Blog Archive

Wednesday, July 09, 2014

நதியோரம் ஒரு நடை

நேப்பர்வில்லின் போர் வீரர்களுக்கான   சின்னம்.
நன்றி மைக்கெல். நதிக்கு மேல்  பாலம் .அது ஒரு அழகு. நின்று கொண்டு நதியையும் ஒலியையும்           கேட்கும் பொழுது நிம்மதி.
அந்திமாலையின் பொன்னிறங்கள் அழகு.
ஐந்து  படுக்கை அறைகள்   கொண்ட   பெரும் வீடு. நதிக்கரை வாசம்.
இனிமையான இசை   பின்னணியில்  இந்த     ஊற்று மகிழ்ச்சிதரும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே                                                    





நேப்பர்வில்லுக்கான    ஒரு நதி. அதைச் சுற்றி கேளிக்கைகள் கொண்டாட்டங்கள்.    உணவு விடுதிகள்,நதியில் ஆழமில்லாத இடத்தில் விளையாடும் குழந்தைகள் பெரியவர்கள். ஆழநீரில் நீந்தும் விடலைகள். எல்லாரையும் கண்காணிக்க  லைஃப் கார்டுகள்       நதியோரம்ம்நடக்க   பாதைகள். நதிக்கு மேலே பாலங்கள். ஒளிவுமறைவான இடங்களில் புல் தரைகளில் காதலர்கள்.   என்போன்றவர்களுக்காக இசை. உட்கார்ந்து கேட்க  சாய்மானங்கள். இதமான   வெய்யில்.




புல்தரையில் ஃப்ரிஸ்பி விளையாட நச்சு பண்ணும் பேரன். கண்டும் காணாமல் அம்மாவுக்காக வந்த பெரிய பேரன்..கையில் க்ளிக்கும்  அலைபேசி.                    அவ்வப் பொழுது பாட்டியின் கைகளை இறுகப் பிடித்து,படிகளில் நிற்கும்   போது  தடுக்காமல் தடுக்கும் ஆபத் பாந்தவன்.  ஒரு சுற்று  சுற்றிவர இரண்டு மணிநேரம் பிடித்தது.  மணிக்கூண்டில் ஏடெல்வைஸ்     பாடல்.   எல்லாம்  பிடித்திருந்தது.    மிதந்து வந்த  சிகரெட்டின் மணம்    சிங்கமும் எங்கயோ இருப்பது போலப் பிரமை.        


https://docs.google.com/file/d/0B0EMbkYS23jkUzZ0YzFyMjRCeXM/edit



23 comments:

ஸ்ரீராம். said...

எல்லாப் படங்களும் அருமை. குறிப்பாக மூன்றாவது. கடைசி வரி நெகிழ்ச்சி.

Angel said...

அழகான படங்கள் வல்லிம்மா ..ஏடல்வைஸ் பாட்டு எப்பவும் கேட்டுட்டே இருக்கலாம் ..என் பொண்ணுக்கு மனப்பாடம் ..

அனைத்தும் அழகு நதியோரம் நடை மனதுக்கு ரம்மியம்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் அம்மா...

முடிவில் வருத்தத்துடன்...

priyasaki said...

மிக அழகாக இருக்கும்மா. எல்லாப்படங்களும் அழகு. எங்க வீட்டருகிலும் நதியோர நடை பாதை இருக்கு. சம்மரில் அருமையாக இருக்கும்.எனக்கு பிடித்த பாடல்.
நல்ல பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். வால் மார்ட் கடை போயிருந்தபோது சிகரெட்கள் அடுக்கிய ஸ்டாலின் அருகில் மார்ள்ப்ரோ பெட்டி பார்த்ததும் கண்கள் நீர் சுரந்தபடி இருந்தன. எனக்கேஅதிர்ச்சியாகிவிட்டது. இனிமேல் எங்குமே போகமுடியாதோ என்று நினைத்தேன்.அது நான்கு மாதங்களுக்கு முன்னால்.இப்போது தேறிவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

நானும் சோககீதம் பாடாமல் இருக்கலாம். நன்றி தனபாலன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு பிரியசகி நம் ஊரிலும் கூவம் இது போல ஒரு நாள் ஆகலாம்.நல்லதை நினைப்போம். பாடலை ரசித்துக் கேட்டதற்கு மிக நன்றி.

பால கணேஷ் said...

அத்தனை படங்களுமே மனசைப் பறித்தன வல்லிம்மா. குறிப்பா 3வது படத்தை விட்டு கண்களைப் பெயர்த்தெடுக்க வெகுநேரம் ஆனது.

துளசி கோபால் said...

அழகு அழகு எல்லாமே அழகு!

கோடையை நல்லா அனுபவிக்கணும். இப்ப விட்டால் அப்புறம் எப்ப?

இப்படிக்குக் கடும் குளிரில் இருந்து,
துளசி:(

ராமலக்ஷ்மி said...

அழகான இடம். இரம்மியமான சூழல்.

ADHI VENKAT said...

எல்லாப் படங்களுமே அழகு. நதியோர நடை.... ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கணேஷ்.இந்த ஊர் சூரியோதயமும் சாயங்காலமும் மூச்சை நிறுத்தும் அழகு.பரந்த வானம்.ஒரு மேகம் இல்லாத நீலம்.எடுத்து எடுத்து சலிக்கவில்லை.மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசிமா.அடக்கடவுளே சிட்னி குளிரே தாங்கவில்லைன்னு நாத்தனார் மகள் சொன்னாள். உங்கஊர் கேட்பானேன். டாக்டர் சொன்னார் என்று உடவலி போக சன்பாத் எடுக்கறேன்.இதமாகத்தான் இருக்கு.பத்ரமா இருங்கப்பா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. மீண்டும் மீண்டும் உங்கள் நினைவுதான். இத்தனை காட்சிகளும் உங்க காமிராக் கண்ணில் நன்றாக வருமே என்று .

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதிமா. நலமா.படங்களைக் கண்டுகொண்டதற்கு மிகவும் நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஏஞ்சலின்.உங்க ஊருக்கும் வரும்போது சந்திக்கமுடியுமான்னு பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.....

கோமதி அரசு said...

அருமையான படங்கள் , இனிமையான பாடல் எல்லாம் அருமை.
பேரன்களின் அன்பு அரவணைப்பில் மகிழ்ந்து இருங்கள் அக்கா.

Thenammai Lakshmanan said...

இடுகை அருமை. புகைப்படங்களும்.

ஆஹா நம்ம தலை பாட்டு.. தமிழ்ப் பாட்டு. அம்மா அசத்துறேள். :)

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அப்படியே செய்கிறேன் மா கோமதி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தேன். பாட்டு பிடித்ததா. நன்றி மா,.

மாதேவி said...

மனதுக்கு இதமான அழகான காட்சிகள்.