Sunday, December 13, 2009

என்குதிரை உன் குதிரை என்ன வித்தியாசம்??

இந்தக் காலத்துக்கு இது தான் குதிரை.இது அந்தக் காலம்.

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடினான் சிறிய பேரன். அவனுக்குக் குதிரைதான் ,பரிசாக வேண்டும் என்று
பிடிவாதம்,ஆசை. இந்த டோரா என்ற பெண்குழந்தை கூட ஒரு டியெகோ என்று பையன் வருவான். அவன் குதிரையைத் தொலைக்காட்சி கார்ட்டூனில் பார்த்ததிலிருந்து அவனுக்கு அந்தக்
குதிரை மேல் மோகம் வந்துவிட்டது.

அவங்க ஊர்ல பொம்மைக் குதிரைக்கா பஞ்சம்.

அவன் தான் ஏறும்படி இருக்கணும். ஆனால் ஓடக் கூடாது என்று ஒரு கண்டிஷன் வேறு.
சரி மரக் குதிரை உங்க ஊரில கிடைக்காதா, ஆடும் குதிரை இருக்குமே என்று பெண்ணிடம் கேட்டேன்.
அவளுக்குக் கிடைத்த நேரத்தில் இணையத்தில் தேடிக் கிடைத்த குதிரைகளில்
அவன் விருப்பப் பட்டது இந்த ஃபெல்ட் என்ற செயற்கைத் துணியால் ஆன
பழுப்பு நிறக் குதிரை தான்.
ஸ்ஸ்ஸ்.... அப்பாடா!! ஒரு குதிரை வாங்க இவ்வளவு அலைச்சலா!!
அப்புறம் ஸாம்ஸ் கிளப் என்று அவர்கள் உறுப்பினராக இருக்கும் ஒரு
கூட்டுறவுக் கடையில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாக இந்தக் குதிரை கிடைத்ததாம்.

இது காதைத் திருகினால் கனைக்கிறது. க்ளிப்பட்டி க்ளாப் என்று ஓடும் சத்தம் போடுகிறது.
ஆனால் அவன் இதில் உட்காரும் நேரம் குறைவுதான்.
நகராத குதிரை:)

இதைப் பார்க்கும்போது எங்கள் மாமா நாங்கள் சிறியவர்களாக இருக்கும்போது,
எங்களைப் பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒரு தடவை வந்தார்.

கையில் நீல வர்ணக் குதிரை. மரக் குதிரை. ஏறிக் காதைப் பிடித்துக் கொண்டால் ஆடும்.
மனோவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், குதிரையைக் கீழெ தள்ளிய அனுபவமும் உண்டு:)

நாங்கள் மூவரும் விளையாடி, அதைச் செல்லம் கொஞ்சி,அதற்கு வர்ணமெல்லாம் போய்க் கூட அது பசுமலை பரணில் கிடந்தது.
பிறகு அப்பாவுக்கு ராமேஸ்வரம் மாற்றல் ஆனதும் அப்பா எனக்குக் கடிதம் எழுதி ,நான் சம்மதம் தெரிவித்த பிறகே பசுமலை
தபால்காரருக்குக் கொடுத்தார்.
அந்த இருபது வயதில் கூட எனக்கு அது நம்மிடம் இல்லை என்ற வருத்தம் மேலிட்டது நினைவு வருகிறது;))

சில நபர்கள் வளருவதே இல்லை என்று நினைக்கிறேன்.!!


எல்லோரும் வாழ வேண்டும்.
என் நட்பு என் சொத்து- Emily Dickinson

37 comments:

கீதா சாம்பசிவம் said...

//கையில் நீல வர்ணக் குதிரை. மரக் குதிரை. ஏறிக் காதைப் பிடித்துக் கொண்டால் ஆடும்.
மனோவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், குதிரையைக் கீழெ தள்ளிய அனுபவமும் உண்டு:)//

நல்லா கொசுவத்தி! குதிரை தலைப்பைப் பார்த்ததும் மறுபடி வந்தியத் தேவனோனு நினைச்சேன்.

ம்ம்ம்ம்ம்?? நாங்க யாரும் ஆடு குதிரையிலே ஆடினதில்லை. அதுக்காகவே என் அண்ணா என் பொண்ணுக்கு ஆடுகுதிரை வாங்கித் தந்தான். அவள் ஆடி, தம்பியும் ஆடி, தம்பிக்கு என்னமோ அவ்வளவாப் பிடிக்காது, அப்பாவோட ஸ்கூட்டர் தான் அப்போவே. :D அப்புறமா ராஜஸ்தானை விட்டு வரச்சே, அதையும் பொண்ணுக்காகக் கட்டி இருந்த ஊஞ்சல், மூணு சக்கர சைகிளையும் மனசே இல்லாமல் கொடுத்துட்டு வந்தாங்க. எனக்கு மத்ததை விட ஊஞ்சலைக் கொடுத்தது தான் ரொம்ப நாள் பாதிச்சது. இப்போ ஊஞ்சல் இருந்தும் யாருமே உட்காருகிறதில்லை!

வழக்கம் போல் பதிவு எழுதிட்டேனோ? :D

கீதா சாம்பசிவம் said...

மறந்துட்டேனே, பேரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளும், ஆசிகளும்.

Mrs.Dev said...

//சில நபர்கள் வளருவதே இல்லை என்று நினைக்கிறேன்.!!//


100% true

அடடா...குதிரையைக் காட்டி ஞாபகங்களை கிளறிட்டீங்களே வல்லிம்மா ...சும்மாவே நாங்க கொசுவத்தி சுத்துவோம் .

ம்...எங்களுது லைட் கிரீன் குதிரை ,மரக்குதிரை,சாய்ந்தாடும் பார்க்கவே கொள்ளை அழகா இருக்கும்,மூணு நாலு பேர் நெருக்கியடிச்சு ஏறி ஆடி தொபுக் தொபுக்குன்னு விழுந்து மண்டை உடைச்சிகிட்ட கதை எல்லாம் உண்டு.

ஆயில்யன் said...

ஹைய்ய்ய் குதிரை கொசுவர்த்தி வல்லியம்மா சொல்ல சொல்ல எங்க வீட்ல அடிச்சு புடிச்சு கொஞ்ச காலத்துல குதிரையோட பேஸ்மெண்ட ஒடைச்சு பரண் மேல போட்ட ஞாபகம் வருது !
விதவிதமா அழகா பெயிண்ட் எல்லாம் அடிச்சு கொடுமைப்படுத்தினோம் அந்த மரக்குருதைய :)

சந்தனமுல்லை said...

அழகான இடுகை வல்லியம்மா..பழமையும் புதுமை சேர்ந்து கலக்குது..உங்க இடுகையிலே!! :-)

துளசி கோபால் said...

எனக்குச் சொந்தமாவே குதிரை இருந்துச்சு. 'சட்'னு நிமிஷமாக் கடைகண்ணிக்குப் போய்வர அதுதான் வாகு.

அப்புறம் அக்கா மகள் பிறந்ததும் அவளுக்கு ஒரு ஆடும்குதிரை. அதுலேயும் அப்பப்ப சவாரி போனாலும் என் குதிரைமாதிரி வராது. அதுவும் பாவம்..... எஜமானி கவனிப்பு இல்லாமல் இளைத்துப்போயிருச்சு.

இத்தனைக்கும் கூடவே இருந்த குதிரையின் மேல் ஏறிப்போகத் தோணவே இல்லை.

கொசுவத்தி ஏற்ற வச்சுட்டீங்களே இப்படி.....

குட்டிக்கண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

மாடு மேய்க்கும் கண்ணா.....

புதுகைத் தென்றல் said...

ஒரு மரக்குதிரை வாங்கிக்கொடுக்கச்சொல்லி நான் அழுதது, அதுக்கு அடி வாங்கினது எல்லாம் ஞாபகத்துக்கு வருது. (அடி மட்டும் தான் கிடைச்சது.
:))

வல்லிசிம்ஹன் said...

மரக்குதிரை எல்லார் வீட்டுக்கும் சொந்தம் என்று நினைத்தேன் கீதா. குதிரை வாங்கிக்கொண்டு வந்த மாமாவுக்கு அப்போது 21 வயதுதான் இருக்கும்.
அவர் வாங்கின முதல் சம்பளத்தில் 7 ரூபாய்க்கு வாங்கிச் சென்னையிலிருந்து புறப்பட்டு
ஸ்ரிவில்லிபுத்தூர் வந்து கொடுத்துவிட்டுப் போனார்.
இந்தக் குதிரையைப் பார்த்ததும் , பழைய குதிரை நினைவு வந்தது. வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மிஸஸ் தேவ்.
அத்தனூண்டு குதிரையில் மூன்று பேர் உட்கார்ந்தது ஆச்சரியமே இல்லை.

படத்தில் இருக்கும் என் பின்னால் தம்பிகளும் உட்கார்வார்கள்.:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஆயில்யன்.
பழைய வர்ணம் போனதும் நாங்களும் வர்ணம் அடித்தோம். அந்தக் குதிரையின் அழகே போய் விட்டது.
பாவம். அழகான கண்களால் என்னைக் கொடுமைப் படுத்துகிறாயே என்று கேட்பது போல இருக்கும்.:((

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை. உங்க வீட்டு குதிரை இன்னும் பதிவில் ஓடவில்லையே???

வல்லிசிம்ஹன் said...

ஆஹா துளசி, மனக் குதிரைதான் இப்ப படுவேகமா
செயல் பட்டுக் கிட்டு இருக்கே,.:)
அறுபதுக்கு அப்புறம் கொசுவத்திக்காப் பஞ்சம்.:)))
எழுதற பக்குவம் தான் அப்பப்போ ஓடிப் போய்விடுகிறது!!

வல்லிசிம்ஹன் said...

தென்றல், இது என்ன அநியாயம். நான் இப்பவே புதுக்கோட்டை போய்க் கேட்டு விடுவேன்.
ஆனால் நானும் என் குழந்தைகளுக்கு வாங்கித் தரவில்லை. ஒரு மூணு சக்கர சைக்கிளில் தான் அவர்கள் சிறிய பருவம் கழிந்தது:))

கவிநயா said...

//சில நபர்கள் வளருவதே இல்லை என்று நினைக்கிறேன்.!!///

குழந்தை மனசு இருப்பது நல்லதுதானம்மா :)

குட்டி பையனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

"You never really grow up, you just learn
how to act in public"

இது மகள் தன் மெயில் வாலில் போட்டுருப்பது!

ராமலக்ஷ்மி said...

பேரனுக்கு நல்வாழ்த்துக்கள்:)!

அதே மாதிரியான கனைக்கும் குதிரையில் தம்பி மகன் ஆடிக் கொண்டிருக்கிறான் இப்போது. நகராது, ஆனால் ஆடும்.

சின்ன வயதில் நாங்கள் ஆடிய 2 மரக் குதிரைகளை நோக்கி மனக் குதிரைய பறக்க வச்சுட்டீங்க. மஞ்சள் நிறத்தில் ஒன்றும், பச்சை நிறத்தில் சீட் வச்சு ஒன்றும். பச்சைக் குதிரையில் நான் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் படம் ஒண்ணு சமீபத்தில் என் பதிவுல கூடப் போட்டிருந்தேன்:))!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா, உண்மைதான். ஆனால் நடப்பதில்லை.
பாதி குழந்தை,பாதி பெரியவர்களாகவே கழிக்கிறோம் வாழ்க்கையை.;)

வல்லிசிம்ஹன் said...

நூத்தில ஒரு வார்த்தை. அநேகமாக ,உங்க மக சொல்ற மாதிரி வளர்ந்தவர்களின் நடிப்புதான் இன்றைய வாழ்க்கை.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி, உங்க குதிரை நல்லா நாட்டியக் குதிரை மாதிரி பளபளான்னு இருக்கே.
ரு வேளை மொட்டை போட்ட கையோடு வாங்கிக் கொடுத்தார்களோ!!!

திவா said...

மரமாவது நிஜமாவது! எல்லாம் குழந்தை மனசிலே இருக்கு! ம்ம்ம்ம்! நல்ல நினைவுகள்!

கண்மணி said...

வல்லிம்மா கண்டு பிடிச்சிட்டேன்.குதிரை மீது இருக்கும் ஜான்ஸி ராணி [ஆண்டாள்]நீங்கதானே.
எங்க வீட்டிலும் இப்படி மரக்குதிரை ஆடியிருக்கோம்.அப்படியே 'நாகபாஷம்'னு பாம்பு தலையைக் கைபிடியா வச்ச ஒரு தொட்டில்[ஊஞ்சலும்] இருந்தது.மீண்டும் குழந்தைகளாகும் வரம் கிடைத்தால்?

வல்லிசிம்ஹன் said...

அன்புத் தம்பி வாசுதேவனுக்கு அனுமத் ஜயந்தி மார்கழி வாழ்த்துகள்.
மரக்குதிரையாக இந்தக் குதிரையை நான் பார்த்ததே இல்லை.
உட்கார்ந்து,முகம் தேய்த்து அந்த மரமும் வழவழப்பானது. இரவு எனக்குப் போடும் பாய்,ஜமக்காளம் எல்லாம் இந்தக் குதிரை பக்கத்தில்தான். கிடைத்த பட்சணம்
பண்டம் எல்லாம் அதற்கும் உண்டு.
புரிதலுக்கு நன்றி:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா.கண்மணி. கண்டுபிடித்துவிட்டீர்களா.
வரணும் வரணும்.
மரத்தொட்டிலும் உண்டு. ஆனால் தூங்கியது என்னவோ தூளியில் தான் அதிகம்.(4 வயது வரை)
பிறகு இந்தக் குதிரை வந்துவிட்டது.:))
நீங்கள் சொல்லும் ஊஞ்சல் நான் பார்த்ததில்லை.
ஆமாம், நீங்கள் சொல்வது போல் அங்கேயே அந்தப் பருவத்திலியே இருந்திருக்கலாம்.

LK said...

en ponnuku nanthan kuthirai night tungitu irukarapa en mela eri ukkanthuruva :D

Anonymous said...

என் பிள்ளைங்க இரண்டுக்கும் என் கால்ல குதிரை சவாரி போறதுதான் இப்ப Favorite Time Pass! :)
"குதிரை குதிரை இது
ஓடும் குதிரை இது
ஆடும் குதிரை
பாடும் குதிரை
சண்டி குதிரை
நொண்டி குதிரை ..."

இது அம்மாக்கிட்ட இப்ப கத்துக்கிட்டு கால் ஆட்டுற பாட்டு ... அதுக்கு முன்னாடி அதே விஷயத்தை

This is the way the gentlemen ride trit trot trit trot
This is the way the ladies ride
trit trot trit trot
This is the way the farmers ride
gallop gallop gallop

அப்படின்னு ஒரு பாட்டு அதே குதியாட்டத்துக்கு!!!

ஒரு ஆடும் குதிரை வாங்கி கொடுக்கணும்னு ஆசைய கிளப்பி விடுதுங்க இரண்டும் :)))

கீதா சாம்பசிவம் said...

@மதுரா,

இந்தக் கால்லே ஆடறதை என் குழந்தைகளுக்கும் ஆட்டிக் காட்டி இருக்கேன், பாட்டு தான் கொஞ்சம் வித்தியாசமா,
ஆனை, ஆனை அழகர் ஆனை
கொம்பானை, குட்டி ஆனை
குட்டி ஆனைக்குக்கொம்பு முளைச்சதாம்,
பட்டணமெல்லாம் பாக்க ஓடியாங்கனு கூப்பிட்டுட்டு, அப்புறமா ஆனை ஆத்திலே தள்ளவா, சேத்திலே தள்ளவானு கேட்கும், (அம்மா ஆனைதான் கேட்கணும், இங்கே ஆனையா நடிக்கிறது அம்மாவான நாம தானே???) குழந்தைங்க ஆத்திலேனு சொல்லும் அநேகமா! கொசுவத்தி நல்லாவே சுத்துது போங்க! நெடி அதிகமாப் போயிடும்! :)))))))))))))

திவா said...

ஆன ஆன
அழகர் ஆன
அழகரும் சொக்கரும் ஏறும் ஆன
கட்டு கரும்ப முறிக்கும் ஆன
காவேரி தண்ணிய கலக்கும் ஆன
குட்டி ஆனைக்கு
கொம்பு மொளச்சுதாம்
பட்டணமெல்லாம்
ப்றந்தோடி போச்சாம்!

வல்லிசிம்ஹன் said...

Geetha, Dhivaji thaan correct. we sing this when the baby starts to sit on our lap and starts moving to the rhythm of our voice.

வல்லிசிம்ஹன் said...

Hi Madura,
the song you mention goes like Thennai maraththila eraathe
thengaayaip paRikkaathe,
Pana maraththila eRAthee
panggaayaip paRikkatha,
Maamaraththila ERaathe maangaayap paRikkaatha...
Aththila podattuma,
Kinaththula podattumaa,
ammaiyaar viittuch seththila podattumaa. ithu namma kaalil kuzhanthaiyaip pottundu paadaRathu.

sorry for thanglish.

வல்லிசிம்ஹன் said...

தம்பி திவாவுக்கு,
நன்னி நன்னி நன்னி.
பாட்டைச் சொன்னதுக்கு.

இந்த ஆனை ஆனயும், சாய்ஞ்சாடம்மாவும்மாவும் மறக்க முடியாத பிள்ளைப்பாடல்கள்.
இதுக்காகவே இன்னோண்ணு பேரனோ பேத்தியோ வராதான்னு இருக்கு:))

LK said...

//Thennai maraththila eraathe
thengaayaip paRikkaathe,
Pana maraththila eRAthee
panggaayaip paRikkatha,
Maamaraththila ERaathe maangaayap paRikkaatha...
Aththila podattuma,
Kinaththula podattumaa,
ammaiyaar viittuch seththila podattumaa//

intha pattu enaku maranthu pocchu. en ponnu poranthapa en amma athu kuda vilaydara samyathila padinapuramthan nyagabam vanduchi

//ஆன ஆன
அழகர் ஆன
அழகரும் சொக்கரும் ஏறும் ஆன
கட்டு கரும்ப முறிக்கும் ஆன
காவேரி தண்ணிய கலக்கும் ஆன
குட்டி ஆனைக்கு
கொம்பு மொளச்சுதாம்
பட்டணமெல்லாம்
ப்றந்தோடி போச்சாம்!//

ithu enaku pudusu

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, வல்லி, தம்பி பின்னாலேயே வந்து முழுசும் சொல்லணும்னு தான் நான் பாதி வரைக்கும் சொன்னேனாக்கும். (அப்பாடி, மறந்துட்டேன்னு சொல்லாமல் எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு!:D)

கீதா சாம்பசிவம் said...

அப்புறம் பாருங்க இந்தத் தென்னை மரத்திலே ஏறாதே, தேங்காயைப் பறிக்காதே, ஜூலை மாசம் வரைக்கும் விளையாடியும், அதையும் நீங்க எழுதணும்னே விட்டு வச்சேனாக்கும்! :P:P:P:P ஹிஹிஹி, சவ்வ்வாலேஏஏஏ, சம்மாளி!!!!!

Anonymous said...

ஆஹா இந்த பின்னூட்டத்தை இவ்வளவு விஷயமும் இருக்கா ... இரண்டு குட்டிக்கும் மொட்டையடிச்சு காது குத்தி கும்மாளம் போட்டதில பதிவு பக்கம் வர முடியாம போச்சு ... இப்பதான் பாக்குறேன் எல்லாமே ...

கீதா மேடம் ஆரம்பிச்சு கொடுத்து தீவா சாரும், வல்லிம்மாவும் சூப்பரா முடிச்சு குடுத்திருக்காங்க ... நன்றி நன்றி நன்றி! ஆத்துல சேத்துல part எப்படி பண்ணுவீங்கன்னு Guess பண்ணி பாக்குறேன் ... "this is the way" குதிரைப் பாட்டுல வர்ற "Into the ditch" மாதிரியேவா? எம் பையன் பாட்டை ஆரம்பிச்சாலெ, தலைய சாச்சுக்கிட்டு "into the ditch"க்கு ரெடி ஆயிருவான்! :)
குதிரைப் பாட்டு ஆனைப் பாட்டு இரண்டும் போட்டு தாக்க வேண்டியதுதான் வீட்டுல :))) ...
நன்றி நன்றி நன்றி!

கீதா சாம்பசிவம் said...

@மதுரா, கூடியவரைக்கும் நீங்க தமிழிலேயே சொல்லுங்க குழந்தைங்களுக்கு எல்லாத்தையும், தமிழ் பேச வராட்டியும் புரிஞ்சுப்பாங்க. எங்க வீட்டுக் குஞ்சலங்களும் நல்லாப் புரிஞ்சுப்பாங்க, பதில் என்னமோ ஆங்கிலத்தில் தான்!:( அதை மாத்த முடியலை. பெரிய குஞ்சலத்துக்கு இப்போக் கொஞ்சம் புரியுது, கொச்சைத் தமிழில் சொல்லுவா. சின்னது, ரொம்பவே சின்னது, சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை அது! பார்க்கலாம்!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மதுரா. குழந்தைகளுக்கு மொட்டை அடிச்சது பற்றிச் சந்தோஷம்.
ஆத்தில போடட்டான்னா இந்தப் பக்கம், குளத்தில போடட்டான்னா அந்தப் பக்கம்.;)
அம்மையார் வீட்டுச் சேத்தில போடட்டுமான்னு குழந்தையைக் காலோடு மேல தூக்கிக் கீழ இறக்கணும்:)

வல்லிசிம்ஹன் said...

கீதா சொல்றது உண்மைதான் மதுரா. கூடிய மட்டும் தமிழ்ல பேசுங்க.
எங்க வீட்ல நாலும் நாலு மாதிரி பேசுகிறது. பெரிய பேரந்தான் நல்ல தமிழ் பேசறான்.