வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
வாழும் வரை. நிறை வாழ்வு அனைவருக்கும். கிடைக்குமா என்று தெரியவில்லை. இரண்டு மாதங்களாகக். காதில் விழுந்த
செய்திகள் அலைக்கழித்து விட்டன.
யார் வழியாக வந்தது என்ற ஆராய்ச்சி வேண்டாம்.
கணவனிடம். சண்டை. குழந்தை களிடம் மறைத்து
அளவில்லாத தூக்க மாத்திரைகளை விழுங்கி
மயக்கம் வரும் அவசரப் போலீசை. அழைத்து நினைவு இழந்து
விழுந்திருக்கிறாள்.
அவர்களுக்குக் குழந்தைகள் மூன்று. ஆம்புலன்சில் வந்த போலீஸ்
குழந்தைகளைத் தெரிந்தவர்கள்
வீட்டில் அழைத்துச் சொல்லி இருக்கிறார்கள் . அனைவருக்கும் அதிர்ச்சி.
24 மணி நேரம் தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதாக
உறுதி கொடுத்ததும் போலீஸ் குழந்தைகளை அவர்கள் பொறுப்பில்
விட்டது.
அந்தப் பெண்மணியின் கணவருக்கு ரெஸ்டிரைனிங்க் ஆர்டர். குழந்தைகள்
பக்கத்தில் வரக்கூடாது என்று.
அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு
ஒரு வாரம் சிகித்சை எடுத்த பிறகு
மன நல மருத்துவர் முழு அனுமதி கொடுத்த பிறகு
வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
அவளுக்குக் காவலாக அவளது 70 வயது தாயும் ,
உடல் நிலை சரியில்லாத தந்தையும்.
எல்லாவற்றுக்கும் அந்தப் பெண் சொல்லும் ஒரே
பதில் என் வளர்ச்சியை, முன்னேற்றத்தை
யாருமே விரும்பவில்லை என்பது தான்.
அந்தப் பெண்ணின் தொழில் சைக்கியாட்டிரிஸ்ட்.
இனி அவளால் அந்தத் தொழிலைத் தொடரமுடியுமா என்பது சந்தேகம்.
தொடரும்.
10 comments:
வெளிநாட்டுப் பெண்ணா? இந்தியாவில் நடந்த கதையா? இப்போதெல்லாம் மனோபலம் என்பதே யாரிடமும் இல்லை. கணவன், மனைவி சேர்ந்து வாழ ஆரம்பிச்சாச்சா? ஓர் மன நல மருத்துவர் கதியே இப்படின்னா? மத்தவங்க எந்த மூலை?
மன நல மருத்துவரே மனம் சோர்ந்து தவறான முடிவு எடுத்தால் என்ன செய்வது!
இந்த மாதிரி செய்திகள் கேட்டால் மனம் கஷ்டபடும்.
நம் தமிழ்ப் பெண் மா. பிடிக்காமல் கல்யாணம் செய்தாங்களாம். படிக்கத்தான் ஆசையாம். அவங்க மகன் அடுத்த வருஷம். கல்லூரி சேரணும். மன வியாதியும் ஆங்காரமும் தான் காரணம்.
அன்பின் கீதாமா,
ரொம்பப் படித்தாலும் இது மாதிரி ஆகிறது. தன் தப்பை உணராமல் , மூன்று குழந்த்ஹைகளையும் தவிக்க விட எப்படி மனம் வரும்?
அன்பின் வெங்கட்.
எப்பவோ பதிவித்து இருக்கணும். இந்தப் பெண்ணீன் செய்கையால் பல நட்புகள் பாதிக்கப் பட்டன.
இப்பொழுது. குழந்தை கள்
தந்தையுடன் இருக்கின்றனர். மூன்று மாதப்க்களுக்கு முன் நடந்தது. முதுகு வலியால். பொருந்த்இ. எழுத முடியவில்லை. உங்க மனசை நோக வைத்து விட்டேன். மன்னிக்கணும் பா.
அன்பின் கோமதிமா.
மேலே படிக்க ஆசையாம். படிக்க முடிய்வில்லைன்னு காரணம். முத்துப் போல மூன்று குழந்தை கள்., இப்போது அவதிப் படுவது பெற்றோர்.வாழ்க வளமுடன்.
இவர்கள் தங்கள் படிப்பை மனப்பாடப் பகுதியாகவே வைத்து விட்டார்கள் போல.. புரிந்து படிக்கவில்லையோ... எனக்கு உள்ளூரிலேயே இன்னொரு சைக்கியாட்ரிஸ்ட் பெண்ணின் கதை தெரியும். ஆனால் பெண்ணின் கணவரோடு நான் பணி புரிவதால் எழுத முடியாது!
அன்பின் ஶ்ரீராம் நலமுடன் இருங்கள்.
முந்தைய கதையின் தொடர்ச்சி தான்
கோர்வையாக எழுதவில்லை. நன்றி மா. இன்னும் பல செய்திகள். சொல்ல மனம் வரவில்லை.
ஓ இதுதான் அடுத்த பகுதியின் முந்தைய பகுதியா....
அதே பெண்மணிதான் போல இல்லையா?
மனநலம் படித்தவர்களுக்கும் மன நலம் சரியில்லாமல் ஆகும்தான் அவர்களும் மனிதர்கள்தானே. ஒரு சிலருக்கு தன் கேஸ்களைப் பார்த்து பார்த்தே இப்படியான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
Compassion fatigue என்றமனச்சோர்வு. விஷயம் என்னவென்று ஆழமாகத் தெரியாமல் சொல்ல முடியாதே அம்மா இல்லையா?
அப்பெண் மீண்டு வர வேண்டும்.
கீதா
மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
சைக்கியாட்டிஸ் மற்றவர்களுடைய கதைகளை கேட்டுக்கேட்டு வைத்தியம் பார்ப்பதில் சிலருக்கு நாளடைவில் அவர்கள் மனம் மாறிவிடுவதாகவும் செல்வார்கள் .எது எப்படியோ இவர்கள் குழந்தைகளுக்காக நலமடைய பிரார்த்திப்போம்.
Post a Comment