Saturday, February 17, 2018

மாசி மாசமும் வடாம் பிழிதலும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மாசியும் பிறந்துவிட்டது. வெய்யிலும் ஆரம்பித்துவிட்டது.
இன்னும் பத்து நாட்கள் போனால்
காற்று அடிக்க ஆரம்பித்துவிடும்.
இலைகள் எல்லாம் வீட்டுக் கூரையில் தஞ்சம் புகும்.
அதற்கு முன்னால் வடாம், வத்தல் எல்லாம் போட்டு
முடிக்க வேண்டும்.
சாலைப் புழுதி படாமல் வீட்டின் நெடுஞ்சுவர்களை ஒட்டிக் கயிற்றுக் கட்டில்களிப்
 போட்டு,
வேஷ்டித் துண்டுகளை விரித்து நாலு வகை வடகங்களும்
பிழிந்து எடுக்க வேண்டும்.
ஜயாம்மா,கணவரின் மெலிந்த தேகத்தைப் பார்த்து
இவரை வேலை வாங்குவது சரியா என்று யோசித்தாள்.

இருபது வருட வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வேண்டும்.

தரையில் இதமான சில்லிப்பில் படுத்திருந்த சீனு ,மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.
என்னம்மா லிஸ்ட் போட வேண்டாமா.
எல்லா பொருட்கள் விலையும் ஏறிக் கிடக்கு.
ரெகுலராக வாங்குபவர்களிடம், விலை உயர்வைப் பற்றிச் சொல்ல வேணும்.

இந்த மாதம் முழுவதும் உழைத்தால் ,பிறகு கொஞ்சம்
ஓய்வெடுக்கலாம்.
 லஸ் காலனிக்குள்ளேயே  ஆறு வீட்டில் தேவையான லிஸ்ட்
கொடுத்து விட்டார்கள்.
டிசில்வா ரோடு, ஷாந்தி டவர்ஸ், ஆழ்வார்பேட்டை அபார்ட்மெண்ட்
 எல்லாம் போய்க் கேட்கணும்.
 வாரன் ரோடில் பத்மா மாமியின் பெண்கள் பச்சை வடாம் கேட்டிருக்கிறார்கள் .
உனக்கு உதவியாக இரண்டு பெண்களை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று நிறுத்தினார்.
அப்பாடி இத்தனை யோசித்து வைத்துவிட்டீர்கள்.
நாள் கண க்குப் பார்த்து, வகை பிரித்து செய்ய வேண்டியதுதான் பாக்கி.
யார் இந்தப் பெண்கள். என்று கேட்டல்.
அரிசிக்காரத்தெருவில் கோதண்டராமன் பெண்கள்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கையில் கொஞ்சம் பணம்
சேர்த்துக் கொள்ள ஆசைப் படுகிறார்கள் கல்லூரிப் படிப்பு படிக்க ணுமாம்.
இரண்டு மாதங்களில்  இரண்டாயிரமாவது சேர்க்க நாம் உதவ வேண்டும் என்றார் சீனு.
நமக்கு குழந்தைகள் இல்லாத குறை இப்போது
அதிகமாகத் தெரிகிறது.

அதனால் என்னமா. ஊரில் இருக்கும் குழந்தைகள் நம் குழந்தைகள் தான்.
முடிந்தவரை வாழ்வை நிறைவாக நடத்திச் செல்வோம்.
கற்பகாம்பாளும்,கபாலியும் துணையிருப்பார்கள் .
இப்படியாகத்தான்  வடாம் உத்சவம் தொடங்கியது.
தொடரும்.

20 comments:

KILLERGEE Devakottai said...

வியாபாரம் பெருகட்டும்.
தொடர்கிறேன்... அம்மா.

கோமதி அரசு said...

அருமை.
தொடர்கிறேன்.
வெயிலில் வத்தலாக காய்ந்து பல வித வடாம் பிழிந்த காலங்களின்
நினைவுகள் வருகிறது.

நெல்லைத் தமிழன் said...

வடாம் பிழியும் மகாத்மியமா? அந்தக் கால நினைவலைகலா? எழுதுங்கள். ஜவ்வரிசி வடாம் படம் அருமை.

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.

ஜீவி said...

எங்கள் வீட்டில் ஆரம்பிச்சாச்சு.. எதுக்கு? வடாம் பிழிவதற்கான ஆயத்த வேலைகள் தாம்!
நல்ல வேளை.. எலும்பிச்சை வழக்கத்தை விட கொஞ்சம் சீப் தான்!

வெங்கட் நாகராஜ் said...

வடாம் போடுவதே ஒரு கல்யாணம் மாதிரி நடக்கும் - வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் என் அம்மாவின் அத்தை போட்டுத் தருவார்கள்... அப்பளமும் இடுவார்கள்... அப்பள மாவு சாப்பிட எனக்கு மட்டும் தருவார் அத்தைப் பாட்டி! :)

நினைவுகள்.....

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: பார்க்கவே வற்றல் அழகா இருக்கிறது. எங்கள் வீட்டில் செய்வது இல்லை

கீதா: ஆ!!! என்ன அழகு அந்தச் செம்பருத்திப் பூ!!! ரொம்ப அழகு! அதுவும் க்ளோஸப் செம!

ஆஹா! வல்லிம்மா ஆம் மாசி மாதம் வந்தால் வடாம் போடும் வேலை தான். நானும் தொடங்க நினைத்துள்ளேன். அதற்கான ஆரம்பிச்சுட்டேன்.. போன முறை போட்டேன். இம்முறையும் போடணும் பார்ப்போம்...உங்கள் கதையில் வியாபாரம் எப்படிப் போககிறதுனு பார்க்கத் தொடர்கிறோம் வல்லிம்மா...படம் பார்க்கவே யும்மியா இருக்கு

Geetha Sambasivam said...

இந்தச் செம்பருத்தியில் கஷாயம் செய்து சாப்பிடலாம். தலைக்குத் தேய்த்துக் கொள்ள சீயக்காயோடு சேர்த்து அரைக்கலாம்.

ஜவ்வரிசி வடாம் நன்றாகக் காயவில்லை எனில் பொரித்தாலும் பொரியாது என்பதோடு வாயில் ஈஷிக்கொள்ளும். இங்கே நன்றாகப் பொரிந்திருக்கிறது. ரொம்பப் பிடிச்ச வடாம் இது! மூணு வருஷம் முன்னால் போட்டது தான் வடாம் எல்லாம்! கடந்த இரு வருடங்களாகப் போடவில்லை. இந்த வருஷம் குழம்பு வடாம் மட்டுமாவது போடணுமோனு நினைக்கிறேன்.

உங்கள் கதை எப்படித் தொடர்கிறது என்னும் ஆவலுடன் காத்திருக்கேன்.!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கில்லர் ஜி ,சரியான பாயிண்டைப்பிடித்தீர்கள். இருவருக்கும் பொருளாதாரத் தேவையும் நெருக்கடியும் அதிகம்கோடையில் சம்பாதித்தால் தான் தேறும்.
அமோகமகவே இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.நலமா மா.
நம் எல்லோர் வாழ்க்கையிலும் இது ஒரு பெரிய விஷயம்.
மறக்க முடியாத நாட்கள்.
உடல்னிலை பொறுத்துத் தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், ஆமாம். சரியான வார்த்தை மஹாத்மியமே.
கூரை வெய்யிலும், குழந்தைகளுடைய கும்மாளமும், காக்கை விரட்டலு. ப்ளாஸ்டிக் ஷீட் உபயோகப் படுத்தாத நாட்களும் மணக்கின்றன.

பரிவை சே.குமார் said...

வடாம் உற்சவம் தொடரட்டும் அம்மா....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வீடுகளில் இப்போது வடாம் பிழிதல் குறைந்துவிட்டது. அதையும் கடையில் வாங்கிவிடுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா,
உண்மைதான். வீட்டு நெருக்கடி, இடம் பற்றாமை காரணமாகிறது

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார், முடிந்த போது தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கதை ஆரம்பித்து, பின்னொட்டங்கள்க்கு நான் பதில் சொல்லும்போது உங்களகத்தில் பிழிந்து முடித்திருப்பார்கள்.ஆஹா பெருங்காய வாசனை இங்கே வருகிறது

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்,
vadaam pizhinjaattu neenga sollungO.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், பாட்டி வீட்டில இது பெரிய கல்யாணம் மாதிரியே நடக்கும்.
எங்களுக்கும், மாமா வீடுகளுக்கும் வருடம் முழுவத்ம் காணும்படி
எல்லோரும் சேர்ந்து செய்வார்கள்.
உங்கள் அத்தப் பாட்டிக்கு என் நமஸ்காரங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, செம்பருத்தி பல நினைவுகளைக் கிளறி விட்டது.
இந்த வத்தல் வடாம் விஷயத்தை விடாமல் செய்யணும்.

அன்பு துளசி, ஒரு தரம் அந்த ஜவ்வரிசிக் கூழ் சாப்பிட்டு விட்டீர்களானால்
மறக்க மாட்டெர்கள். மனம் நிறைந்த நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, நானும் மாடிக்குப் போய் வடாம்பிழிவது நின்று வருடங்களாச்சு.
விட்டுவிட்டோமே என்கிற வருத்தம் தான்.
செம்பருத்திக்கும் தனிக் கதை உண்டு.
நம் வாழ்க்கை நன்றாகத்தான் நடந்தது இல்லையாமா. நன்றாக உட்கார முடிகிற போது சரியாக எழுதுகிறேன். நன்றி மா.