Blog Archive

Tuesday, March 09, 2021

சொதப்பலானாலும் ஒரு ருசிதான்:)

பாதாம் பிஸ்தா,பால், நெய் எல்லாம் ஒவ்வொரு கிண்ணம்
கடைசியில் அல்வா வந்தது. ஸோஹன் இல்லை:)
வறுத்து முடித்ததும் சர்க்கரை நெய்  சேர்த்து
கோதுமை மாவை நெய்யில் வறுத்துக் கொண்டு

வல்லிசிம்ஹன்
ஒரு கப் சர்க்கரை.

எல்லாம் சரிதான் சோஹன் அல்வா சொல்லியாச்சு.
நமக்கும் சரியா வந்தால் தானே நம் வார்த்தை நிச்சயமாகும்னு.... ஒரு தடவை, 
இரண்டு தடவை செய்தேன். வந்தது என்னவோ அல்வாப் பதம தான். முறுகவும் இல்லை.
கடிக்கவும் இல்லை.

காத்திருந்து அவள்(  Sheethal) நடை பயிற்சிக்குச் செல்லும் வேளையில் 
பிடித்து விட்டேன்.
ஆறடி தள்ளி நின்று அவள் சொன்ன பதில்.

நெய் விட்டு செய்யக் கூடாதாம்.
எண்ணெய் விட்டு செய்ய வேண்டுமாம்.

தலையில் தட்டிக் கொண்டேன்.:(
சொல்வதை நேராகச் சொல்லக் கூடாதோ?

ஞாயிறு செய்த அல்வாப் படங்களைப் 
பதிவிடுகிறேன்.
ஒரு கிண்ணம் கோதுமைமாவை பழுப்பு நிறத்தில் வறுத்துக்கொண்டு சர்க்கரை,
நெய், பாதாம்,பிஸ்தா பருப்புகளைத் தாராளமாகத் தூவினால்

அடுப்பில் வாணலியிலிருந்து அழகாகச் சுருண்டு வந்து விட்டது.
முறுகலாக ஆகவில்லை.
ஏக தேச வரவேற்பைப் பெற்றாலும் எனக்கு வருத்தம் தான்.

இந்த மாத சர்க்கரைக் கோட்டா ஓவர்.
இனி அடுத்த மாதம் தான். பார்க்கலாம்.

தப்பு ரெசிப்பி கொடுத்ததற்கு மன்னிக்கவும்.
வாழ்க வளமுடன்.😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

18 comments:

கோமதி அரசு said...

படங்கள் அழகாய் இருக்கிறது.
அல்வா பதம் என்றாலும் நல்லதுதான்.
வரவேற்பைப் பெற்று விட்டதே அது போதும் மகிழ்ச்சி.

Avargal Unmaigal said...


//எண்ணெய் விட்டு செய்ய வேண்டுமாம்.///

எந்த எண்ணெய்ன்னு சரியாக கேளுங்க அப்புறம் செஞ்சதற்கு அப்புறம் சொல்லுவாங்க இந்த எண்னெய் உபயோக்கிக்க கூடாதுன்னு

நெல்லைத்தமிழன் said...

சர்க்கரை கோட்டா உங்களுக்கா இல்லை குடும்பத்துக்கே அவ்வளவுதானா (ரொம்ப ஜாக்கிரதையா இனிப்பு உபயோகம் கட்டுக்குள் வைத்திருக்க)

நெய் சேர்த்தால் சோஹன் அல்வா வராதா?

அல்வா அழகாக வந்திருக்கு. படங்கள்தான் புதிர் போல ஆர்டர் மாற்றி வந்திருக்கு. பல நாட்களுக்குப்பின் இனிப்பு செய்முறை

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன்.
ஏமாந்துதாம்மா போனேன்.

இணையத்தில் சென்று பார்த்தால் முறையே வேறு மாதிரி இருக்கு.
நான் சொன்ன விதத்தில் குழந்தைகள் '
கற்கண்டு மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
அல்வா வந்தது.
சரி போ.இன்னிக்கு வாய்த்தது இதுதான் .
அவர்களுக்கு மிகப் பிடித்தது. அது போதும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
ஹாஹ்ஹா. ஆமாம் பா. அவங்க இந்தியில் பேசினதை
நான் தப்பா புரிந்து கொண்டேனோ?

நெய் காண்பித்தார்களே!!!!
இங்கே அனேகமாக கார்ன் ஆயில் தானே
உப்யோகப் படுத்துகிறார்கள்.
இல்லாவிட்டால் ஆலிவ் எண்ணெய்.
எனக்குப் புரிபடவில்லைப்பா.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

ருசி நன்றாக இருந்து இல்லையா?  விடுங்கள் அம்மா..  நாம் இதற்கு வேறுபெயர் வைத்து விடுவோம்.சோஹன் அல்வா பெயர் நல்லாயில்லை.  நாம் இதற்கு மகிழ்ச்சி அல்வா என்று பெயர் வைத்து விடுவோம்!

Geetha Sambasivam said...

எண்ணெயா? எண்ணெய்னா எனக்கு வேண்டாம். :)))) நெய் என்றால் ருசியே தனி. எப்படியானால் என்ன? எல்லாம் போட்டிருக்கும்போது செலவாகிவிடும். கவலையே படாதீங்க. இங்கே கூரியரில் அனுப்பிச்சுடுங்க. :)))) ஸோஹன் ஹல்வா சாப்பிட்டே எத்தனையோ வருஷங்கள்! இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அல்வா பதத்துடன் நன்றாக துண்டுகளாக வந்துள்ளது. இது போதுமே.. அதுவும் வீட்டில் அனைவரும் நன்றாக உள்ளதென்ற பாராட்டு அல்வா சுவையை விட இனியதுதானே..! வாழ்த்துகள் சகோதரி. ஆனாலும் உங்களின் விடாமுயற்சி எண்ணம் பாராட்டத்தக்கது. மைசூர்பாகு கெட்டியாகி இறுகாமலிருக்க தளர்வான மைசூர்பாகாக வர நெய் சேர்க்காமல், எண்ணெய் நிறைய கலக்கிறார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இதில் நன்றாக இறுகி வர எண்ணெய் செர்க்க வேண்டும் போலிருக்கிறது. ஸ்வீட் செய்முறைகளில் என்னவொரு மாற்றங்கள்.. அடுத்து சோஹன் அல்வா பக்குவம் மிக சிறப்பாக அமைய பிரார்த்திக்கிறேன். நன்றாக வரும். விரைவில் படங்களுடன் செய்முறைகளை போட்டு அசத்துங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹஹா. அன்பு முரளி.
படங்கள் எடுத்து விட்டேன். முன்ன மாதிரி
அழகாப் போடத் தெரியவில்லை.
கொஞ்சம் கவனம் வைத்தால் போட்டிருக்கலாம்.
ஆமாம் இந்த அல்வா நன்றாகத் தான் வந்தது. காலியும் ஆகிவிட்டது.

இங்கே இருவரும் Cautious clay.
எனக்கு சர்க்கரை இருப்பதால் மகள் சாப்பிட மாட்டாள். முன் ஜாக்கிரதை.
வெயிட் லாஸ்க்காக மாப்பிள்ளை சாப்பிட மாட்டார்.

குழந்தைகள் ரொம்ப சமத்து. அம்மா அப்பா வார்த்தைக்கு
மதிப்பு. டார்க் சாக்கலேட் அண்ட் சீஸ் அடித்துத் தள்ளுவார்கள்:)

மிக மிக நன்றி மா.

செய்முறையே தப்பு மா. இணையத்தில் பார்த்தேன்.
கரக் ஹல்வா என்ற பெயரில் இருக்கிறது.
ஒரு மணி நேரம் நிக்கணும். நெய் விட்டே
செய்யலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். எத்தனை அருமையான பெயர்.
மகிழ்ச்சி அல்வா!!!! ஆஹா. நன்றாகத்தான் இருக்கிறது!!!!!!!
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இப்படின்னா சொல்லணும்!!!!
நேத்திக்கே தீர்ந்து போச்சு. அது கவலை இல்லை. தப்பா ஒரு ரெசிப்பி சொன்னேனேன்னு'
வருத்தமா இருந்தது.
யூ டியூபில் அழகாப் போட்டு இருக்கிறது.
மைசூர்ப் பாகு மாதிரி செய்ய வேண்டுமாம். மைதா மாவு சேர்த்துக் கொண்டு இன்னும்
சர்க்கரை கூட சேர்த்து
பொங்கி வரும்போது கொட்ட வேண்டுமாம்.
சரி போ மீண்டும் தெம்பு வரும்போது செய்யலாம்னு விட்டு விட்டேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி சகோதரி

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
ஆமாம் அதுதான் உண்மை.
இனிப்பான அனுபவம் என்று வைத்துக் கொள்ளலாம்.

அவ்வளவு சுலபமாக இந்த அல்வாமிட்டாயைச் செய்ய முடியாது
என்று புரிகிறது.

மைசூர் பாகு கெட்டிப்பட கம்பிப் பாகு எவ்வளவு
முக்கியமோ,
அதே போல இந்த அல்வாவிலும் முறுகல் வேண்டும்.

சிரமப் படாமல் செய்ய முடியாது.
செய்யலாம். புரிதலுக்கு மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நன்றாகவே இருக்கிறது. நெய் சேர்த்துச் செய்யும் போது சுவை வேறு தான்.

சர்க்கரை கோட்டா - :) அடுத்த மாதம் பார்த்துக்கலாம்!

Angel said...

வல்லிம்மா ஸ்வீட் நல்லாத்தான் இருக்கு .ஒரிஜினல் சோஹன் ஹல்வாவை ஹாமர் வச்சி உடைக்கணும் இது வாயில் கரையும் அநேகமா இந்த ஹல்வா ரெசிப்பியில் சிந்தி ராஜஸ்தானி குஜராத்தி பாகிஸ்தானி லாஹூரி என்று பல வெரைட்டிஸ்  இருக்கணும்னுதோணுது :)  .  சர்க்கரையை   கேரமலைஸ் ஆக்கி செய்திங்களா ?அடுத்தது இதுக்கு மைதாதான் சரிவருமோன்னு தோணுது 

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
இனிய காலை வணக்கம்.
நான் சுவை பார்த்ததோடு சரி.
அவர்களுக்கும் தெரியும்.
இந்த ஊரில் இனிப்பு சாப்பிட்டால் சளி,அதாவது சைனஸ்
அதிகமாகுமாமே?
அதனால் தான் இனிப்பை அதிகம் சேர்ப்பதில்லை.
அதை கோட்டா என்று குறிப்பிட்டேன்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
காரமலைஸ் செய்திருந்தால் பிரச்சினை இல்லையே.

கிளிப்பிள்ளை மாதிரி அந்தப் பெண் சொன்னதை
அப்படியே செய்தேன்.
நீங்கள் சொல்வது சரியே,
அஜ்மீரி, கராச்சி,தில்லி என்று ஒவ்வொரு முறை
போட்டிருக்கிறது.
கோதுமையை முளை கட்டி, மாவரைத்து
செய்யும் முறை,
மைதாமாவு கார்ன் ஃப்ளார் தண்ணீரில் கரைத்து செய்யும் முறை.
எண்ணெய் சேர்த்து செய்யும் முறை!!!!!!
எல்லாவற்றுக்கும் அடுப்பு பக்கத்திலேயே
நின்று கிளறிக் கொண்டே இருக்க வேண்டுமாம். அந்தக் காலம் எல்லாம்
மலையேறியாச்சு எனக்கு.
பாதம் வீங்கி விடும். ஆழ்ந்த புரிதலுக்கு மிக நன்றி மா.