Blog Archive

Friday, March 19, 2021

போட்டாச்சு ஊசி.,,,........



வல்லிசிம்ஹன்

கொஞ்சம் தாமதம் தான். இருந்தாலும் மிக வேகமாகத் தடுப்பூசி
போடுவது தொடர்கிறது.
ஃபைசர் தடுப்பூசியும் மடோர்னாவும் போடப் படுகின்றன.
நமக்கு வேண்டியதைச் சொல்லி பதிவு செய்து கொண்டால்

ஐந்து நாட்களுக்குள் மூன்று இடங்களில் கிடைக்கும்படி 
ஏற்பாடும் செய்து விட்டார்கள்.

நல்ல விதமாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட 
வணிக வளாகத்தில் ஆறடி ,ஆறடித் தொலைவில்
வரிசை துரிதமாக நகர, உள்ளே நுழைந்த 
இருபதாவது நிமிடம் வெளியே வந்தாகி விட்டது.

முகத்தில் அணிந்த கவசத்தை யாரும் கழற்றவில்லை.
பத்தடிக்குப் பத்தடியில்
உதவி செய்ய ஆட்கள். நம் வயது, இருப்பிடம் எல்லாவற்றையும் 
உறுதி செய்து கொண்டு ஏற்கனவே 
கொடுக்கப்பட்ட எண்கள் பிரகாரம் 
உட்கார வைத்து ஊசியும் போட்டு விட்டார்கள்.

உடனே எழுந்து சென்று குறிப்பிடப்பட்ட இடத்தில்
15 நிமிடங்கள் உட்கார்ந்து,  ஊசிக்கு ஏதாவது 
reaction  இருக்கிறதா என்று கவனித்துவிட்டு 
எழுந்து வந்துவிடலாம்.

மிக வலித்தால் இந்த ஊர் வலி நிவாரணி எடுத்துக் 
கொள்ளலாம் என்று முதலில்  சொல்லி விட்டார்கள்.
இன்னோரு செயலி வழியாக நாம் எப்படி இருக்கிறோம் 
என்று விசாரித்துக் கொண்டு
48 மணி நேரத்தில் சரியாகி விடும் என்றும் 
சொல்லி இருக்கிறார்கள்.
இப்பொழுதுதான் வலி தெரிகிறது.
பரவாயில்லை இது பெரிய விலை இல்லை.
கடவுள் என்றும் காப்பாற்றுவார்.

நம் ஊரிலும்  எல்லோருக்கும் சீக்கிரமே
தடுப்பூசி கிடைக்க வேண்டும். 
இங்கே 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரில் 1 ஆம் தேதி
முதல் தடுப்பூசி கொடுக்கப் படுவார்கள்.
நலமுடன் இருப்போம்.

20 comments:

கோமதி அரசு said...

தடுப்பூசி போட்டுக் கொண்டது நல்லது.
எனக்கும் முன்பதிவு செய்து விட்டார்கள்.
நாளை போட போக வேண்டும்.

KILLERGEE Devakottai said...

நலமே விளையட்டும் அம்மா

கோமதி அரசு said...

வரிசையில் நிற்க வேண்டுமா?
கீழே இருக்கும் படத்தில் கூட்டம் நிறைய இருக்கே வரிசையில்!

வெங்கட் நாகராஜ் said...

போட்டாச்சு ஊசி! நல்லதும்மா.

இங்கேயும் நிறைய பேருக்கு ஊசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகை அதிகமென்பதால், அனைவருக்கும் ஊசி போட அதிக மாதங்கள் எடுக்கும். இப்போதைக்கு தில்லியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், நாங்க இன்னமும் முடிவெடுக்கவில்லை. இங்கேயும் அறிந்த, தெரிந்த சிலர்/பலர் ஊசி போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். பார்ப்போம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்லதுதான். தடுப்பூசி போட்டுக் கொண்டமைக்கு வாழ்த்துகள். நன்கு ஓய்வு எடுங்கள். நடப்பவை அனைத்தும் நலமாக நடக்க நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

அங்கு ஒரு டோஸா, இரண்டு டோஸா?  இங்கெல்லாம் இரண்டு டோஸ்!  இருபத்தெட்டு நாட்கள் கழித்து இரண்டாவது தவணை போடவேண்டும்.  சமீபத்தில் சென்னை கே கே நகர் மருத்துவ மனைக்குச் சென்று ஊசி போட்டுக்கொண்ட உறவினர் 28 நாட்கள் அட்ஸ்ப்பித்து இங்குதான் வரவேண்டும்? என்று கேட்டிருக்கிறார்.  அப்படிச் சொல்ல முடியாது.  ஸ்டாக் இருந்தால்தான் போடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்!

ஸ்ரீராம். said...

இன்னொரு சம்பவம்.  எனக்குத் தெரிந்த மருத்துவர் கோவிஷீல்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.  இரண்டாவது தவணைக்குச் சென்றபோது அது தீர்ந்து விட்டது, கோவாக்சின்தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.  இதுவும் அரசு மருத்துவமனைதான்.  அப்புறம் அங்கே இங்கே தேடி ஒரு கோவிஷீல்ட் வாங்கி போட்டு வந்திருக்கிறார்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. நலமே நடக்கும்.
வாழ்க வளமுடன். ஊசி போட்டுக் கொண்ட பிறகு செய்தி சொல்லவும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
நன்மைதான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,'
வாழ்க வளமுடன்.

நாங்கள் சென்ற போது இவர்கள் எல்லாம்
வெளீயே வந்தாச்சு.
ரொம்ப வேகமா எல்லாம் நடந்தேறியது.
அந்தப் பதினைந்து நிமிட தாமதம்
நம் நன்மைக்கே. சுலபமாகச் செய்து விடலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

ஆமாம் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதுதான்.

ஆனால் வேலைக்குச் செல்லும் உங்களை மாதிரி ஸ்ரீராம் மாதிரி இருப்பவர்களையும் அரசு
கவனிக்க வேண்டும்.
எப்படியோ ஊசி போடும் வரையிலும் , அதற்குப் பின்னாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது
நம் பொறுப்பு.
பத்திரமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நீங்கள் தான் வெளியே போகவே இல்லையே.
உங்கள் சௌகரியப்படி செய்யுங்கள். பகவான் இருக்கார்.
வீட்டிற்குள் யாராவது வந்தால் அவர்களும் சுத்தமாக இருந்தால் போதும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோ கமலாமா,

நானும் மிக மிக யோசித்துக் கடைசியில் ஒத்துக் கொண்டேன்.

நமக்கெல்லாம் அம்மை தடுப்பூசியிலிருந்து எல்லாம்
தடுப்பூசிகளும் பள்ளி நாட்களில் போட்டுக் கொண்ட பழக்கம் இருக்கிறதே.
இதுவும் நன்மைக்குத் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் ,
வாழ்த்துகளுக்கு நன்றி. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

உறவினர் 28 நாட்கள் அட்ஸ்ப்பித்து இங்குதான் வரவேண்டும்? என்று கேட்டிருக்கிறார். அப்படிச் சொல்ல முடியாது. ஸ்டாக் இருந்தால்தான் போடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்????????????
என்னப்பா இது. அனியாயமா இருக்கே.
இரண்டாவது டோஸ் தான் முக்கியம்.

இங்கே ஏப்ரில் 8 வரச் சொல்லி இருக்கிறார்கள்.
அசதியாகத் தான் இருக்கிறது.
இதோ போய் படுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
ஜீவி said...

வாழ்த்துக்கள். போகப் போக எல்லாம் சரியாயிடும். Take care.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி ஜீவி சார்.
எல்லோருக்கும் உண்டானதே. நன்மை
விளையட்டும்.