நவராத்திரி நல் நாட்கள்
வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நவராத்திரி நல் நாட்கள்
+++++++++++++++++++++++++++++++
சின்ன கொலு, பெரிய கொலு, தெய்வங்கள் கொலு,
நாகரிக கொலு,
தீம் கொலு,
வீடு முழுக்க கொலு.
கடித அழைப்பு, ஈவை ட் அழைப்பு,
நாம் கடைகளில் போகும்போது சட்டென நினைவு வந்தவர்களாக
அழைக்கும் அழகு.
இந்தியா செல்லும்போதே கொலு ரிட்டன் என்று சொல்லப் படும் பரிசு பொருட்கள் வாங்கி வந்து விடுகிறார்கள்.
ஒன்பது நாட்களில் நாலு நாட்களாவது வீட்டில் சமைக்க வேண்டாம் என்று சொல்லும்படி
சாப்பாடு. ஒரு விருந்துக்கு 25 நபர்களாவது கலந்து கொண்டு
விவரங்கள் பரிமாறிக்கொண்டு
படங்கள் எடுத்து,அடுத்த நாளே முக நூலிலே யோ
வாட்சாப்பிலோ வந்து குவியும்படி
இந்த ஊர்மக்கள் கொண்டாடும் விதமே
அலாதி தான்.
நம் ஊரில் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நவராத்திரி நாயகிகள் வந்திருக்கும் போது வாசலை மூடக் கூடாது
என்பது பாட்டியின் கட்டளை.
உறவுகளும் அதிகம் என்பதால், அதிக தேங்காய்கள், வெற்றிலை,
மஞ்சள், பாக்கு, பழம் ,பூ என்று வீடே மணக்கும்.
மாமியாருக்கு ,சரஸ்வதி பூஜை அன்று ஒன்பது பெண்களுக்கு
கட்டாயம், ரவிக்கைத்துணி வைத்துக் கொடுக்க வேண்டும்.
அதுவும் அவர்கள் தைத்துப் போட்டுக் கொள்ளும்படி
கொடுக்க வேண்டும்.
என் சின்ன மாமியார் வீட்டில் அதுவே புடவையாகிவிடும்.
எனக்கு ஒன்று கட்டாயம் உண்டு.
ரங்காச்சாரி கடையும் ,நல்லி யுமாக வந்து குமியும்.
வீட்டில் லட்சுமி பூஜை தினமும் உண்டு.
அதற்காகவே ஒரு சுண்டலும், ஒரு இனிப்புமாகத் தினம் தயாராகும்.
வெள்ளிக்கிழமை என்றால் அப்பம் , சனிக்கிழமை என்றால் எள்ளுசாதம்,
இவ்வளவு நாட்களையும் தாண்டி விஜயதசமி அன்று நான் எல்லோர் வீட்டிற்கும் போய் வருவேன்.
இத்தனை விதமான நவராத்திரியை அனுபவிக்க வைத்த
தேவி களுக்கு என் நமஸ்காரங்கள் . கற்பகாம்பாளும், அலர்மேல்மங்கையும் பரிபூரணமாக எல்லோரையும் காப்பார்கள்.





8 comments:
கொலு நினைவுகள் சுவாரஸ்யம். அந்த 9 நாட்களும் பம்பரமாக சுழல வேண்டும். என்ன 'வைத்துக்' கொடுப்பது என்று நவராத்திரி ஆரம்பிக்கும் முன்னரே மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும். சென்ற முறை கொடுத்த மாதிரியே இருக்கக்கூடாது மாறுதலாக ஏதாவது என்று எண்ணம் மனதில் ஓடும்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கவனிக்க வேண்டும். முன்னதாக அவர்களை முறைப்படி அழைக்க வேண்டும். வந்த உடன் நம்மை இவர்கள் சரியாக கவனிக்கவில்லையோ என்கிற எண்ணம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! அந்தந்த நாளுக்கேற்றபடி சுண்டல் வகை...
9 நாட்கள் முடியும்போது முதுகு நிமிர்ந்து விடும்.
நானும் உங்கள் வீட்டு கொலுவுக்கு இரண்டுமுறை வந்திருக்கிறேன்! சிங்கம் இருந்தார். அவர் செய்த கனெக்ஷன் இல்லாத தண்ணீர் வரும் குழாய் பார்த்து வியந்தேன்!
கொலு நினைவுகள் அருமை.
//இத்தனை விதமான நவராத்திரியை அனுபவிக்க வைத்த
தேவி களுக்கு என் நமஸ்காரங்கள் . கற்பகாம்பாளும், அலர்மேல்மங்கையும் பரிபூரணமாக எல்லோரையும் காப்பார்கள்.
நினைத்தாலே இனிக்கும் நாட்கள்//
ஆமாம் , நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.
அன்பு ஶ்ரீராம். நலமுடன் இருங்கள். நவராத்திரி மாதமே சுவாரஸ்யமான மாதம். நீங்கள் சொல்லும் அத்தனையும் எல்லா வீடுகளிலும் உண்டு. ப்ளாஸ்டிக் டப்பாவில் ஆரம்பித்துப் புடவை பரிசளிப்பதில் முடிந்தது எங்கள் நவராத்திரி:)
உண்மைதான் மா ஶ்ரீராம். உபசாரம் மிக முக்கியம். பத்துப் பேர் சேர்ந்தாப்பில வந்துட்டா கொஞ்சம் தட்டுக்கிட்டுப் போயிடும். சரஸ்வதி பூஜை அன்னிக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் பாருங்கோ.!!!
உண்மைதான் ஶ்ரீராம். எவ்வளவு பழங்கள் வாங்கி வந்தீர்கள்!!! நினைவிருக்கிறதா. ஒரு தடவை நல்ல மழை வேற. கூடவே என் நாத்தனாரும் வருவதாகச் சொல்லி இருந்தார். கொஞ்சம் கலவரமாக ஆகிவிட்டது:) இப்போதும் அந்தக் குழாயும் மர பாரலும் (barrel)இருக்கு. அருமையான வேலைக்காரர். எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை.மிக மிக நன்றி மா.
அன்பின் தங்கச்சி கோமதி, வாழ்க வளமுடன். மகன் வீட்டிலும் கொலு ஏற்பாடுகள் நடக்கும் என்று நம்புகிறேன். நவராத்திரி நல் வாழ்த்துகள்.
Post a Comment