே
நினைத்தேன். இது கொடுமையானதாச்சே
வேறெதிலும் ஈடு படமுடியாமல்
வருத்துமே என்று.

நலம் பெறுங்கள்.
இருக்கும் வரையும் அதற்கப்புறமும் இறைவன்
நம்மையும் நம் குடும்பத்தையும்
நலமாக வைத்திருப்பான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமாக இருங்கள்.
வலி ஒன்று இருப்பதால் நமக்கும் முதுகெலும்பு
இருக்கிறது என்று தெரிகிறதோ:)

உங்கள் மகள் வலி இல்லாமல்
இருக்க வேண்டும். நம் பிரார்த்தனைகளே
அவர்களுக்கெல்லாம் ஆதாரம்.

அப்பாவுக்கும் இதே பிரச்ச்னை இருந்தது.
மிக மிக அவஸ்தைப் பட்டார்.
நேரம் தவறி உண்பது ஒரு பெரிய காரணம்.

இந்த வாய்வுப் பிரச்சினை பல வலிகளுக்கு
அடிப்படை.
சங்கடம் இல்லாத வாழ்வை இறைவனே
தரவேண்டும்.
இந்த மகத்தான அன்பு ஒன்றே நிரந்தரம்.
நன்றி மா,.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

ஓய்வும், உள்ளாராய்வும், பிரார்த்தனைகளும்
இப்பொழுது மிகத் தேவை.

எப்பொழுதும் தான்.
நீங்கள் எல்லோரும் இத்தனை கனிவுடன்
இருப்பதே பெரு மருந்து.
நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...


அன்பின் ஸ்ரீராம்,
நன்றி மா.

உண்மையே. நிமிர்ந்து உட்காருவதே பிரம்மப்
பிரயத்தனமாக இருந்தது.

நாக்கு செய்யும் தவறுகள் உடலின்
உள்ளத்தின் எல்லாவற்றையும் பாதிக்கிறது.

பின் வருந்திப் பிரயோசனம் இல்லை.
இது ஒரு எச்சரிக்கை. இனியாவது திருந்தி
இருக்க வேண்டும்.
எல்லோரும் நலமுடன் இருப்போம்.
வாயு நம்முடன் ஒத்துழைக்கட்டும்:)
வாயு குமாரனும் நம்முடன் இருக்கட்டும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

''பின்னூட்டங்களுக்கும்
பதில் எழுதாமல் இருந்தால் மிக மரியாதைக் குறைவு,
சற்றே பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.//"""

அன்பின் சின்ன கீதா,
நம் நட்புகள் அன்பே வடிவானவர்கள்.
அவர்களை நாம் அலட்சியப்படுத்துவது மிகத் தப்பு.

இணையம் எனக்கு எத்தனையோ
விதங்களில் நல்ல நட்புகளைக் கொடுத்திருக்கிறது.

இந்தக் கரிசனம் தான் என்னுடன் 16 வருடங்களாக
வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

உங்களை, கோமதியை, மாதேவியை
நெல்லைத்தமிழனை நேரில் கண்டதில்லை.
ஆனால்
இந்த வலைப் பயணம் எப்படி நம்மைப் பிணைக்கிறது
பாருங்கள் .
மிக நன்றி .ஜாக்கிரதையுடன் இருப்பேன்.
நீங்களும் நலமுடன் இருங்கள்.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
நலமுடன் இருங்கள்.
பேத்தி நலமா.

அசிடிட்டி தான் காரணம். ரணம் ஆற நாளாகிறது.
அன்புக்கும் ஆதரவுக்கும் மிக நன்றி மா.

அனைவரையும் இறைவன் காப்பான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
முதுகு வலிக்கு அபத்தியமான உணவே காரணம்.
இணையத்தில் நிறைய நேரம் செலவிடுவதும்
இன்னோரு காரணி.
இரண்டையுமே மட்டுப் படுத்தாவிட்டால்
நிவாரணம் கிடைப்பது அரிது.

இனிமேலாவது எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
நானும் இனி கவனமாக இருக்கிறேன்.
நன்றி ராஜா.