ஞாயிறு காலை நன்றே விடிந்தது.
சூரியனுக்கு வணக்கம் சொல்லி
வாசலின் செக்யூரிட்டி லாக்கை
அலார்ம் அணைத்துவிட்டுத் திரும்பும்போது
கதவுக்கு அப்பால் டமால் என்று ஏதோ விழும் சப்தம்
அமேஸான் பாக்கெட்டை வைத்து விட்டுப்
போகிறார்களா என்று பார்த்தால்,( they are always very gentle)
அமேஸான் டப்பா பக்கத்தில் ஒரு மீன்!!
மூச்சு விட்டுக் கொண்டிருந்தது.என் பதட்டத்தில், என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மீனின் கண்கள் என்னைப் பார்த்த வண்ணம்.
கண் முன்னே அது சலனமற்றுப் போனது.
மேலிருந்து ஒரு பறவை இதை நழுவ விட்டிருக்க வேண்டும்:(
பக்கத்தில் ஏரி இருக்கிறது.
கதவைத் திறந்தால் சத்தம் கேட்கும்.
மகளுக்கு யோசனையாகிவிடும். எல்லோரும் ஞாயிறு
தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒன்றுமே புரியவில்லை.நம் ஊராயிருந்தால் அதன் மேல் தண்ணீராவது விட்டிருக்கலாம்.
மனக் கலக்கத்தைப் போக்கிக் கொள்ள சபாஷ் மீனா
படம் பார்க்க ஆரம்பித்தேன்.
நம் கோமதி அரசு காப்பாற்றிய பறவைகள் நினைவு
வந்தது.நம் எங்கள் ப்ளாக் ஶ்ரீராமும் விதவிதமான உயிரினங்களைக்
காத்து இருக்கிறார்.
சிங்கம் இருந்திருந்தால் உடனே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து ,அந்த மீனைக் கையில் எடுத்துக்
காப்பாற்றி இருப்பார்.
அனைவரும் நலமுடன் இருக்க இறைவன்
24 comments:
மீனின் கண்கள் என்னைப் பார்த்த வண்ணம்.
கண் முன்னே அது சலனமற்றுப் போனது.//
அட பாவமே!
நாம் என்ன செய்ய முடியும் இடமும் சூழ்நிலையும் சரி இல்லாத போது.
மீன் பறவை கொத்தி கொண்டு போட்டது என்று நீங்கள் சொன்னதும் நான் எடுத்த படம் நினைவுக்கு வந்து விட்டது. கழுகு மீனை ஏரியில் பிடித்து மரத்தில் அமர்ந்து கொத்தி தின்பதை வித விதமாக காணொளி , படங்கள் எடுத்து இருந்தேன் காமிராவில், அது போய் விட்டது.
அலைபேசியில் எடுத்த படம் மட்டும் இருக்கிறது.
இறைவன் அந்த பறவைக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் செய்து விட்டானே ! காலையில்.
சார் கண்டிப்பாய் காப்பாற்றி இருப்பார்தான்.
நிலா படம் அருமை.
நம் கோமதி அரசு காப்பாற்றிய பறவைகள் நினைவு
வந்தது//
நான் என்ன செய்தேன்! அவைகளுக்கு இறைவன் இன்னும் வாழ விதித்து இருந்தான்.
சபாஷ் மீனா படம் உங்கள் மனக் கலக்கத்தை போக்கி இருக்கும். நல்ல படம். பாடல்கள் நன்றாக இருக்கும்.
வணக்கம் சகோதரி
ஞாயறு நன்றாக விடிந்தமைக்கு மகிழ்ச்சி சகோதரி. ஆனால், எதிர்பாராமல் வாசலில் வந்து விழுந்த அந்த மீனைப்பார்த்து உங்களுக்கு மனச்சலனம் ஏற்பட்டதை இறைவன் தடுத்திருக்கலாம். நம் மனக்கவலைகளை மாற்ற வேறு நிகழ்வுகள் ஏதும் பார்த்துத்தான் மாற்ற வேண்டும். என்ன செய்வது? நடப்பது என்றுமே நடந்துதானே தீரும். உலகில் அனைத்து ஜீவராசிகளின் வாழ்வும், முடிவும் "அவன்" கையில்தானே உள்ளது. உங்களின் இரக்க சுபாவ எண்ணத்திற்கு அந்த ஜீவராசிக்கு நல்ல பிறப்பாக இறைவன் அருளட்டும்.
சபாஷ்மீனா படம் முழுவதுமே நல்ல நகைச்சுவைதான்.சிவாஜியும், சந்திரபாபுவும் நன்றாக நடித்திருப்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் என்ன உயிரினத்தைக் காத்து இருக்கிறேன் என்று யோசித்துப்பார்த்தேன்! மீன்களை சாப்பிடுவதில்லை என்பதால் நிறைய மீன்களை காத்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்! ஏஞ்சல்தான் இதில் ஸ்பெஷலிஸ்ட்.
பாவம்.. அதன் கடைசி வினாடிகளில் ன்ன நினைத்திருக்குமோ... அதெல்லாம் நினைக்குமோ? யு டியூபில் சில நாலுகால் செல்லங்கள் இப்படி துடிக்கும் மீன்களைத் தண்ணீரில் விட்டுப் பார்த்திருக்கிறேன்.
ஆமாம் கோமதி மா.
அப்படியே 8 வருடங்கள் கண்முன்னே கழன்று ஓடி விட்டது.
மறக்க முடியாத கணங்கள்.
இறைவன் துணையிருக்கட்டும்.
பறவை நழுவ விட்டதை, பூனை எடுத்துச் சென்று விட்டது. சிசிசி டிவியில்
பார்த்தோம்.
சார் கண்டிப்பாய் காப்பாற்றி இருப்பார்தான்."
ஆமாம் அவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
சட்டென்று நொடியில் செய்து விடுவார்.
அந்த மதுரைப் பறவைக் காட்சிகள்
வலைப்பக்கத்தில் இருக்குமே மா.
அவைகள் சரியான இடத்தை அடைந்ததால் காப்பாற்றப்பட்டன.
அதுவும் ஒரு வரம் தான் மா.
என்றும் வாழ்க வளமுடன்.
மீனின் கண்கள் என்னைப் பார்த்த வண்ணம்.
கண் முன்னே அது சலனமற்றுப் போனது.//
ஆமாம் அம்மா இது போன்ற தருணங்கள் நம்மை மிகவும் வேதனை அடையவைக்கும்.
நானும் மகனும், பூனை, நாய், ஆமை, புறா, அணில், மீன்,(இது போன்று) வண்ணத்துப் பூச்சி, தட்டாம் பூச்சி!!!!! என்று காப்பாற்றிய நினைவுகள். மீனை உடனே பக்கெட் தண்ணீருக்குள் போட்டு விடுவோம் அப்புறம் ஒரு பாலித்தின் கவரில் எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் குளம் அல்லது நீர் நிலைகளில் விட்டுவிடுவது வழக்கம். இரு முறை அப்படி ஆகியிருக்கிறது. ஒரு முறை காப்பாற்ற முடியவில்லை. நாங்கள் எடுக்க நினைக்கும் முன் வேறு ஒருவர் அதை சமைக்க எடுத்துச் சென்று விட்டார். எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை!
மற்ற இரு தடவை மீனைப் போட்டு விட்டு காகம் அங்கேயே தவமிருக்கும், அல்லது பூனை ரெடியாய் இருக்கும்...
சிங்கம் இருந்திருந்தால் உடனே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து ,அந்த மீனைக் கையில் எடுத்துக்
காப்பாற்றி இருப்பார்.// ஆமாம் ல!!!
ஆஅமாம் அம்மா கோமதிக்கா, ஸ்ரீராம், கீதாக்கா எல்லாருமே காப்பாதிருக்காங்க!
கீதா
நாம் காப்பாற்றுகிறோம் என்று நினைத்தாலும் அதற்கும் நேரம் உண்டே!. நாம் செய்வது எதுவுமே இல்லை. அம்மா அதை நினைத்துக் கவலைப்படாதீங்க. எதுவும் நம் கையில் இல்லையே. பறவைக்கான உணவு அன்று வேறு எதற்கேனும் உணவாகியிருக்கும்!
கீதா
பறவை நழுவ விட்டதை, பூனை எடுத்துச் சென்று விட்டது. சிசிசி டிவியில்
பார்த்தோம்.//
ஓ பாத்தீங்களா பூனைக்கான உணவு போலும் அன்று.
கீதா
மீன் என்றால் கையில் எடுத்து நீரில் விடுவதற்குள்ளாக வழுக்கிக் கொண்டு விழுந்துடாதோ? என்னவோ போங்க! கண் முன்னால் ஒரு உயிர் போனது என்றால் மனதில் வருத்தமும், வேதனையுமாகத் தான் இருக்கும். என்ன செய்ய முடியும். அதன் விதி இப்படி எழுதி இருந்திருக்குப் போல. சபாஷ் மீனா! மறக்க முடியாத படம். சந்திரபாபுவின் ஆட்சி தான் படம் முழுவதும். ரசித்துப் பார்த்திருக்கேன்.
இப்போது மீனின் நினைவு எங்களுக்குள்ளும்..சிங்கத்தின் அருமையும்..
நகைச்சுவைக் காட்சிகள் ரசித்தேன் அம்மா..
கீதா
எதுவுமே ஏதேனும் காரணத்தோடுதான் நடக்கிறது.
இருந்தாலும், நம்மால் காப்பாற்ற முடியவில்லையே என்ற எண்ணம் மட்டும் மனதில் தங்கிவிடும்.
அன்பு ஸ்ரீராம், எனக்கென்னவோ உங்கள் வீட்டைத் தேடி நாலு கால் செல்லங்கள் வந்த மாதிரி
நினைவு.
அதுதான் சொன்னேன்.
மீனுக்கு நினைக்கும் சக்தி உண்டா என்று தெரியாது.
அதற்கு கண் தீக்ஷண்யம் கண்டிப்பா உண்டு.
இத்தனைக்கும் நான் கண்ணாடி வழியாகத் தான்
பார்த்தேன்.
படம் எடுக்கக் கூட மனசில்லை. ஐந்தாறு கணங்கள்.
பாவம் .
அன்பின் கமலாமா,
ஆமாம் நாட்கள் எல்லாமே நல்ல நாட்கள்
தான்.
உணவுச் சங்கிலியில் ஒரு லிங்க் நம் வீட்டு வாசலில்
விழுந்து மறுபடி இன்னோருவருக்கு இரையாகி விட்டது.
அது வீட்டுப் புல் தரையில் விழுந்திருந்தால்
சத்தம் வந்திருக்காது.
வாசல் மரப்படிகளில் விழுந்ததால் அந்த சத்தம்.
யார் நிலைக்கு யார் பொறுப்பு. ஆனால் அதன் மேல்
தண்ணீர் தெளிக்கக் கூட இயலாமல்
நிற்க நேரிட்டதே என்று அங்கலாய்ப்பு.
ஆமாம். சந்திரபாபுவைப் பார்த்ததும் கொஞ்சம் மனம்
லேசானது. நம்மை நாமே சமாதானப்
படுத்திக் கொள்ளும் கலையை இறைவன்
வலுக்கட்டாயமாகக் கொடுத்து விட்டான்.
புரிதலுக்கு மிக நன்றி மா.
Dear GeethaRengan,
நானும் மகனும், பூனை, நாய், ஆமை, புறா, அணில், மீன்,(இது போன்று) வண்ணத்துப் பூச்சி, தட்டாம் பூச்சி!!!!! என்று காப்பாற்றிய நினைவுகள். மீனை உடனே பக்கெட் தண்ணீருக்குள் போட்டு விடுவோம்////////////////////////////////////அன்பின் கீதாமா,
இப்படிப் பட்ட கருணை உள்ளங்களால் தான்
உலகமே வாழ்கிறது. நற்செயல்கள் என்றும் வீண் போவதில்லை.
மகனும் உங்கள் குடும்பமும் நன்றாக
இருக்கும்.
வாய்பேசாத உயிர்களிடம் நம் நெஞ்சம் என்றும் இளக வேண்டும்.
மகள் வீட்டு வாசல் கண்ணாடி போட்ட பெரிய நிலையில் பொருந்தும்
போது செக்யூரிட்டி சப்தமிடும்.
அந்தக் கவலையைத் தடுக்க நினைத்தேன்.
இயலாமை நம்மை எந்த நிலையில்
வைக்கிறது பாருங்கள்.:(
கீதா சாம்பசிவம், ஏஞ்சல், நீங்கள், ஸ்ரீராம்,கோமதி அரசு எல்லோருமே
வாய் பேசாத ஜீவன்களிடம்
மிகக் கருணையோடு இருந்திருக்கிறீர்கள்.
அதை ஒரு இயல்பாக ஏற்றுக் கொள்வதே மிகப் பெரிய கொடை.
என்னால் மீனைத் தொடுவது
என்பது பயம் தரும் உணர்வு. துள்ளிக் குதிக்கும்
இல்லையா.
நல்ல மோக்ஷத்தை அடையட்டும்.
மிக நன்றி@ கீதா ரங்கன்.
அன்பின் கீதாமா,
''மீன் என்றால் கையில் எடுத்து நீரில் விடுவதற்குள்ளாக வழுக்கிக் கொண்டு விழுந்துடாதோ? என்னவோ போங்க! கண் முன்னால் ஒரு உயிர் போனது என்றால் மனதில் வருத்தமும்,''
அச்சோ அதை ஏன் கேட்கிறீர்கள்:((
நல்ல என் கையகலமும் நீளமுமாக இருந்தது.!
உலகத்தில் எத்தனையோ நடக்கிறது.
ஒவ்வொன்றும் நம் கண்களில்
படாமல் இறைவன் காக்கிறான்.
நம்மால் தாங்க முடியாது என்று அவனுக்கே தெரியும்.
என் பழைய நினைவுகள், அரோவானா மீன், மதுரை மீனாக்ஷி
எல்லோரும் அந்த ஒரு கணத்தில்
என் பிரார்த்தனைகளில் வந்து போனார்கள்.
புரிந்து கொண்டதற்கு மிக நன்றி மா.
சபாஷ் மீனாவுக்கும் சந்திர பாபுவுக்கும்
மனம் நிறை நன்றி.
அன்பின் ரமணி ஜி,
ஓஹோ:(
என் எண்ணங்கள் உங்களையும்
பாதித்ததா.
ஆமாம் எழுத்துகள் அதைச் செய்யும்.
மனம் இப்படியான உணர்வுகளைத் தாண்டி வர
நேரம் எடுக்கிறது.
நீங்கள் வந்து கருத்திட்டது நல்ல உணர்வு. நன்றி மா
அன்பின் சின்ன கீதாமா,
நான் பாட்டுக்கு என் சோகக் கதை கேளு தாய்க்குலமே!
என்று பாடுவது
அவ்வளவு நல்லதாகப் படவில்லை.
அதனால் முதலில் சந்திரபாபுவை அழைத்து விட்டேன்.
மிக மிக நன்றி மா.
அன்பின் முரளிமா,
ஆமாம், நீங்கள் முன்பு இட்ட பின்னூட்டங்கள் நினைவில் இருக்கிறது.
அப்படியே என் மாமாக்களையும் தம்பிகளையும்
கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள்.
ஏன் சித்தப்பா,அப்பா கூட அப்படித்தான்.
அவசியத்துக்கு மேல் ஒரு தம்படி
செலவு செய்யக் கூடாது என்பதில் மிகக் கவனம்.
ஆனால் எல்லோருமே வாழ்வில்
பெரிய நிலைமைக்கு வந்து விட்டார்கள்.
கீழ் நத்தம் ----பாளையங்கோட்டை நடை
இப்போது உங்களுக்கு வலு கொடுக்கும்.
இரண்டே இரண்டு யூனிஃபார்ம்களோடு ஐஐடி வரை சென்றான்
பெரியதம்பி. சின்னத்தம்பியும் தான்.
எத்தனை பெரிய நிலைக்கு வந்தார்கள் என்பதில் எனக்கு மிகப்
பெருமை.
அன்பின் முரளி மா,
ஆமாம் காரண காரியங்கள் நமக்குப் புலப்படுவதில்லை.
ஏழாம் அறிவு இருந்தால் தேவலை.
நன்றி மா.
Post a Comment