வல்லிசிம்ஹன்
மருத்துவமனையில் இந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்து
அறையை விட்டு வெளியே வராமல் யாரையும்
பார்க்காமல் இருக்க வைத்தார்கள்.
ஒரு வாரம் கழித்து, அவளது சகோதரனுடன்
பேசலாம் என்று அனுமதி தர,
அவள் பேச மறுத்துவிட்டாள்.
அவளைப் பொறுத்தவரை அனைவரும் அவளுக்கு எதிராகச் செயல் படுபவர்கள்.
இது ஒரு விதமான மன நோய்.
தன் தாயையே மனம் போனபடிப் பேசி நோக வைத்திருக்கிறாள்.
இந்த நிலமை மாற மாதங்கள் ஆகும் என்றும்,
அவளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகளை அவளுடன் இருக்க அனுமதிப்பது உசிதம் இல்லை.
தகப்பனாருடன் இருக்கட்டும் என்று
உத்தரவிடப் பட்டிருக்கிறது.
இந்த மன சஞ்சலமும் வெறுப்பும் வெகு வருடங்களாக
அவளிடம் வளர்ந்து, கணவனைப் பிரியக் காரணமாக
இருந்திருக்கின்றன.
நவராத்திரியை ஒட்டிக் கோவிலுக்குப் போயிருந்தபோது
இந்தப் பெண்ணின் கணவனும் குழந்தைகளும்
வந்திருந்தார்கள்.
மனம் அத்தனை வேதனைப் பட்டது.
இறைவன் தான் இந்தக் குழந்தைகளுக்கு
ஆதரவாக இருக்க வேண்டும். பெரிய பெண்ணின்
முகத்தில் சலனமே இல்லை.
அவர்களுக்கும் கௌன்சலிங்க் நடக்கிறது.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.
8 comments:
இது வேறு சம்பவமா? ஏன் இப்படி எல்லாம் நடக்கின்றன? ஏன் இந்த மன அழுத்தங்கள்?
அம்மா வாசிக்கவே மனது வேதனை அடைகிறது. அப்பெண்ணிற்கு ஏன் இந்தப் பிரச்சனை? அவரது மன அழுத்தத்திற்குக் காரணங்கள் இருக்கும். சிறு வயதில் அல்லது அதன் பின் என்று ஏதோ நிகழ்வு அதிலிருந்து சில ஸ்கிரிப்ட்கள் அவள் மனதில் பதிந்து போயிருக்கும்.
நல்லபடியாக ஆகி குடும்பத்தோடு இருக்க வேண்டும்.
கீதா
Oh! My God!
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
வாழ்க வையகம்!..
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
Thanks for your dedication to providing quality content. It's truly appreciated.
Grateful for your ability to make complex ideas accessible. Well done!
Post a Comment