Blog Archive

Thursday, March 11, 2021

ஆவாரம் பூவும் 2021 ஆம் ஆண்டும். .............



தமிழ்த் திரைப்படங்களை அடிக்கடி பார்க்க
முடிவதில்லை. நஷ்டம் இல்லை.

இருந்தாலும் பழைய படங்களும்,பாடல்களும்
சுவையாகத் தான் இருக்கின்றன.
இந்தப் பாடல் ஆவாரம் பூ வரும் வரை,
அந்தச் செடிகளைப் பார்த்திருந்தாலும் இதனை அழகான
வண்ணத்தில் கண்டதே இல்லை. இது அந்தக்காலம்.
இணையம் வந்த பிறகு பலப்பல முன்னேற்றம்.

உலகின் எந்த மூலையிலிருந்து அடுத்த
கண்டத்திற்குப் பேசலாம்.
55 வருடங்களுக்கு முன் தபால் அலுவகத்தில்
டிரங்க் கால் பதிவு செய்து விட்டுக் காத்திருக்க
வேண்டும்.நம் வீட்டுக்கேத் தொலைபேசி
வந்த பிறகும் மூன்று மணி நேரம்
காத்திருந்தால் தான்  சேலத்துக்கோ, திருச்சிக்கோ
பேச முடியும்.
பேரன் பகிர்ந்து கொண்ட ஒரு செய்தி
இதையெல்லாம் நினைக்க வைத்தது.
முக நூலின் மார்க்,
டெலிபோர்டேஷன் முறையில் இருவர்
தொடர்பு கொள்ள ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறாராம்.
Augmented Reality  !!!!!இது சாத்தியப்படுமாம். பேரன் முக நூலில் ஆறு மாதங்கள் 
பயிற்சியாளராக இருந்ததில் அங்கே 
தோழர்கள் உண்டு.
வர்ச்சுவல் ரியாலிட்டி நாம் பார்த்திருக்கிறோம்.
தூர்தர்ஷனில் கூட இதை உபயோகித்து ஞாயிறு
அன்று ஒரு தொடர் ஒளி பரப்பினார்கள்.இதுவும்
25 ,30 வருடங்களுக்கு முந்தியோ? நினைவில்லை.

இப்போது வந்திருக்கும் செய்தி,
இந்த செயலியின் உதவியுடன்,நான் ஸ்ரீரங்கத்தில் 
நம் கீதா சாம்பசிவம் வீட்டு நாற்காலியில்
உட்கார்ந்து பேசலாம். அதே போல்
கீதா இங்கே என் முன் இருப்பார்.
அதாவது தோற்றம் மட்டும். எப்படி இருக்கும் என்று நினைத்துப்
பார்க்கிறேன்.
நன்றாகத் தான் இருக்கும்.:)
வெறும் 'மன்னவனே அழலாமா' பார்த்தே வியந்த பாமர
மனம். 
இந்த விஞ்ஞான முயற்சியைக் கற்பனையில்
நினைத்தே மகிழ்வாக இருக்கிறது.

17 comments:

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லும் விர்ச்சுவல் ரியாலிட்டி சோதித்துப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது.  ட்ரங்க் கால் புக் செய்து பேசியது ஒரு காலம்.  நாங்கள் பொதுத்தொலைபேசி கடையில் இரவு ஒன்பது மணிக்குமேல் சென்று எபசுவோம் தொண்ணூறுகளில்.  பாதி காசு!  பதினோரு மணிக்கு மேல் கால் காசு..  ஆனால் அவ்வளவு நேரம் காத்திருந்து பேசமுடியாதே...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் உண்மைதான்.
வர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி போட்டுக் கொண்டு, சியாட்டிலில் ஸ்பேஸ் நீடிலில்
நின்ற அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில்.

அந்த உயரத்திலிருந்த காலைக் கீழே வைப்பது போல ஒரு உணர்வு.
சில்லென்று பயம் வந்தது.
வெகு சுவாரஸ்யம்.

5 டாலருக்கு அருமையான அனுபவம். இந்த
ஏ ஐ யும் நடக்கிறதானு பார்க்கலாம் நன்றி ஸ்ரீராம்.

KILLERGEE Devakottai said...

விஞ்ஞானம் வளர, வளர பழமை அழிந்து போவதையும் நாம் மறக்ககூடாது அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

Augmented Reality - Good info! If it happens and becomes successful, it will be awesome!

Thanks for sharing the info Vallimmaa.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

கோமதி அரசு said...

முதலில் நலம் நலமறிய ஆவல் என்று கடிதம் அப்புறம், வெளியே போய் பேசினோம், அப்புறம் வீட்டுக்கு தொலைபேசி இணைப்பு. அப்புறம் அலைபேசி , ஸ்கைப் என்று அன்புடன் உரையாடுவது மாற்றம் பெற்று இப்போது நீங்கள் சொல்லும் மாற்றங்கள் வந்தாலும். முன்பு கடிதம் தரும் தபால்காரரை எதிர்ப்பார்த்த காலங்கள் மிக இனிமையானது. என்னிடம்
அம்மா நாலுவரி எழுத கூடாதா என்று கேட்ட காலம் உண்டு.
நான் என் கணவரிடம் "விரிவுரையாளரே விரிவாக கடிதம் எழுத கூடாதா" என்று கேட்ட நினைவுகள் வந்து போகிறது.

கோமதி அரசு said...

//டெலிபோர்டேஷன் முறையில் இருவர்
தொடர்பு கொள்ள ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறாராம்.
Augmented Reality !!!!!இது சாத்தியப்படுமாம். பேரன் முக நூலில் ஆறு மாதங்கள்
பயிற்சியாளராக இருந்ததில் அங்கே
தோழர்கள் உண்டு.//

பேரனுக்கு வாழ்த்துக்கள்.

Augmented Reality சாத்தியபட்டு நாம் உரையாடுவோம்.

கோமதி அரசு said...

பாடல்கள் கேட்டேன் பிடித்த பாடல்கள்.
சரிதாவின் நடிப்பு பிடிக்கும்.

கோமதி அரசு said...

பாடல்கள் கேட்டேன் பிடித்த பாடல்கள்.
சரிதாவின் நடிப்பு பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இனிய காலை வணக்கம் மா.

விக்ஞான மாற்றங்கள் நல்லதாக இருந்தால்
வரவேற்கலாம்.
என் மாதிரி, அன்பின் கீதா சாம்பசிவம், அன்பு கோமதி அரசு
எல்லோருக்கும் எல்லா உறவுகளையும்
பார்க்க ஏதுவாகிறது இல்லையாப்பா.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
எத்தனையோ மனிதர்களைப் பிரிந்து இருக்கும்
உள்ளங்கள் இது போல வசதி கிடைத்தால்
மிக மகிழும் என்பதில் சந்தேகமே இல்லை.

முக்கியமான முன்னேற்றம் நிகழட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
என் வாழ்க்கையின் மிக முக்கியமான காலங்களில் தபால்
துறைதான் முக்கிய அங்கம் வகிக்கிறது.

சென்னைத் தோழிகள் , ஒவ்வொருவராக மதுரைக்கு அனுப்பிய
கடிதங்களை இன்னும் பத்ரமாக
வைத்திருக்கிறேன்.

உங்கள் கணவரிடம் நீங்கள் கேட்ட கேள்வி
சிரிக்க வைக்கிறது!!'கல்யாணமானவரே சௌக்கியமா '
பாடல் நினைவுக்கு வருகிறது:)

வல்லிசிம்ஹன் said...

எனக்கும் , சரிதாவின் நடிப்பு மிகப் பிடிக்கும்.
என் அம்மாவும் என்னை,அன்பாகக் கேட்டுக் கொள்வார்.

ஒரு இன்லாண்ட் லெட்டர் முழுவதும் கேள்விகள்
நிரம்பி இருக்கும். படித்துப் பதில் சொல்லு என்று
கேட்டுக் கொள்வார்.
வாழ்க வளமுடன் கோமதி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அவன் போன வருடம் அங்கே இருந்தான்.
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.

Angel said...

டெலிபோர்டேஷன் ..வியப்பா இருக்கு அறிவியல் வளர்ச்சி ஆனா சில பாதகங்களும் வருமோன்னு   பயம்மா இருக்கு 

வல்லிசிம்ஹன் said...

😽அன்பு ஏஞ்சல்,
நாம் விரும்புபவரைத்தானே. காணப் போகிறோம் . அவரவர் சம்மதத்தைப் பெற்றுதான் செய்ய முடியும் .ரியல்
நிகழ்வு இல்லை. அதனால் பயம் இல்லை என்று தோன்றுகிறது மா.