Tuesday, December 15, 2009

அனுமன்,ஆண்டாள் மார்கழி

மார்கழிக் கோலம்


ஆண்டாள் ரங்கமன்னார் திருமணக் கோலம்ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்சுந்தரனுக்குப் பிறந்தநாள்
டிசம்பரே அருமையான மாதம் சென்னையில்.
கச்சேரிகள், கலகலப்புகள், சுடச்சுட விமரிசனங்கள்

நீ அந்தக் கச்சேரிக்குப் போனயோ. அவர் இந்த வருஷம் அவ்வளவு
ரசிக்கிற படியில்லை.''...

இத்தனை சபைகள், இத்தனை பாட்டுக் கச்சேரிகள், ஆடல்கள்,
பட்டங்கள், என். ஆர். ஐ. க்குத் தனி கோட்டா.

என்று தூள் கிளப்ப ஆரம்பித்தது முதலாம் தேதியிலிருந்து.

நமக்கோ மார்கழியே குறி.

அதுவும் பிறக்கும் அன்றே அனுமனை ராமதூதனை,அஞ்சனை மைந்தனை,அன்னையின் சோகம் தீர்த்தவனை,
சுந்தர காண்டக் குருவை,
சொல்லின் செல்வனை,வினய மூர்த்தியை
அழைத்து வருகிறாள் , மார்கழிப் பாவை.

மார்கழி பிறக்கும் நேரமே அமாவாசையும், மூல நட்சத்திரமும்
கூடும் நாளில் அனுமன் பிறந்து வந்துவிடுகிறான்.
பிறகென்ன,
அவன் சிறிய திருவடியாக யாருடன் ஒன்றினானோ அந்த ராமகிருஷ்ணர்களைப் பாட ஆண்டாளும் தயார்.

அவளைப் பாராட்ட உபன்யாசகர்களும்,கதை சொல்பவர்களும்,
பாவை நோம்பை ஆரம்பிக்க பக்தர்களும்,
பிரும்ம முஹூர்த்த்ததைக் கொண்டாட
நாமும் தயார்...
இணையத்திலும் கோதையின் புகழைப் பாட மதுரையைச் சேர்ந்தவர் தயாராக இருப்பதாகச் செய்தி.
பிறகென்ன கொண்டாட்டம்தான்:)
ஆண்டாள் திருவடிகள் சரணம்.


எல்லோரும் வாழ வேண்டும்.

15 comments:

Anonymous said...

வல்லிம்மா , அந்தக்கோலம் அருமை. நீங்க போட்டதா?

வல்லிசிம்ஹன் said...

மார்கழி வாழ்த்துகள்.
அம்மிணி! நான் போட்டது என்று சொல்ல ஆசைதான்;)
இல்லை வேற ஒரு மகராஜி போட்டதை நான் படம் எடுத்தது.
இப்பப் போடுவதெல்லாம் முழங்கால் தாங்கும் நேரம்தான்.
நன்றிம்மா.
வேணுமானால் தம்பட்டம் போடலாம்.இதைவிடப் பெரிய கோலம் நான் போட்டு இருக்கேன் என்று!!

Unknown said...

மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன்னு ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். முதல் தேதியே ஹனுமன் ஜெயந்தி. பிள்ளைகள் இருவரும் ஹனுமன் சாலிசா படித்துவிட்டுத்தான் பள்ளிக்கு கிளம்பினார்கள். மார்கழி 1 அனுமன் ஜெயந்தி, ஜனவரி 1 திருவாதிரை. சுப ஆரம்பம்னு வெச்சுக்கலாம்.

எல்லோருக்கும் அஞ்சனை மைந்தன் அருள் புரிய வேண்டுகிறேன்.

துளசி கோபால் said...

ஹேப்பி மார்கழி வல்லி.

passerby said...

இவ்வளவுதானா?

என்னவோ திருப்பாவை பற்றி சொல்வீர்கள். தெரிந்துகொள்ளலாம் என்றால், just happy new year என்ற மாதிரி முடித்துக்கொண்டீர்களே.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கள்ளபிரான்.இப்பதானே தெரியறது நீங்களும் திருநெல்வேலிக்காரர் என்று:)
திருப்பாவை சொல்பவர்கள் தனி. கேட்பவர்கள் வரிசையில் நான்.
ரசிக்கத் தெரியும். பாண்டித்யம் போதாது.
www.dhesikan.com போய்ப் பார்க்கலாம் நீங்கள். மதுரையம்பதி கோதாஸ்துதி சொல்லப் போகிறார். www.madhuraiyambathi.blogspot.com
ok ya!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல். உண்மைதான். சிவனின் அம்சம் ஆஞ்சனேயர்
என்று சொல்வார்கள். முதலில் இவரும், புது வருஷத்துக்கு அவரும் வருகிறார்கள். நல்லதே நடக்கட்டும்.

passerby said...

ஒருவர் என்னிடம் கேட்டார்: ஆழ்வார் பாசுரங்களை கேட்க விருப்பம் எங்கு கிடைக்கும் வ்லைபதிவுகளில்?

உங்களுக்குத் தெரிந்த வலைபதிவர்கள் யாராகிலும் பாசுரங்களை கேட்கும்படி தங்கள் பதிவுகளில் செய்திருக்கின்றனரா?

Geetha Sambasivam said...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்த் தொடங்கி விட்டது, வாழ்த்துகள் வல்லி, கோலங்களை விடவும் வானவில் தான் மனசைக் கவர்ந்தது. அருமை, நீங்க எடுத்த படமா???

வல்லிசிம்ஹன் said...

இல்லைப்பா கீதா. அது நான் எடுத்த படம் இல்லை. அந்தப் படங்களெல்லாம் இனிமேதான் தேடி எடுக்கணும்.
மார்கழி நல்ல படியாப் பீடோடு கடந்து நமக்கு நன்மை தரட்டும்.,

sathya said...

good blog

sathya said...

nalla blog

எல் கே said...

//சிவனின் அம்சம் ஆஞ்சனேயர்
என்று சொல்வார்கள். //

Hanmanuin Tayar Sivanidam Neya enaku magana vara vendum endru varam irunthatagavum, athan palane Siva amsathudan Anjaneyan aval vayitril Piranthdagavum Ganapathi Anna eluthina pusthagathil padichen

எல் கே said...

Miga arumai

Anonymous said...

இது அனுமார் ஜயந்தி ஸ்பெஷலா? ஆஹா, முருகர் கார்திகைல பவுர்ணமில பிறந்தா, கரெக்டா பதினைஞ்சு நாள் கழிச்சு, அமாவாசை மூல நக்ஷத்திரத்தில ஆஞ்சனேயரா? கிருத்திகை நக்ஷத்திரத்துக்கும் மூல நக்ஷத்திரத்துக்கும் எப்பவுமே இதே கேப்பு தான் ... அப்படின்னா அனுமார் ஜயன்தியிலையும் நக்ஷத்திரமும் நிலவும் ஒரே மாதிரி வருமே! எங்க வீட்டுல அனுமார் ஜயந்தி கொண்டாடுனதே இல்லை, அதனால இப்ப உங்க பதிவும் விக்கிபீடியாவும் பாத்துதான் இவ்வளவும் தெரிஞ்சுக்கிட்டேன்! நன்றி நன்றி!