எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
கடலில் கலந்த இன்னோரு ஜீவன் ஆடி பிறந்தது என்று மகளுடன் அருமையாகப் பேசிய என் அன்பு மன்னி ஜயா வரதராஜன் சென்னையில் குரோம்பேட்டையில் இறைவனடி சேர்ந்தார். வாழ்வு முழுவதும் போராட்டம் தான். அயராத இறை நம்பிக்கை. .எதையும் வென்று வரலாம் எனும் தைரியம்.சாதுர்யம்.மனவலிமை என்றிருந்தவரை,இதயம் கைவிட்டுவிட்டது. 1957 ஆம் ஆண்டு என் பாட்டியின் வீட்டு முதல் மருமகளாக அழகுப் பதுமையாக 18வயது பிம்பம் வந்த போதே மாமாவுக்கு நிகராக நாங்கள் அனைவரும் அவளை நேசித்தோம். இந்த 58 வருடங்கள் குடும்பத்திற்கும் ,பாசுர வகுப்புகளுக்கும், கோயில்களுக்கும் எத்தனை விதமாக உதவி இருப்பார்களோ தெரியாது. மாமாவின் போனவருட உடல் நிலை எண்ணும்போது அவருக்காக நான் பயந்தேன். அவர்கள் அத்தனைபேருக்கும் சாயும் சுவராக இருந்தவள் ஒரு நொடியில் இறைவன் பாதத்தை அடைந்துவிட்டாள். இங்கிருந்து தொலைபேசுவேன். நீ எப்படி இருக்கே மன்னி என்றால் ,என்னை விடு நீ என்ன செய்யறே எழுதறியா.நிறைய எழுது. உன் மனசு தெளிவாகும் என்று ஆசீர்வதித்தவள். மாமா தான் என்ன செய்வாரோ. எழுதிருக்கும்போதெ மனைவி கை காப்பியுடன் தான் அவரது தினசரி துவங்கும்..மன்னியின் மக்களுக்கும் மாமாவுக்கும் நல்லதொரு காவல் தெய்வமாக இருக்கவேண்டும்.. சதா மங்கையர் மலர்,குங்குமம், என்று எல்லாவற்றுக்கும் எழுதிக் கொண்டிருப்பார். குறுக்கெழுத்துப் போட்டிகளில் கூட வெற்றிபெற்றிருக்கிறார். அசந்து மறந்து உட்கார்ந்து விட மாட்டார். இன்னும் எனக்குக் கீரைவடை செய்து தரவில்லை என்று பரிகாசம் செய்வேன். நீ என்னோட வந்து இரு .உனக்கு நான் எல்லாம் செய்து தரேன் என்பார்.. அவர் இறுதிப் பயணத்துக்கு வந்த பெண்களின் கூட்டம் சொல்லிமுடியாதாம்.மாலைகளும் புடவைகளுமாகக் குவிந்தனவாம். மாமாவுக்கும் குழந்தைகளுக்கும் இறைவன் ஏதாவது நல்வழி காட்டுவார். நமஸ்காரங்கள் மன்னி. . |
17 comments:
உங்கள் மன்னியின் பெருமை தெரிகிறது இறுதி அஞ்சலிக்கு வந்த அன்பு நெஞ்சங்களை பார்த்து.
அன்பு மன்னிக்கு அஞ்சலிகள்.
உங்கள் மன்னிக்கு எங்கள் அஞ்சலிகளும். சோதனை மேல் சோதனை. தாங்கும் தைரியத்தை இறைவன் தரட்டும்.
May Her Soul Rest In Peace . ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அஞ்சலிகளும் . உங்கள் அன்பு மன்னியின் ஆன்ம சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .உங்கள் பதிவில் இருந்து நன்கு புரிகிறது மன்னி அவர்கள் எவ்வளவு அன்பானவர் என்று
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இறைவன் எல்லா ஆறுதலையும் தருவாராக ..
வணக்கம் வல்லிம்மா. நொடியில் இறைவனடி சேர்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். குடும்பத்தினருக்கு இறைவன் துணையிருக்க வேண்டிக் கொள்கிறேன்.
ஆழ்ந்த அஞ்சலிகள்...
சாயும் சுவராக …
~மனம் நெகிழ்ந்து போனேன். என் கோமளத்தை மாதிரி இருந்திருப்பார் போல. க்ரோம்பேட்டையில் நான் வசித்த காலத்தில், இவரை பற்றி கேள்விப்பட்டதாக, நினைவு.
உங்கள் சோகத்தில் ஆழ்ந்த அனுதாபத்துடன் பங்கு கொள்கிறேன். மனம் பேசுவதை நாம் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும். என் மனைவி வஸந்த்தா தான் ஆத்துக்கு பெரிய மன்னி. அப்பாவுக்கு ஆலோசகர். பெரிய குடும்பத்தின் தலைவி. பெண்ணின் பெருமைக்கு எல்லை உண்டோ?
Grand Soul.RIP
கொடுத்து வைச்சவங்க உங்க மன்னி. அனைவருக்கும் சாயும் சுவராக இருந்தவங்களோட பிரிவு எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கவே முடியாது. உங்கள் மன ஆறுதலுக்குப் பிரார்த்திக்கிறேன். இவங்களைப் பத்திப் படிச்ச நினைவும் இருக்கு.
தங்கள் சோகத்தில் ஆழ்ந்த அனுதாபத்துடன் பங்கு கொள்கிறேன்.
மன்னியின் ஆன்ம சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
உங்கள் மன்னியின் பெருமைகளை அறிந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தாருக்கு மன தைரியம் கிடைக்கட்டும்.
ஆழ்ந்த அஞ்சலிகள். குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க என் பிரார்த்தனைகள்.
ஆழ்ந்த இரங்கல்கள்!
மன்னியின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகளும் மாமாவுக்கு மனோதிடம் கிடைக்கவேணும் என்னும் கூடுதல் வேண்டுதல்களும் பெருமாள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன்.
வணக்கம். என் முதல் வருகையே மனதை கனக்க வைத்துவிட்டது. இறைவன் அவர்கலள்குடும்பத்திற்கு ஆறுதலைதருவார்.
ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா.
அனைவருக்கும் நன்றி.
ஆழ்ந்த அஞ்சலிகள் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
Post a Comment