Friday, September 24, 2021

கண்ணிற்கினிய காட்சிகள்.வல்லிசிம்ஹன்❤


இணையத்தில் கண்களில் பட்ட காட்சிகள். இவை எல்லாம் ஓவியங்கள் என்று என்னால்
நம்பமுடியவில்லை.
அப்படியே அச்சாகவா வரைவார்கள். அதுவும் அந்தத் தென்னைமரம்

ஓலைகள் பளிச்சிட, கீற்றுகள் அளவோடு 
பிரிந்திருக்க  மிக மிகச் சிறப்பு.
 நான் எல்லா இடங்களையும் காமிராவில் 
படங்களாக அடைத்தபடி இருந்தே. 

சின்னக் கையளவு  காமிராவிலிருந்து 
வீடியோ காமிராவரை  பிள்ளைகளும் ,பெண்ணும்
வாங்கிக் கொடுக்க ரோல் ரோலாகப் படம் எடுத்து 
ஸ்டூடியோவில் கொடுத்துப் படமாக்கி வீடு நிறைந்தது.

பிறகு கணினியில்  ஏற்றப் பழகிக் கொன்டேன்.
அப்போது நம் ராமலக்ஷ்மியின் பிட் காண்டெஸ்ட் எல்லாம் இருந்தது.

காமிராவில் எடுத்த படங்களை இப்போது 
பார்த்தாலும் அப்படி கச்சிதமாக இருக்கிறது.
இப்போது கணினி, இணையம், மொபைலில் 
படம் எடுப்பது எல்லாம் கைகொடுக்கிறது.

தோழி அனுப்பிய ஓவியக் கண்காட்சிப் 
படங்கள் அசர வைத்தன. பிறகு நானே தேடினேன்.
இப்போது கண்காட்சிக்கு எல்லாம் 
போகும் நிலை இல்லையே.
இந்தப் படங்கள் உங்களுக்கும்
பிடிக்கும் என்று நம்புகிறேன். 

இலைகள்  
உதிர்ந்து நிற்கும் மரங்களைப் பனி அணைத்துக் கொள்ளுமுன்
வண்ணங்கள் மாறிப் பல தோற்றங்களைக்
காண்பிக்கும் மரங்கள்.
 மழை நீடித்தால் ஏரிகள் நிரம்பும்.
எல்லோரும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

10 comments:

Geetha Sambasivam said...

கண்ணுக்கினிய காட்சிகள். அச்சு அசலாக வரைந்திருக்கிறது ஆச்சரியமூட்டுகிறது. முகநூலில் இம்மாதிரி நிறையப் படங்களைப் பகிர்கின்றனர். உங்கள் பகிர்வுக்கும் நன்றி. வண்ணக்கலவை அபாரம்.

மாதேவி said...

மிகவும் அழகிய வண்ணங்களில் வரைந்துள்ளார்கள்.

கோமதி அரசு said...

காணொளி, மற்றும் படங்கள் மிக அருமை.
நிறமாறும் மரங்களை, பார்த்து ரசித்து வரவே ஒரு சுற்றுலா போய் வந்தோம், மகன் நிபூஜெர்சியில் இருக்கும் போது. இலைகளை சேகரித்து வைத்து படங்கள் எடுத்தேன்.

காய்ந்து கீழே விழும் போதும் கண்ணுக்கு அழகாய் விழும் இலைகளை பார்த்து வியந்து போய் இருக்கிறேன். நான்கு பருவ காலங்களில் இயற்கை தன்னை மாற்றி அமைத்துக் கொள்வது மிக அருமை.

அணில் கொட்டைகளை குளிர் காலத்திற்கு புதைத்து வைக்கும் காட்சியை நானும் படம் எடுத்து இருக்கிறேன்.

உங்கள் மலரும் நினைவுகள் மிக அருமை.
முன்பு ராமலக்ஷ்மி கேட்பது போல் படங்கள் எல்லாம் அனுப்பி வைப்பீர்கள். நினைவு இருக்கிறது.

நிறைய கற்றுக் கொண்டோம் குழந்தைகளிடம்,
அன்று நாம் பேசிக் கொண்டவை பதிவாக மலர்ந்து இருக்கிறது.

இப்போது கற்றுகொண்டது மனமாற்றத்திற்கு உதவுகிறது.
வேறு சிந்தனைகள் இல்லாமல் மடை மாற்ற உதவுகிறது.

ஓவிய கண்காட்சி படங்கள் எல்லாம் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

இனிய காலை வணக்கம்.
முக நூலுக்கு ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு
ஒரு முறை என்று போகிறேன்.
நிறைய விஷயங்கள் விட்டுப் போகிறது.

இங்கே ஒரே தெருவில் பச்சை .,பழுப்பு, ஆரஞ்ச்
என்று இலைகள் வண்ணங்கள் காட்டுகின்றன.

நீங்களும் மெம்ஃபிஸ் நகரத்தில் போய்ப்
பார்த்து வந்தது அருமை.

வீட்டிலேயே இருக்கும் நாட்களில் வெளி
உலகத்தில் எல்லாமே அதிசயமாகத் தோன்றுகின்றன.
மிக நன்றி கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

கோடையை விட இப்போது அதிக வண்ணங்கள்
தெரிகின்றன.
கருத்துக்கு மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

ஆமாம் வலைச்சரம், PIT , பதிவர்கள்
ஒருவரை ஒருவர் பதிவிட அழைப்பது
எல்லாமே நிறைந்து இருந்தன.

பழைய பதிவுகளைப் படிக்கும் போது,
இத்தனை சுறு சுறுப்புடன் இருந்த வலை உலகமா
இப்படி மெதுவாக இயங்குகிறது. !!
இல்லை
எனக்குத் தான் அப்படித் தெரிகிறது என்று தெரியவில்லை.

எல்லோரும் முக நூலில் இருக்கிறார்களோ
என்னவோ:)குழந்தைகள் எப்பொழுதுமே நமக்கு
ஸ்வாமி நாதன்களாகத்தான் இருக்கிறார்கள்.

அறிவு படிப்பு, வாழ்வியல் அனைத்துமே
அதிகம்.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

என்னென்ன திறமைகளை கைக்கொள்கின்றனர்...   ஓவியம் போலவே இல்லாமல் ஒரிஜினலாக இருக்கிறது.  மிக அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம் மா. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தனபாலன்.