Blog Archive

Saturday, February 24, 2018

திருமணம் விலங்கா, மாலையா.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   அது மணப்பவர்களின் மனத்தைப் பொறுத்தது. 55 வருடங்களுக்கு முன்பிருந்த பெண்களும்,காளைகளும் இப்போதில்லை.
திருமணம் செய்து கொள்ளவே தயாரிக்கப் பட்ட பொம்மைகள் 50 களில்.
எங்களைப் போன்றவர்களுக்குக் கற்பனைகள்,
கதைகள், திரப் படங்கள்
திருமணம் இரு மனம் சேரும் பந்தம்.
இணைந்தே செல்ல வேண்டும். பெரியவர்களை அனுசரிக்க வேண்டும்.

முக்கியமாகக் கணவனை எதிர்த்து வார்த்தைகள் சொல்லக் கூடாது.
இந்த வரைமுறை தென் தமிழ் நாட்டில் தீர்மானிக்கப் பட்ட சட்டம்.
ஆண்களுக்கும் அதே கட்டுப்பாடு. உத்தியோகம், மனைவி,கடனில்லாத குடித்தனம்,
இரண்டோமூன்றோ குழந்தைகள்.

  வேலையைப் பொறுத்து ஊர்கள் மாற்றிச் செலவது. 75 சதவிகிதம் மனைவி தலை மேல் தான். ஊர்மாற்றும் போது, விளக்கு மாறு, கோலப் பொடி முதல் லாரியில் வைப்பது அவளாகத்தான்
இருக்கும்.

70 களில் காலம் கொஞ்சம் மாறியது. பெண்ணின் சுமை அதிகரித்தது.
ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தியாக இருக்கும்போது, பெரியவர்களுக்கும், சின்ன வாண்டுவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.
எல்லாக் குடும்பங்களிலும் இது உண்டு.
5 மணிக்குக் குளித்திட்டு ஆரம்பமாகும் வேலைகள்
ஆயாவுடன் செல்லும் மகன், பஸ்ஸில் செல்லும் மகள். தொலைதூர
பள்ளிக்குப் பள்ளிக்கான பஸ்ஸில் செல்லும் மகன்,
இவர்களைக் கவனித்து வீடு திரும்பி,  வங்கி வேலை, கோவில் நேரம், காய்கறி வாங்குதல், தொலைபேசியில் வீட்டு சாமாங்களுக்கு விண்ணப்பம்.
முடியும் போது மணி 12..
அரைமணி நேரம் முதுகு சாய்க்கலாம் என்றால் விஸ்ராந்தியாக்ப் பேச வரும்
பாட்டியின் சினேகிதிகள்.
இது என் கதை மட்டும் இல்லை. எங்கள் காலனி முழுவதுமே இப்படித்தான்,.
என் அருமைத்தோழி வைஜு, சாவித்திரி, ஜெயா, சசி,,லக்ஷ்மி
எல்லோர் வீட்டிலிம்  இதே வரலாறு.
பின் எப்போது மாறியது என்று அடுத்தாற்போல் பார்க்கலாம்

21 comments:

Thulasidharan V Thillaiakathu said...

முதல்ல உங்க தளத்தோட முகப்புப் படம் தானே கண்ணில் பட்டது வாவ்! ரொம்ப அழகா இருக்கு வல்லிமா..அப்படியே பார்த்த்துக் கொண்டே இருந்தேன்.....செம!!!இதோ பதிவுக்குப் போறேன்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

திருமணம் செய்து கொள்ளவே தயாரிக்கப் பட்ட பொம்மைகள் 50 களில். எங்களைப் போன்றவர்களுக்குக் கற்பனைகள், கதைகள், திரப் படங்கள் திருமணம் இரு மனம் சேரும் பந்தம். இணைந்தே செல்ல வேண்டும். பெரியவர்களை அனுசரிக்க வேண்டும். முக்கியமாகக் கணவனை எதிர்த்து வார்த்தைகள் சொல்லக் கூடாது. இந்த வரைமுறை தென் தமிழ் நாட்டில் தீர்மானிக்கப் பட்ட சட்டம். //

வல்லிம்மா டிட்டோ டிட்டோ டிட்டோ...என் பிறந்த வீட்டில் நான் என் சுய ரியாதை பாதிக்கப்பட்டப்ப பொயிங்கியது உண்டு (ஆ இந்த அதிரா தாக்கம்...!!!) வேலைக்கும், ஐ இ எஸ் (இண்டியன் எக்கனாமிக்ஸ் செர்வீஸ்) பரீட்சையும் எழுதமுயற்சி, இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்சுரல் அண்ட் ரிசர்ச் லும் ஃபெல்லோஷிப் எழுத முயற்சி என்று ஒரு பக்கம் பிடிவாதத்தோடு நான் செய்ய…….என் பிடிவாதத்தையும் மீறி நான் அதற்காக அடி வாங்கி…. கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிவிட்டது….என்ன செய்ய இந்தியா ஒரு நல்ல கவர்ன்மென்ட் செர்வீஸ் ஆளை இழந்துவிட்டது!! ஹா ஹா ஹா ஹா….

அப்போ என் கல்யாணத்துக்கு முன்னாடி என்னை உக்காத்தி வைச்சு எங்க விட்டுல அட்வைஸ் மழை பொழிந்தாங்களே பார்க்கணும்!!! எல்கேஜி பாப்பாக்கு சொல்றா மாதிரி...நீங்க சொல்லிருக்கறதுதான்...

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்....நானும் ரொம்பச் சமர்த்துப் பெண்ணா என் சுயத்தை அப்பால தள்ளிட்டு அந்த அட்வைஸை இதுவரை காப்பாத்திட்டேன்!! ஹா ஹா ஹா ஹா ஹா... இது எங்கள் தலைமுறைக்கும் பொருந்தும்....அதாவது 25 வருடங்களுக்கு முன்பானது வல்லிமா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வேலையைப் பொறுத்து ஊர்கள் மாற்றிச் செலவது. 75 சதவிகிதம் மனைவி தலை மேல் தான். ஊர்மாற்றும் போது, விளக்கு மாறு, கோலப் பொடி முதல் லாரியில் வைப்பது அவளாகத்தான்
இருக்கும்.//

டிட்டோ டிட்டோ செய்யறேன் வல்லிமா....

கீதா

KILLERGEE Devakottai said...

தொடர்கிறேன் அம்மா

Thulasidharan V Thillaiakathu said...

70 களில் காலம் கொஞ்சம் மாறியது. பெண்ணின் சுமை அதிகரித்தது.
ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தியாக இருக்கும்போது, பெரியவர்களுக்கும், சின்ன வாண்டுவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.
எல்லாக் குடும்பங்களிலும் இது உண்டு.
5 மணிக்குக் குளித்திட்டு ஆரம்பமாகும் வேலைகள்//

டிட்டோ!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆனால் அத வரலாறு எல்லாம் மாறிடுச்சே இப்போ!!!

வல்லிம்மா தோர்கிறேன் நீங்கள் சொல்லும் வரலாறு எப்போ மாறியது என்று அறிய

கீதா

ஸ்ரீராம். said...

அந்தக் காலம் இனி வராது. ஆண்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசக்கூடாது போன்ற விதிகள் மாறுவதில் தப்பில்லை. ஆனால் மற்ற விஷயங்களில் குடும்பம் என்கிற அழகான அந்த கட்டமைப்பு இப்போது பெரும்பாலும் காண முடிவதில்லை. வீடு நிர்வகிக்கும் பெண்களின் நிலை இதுவென்றால், அலுவலகமும் சென்று வீட்டையும் கவனிக்கும் பெண்களின் நிலையையும் சொல்லவேண்டும்.

Geetha Sambasivam said...

//ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தியாக இருக்கும்போது, பெரியவர்களுக்கும், சின்ன வாண்டுவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.//

ஆமாம், இந்த அனுபவம் எனக்கும் உண்டு. மற்றபடி தினம் தினம் ஒரே ஓட்டம் தான்! எல்லோரையும் எல்லாவற்றிலும் திருப்திப் படுத்தவும் வேண்டும். அப்போவும் குறைகள் தான் முன்னுக்கு நிற்கும். :) அது ஒரு காலம்.

Thulasidharan V Thillaiakathu said...

திருமணம் விலங்கா, மாலையா?

வல்லிமா நன்றாக அமைந்தால் மாலை!!! இல்லை என்றால் விலங்குதான்....இதோ இன்று மறைந்த ஸ்ரீதேவியைப் பற்றி எபியில் கீதாக்கா சொல்லியிருந்ததைப் பார்த்தால் அவர் மனதிற்குள் நிஜமாகவே மகிழ்ச்சி இருந்திருக்குமா தெரியவில்லை...நிர்பந்த திருமணம் போல் இருக்கு. திருமணத்திற்குப் பிறகு பொருளாதார சுதந்திரம், புகழ் எல்லாம் இருந்திருக்கலாம்...ஆனாலும்...

எனது தனிப்பட்டக் கருத்து விலங்காக அமைவதை விட பெண்கள் திருமணம் புரியாமலேயே வாழ்ந்திடலாம் என்பது..இது ஆண்களுக்கும் பொருந்தும்....இல்லை என்றால் திருமணமாகி விலங்கு என்று தெரியும் நேரத்தில் பிரிதல் மன வேதனை அதை விட யதார்த்த நடைமுறைச் சிக்கல்கள்....சம்டைம்ஸ் விலங்கு எனத் தெரியவரும் போது இட் மே பி டூ லேட் அல்லது பிரியா முடியாத சூழல் ..இப்படியும் ...

கீதா

கோமதி அரசு said...

அருமையான பதிவு.
கோலம் அழகு.
தொடர்கிறேன்.

vimalanperali said...

சுகமான சுமைகள்!

நெல்லைத் தமிழன் said...

திருமணம் என்பது விலங்கா மாலையா? - நாம சூழ்நிலையை ஹேண்டில் பண்ணுவதை ஒட்டித்தான் எதுவும் விலங்காகவோ மாலையாகவோ ஆகும். பெண் நம்மைப் பார்த்து சுடுசொல் சொல்லும்போது, பதிலுக்கு எரிந்து விழுந்து சூழ்னிலையை போர்க்களமாக்கி, நீயா நானா என்றும் ஆக்கலாம், இல்லை சிம்பிளாக, 'உன் மூடு சரியில்லை போலிருக்கு... சாயந்திரமா பேசறேன்' என்று தவிர்த்தும்விடலாம். அப்போ அது வெறும் சம்பவம் என்ற அளவில் நின்றுவிடும்.

கூட்டுக்குடும்பம் ( நான் சொல்றது, க, ம, குழந்தைகள், க-அப்பா/அம்மா அவ்வளவுதான்) எப்போதும் நல்லது. இதுதான் என் அபிப்ராயம். இரண்டுபேர் சேர்ந்திருக்கவேண்டுமென்றாலே அங்கு விட்டுக்கொடுத்தல் இருக்கணும். அது நண்பர்களானாலும் சரி, கணவன் மனைவியானாலும் இல்லை அப்பா-குழந்தை ஆனாலும்.

'ஆண்களின் பேச்சுக்கு மறுபேச்சு' - ஒரு குடும்பத்தில் ஒரு டெசிஷன் மேக்கர்தான் இருக்கணும், அதுக்கு முன்னால கலந்துபேசி கருத்துப்பரிமாற்றம் நடக்கலாம். யார் குடும்பத் தலைவரோ, அவர் முடிவு எடுத்தபின்பு மறுபேச்சு கூடாது. அவ்வளவுதான். இதில் ஆண்டான் அடிமை மனோபாவம் கிடையாது.

Bhanumathy Venkateswaran said...

வெகு அழகான கோலம்!

ஆண்களின் பேச்சுக்கு எதிர் பேச்சு கூடாது என்பது அடிப்படை. நெ.த. கூறியிருப்பது போல ஒரு குடும்பத்தில் ஒரு டிசிஷன் மேக்கர் தான் இருக்கணும் என்பதால், நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ கணவரின் டிசிஷனுக்கு கட்டுப்பட்டோம். சில சமயங்களில் அவர்கள் நம்மை கலக்காமலேயே முடிவுகள் எடுக்கும் பொழுது மனம் வருத்தப்படும். இப்போது இருக்கும் இளைய காலை முறை ஆண்கள் மனைவிகளை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, இந்த அறிவுரையினால் நஷ்டம் ஒன்றும் நமக்கு ஏற்படவில்லை. ஏன் தெரியுமா, கணவனிடம் நம்பிக்கை வைத்ததால்
அதற்குப் பொருத்தமாக நடக்க அவரும் விழைந்திருப்பார்.
சுயத்தை இழந்தது என்னவோ உண்மை.
ஆனால் சூழ்னிலை சிலசமயம் நம்மையும் முடிவெடுக்க வைக்கும்.
அதுவும் நல்லதாகவே முடியும். என் திருமணம் நானே விரும்பி ஏற்றுக் கொண்டது.
என் மகள் திருமணம் நாங்கள் முடித்து வைத்தது.
எப்படி எந்த சந்தர்ப்பம் வந்தாலும் சமாளிக்கும் திறம் மட்டும் வேண்டும்.

பிறகு வந்த தலைமுறை கொஞ்சம் சிரமமே படுகிறது மா. தாமதமாக மறு மொழி அளிக்கிறேன் மன்னிக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், உங்கள் பெற்றோர் காலம் வேறு மாதிரி இருந்திருக்கும். எங்கள் தலைமுறை சற்றே முன்னேறியது.
நாங்களும் கணவர் சொல்லுடன் ஒத்துப் போனோம்.
வாழ்க்கை சுலபமாக இருந்தது.
இப்பொழுது வேறு மாதிரி பிடுங்கல்கள்.
இருவரும் வேலைகளுக்குப் போகிறார்கள்.
அதனால் வரும் சங்கடங்கள்,சந்தோஷம் இரண்டிற்கும் இருவரும் ,பெற்ற பிள்ளைகளும் பொறுப்பேற்க வேண்டும்.
அடிப்படைப் புரிதல் கால வேகத்தில் சிலசமயம் சிதைந்து
போகிறது.
இனி அடுத்து வரும் தலைமுறையையும் பார்க்கிறேன்.

ஒரே சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள்.
பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

கீதா ரங்கன், என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம். ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

நம் தலைமுறைக்குப் பெரியவர்களிடம்
அனுசரித்துப் போவது உடம்போடு வந்த பழக்கம் கீதா.
அதனால் பெற்ற அனுபவங்கள் வித விதம்.
இஷ்டம் போல் நடக்க வகை இல்லை என்றாலும்
நஷ்டமும் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் கீதாமா. மாலை என்றால் மாலை. கட்டுப் படுத்தப் பட்டால் விலங்கு.
இரண்டையும் தாண்டி வர முடியாவிட்டால் பிரிதலே முக்கியம்,

ஸ்ரீதேவி விஷயம் தானாகப் போட்டுக் கொண்ட விலங்கே. அவர்கள் வாழ்க்கையே நாடகமானது.
கொடுத்த விலை மிக அதிகம்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி திரு பேராளி.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெல்லைத் தமிழன். மென்மையாகக்
கையாண்டால் விலங்கும் மாலையாகிறது.
விட்டுக் கொடுத்தல் இருக்கும் இடத்தில் பூசல் இல்லை.

பெரியவர்கள் நம்மோடு இருக்கும் போது கலந்து பேசும் சமயங்களும் குறைகிறது.
இந்தக் காலத்தைச் சொல்ல வில்லை. 40 வருடங்களுக்கு முன்பு சொல்கிறேன்.
இப்போது அனேகமாக நியூக்ளியஸ் குடும்பம் தானே.
அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமதி , நீங்கள் சொல்வதுதான் உண்மை. அப்பொழுது அப்படித்தான் இருந்தது.
ஏன் இப்பொழுதும் இருக்கிறது. ஆமாம் நம்மைக் கேட்கமல் ஒரு முடிவுக்கு வருவது மனதுக்கு மிக வருத்தம் தரும் செயல்.
இரு பாலருக்கும் பொருந்தும்.
என் பெற்றோர்கள் கலந்து பேசியே முடிவு செய்வார்கள்.
இப்பொழுது எங்கள் மகன் களும் , பெண்ணும் அப்படியே.
இப்படிப் பார்ப்பது மகிழ்வாகத்தான் இருக்கிறது நன்றி மா.