Blog Archive

Saturday, March 13, 2021

Assignment Asia: Elephants of Kerala

8 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான காணொளி.  யானைகள் எப்போதுமே சுவாரஸ்யம்தான்.  வனங்களில் அவை மனிதர்களைத் துரத்தும் விடியோக்கள் கூட அடிக்கடி பார்ப்பேன்.  அவைகளை சீண்டும் மனிதர்களை பார்த்தால் கடுப்பு வரும்.  இதே கேரளாவில்தான் யானைகள் மதம் பிடித்து அலையு காட்சிகளும் அதிகம்.  மலையாள பாகனோடு பேசும் யானை - ஸ்ரீரங்கம் ஆண்டாளையும் அவள் பாகனையும் நினைவு படுத்தியது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்மா.

நானும் தேடிதேடி யானை வீடியோ பார்ப்பேன்.
அலுப்பதே இல்லை.
யானைக்கு உண்டான மரியாதையைக் கொடுத்துவிட்டால்

அவைகள் நம்மைத் துன்புறுத்தாது என்றே நம்புகிறேன்.
தோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அவை இருக்கின்றன.
எப்போது பார்த்தாலும் நின்று கொண்டே, நடந்து கொண்டே இருப்பது
கடினமாக இருக்குமோ என்று தோன்றும்.

இந்தக் காணொளி பிடித்ததால் பகிர்ந்தேன் மா.
உங்களுக்கும் பிடித்தது சந்தோஷம்.

வெங்கட் நாகராஜ் said...

ஸ்வாரஸ்யமான காணொளி. யானைகளைப் பார்க்கப் பார்க்க ஒரு ஆனந்தம் மனதில் உண்டாகும்.

நெல்லைத் தமிழன் said...

இந்தப் பகிர்வு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ப்ரம்மாண்டமான யானைகள். அவைகள் திரும்பவும் அவைகளின் கோவிலுக்குச் செல்லும்போது மழை தொடங்கியது (சாலையில் நீர்) மனதுக்கு நிறைவாக இருந்தது.

சென்ற முறை நவதிருப்பதி சென்றிருந்தபோது, வேகாத வெயிலில் ஒரு திருப்பதியிலிருந்து இன்னொரு திருப்பதிக்கு சாலையில் பெரிய யானையைக் கூட்டிக்கொண்டு சென்றனர். தார்ச்சாலையில் இப்படி நடக்க விடுகிறார்களே என்று நினைத்தேன் (படங்களும் எடுத்தேன்). அதுக்கு இந்தக் காணொளி எவ்வளவோ பரவாயில்லை.

உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். சொக்கலால் பீடி ராம்சேட், வருடத்துக்கு ஒரு முறை யானைக்கு அல்வா கொடுப்பார்.

கோமதி அரசு said...

யானைகளை பார்க்க ஆனந்தம்.
உணவு கொடுக்கும் போது எல்லோர் முகத்திலும் பொங்கும் மகிழ்ச்சி பார்க்கவே அருமை.
கண்ணுக்கு இனிமையான இயற்கை யானைகள் அத்தனையும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம் மா.
யானையை அடித்த காட்சியைப் பார்த்து
மனம் வலித்தது.
அதற்கு மாற்றாக இந்தக் காணொளியைப்
பார்த்தேன்.உங்களுக்கும் பிடித்தது தான் மகிழ்ச்சி..

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

அச்சோ பாவம் அந்த யானைகள். அவை மந்து வைத்தால் நொடியில் சூறையாடி விடமுடியாதா?

எனக்கென்னவோ என் கணவர் நினைவு வரும்.
நல்ல வலிமை ,திறன் எல்லாம் இருந்தும்,
தான் வேலை பார்த்த இடத்தில் 17 வயதிலிருந்து உழைத்து
அனைவருக்கும் பணிந்தே சேவை செய்தார்.
77 இல் வேலையை ராஜினாமா செய்த போது
மாமியார், மாமனார் ரொம்ப நொந்து
போனார்கள்.
ஆனால் என் நம்பிக்கையை நான் விடவில்லை.
அது போல ஒரு தைர்யத்தைக் கொடுத்தது
அவரது பொறுமை.
என்ன வருத்தம் நேர்ந்தாலும் ,என்னையும் தேற்றித் தன்னையும் மீட்டு விடுவார்.

அது போல இந்த யானைகளோ மற்ற மிருகங்களோ,
தன் வலிமை பார்க்காமல் நம்மிடம் அடங்கிப் போகின்றன.

நாம் தான் அவற்றைப் போற்ற வேண்டும்.
மிக நன்றி மா.

சொக்கலால் ராம்ஸேட் பீடி உரிமையாளர்
யானைக்கு அல்வா கொடுப்பது எனக்குத் தெரியாது மா.
எவ்வளவு கொடுப்பாரோ.
அதன் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே !!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன்.
அப்படியே என் மனதைப் பிரதிபலிக்கிறீர்கள்.

யானைமேல் சிறு வயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சவாரி செய்தது நினைவில்.

பாதங்களில் அதன் கூரான மேனி முடி குத்தினாலும்
அந்தத் தெரு முழுக்கப் போய் வந்தேன்.
ஆறு வயது இருக்கலாம்:)
இன்னும் மறக்கவில்லை.
சிறந்த உயிர் யானை. மிக நன்றி மா.