கிஷோர் குமார் அவர்களின் குரலை
விமரிசிப்பது/வர்ணிப்பது சுலபம்
இல்லை.
அதை ரசிப்பதே நம் வேலை.
வாழ்க இசை,. நம் வாழ்க்கையில்
பல குரல்கள்
நம்மை அமைதியுறச் செய்கின்றன.
இன்றும் பாட்டுக் கேட்ட படியே தான்
உறங்கப் போகிறேன்.
முருகன் பாடல்கள் துணை. 30 நிமிடங்களில்
உறக்கம் வந்துவிடும்:)
கணினியில் உட்கார, எழுத சி.எஸ் ஜயராமனில் ஆரம்பித்து, சீர்காழி, சுசீலா
அம்மா, டி எம் எஸ் ,திருச்சி லோகனாதன்
என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் இசை.
காதையும், கேட்கும் திறனையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி,.
10 comments:
நான் பயங்கர கிஷோர்குமார் ரசிகனாயிருந்தாலும் சௌதாகர் படத்தில் இந்தப் பாடலைவிட மற்ற இரண்டு பெண்குரல் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்!
மூட்டைப்பூச்சி பாடல் அந்தக் காலத்தில் ரொம்ப பேமஸ். மன் சாஹே கீத், மனோரஞ்சனின் கேட்க ஆர்வமாயிருக்கும்.
ஏக் லட்க்கி பீகி பாடல் எவர் கிரீன்...
பிரான் எவ்வளவு இளமையாயிருக்கிறார்! இந்தப் பாடல் கேட்டதில்லை, அவ்வளவு நன்றாகவும் இல்லை!
சலா ஜாத்தா ஹூன் கிஷோர் குரலில் அருமையான பாடல். சரணத்தில் அவர் வரிகளை முடிக்கும் விதம் ரசனை. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாயிருக்கும். ஆர் டி பர்மன்.
ஆமாம் அம்மா நல்ல இனிமையான இசை மனதை நன்றாக அமைதி கொள்ளச் செய்து தூங்க வைத்துவிடும்.
பாடல்கள் நன்றாக இருக்கின்றன. வழக்கமாகச் சொல்வதுதான் இப்போதுதான் கேட்கிறேன்!!!
கீதா
பாடல்கள் கேட்டேன். இனிமை.
ஏக் லடுக்கி பாடல் , படம் எல்லாம் நன்றாக இருக்கும் பார்த்து இருக்கிறேன்.
கடைசி இரண்டு பாடல்கள் youtube போய் கேட்டு விட்டேன்.
இசை மனதை அமைதி படுத்தும், மகிழ்விக்கும், ஆறுதல் தரும்.
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்தான்.
அன்பின் ஸ்ரீராம்,
யொடல்லிங்க் முறையை நம் சந்த்ரபாப்ய்வும்,
கிஷோர் குமாரும் செய்திருப்பது மிகவும் சிறப்பு.
சௌதாகர் படப் பாடல்களும் நூதனின் நடிப்பும் மிக
அற்புதம். எத்தாய்யோ கி. குமார் பாடல்களில் அதிகம்
விவித் பாரதியில் கேட்டவைகள் தான்
எப்பொழுதும் காதில் ஒலிக்கும்:)
அதனால் அவைகளைத் தேடிப் பதிந்தேன்.
எங்க மகள் கூடக் கேட்பாள். ஏம்மா கேட்ட பாடலையே
கேட்கிறாய் என்று.
செக்கு மாடு தான் இசையைப் பொறுத்தவரை. வந்து கேட்டு
ரசித்ததற்கு மிக நன்றி மா.
அன்பின் கீதாமா,
அதனால் என்ன. நான் உங்கள் பர்சனல் வானொலி நிலையம்
நடத்துவதாக நினைத்துக் கொள்கிறேன்.:)
எத்தனையோ வேலைகளுக்கு நடுவில் நீங்கள் எல்லாம்
பதிவுகள் பக்கம் வருகிறீர்கள்.
படிப்பு, யூடியூபுக்கு நடுவில் நான் வேலைகள்
செய்கிறேன்....அதுதான் வித்தியாசம்:)))
நன்றி ராஜா.
யொடெலிங்... இந்த வார்த்தை நேற்று எனக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை. சற்று யோசித்துவிட்டு விட்டுவிட்டேன்! எஸ் பி பி கூட சில பாடல்களில் அப்படி செய்திருக்கிறார். உதாரணத்துக்கு 'மார்கழி பனியில் மயங்கிய நிலவில்' பாடல்!
ஆமாம் மா ஸ்ரீராம்.
பாலு சார்க்கு எதுதான் வராது.?? மாயா ஜாலம்
செய்பவர் அவர்.
மார்கழிப் பனியில் மிக அற்புதமான
வளைவு நெளிவுகளோடு
ஏற்ற இறக்கங்களுடன் அமைந்த பாடல்.
யொடெல் ஆல்ப்ஸ் மலைகளில்
ஆடு மாடுகளைத் திரட்டி அழைத்து வருவதற்கும்,
மேய்ப்பவர்களிடையே சங்கேத மொழியாகவும்
பயன் பட்டதாகச் சொல்வார்கள்,
அதிலிருந்து இசைக்கும் வந்து விட்டது.
நன்றி மா.
//ஆடு மாடுகளைத் திரட்டி அழைத்து வருவதற்கும், மேய்ப்பவர்களிடையே சங்கேத மொழியாகவும் பயன் பட்டதாகச் சொல்வார்கள், அதிலிருந்து இசைக்கும் வந்து விட்டது.//
ஓ... அதற்கு இப்படி ஒரு பின்னணி இருக்கிறதா... இப்போது தெரிந்து கொண்டேன் அம்மா.
ஆமாம் ஶ்ரீராம். ஸ்விஸ் சுற்றுப் பயணங்களின் போது அங்கே கேள்விப் பட்டது மா.
அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன். நீங்கள் இந்தப் பாடல்களை முன்பே கேட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன் சரியாகிவிட்டது.
நமக்கு எல்லாம் விவித பாரதி ஒரு வரம்.
தொலைக்காட்சியிலும்
பாடல்களும் படமும் வந்து கொண்டே இருக்கும்.
இறைவன் கொடுத்த வரம் இசை.
எந்த மொழியிலும் கேட்டு இன்பம் ,அமைதி பெறலாம்.
பின்னூட்டத்துக்குப் பதில் எழுத தாமதமாகி விட்டது மா.
வாழ்க வளமுடன்.
Post a Comment