Blog Archive

Thursday, March 04, 2021

Venkatesh Bhat makes Hayagreeva Maddi | hayagreeva maddi recipe in tamil...

 மார்ச் 5 ஆம் நாள் சிங்கம் பிறந்த தேதி. அவரை ஈன்ற அன்னைக்கும் , அவரது அன்பு சகோதரிகளுக்கும் என் நமஸ்காரங்கள்.
எங்கள் குடும்பம் தழைக்க பெரியோர்கள் ஆசிகள் 
என்றும் நிலைக்க வேண்டும். அவருக்கு இணையத்திலேயே தித்திப்பு வழங்கலாம் என்று
வெங்கடேஷ் பட்டின் செய்முறையைப் 
பதிவிட்டேன். அருமையாகத் தான் இருக்கிறது.

10 comments:

ஸ்ரீராம். said...


//மார்ச் 5 ஆம் நாள் சிங்கம் பிறந்த தேதி. //

ஆஹா...   அப்படியா?  என் மானசீக நமஸ்காரங்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஆகா.. அருமையான இனிப்பை பகிர்ந்துள்ளீர்கள். வெங்கடேஷ் பட்டின் திறமையான பேச்சின் ஊடே கமகமக்கும் உடுப்பி கோவிலின் இனிப்பின் செய்முறையை உள் வாங்கி கொண்டேன். கடலைப்பருப்பில் தேங்காய் பூவையும் சேர்த்து அவர் செய்த இனிப்பு வாசமாக நன்றாக உள்ளது.
இனிப்பை சுவைக்க நாவும் ஊறுகிறது. அருமையானதொரு நல்ல நாளும் அதுவுமாக இந்த இனிப்பை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Angel said...

எனது  மானஸீக நமஸ்காரங்களும் .காணொளி சென்று பார்க்கிறேன் .

கோமதி அரசு said...

சாருக்கு என் வணக்கங்கள்.
நினைவுகள் தரும் இனிமை. உடுப்பி கண்ணனுக்கு பிடித்த பிரசாதம் அருமை.

கோமதி அரசு said...

குடும்பம் தழைக்க பெரியோர்களின் ஆசியும், சாரின் ஆசியும் எப்போதும் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,
மிக நன்றிமா.

எல்லோருக்கும் அவரது ஆசிகள் கிடைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
உங்கள் வார்த்தைகளே அன்பில் தோய்த்த ஒரு இனிப்பு.

நம் நண்பர்களின் கனிவு தான் நாம் காணும் மகிழ் உணவு.
இத்தனையும் அவரும் இருந்து
பார்த்திருக்கலாம்.
பரவாயில்லை. நல்ல மோட்சம் கிடைத்து நன்றாகத் தான் இருப்பார்.
எல்லாக் குழந்தைகளையும் அவரது ஆசிகள் ரட்சிக்கட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல் நன்றி கண்ணா.
நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
உங்களுக்கே வேலை முடிந்து வர நேரமாகி விடுகிறதே.
அப்பாக்களின் ஆசி,
மகள்களுக்கு ஸ்பெஷலாக உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,
சாருக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்.
நிறைய எடுத்துக் க்கொள்ள மாட்டார்.
சிறிதே ருசித்து சாப்பிட்டு மகிழ்வார்.
அதற்காகத்தான் இந்தப் புதிய ,
கண்ணன் இனிப்பைப்
பகிர்ந்தேன்.
என்றும் இறைவனுடன் உறையும் பாக்கியம் கிடைத்தவர்கள்
நம்மையும் காப்பார்கள். மிக மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.

வெங்கட் நாகராஜ் said...

மானசீகமான வணக்கமும் நமஸ்காரமும்.

ஹயக்ரீவா - எனது நண்பர் வீட்டில் அடிக்கடி செய்வார்கள். ருசித்திருக்கிறேன் - செய்ததில்லை.