எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
uz C.I.T.Colony F.C.I Old Mylapore V.M.Street
Loacl Bus Routes Travel from Kennedy 2nd Street, Kattukoil Garden, Mylapore
12 ( T.Nagar - V.House )
12B ( Vadapalani B.S - Fore Shore Estate )
12BET ( Fore Shore Estate - Koymabedu Market )
12BNS ( Vadapalani B.S - Fore Shore Estate )
12G ( Anna Square - Kalaignar Nagar )
More..
|
பழைய சென்னை லஸ் கார்னர்.
மைலாப்பூரில் கென்னடி திரு இரு பாகம் கொண்டது. ஒரு வழி ஆலிவர் ரோடு மாரு முனை லாஸ் சர்ச் ரோடு.
ஆலிவர் ரோடு ஆரம்பத்தில் முன்னாள் ஆந்திர நடிகர் இருந்து மறைந்தார். அவர் வீடு இருந்த இடத்தில் ஒரு பாலர் பள்ளி முளைத்தது. அவர் கார்கள் நின்ற இடம் ஒரு ஷெட் போல மாற்றி அமைக்கப் பட்டு வாடகைக்கு விடப்பட்டது. தண்ணீர் வசதி. தகரக் கூரை , போது மான வெளிச்சம்
ஜெயாம்மாவும், சீனுவும் இங்கேகுடிபெயர்ந்தது 1980 வாக்கில். அதுவரை மந்தை வெளியில் தான் இருந்தார்கள்.
அங்கே இந்த வியாபாரத்துக்குப் போட்டி அதிகரிக்கவே
இந்த இடத்தைப் பிடித்தார்கள். எங்களுக்கெல்லாம் வசதியாகப் போயிற்று.
முறுக்கு, தட்டை மிக்ஸர், என்று அவரவர் கேட்கும் அளவு செய்து கொண்டு கொடுப்பார் சீனு. வற்றல் வடாம் செய்வதை வழக்கமாகக் கொண்ட பல குடும்பங்கள் இவர்களை அணுகவே அதையும் செய்ய ஆரம்பித்தார் ஜெயாம்மா/
அதிலும் அவர் செய்யும் பச்சை இலை வாடா த்துக்கு ஏகப்பட்ட டிமாண்ட். நானும் சிங்கமும் தினசரி அங்கே போய்க் காத்திருந்து 200,300 என்று வாங்கி வருவோம்..
அந்த ஷெட்டில தண்ணீர் வசதி இருந்தது. காய வைக்க ஒரு முற்றம் இருந்தது..
துணைக்கு உதவியாகச் சீனுவின் அக்காவும் அவர் மகனும் வந்து சேர்ந்தனர்.
அக்காவின் கணவர் அகால மரணம் அடைந்ததால் புகலிடம் தேடி இங்கே வந்தார். தம்பதிகளைப் போலவே இனிமையான குணம் கொண்டவர்கள்.உழைப்பாளிகளும் கூட.
மூலையில் சுருட்டி வைக்கப் பட்ட பாய்களே படுக்கை அறை
குளிப்பதெல்லாம் தட்டி மறைவில்.
தெரு முனையில் பால்காரக் குடும்பம் ஒன்று இருந்தது. அதைத்தாண்டி மணியில் சிகரெட்,தினசரி,என்று பிரபலமான டீக்கடை பெஞ்சு அங்கு வரும் விவேகானந்தா மாணவர்களும்ஜயாம்மாவின் குழந்தைகள்.
ஓகே. நாம் மீண்டும் மாசி மாதத்துக்கு வருவோம்.
சென்னை கேசவ நாடார் கடைக்கு, ஜெயாம்மாவின் ஒரு முழ நீள லிஸ்ட்
தயாரானது
பொன்னி அரிசி, ஜவ்வரிசி, பெருங்காயம், சுக்கு,
உளுத்தம்பருப்பு,
காய்கறி கடையில் வாங்க எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய், நல்ல தயிர்.
இந்திரா ஸ்டோரில் வாங்கிய பெரிய அண்டா, அப்பக்கரண்டிகல்
இன்ன பிற பொருட்களை ஆட்டோவில்
ஏறிக் கொண்டு கூட்டத்தில் நீந்தியபடி வந்தது சேர்ந்தார்கள்ன்மலர்களும்,பழங்களும் அதில் அடக்கம்.
தெய்வ வழிபாடு செய்த பிறகே உழைப்பு ஆரம்பம்.
, |
8 comments:
// முன்னாள் ஒரு ஆந்திர நடிகர் இருந்தார்//
நாகேஸ்வர ராவ்.
ஊறுகாய் போடுவதாகட்டும், வடாம் பிழிவதிலாகட்டும் ஒரு ரசனையோடு செய்த காலம் அது.
அம்மா.... படம் எடுத்து தளத்தில் இணைக்கும்போது அதனுடன் பஸ் ரூட் விவரங்கள் எல்லாம் ஒட்டிக்கொண்டு வந்து விட்டது!
அதிலும், அவர் செய்யும் பச்சை இல்லை படத்துக்கு - இது புரியலையே? ஒருவேளை இலை வடாம்னு எழுத நினைச்சீங்களோ?
கேசவ நாடார் கடையில் வாங்கிய பொருள்கள் என்னவாகிறது என்பதை அறிய ஆவலுடன் தொடர்கிறேன் அம்மா
பழைய புகைப்படம் ரசனையாக இருந்தது.
அன்பு ஸ்ரீராம் அது, நாகையான்னு கேள்வி. தெரியவில்லை.பெருசா அழகா இருக்கும். ஆமாம் சமைப்பதில் விருப்பம் இருந்த நாட்கள். விதரணையாகச் செய்தால்
எல்லம் நன்றாக வரும். இப்பவும் சீனு எங்க வீட்டுக்கு செய்து தருகிறார். yes thats the pictue from Oliver road busstop Sriram.
ஆமாம். நெல்லைத்தமிழன். ப்ளாக் தமிழ் கொலை செய்கிறது.இலை வடாம், இட்டதும் சுருட்டி எங்களுக்குத் தனியாக வைத்துவிடுவார்.பிறகு காய்ந்த வடாம்.
சென்ன கேசவ நாடார் கடை இன்னும் இருக்கா தெரியவில்லை.
கில்லர் ஜி. முடிந்த வரை எழுதுகிறேன்.மனதில் உள்ள வேகம் முதுகில்
இல்லை. உங்கள் அன்புக்கு மிக நன்றி.
பழையது எப்பவும் இனிமை தான் முனைவர் ஐய்யா. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
Post a Comment