Blog Archive

Saturday, September 04, 2021

சில பல கானங்கள்


வல்லிசிம்ஹன்
நமக்கு ஒரு சில பாடல்கள் மட்டும் 
மனதின் முன்னணியில் நின்று காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன
என்று சில நேரம் யோசிப்பதுண்டு.

நல்ல எழுத்துகள்  அகத்தில் பதிவது போல
எப்பொழுதோ கேட்ட  இசை
திடீரென்று சிந்தையில்  நடமாடும். 
இது வரை அதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்வதில்லை.
இதற்கெல்லாம் ஆதி காரணங்களை
ஆராயப் பலர் இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நெடு நாளைய தோழி
சொன்னதைப் போல ''இன்றைய நன்மைகளை
அனுபவியேன் ரேவதி. !! யேன், எப்படி என்று கேள்வி கேட்டு
இந்தக் கணத்தை விட்டு விடாதே.''

எப்பொழுது  பார்த்தாலும் விசாரம், விசாரணை,
தேடல் என்றில்லாமல்  அந்தந்த நொடியைக்
கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.:)




9 comments:

ஸ்ரீராம். said...

கடைசி பாடல் இதுவரை கேள்விப்பட்டதில்லை.  நானும் இந்த கணத்தில் வாழவேண்டும் என்றுதான் நினைப்பேன்.  அப்படிதான் இருந்திருக்கிறேன்.  அது முப்பத்தைந்து வயது வரை கூட சாத்தியம்!!!  பின்னர் நடுவில் ஒரு சிறு இடைவெளி.  பின்னர் அறுபது அல்லது எழுபது வயதுக்கு மேல் லபிக்கலாம்!  ஆனால் பாடல்களை ரசிப்பதில் குறையே வைத்ததில்லை!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
ஆமாம் மா. திருமணம் ஆகிறவரை நம் விருப்பங்கள் நம்
கையில். பிறகு குடும்பத்தின் பொறுப்புகள்
நம்மை வேறு யோசனை இல்லாமல்
செய்துவிடும்.
இப்பொழுது நான் இந்த நொடியை அனுபவிக்கணும்
என்று நினைப்பது,
பல்வேறு விசாரங்கள் மனதை சிந்திக்க வைப்பதால்.
தோழியிடம் பேசிய போது
அவளுக்கும் எத்தனையோ கவலைகள்
இருந்தாலும் , தனக்கென்று நேரம் ஒதுக்கி
தன் சிந்தனைகளை ஒழுங்கு செய்து கொள்கிறாள்.

என் பொழுது இசையில் தான் செல்கிறது.
உங்களுக்கும் இசை மிகப் பிடித்தது.
கடைசிப் பாட்டு வணங்காமுடி படத்தில் வருவது.
நல்ல பாடல்கள் நிறைய இருக்கின்றன.
நன்றி மா.

KILLERGEE Devakottai said...

மூன்றாவது பாடல் இன்றுதான் கேட்கிறேன் அம்மா

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... அருமையான பாடல்கள்...

Geetha Sambasivam said...

கடைசிப் பாடல் ராஜசுலோசனா ஆடுவது அம்பிகாபதி படமோ? படம் பார்க்கலை. ஆனால் பாடல் கேட்டிருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,.
அது வணங்காமுடி படம். . நீங்கள் எல்லாம் பிறப்பதறகு 20 வருடங்கள் முன் வந்தது மா.

பாடல்களைக் கேட்டதறகு மிக நன்றி. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

அம்பிகாபதியிலும் ராஜசுலோசனா உண்டு. வசந்தமுல்லை பாடல் வருமே.
இது வணங்காமுடி படம் மா.

வெங்கட் நாகராஜ் said...

//யேன், எப்படி என்று கேள்வி கேட்டு
இந்தக் கணத்தை விட்டு விடாதே// நல்ல அறிவுரை.

பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன் மா.

நல்ல பாடல்கள்.