இந்தப் பாடல்களை அனுப்பி வைத்தவர்கள் பேத்திகளும் ,பேரனும். மார்ச் 5 ஆம் தேதி தாத்தா பிறந்த நாளுக்கு
நினைவாக எனக்கு அனுப்பி வைத்த செல்வங்களுக்கு மிக மிக நன்றி.
அதே சமயம் அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்பதையும் உணர்த்தியது இந்தப்
பாடல்கள்.
நிறைவான வளத்துடனும் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன்
எங்கள் ஆசிகளுடன்
நாங்கள் பெற்ற செல்வங்கள் ,இன்னும் எல்லோரும்
என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
9 comments:
சாருக்கு வணக்கங்கள்.
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உங்கள் ஆசிகளை எல்லா நலத்தையும் , வளத்தையும் கொடுக்கும்.
நாங்களும் உங்கள் இருவரையும் வணங்கி ஆசிகள் பெற்றுக் கொள்கிறோம்.
பேரன், பேத்திகள் அனுப்பி வைத்த பாடல்கள் நன்றாக இருக்கிறது.
சிங்கம் அனைவரையும் வழி நடத்திச் செல்வார்...
பேரன் பேத்திகளுக்கு வாழ்த்துகள். அன்புநிறை உள்ளங்கள்.
அனைவரின் நலனுக்கும் பிரார்த்திக்கிறோம். சிங்கம் தெய்வமாக இருந்து அனைவரையும் காத்து ரக்ஷிப்பார்.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
சாரும் நானும் என்றும் எல்லோரும் நலமுடன்
இருக்க ஆசிகள் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
அவருக்கு வேண்டாதவர்களே கிடையாது.
எல்லோரிடமும் தோழமை பாராட்டுவார்.
நீங்களும், குழந்தைகளும், அவகள் குழந்தைகளும்
என்றும் நலமுடனிருக்க இருக்க வேண்டும்மா.
அன்பு தனபாலன்,
உண்மைதான் ராஜா.
அவருக்கு அனைவரையும் பிடிக்கும். நன்றி மா.
அன்பின் ஸ்ரீராம்,
பேரங்களும் பேத்திகளும் தான் இப்போது
வாழ்க்கைப் பிடிப்புக்குக் காரணம்.
அவர்கள் இந்த அளவுக்குப் பாட்டுக் கேட்பார்கள்
என்று தெரியாது.
அதுவும் குட்டிப் பேரன் கூட
இசையில் இவ்வளவு ஆர்வம் காண்பிப்பது
மிக நன்மை. உங்கள் ஆசிகளுக்கு நன்றி மா.
அன்பு கீதாமா,
எல்லோரும் சுகமாக நோயில்லாமல் இருந்தால் போதும்.
உங்களுக்கும் மாமவுக்கும்
எங்கள் வாழ்த்துகளும் ஆசிகளும்..
அவரது ஆசிகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும்...
அலைபேசி வழி பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
Post a Comment