Add caption |
ஒரு கரடி நடக்க இடமில்லாம வந்துடறாங்கப்பா வண்டி வண்டியா. |
உன் வண்டிக்கு அப்பன் வண்டியே பார்த்திருக்கேன் போப்பா போ. |
எங்க நிழலையே காணோம்........மூச்சு வேற வாங்குது. |
ராப்பிட் சிடி விமான நிலையம் சௌத் டகோடா |
ஆஹா தேன் வாசனை வருதே......என்றபடி நகர்ந்த இந்தக் கரடியார் ஒரு மரத்தண்ட போயி அண்ணாந்து பார்த்தபடி உட்கார்ந்தே விட்டார்.அசையவே இல்லை. |
கீழே இருக்கும் எறும்புகளை முறைக்கிறார் இவர். |
சாப்பாட்டுக்கு நேரமாச்சே. என்ன வச்சிருக்காங்களோ தெரியலையே. |
19 comments:
பயணக் கட்டுரை தொடங்கியாச்சா? சபாஷ். கரடி படங்கள் ஜோர்மா. பேரனுக்கு பாட்டி மேல் பயங்கர ப்ரியம் போல! தொடருங்கள்.
ரொம்ப அழகா இருக்கும்மா பயண அனுபவங்கள் ..அந்த இடத்தை பார்க்கும்போதே தெரியுது எவ்ளோ வெக்கையாக இருந்திருக்கும் .....கரடிகள் நல்லா மல்யுத்த வீரர் மாதிருத்தான் இருக்காங்க ...கண்டிப்பா மூச்சு வாங்கணும் :)
உங்க பேரன் very caring !! ..தொடருங்கள் நாங்களும் ப்ளாக் வழியே பயணிக்கிறோம்
என்னை கேட்டால், இது பயணக்கட்டுரை + சித்திரம் பேசுதடி+ வரவு. வாழ்க.
ஒரு கரடிக்கதையும் எழுதிடணும். தலைப்பு " கரடி ரோடு'
கரடிகள் நினைச்சது எல்லாம் உண்மையாத் தான் இருக்கும்னு தோணுது! :))) அருமையான பகிர்வு. நன்றி ரேவதி.
பேரன் அருகில் இருக்கும் போது பாட்டிக்கு பயம் எதற்கு?
பயண அனுபவம், கரடிபடங்கள் எல்லாம் அருமை.
படங்கள் எல்லாம் அருமை. சுவாரஸ்யமான அனுபவங்களைத் தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம்.
காட்டெருமைப் பொம்மையையும் படம் எடுத்துப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாவ்!!! சூப்பர் படங்கள்!
ஒவ்வொன்னும் செல்லம் போல் இருக்கேப்பா!
காட்டெருமை படம் வேணும்:-)
கரடிக்கு மூச்சு வாங்குதே என்று ஒரு பக்கம் கருணை கொள்ளும் மனம், மனித ஓநாய்களுக்கும் இதுபோல் வரம்பு இருக்கப்படாதா என்று மறுபக்கம் எழும் ஆதங்கம் என்று மனமாடும் எண்ணங்களோடு அனுபவப் பகிர்வினை அளிப்பது சிறப்பு. படங்களும் அவற்றுக்கான கமெண்ட்டுகளும் பிரமாதம்.
படங்கள் எல்லாம் சூப்பர் தொடர்கிறோம்.
ஆமாம் ஸ்ரீராம். எப்பவும் தோளில் கை போட்டபடிதான் பேச்செல்லாம். பெண்ணுக்குப் பயம்வந்துவிட்டது. உன்னை மிஸ் பண்ணுவான்மா என்கிறாள். கரடிகளுக்கு நல்ல சாப்பாடு. வாட்ச் டவர்னு கோலாகலமாக இருக்கிறது, செழுமையான உடம்பும் தானும் நடந்துவருவதே அழகு.
வாங்கப்பா ஏஞ்சலின். நானே ஒரு நூறு கரடி பார்த்திருப்பேன். வெள்ளைக் கரடிதான் பார்க்கவில்லை. அது இங்க இருக்கச் சான்ஸ் இல்லை.குட்டிக் கரடிகளோடு அம்மா. வண்டிகள் போக்குவரத்துக்குப் பழகிவிட்டதால் அச்சமின்றி நடைபோடுகின்றன. வெய்யில் இல்லாவிட்டால் கார் மேல ஏறி உட்கார்ந்துக்குமாம். அதுவா நினைத்தால் தான் இறங்கும்.:)
நீங்கள் மெச்சுவதே தனி சிறப்பு இ சார். நன்றி. பெண் நான் கரடிகளோடு பேசுவதைப் பார்த்துச் சிரித்தாள்.தைரியம் இருந்தால் கதவைத் திறந்து இறங்கேம்மா என்று பேச்சு வேற.கரடி உலகம் நல்ல தலைப்பு சார்.மனிதர்களை லட்சியமே செய்வதில்லை அவர்கள்.
வரணும் கீதாமா. நிஜமாவே கரடியார் சாயல் எல்லாம் அப்படித்தான் தோன்றியது. பயணக் களைப்பும் ஜீரணமும் சரியாகணும். நிறைய எழுதலாம். நன்றி மா.
கட்டாயம். கோமதிமா. அவன் என்னிடம் வைத்திருக்கும் பிரியம் நிறையவே.தாத்தா பங்கும் எனக்குத்தான். வாழ்க வளமுடன்.
வரணும் ராமலக்ஷ்மி. குங்குமம் தோழியில் உங்கள் ப்ரொஃபைல் வந்தது பற்றி மகிழ்ச்சி. காட்டெருமை பொம்மை சின்னது. காமிரா உடைந்த கதை வேறு இருக்கு. மாப்பிள்ளையின் படங்கள் இருந்தால் போடுகிறேன் மா.
வரணும்பா துளசி. அங்க காட்டுப் பூனை கூட பார்த்தேன். சும்மா ஜம்முனு இருந்தது. ஹைன்னு திரும்பினால் பெண் காமிராவை நீட்டுகிறாள். துளசி ஆண்ட்டிக்கு அனுப்பணும் அவ்வளவுதானே என்று.
அன்பு கீதா மதி,உங்கள் பின்னூட்டம் ஒரு கவிதைபோல வருகிறது இதமாக. மிக நன்றிமா. நம் எழுத்தை இவ்வளவு ஆழமாக யாராவது படித்தால் உண்மை மகிழ்ச்சி வெள்ளம் தான்.
வரணும் மாதேவி. நலமாப்பா. வேலைகள் குறைந்தனவா. மிகநன்றி கருத்துக்கு.
அருமை
அருமை
Post a Comment