எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும் விழுவதும் பின் எழுவதும் வழக்கமான நடப்பு தானே.
அப்போ விழுந்த போது உனக்கு இன்னும் வலி அதிகமா இருந்தது மா. இதெல்லாம் ஜுஜூபி என்று மகள் தேற்றுகிறாள்.
நினைவுக்கு வர மறுக்கிறது அந்த வலி.
இப்போதைய பூதமே அச்சுறுத்துகிறது.
வைத்தியர் விழுந்ததற்கான காரணத்தை விளக்கினார்.
நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர். நடு இரவில் நினைவிழுந்தாலும், உடனே விழித்துவிட்டீர்கள்.
நீங்களாகவே வெளியே வந்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஆதரவாக மகளும் மருமகனும் இருந்திருக்கிறார்கள்.
we shd be thankful for all this great mercies.!
என்று ஆறுதல் சொன்னார்.
உண்மைதான். என் ஏன் ஏன் ,பாடலுக்கு யாரும் பதில் சொல்லப் போவதில்லை.
நேற்று , மகளின் தோழிகள் ,அவர்களின் கணவர்கள் வந்து, கலகலப்புக் காட்டி
என் மகளின் மகிமையை என்னிடமே சொல்லி
விட்டுப் போனார்கள்.
இங்க ஈன்ற போதில் பெரிது உவக்கும் குறள்
சரியாக இருக்கும்.
வீட்டிலிருந்தே வேலை பார்க்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்,.
மாடியிலிருக்கும் எனக்கு அத்தனை பொருட்களும்
படியேறிக் கொண்டுவந்து கொடுக்கிறார்.
முதுகுக்கு மருந்து தடவி நீவி விட்டு
இரவில் பாத்ரூம் அழைத்துச் சென்று,
இன்னும் எத்தனையோ செய்கிறார்.
கடவுளே நல்ல உள்ளம் கொண்ட இந்தக் குழந்தைகள் வளம் பெற வேண்டும்.
நான் பெறாத குழந்தைகளாக என் மேல் அன்பு சொரியும்,
எங்கள் ப்ளாக் குழுமம் வாட்ஸாப்பில் உற்சாகம் ஊட்டுகிறது.
வித்த விதமாகா ஃபார்வர்ட் அனுப்பி என்னை சந்தோஷப்படுத்தும், மாமா,சித்தப்பா பெண்கள்.
வலை நண்பர்கள். முகனூல் தோழிகள்.
இறைவா இவர்கள் அனைவரும் வளமுடன் இருக்க வேண்டும்.
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.

13 comments:
பதிவு போட ஆரம்பிச்சாச்சில்ல. இனி உடனே முழு நலம் வந்த மாதிரி நினைச்சுக்கலாம்.
எதுலயும் நடந்த நல்லதுகளை நினைத்தோம்னா கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.
எல்லோரும் நன்றிதான் சொல்வார்கள். நீங்கள் உங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு (மகள் உள்பட) வாழ்த்தும் தெரிவித்திருக்கிறீர்கள். ஸந்தோஷம் வள்ளி அக்கா! விரைவில் பூரண நலம் பெறுவீர்கள்.
வல்லி அக்கா , வாழ்க வளமுடன்.
நலம் அடைந்து விட்டீர்கள் மகிழ்ச்சி.
நீங்கள் சொல்வது போல் விழுவதும், எழுவதும் உங்களுக்கு எனக்கு எல்லாம் அடிக்கடி நடப்பது.
இறைவன் அருளால் கை, கால் அடிபடாமல் தப்பித்துக் கொண்டு இருக்கிறோம்.
பூரண நலமடைய வாழ்த்துக்கள் அக்கா
ரொம்ப நாள் பதிவு வரல்லய்ன்னு யோசிச்சிட்டிருந்தேன் ..வல்லிம்மா இப்போ நலம்தானே ,டேக் கேர் .
முழு உடல்நலம் பெற்றுவிட்டீர்களா? நீங்கள் பெற்ற குழந்தைகள் உங்களைப்போல இல்லாமல் எப்படி இருப்பார்கள்? எல்லோரும் நலமாக (இனிதாக) வாழவேண்டும் என்று நாளும் நினைக்கும் உங்களுக்கு பெருமாள் ஒருகுறையும் வைக்க மாட்டார்.
துளசி: உடல் நலம் நன்றாக உள்ளதா அம்மா. விரைவில் பூரண குணம் அடைந்திட பிரார்த்தனைகள். எழுத முடிந்த அளவு எழுதுங்கள்....உங்களைச் சக்தி மிகுந்ததாக வைத்திருக்கும். மனமும் மகிழ்வுறும்! பிரார்த்தனைகள்
கீதா: வல்லிம்மா வாங்கோ வாங்கோ!!!! வலைக்கு வந்துவிட்டால் உங்கள் வலி எல்லாம் போயே போச்!!! போயிந்தி!!! இட்ஸ் கான்!!!
உங்கள் பாசிட்டிவ் எண்ணங்கள் உங்களை எப்போதுமே நல்லபடியாக வைத்திருக்கும் வல்லிம்மா....உங்கள் மனதிற்கேற்ப எல்லாமே நல்லதாய் நஹ்டக்கும் எண்ணங்களுக்கு அத்தனை சக்தி உண்டு என்பதை உங்களுக்கு சொல்லணுமா என்ன...
ரொம்ப மகிழ்ச்சி உங்களைக் கண்டு...பிரார்த்தனைகளுடன்
விரைவில் பூரண குணம் பெறுவீர்கள் வல்லி. கவலைப்படாதீர்கள்.
தங்கள் பதிவு தங்களை உற்சாகப்படுத்தும் தொடர்ந்து இயன்றதை எழுதுங்கள் அம்மா வாழ்க நலம்.
அனைவருக்கும் மிக நன்றி. பிசியோ தெரப்பில்லிச் செல்வதால் பிறகு நாற்காலியில் உட்கார சிரமமமாக இருக்கிறது. எல்லோரும் நன்றாக இருங்கள்.
விரைவில் நலம் பெற்று வாருங்கள் ..அம்மா..
காத்து இருக்கிறோம் ..உங்களின் கனிவான அன்பான வார்த்தைகளை வாசிக்க..
இறைவன் உங்கள் பக்கம்.
அவன் அளிப்பது நாளும் நம்பிக்கை.
பூரண குணம் பெற வாழ்த்துக்கள்.
அன்பு அனுமா
காலம் தாழ்த்திப் பதில் சொல்கிறேன். மன்னிக்கணும். கணினி முன் உட்கார்வது கொஞ்சம் கடினம். ஆறுதல் மொழிகளுக்கு நன்றிசொல்லி மாளாது.வாழ்க வளமுடன்.அம்மா
அன்பு ஜீவி சார், இந்த
பாசம் தான் என்னை வாழ்விக்கிறது. எல்லோரும் நலமுடன் இருக்கணும்..
Post a Comment