Blog Archive

Sunday, March 14, 2021

மலேஷியா வாசுதேவனின் குரலில்....


இவரின் குரல் மறக்க முடியாது. அதன் திண்மை
வேறு பட்டு ஒலித்தது.

எஸ்பி பியின் இனிய இளைய குரல் ஒரு புறம்.
டி எம் எஸ் குரலில் மயங்கியவர்களுக்கு அது 
ஒரு மாற்றம். 
கூடவே ஒலித்து வந்தது மலேஷியா வாசுதேவனின் 
திடமான  ஒலி.
ஒரு டி எம் எஸ்ஸுக்கு ஒரு சீர்காழி, ஒரு 
பி பி ஸ்ரீனிவாஸ் மாதிரி.

70 களில் எல்லாம் இசைக் கோலம் தெளித்த
இவர்களின்  இசைச் சேவை
மறக்க முடியாதது. நன்றி வாசுதேவன் சார்.

8 comments:

கோமதி அரசு said...

மலேஷியா வாசுதேவன் பாடிய இந்த பாடல்கள் முன்பு அடிக்கடி வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள்.அவரின் வெள்ளைப் புறா ஒன்று என்ற பாடல் பிடிக்கும் .


KILLERGEE Devakottai said...

இதில் முதல்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது அம்மா.

நெல்லைத் தமிழன் said...

80களில் என்று சொல்லுங்கள். மலேஷியா குரல் எனக்குப் பிடிக்கும். காலம் மாறியிருந்ததால், டி.எம்.எஸ் பாடவேண்டிய இடங்களில் இவரின் குரலை உபயோகித்தார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
வெள்ளைப்புறா எங்கள் சிங்கத்துக்கும் மிகப் பிடித்த
பாடல். வண்டியில் போகும்போது அந்தப் பாடலைப்
போட்டுவிடுவார்.
அருமையான குரலில் நம்மை மகிழ வைத்தவர் , மலேஷியா
வாசுதேவன். இன்னும் நிறையப் பாடல்கள்
மிகவும் இனிமையாகவும் கம்பீரமாகவும்
பாடி இருப்பார்.
ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்'பாட்டும் நன்றாக இருக்கும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஸம்சாரம் அது மின்சாரம் படப்பாடல்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

அந்தப் பாடலில் ஸ்ரீதேவின் முக பாவனைகளும்
அருமையாக இருக்கும்.
ரஜினிக்கு வாசுதேவனின் குரல் நல்ல பொருத்தம்.
உங்களுக்கும் பிடித்தது மிக மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
திரை இசைக்கு 75 களில் வந்தார் என்று யூகிக்கிறேன்.
என் சித்தப்பா பெண்ணின் கணவரும் இவரது மேடைக்கச்சேரிகளில்
பாடுவார்.
அவர் பெயரும் வாசுதேவன்.
நல்ல வேலையைக் கவனிக்காமல்
பாட்டில் கலந்து
இரண்டிலும் பளிச்சிடாமல் சென்றார்.
பாவம் அந்தக் குடும்பம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. மலேஷியா வாசுதேவன் குரலில் பல பிரபலமான பாடல்களை நானும் கேட்டு ரசித்துள்ளேன். இப்போது நீங்கள் பகிர்ந்த மூன்று பாடல்களையும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். அவர் குரல் எல்லோருக்கும் பொருத்தும்படி இருக்கும். நல்ல இனிமையான குரல் வளத்துடன் சிறந்த நடிகரும் கூட.. அவர் மகனும் நன்றாக பிரபலம் ஆனார்.அவரும் நிறைய படத்தில் நடித்தார்.. இல்லையா? இனிமையான பாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.