செப்டம்பர் 3.
ஒரு முக்கிய நாள். முதல் பேரன் எங்கள் வாழ்வில்
வருகை புரிந்த நாள்.
அன்பின் விஷ்ணு என்றும் ஆனந்தத்துடன்,ஆரோக்கியத்துடன்
வள வாழ்வு பெற இறைவன் கருணை செய்வான்.
மற்ற செய்திகளில்
இங்கே நேற்று வடகிழக்கு மாகாணங்களில்
அடித்த சூறாவளி.
நம் பக்கம் வந்தால் நம் பயத்தோடு போகும்.
நம் உறவினர்கள் அங்கே இருப்பதால்
நேற்று எல்லோரையும் தொடர்பு கொண்டு கிடைக்காமல்
கவலைப் பட்டுப் பொழுது கழிந்தது.
சாயந்திரம் தான் அவர்களிடம் இருந்து
பாதுகாப்பான இடங்களுக்கு வந்து விட்டோம்
என்ற செய்தி கிடைத்தது. இறைவனுக்கு நன்றி.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்பொழுதும் சாலைகளில் ஓட்டிச் செல்லும் போது,
சிங்கம் ரூல்ஸ் ராமானுஜம் தான்.
ஒரு சட்டத்தையும் மீற மாட்டார். அவருக்கு இண்டர் நேஷனல்
லைசென்ஸ் இருந்தாலும்
இந்த ஊர் வேகத்தைப் பார்த்து
இங்கேயும் லைசென்ஸ் எடுக்க முயற்சித்து
மனம் மாறிவிட்டார். எல்லோரும் ஒரே மாதிரி ஓட்டுவதில்லை
என்ற குறை அவருக்கு.
அதை நிரூபிப்பது போல அடுத்த வீட்டுப் பெண்
ஒரு அரசு வேலையில் இருப்பவர்
கடந்த திங்கள் மாலை சொன்ன விஷயம்.
அவள் அலுவலகத்திலிருந்து திரும்பும் போது சிக்னல்
பச்சை காட்டியதும்
இந்த ரோடில் ரைட் டர்ன் எடுக்கும் போது
எதிர் பக்கத்திலிருந்து வேகமாக வந்த வண்டி இவள் பக்கத்தில்
வேகமாக மோதி நின்றிருக்கிறது.
என்ன நடந்தது என்று தெரியவில்லை அவளுக்கு.
எமெர்ஜென்சி தடுப்புகள்(pillows) வெளிவந்து காப்பாற்றி இருக்கின்றன.
அடுத்த நிமிடம் ஆம்புலன்ஸ் வந்து பாரா மெடிக்ஸ் அவளைக்
காரில் இருந்து வெளியே கொண்டு வந்து,
அவள் கணவருக்கு சொல்லி,
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.
அங்கு பரிபூரண செக் அப், ஸ்கான் எல்லாம் செய்து
அடுத்த நாள் காலை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அவள் பேசும்போது இன்னும் அவள் தெளியவில்லை.
நேற்றுதான் உடல் நடுக்கம் நின்றிருக்கிறது.:(
மோதினானே அந்த டிரைவரை அர்ரெஸ்ட்
செய்துவிட்டார்களா என்று கேட்டேன்.
சிரிக்கிறார்கள்.
அவனுக்கு வார்னிங்க் கொடுத்து லைசென்ஸ்
தடை செய்யப்படும். கைது எல்லாம் செய்ய மாட்டார்கள்.
அவளுக்குத் தான் ஆபத்து இல்லையே
என்று சொன்னார்கள்.
அவள் வண்டி வொர்க்ஷாப்புக்குப் போனது, சரியாகி வர
இரண்டு வாரம் ஆகுமாம்.
ஒரு பக்கமே சேதமாகி இருக்கிறது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்போது பெண் வண்டியை எடுக்கும் போது நானும் சென்று விடுகிறேன்.
பள்ளியிலிருந்து பேரனைக் கொண்டுவிட,அழைத்து வர:)
அத்தனை குழந்தைகளையும் தினமும் காண்பது
நல்ல மகிழ்ச்சி தரும் அனுபவம்.
வண்டியை விட்டு இறங்குவதில்லை.
பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள்
ஓட்டும் வண்டிகள் பிரமிப்பைத்
தருகின்றன. தெளிவாகத்தான் ஓட்டுகிறார்கள்.
இறைவன் அவர்களை மற்ற வேக ஓட்டுனர்களிடம் இருந்து காக்க வேண்டும்.
இன்னும் வேறு செய்திகளுடன் பிறகு
பார்க்கலாம். அனைவரும் வளமாக வாழ இறைவன் அருள வேண்டும்.
15 comments:
பேரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நானும் இங்கு நியூஜெர்சியில் இருக்கும் நண்பர்களுக்கு பேசினேன். மழையில் மருமகன் மாட்டிக் கொண்டார், தண்ணீர் வடித்து வீட்டுக்கு வர இரண்டு நாள் ஆச்சு உணவு கிடைக்கவில்லை என்றார்கள்.
ஒருவர் வீட்டில் பேஸ் மட்டம் ழுழுவதும் தண்ணீர் வந்து விட்டது என்றார்கள்.
எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும் இறை அருளால்.
உங்கள் உறவினர்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி.
//எப்பொழுதும் சாலைகளில் ஓட்டிச் செல்லும் போது,
சிங்கம் ரூல்ஸ் ராமானுஜம் தான்.//
என் கணவரும் அப்படித்தான்.
//எல்லோரும் ஒரே மாதிரி ஓட்டுவதில்லை
என்ற குறை அவருக்கு.//
சாரும் அப்படியே தான் சொல்வார்கள்.
மதுரை மக்களை.
பக்கத்து வீட்டு பெண் உடல் நடுக்கம் சரியாக வேண்டும்.
நானும் முன்பு பள்ளிக்கு போவேன், பேரனை கொண்டு விடும் போது. இந்த முறை முதல் நாள் பள்ளிக்கு போனேன். காரிலிருந்து பெற்றோர்கள் இறங்காமல் கொண்டு விட்டு விட்டு போக வேண்டும் என்பது பள்ளி நிர்வாகம் சொல்லி விட்டார்கள்.
//பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள்
ஓட்டும் வண்டிகள் பிரமிப்பைத்
தருகின்றன. தெளிவாகத்தான் ஓட்டுகிறார்கள்.
இறைவன் அவர்களை மற்ற வேக ஓட்டுனர்களிடம் இருந்து காக்க வேண்டும்.//
நாம் வேண்டிக் கொள்வோம்.
விஷ்ணுவுக்கு எங்கள் வாழ்த்துகளும்.
மறுபடியும் மறுபடியும் பயமுறுத்தும் புயல் மழைகள்.... பத்திரமாக இருங்கள்.
அங்கேயே இப்படி வண்டி ஓட்டினால் இங்கே? தினசரி சிஞாளை மதிக்காமல் பறக்கும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேனே...
பேரனைக் கொண்டுவிட அழைத்து வர நீங்களும் சென்று வருவது மனதுக்கு ஒரு மாறுதலைத் தரும். உற்சாகமாக இருங்கள்.
அன்பின் மாதேவி இனிய காலை வணக்கம். வாழ்த்துகளுக்கு மிக நன்றிமா.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.
உங்கள் ஸாரும் அப்படியா. எல்லாவற்றையும்
கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
இவருக்கும் தாறுமாறாக ஓட்டுகிறவர்களைப்
பார்த்து ரொம்பக் கோபம் வரும்.
என்ன செய்யலாம். வெளியே வண்டி எடுப்பதைக் குறைத்துக் கொண்டேன்.
நியூ ஜெர்சி வெள்ளங்களைக் கண்டு மனம் மிக
சங்கடப் பட்டது நேற்று.
தம்பி மகள் அங்கே இருக்கிறாள். தொலைபேசியும் எடுக்கவில்லை.
மாலையில் தான் சொன்னாள். சௌக்கியம் என்று.
இன்னும் இருவர் தங்களுக்குச் சங்கடம் இல்லை என்றார்கள்.
நீங்கள் சொல்லி இருப்பது கவலை தருகிறது.
பொருட்களை எப்படி மீட்பார்களோ. சில
இடர்களுக்கு இன்ஷுரன்ஸ் கிடையாதாமே:(
பாவம் பா.
வேறெங்கும் வெளியே செல்லாத நிலையில்
பள்ளிக்குச் சென்று வருவது பிடிக்கிறது.
இந்த மாணவர்கள் ஓட்டும் வண்டிகள் பெரிது பெரிதாக
இருக்கின்றன.
இளவயதுப் பசங்க .ஆனாலும் விரைவாகச் செல்வதில்லை.
இறைவன் எப்போதும் துணை இருக்க வேண்டும்.
மிக நன்றி மா.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா கோமதி.
அன்பு ஸ்ரீராம், இனிய காலை வணக்கம் மா.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி.
நம் ஊர்ச் சாலைகளில் அவர் அலுத்துப் போனதால்
இங்கும் மிக வேகம் எடுக்கும் வண்டிகளைக் கண்டு
மனம் சலிப்படைவார்.
ஆமாம் நம் ஊரில் சிக்னல்களை யாரும் மதிப்பதில்லை.
மனித மனம் கட்டுப்பாடில்லாமல் போவது
போல அவர்கள் வண்டிகளும் விரைகின்றன.
பல இயற்கைச் சேதங்கள் க்ளைமேட் கண்டிரோல் இல்லாமல் நடக்கின்றன.
நல்ல சேதம் அங்கே.
இப்படி ஒரு மழையை எதிர்பார்க்காத , நெருக்கடி நிறைந்த ஊர்
அது.
இறைவன் தான் காக்க வேண்டுமப்பா.
பேரன் விஷ்ணுவுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். மழையும், வெள்ளமும் எங்கே பார்த்தாலும் உயிர்ச்சேதங்களைக் கொண்டு வந்துவிட்டன. அநேகமாய் உலகின் எல்லாப் பாகங்களிலும் மழை/வெள்ளம்.
பேரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
அன்புள்ள வல்லிம்மா, தங்கள் பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அங்கே நிலவும் மழை பாதிப்புகளை செய்திகளில் கண்டோம். அங்கு (நியூஜெர்ஸி ) இருக்கும் என் (கணவரின்)அண்ணாவும், அண்ணியும், மகளும் நலமுடன் இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்தோம். அண்ணாவும் அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர காலை 5 மணி ஆகிவிட்டதாய் சொன்னார்கள்.
அன்பின் கீதாமா,
தாமதமானால் என்னப்பா. உங்கள் ஆசிகள் இந்தக் குழந்தைகளுக்கும் என் ஆசிகள் உங்கள்
பேரக்குழந்தைகளுக்கும் உண்டு.
உங்கள் பேத்திக்கும் இதே வயதுதானே.
எல்லோரும் சர்வ மன, உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
நமக்கு வேண்டும் என்பது அதுதான்.
இந்த ஊர்ச் செய்திகள் இப்படித்தான் மழை சூறவளி என்று
செல்கின்றன.
இன்னும் ஒன்று வந்து கொண்டு இருக்கின்றதாம்.
உயிர்ச் சேதம் இல்லாமல் இருக்கட்டும்.
நன்றி மா.
அன்பின் தனபாலன்
மிக நன்றி மா. எல்லோருடைய ஆசிகளும் அவனுக்கு நன்மை செய்யும்.
அன்பின் வானம்பாடி,
வாழ்த்துகளுக்கு
மிக நன்றி மா.
தங்கள் உறவுகளும் இங்கே இந்தச் சூறாவளியிலிருந்து
தப்பியது மிகப் பெரிய நிம்மதி.
அந்த ஒரு மணி நேரக் கடும் மழை எண்ண முடியாத சேதங்களை விளைவித்திருக்கிறதைப்
பார்த்தால் மனம் மிக வேதனைப்
படுகிறது.
இறைவன் என்றும் துணை இருக்க வேண்டும்.
உங்கள் பேரன் விஷ்ணுவிற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். செய்திகள் தொகுப்பு நன்று. அவ்வப்போது இப்படி பகிர்ந்து கொள்ளுங்கள் மா.
Post a Comment